ஸ்ரீவை மக்களை பற்றியும் ஊர் நடப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்,உங்களுடைய கருத்துகளையும் பதிவு செய்யலாம்..
வியாழன், 30 ஏப்ரல், 2009
Salary & Govt. Concessions for a Member of Parliament (MP)
Expense for Constitution per month : Rs. 10,000/-
Office expenditure per month : Rs. 14,000/-
Traveling concession (Rs. 8 per km) : Rs. 48,000/-
(eg. For a visit from South India to Delhi & return : 6000 km)
Daily DA TA during parliament meets : Rs. 500/day
Charge for 1 class (A/C) in train : Free (For any number of times) (All over India )
Charge for Business Class in flights : Free for 40 trips / year (With wife or P.A.)
Rent for MP hostel at Delhi : Free.
Electricity costs at home : Free up to 50,000 units.
Local phone call charge : Free up to 1, 70,000 calls..
TOTAL expense for a MP [having no qualification] per year :
Rs.32, 00,000/-
[i.e. 2.66 lakh/month] TOTAL expense for 5 years : Rs. 1, 60, 00,000/-
For 534 MPs, the expense for 5 years : Rs. 8,54,40,00,000/ -
(Nearly 855 crores) AND THE PRIME MINISTER IS ASKING THE HIGHLY QUALIFIED, OUT PERFORMING CEOs TO CUT DOWN THEIR SALARIES.... .
This is how all our tax money is been swallowed and price hike on our regular commodities. ........ And this is the present condition of our country
ஸ்ரீவைகுண்டம் அருகே தீயில் கருகிய பெண் இறந்தார்
அவரை பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை சுமதி பரிதாபமாக இறந்தார்.
தகவல் : மாலைமலர்
புதன், 29 ஏப்ரல், 2009
தமிழகத்தில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்கள் (சுயேட்சைகள் தவிர்த்து)
1. எஸ்.எம்.கே.முகமது அலி ஜின்னா (அ.தி.மு.க.)
2. யூனிஸ்கான் (பகுஜன்சமாஜ்)
3. ஹைதர் அலி (மனிதநேய மக்கள் கட்சி
வேலூர்
4. அப்துல் ரகுமான் (தி.மு.க.)
5. சவுகத்ஷெரீப் (தே.மு.தி.க.)
6. மன்சூர் அகமத் (பகுஜன் சமாஜ் கட்சி)
7. தாகிர் அகமத் (லோக் ஜன சக்தி)
திருவண்ணாமலை
8. அப்ரோஸ் உஸ்னா (லோக்ஜனசக்தி)
பொள்ளாச்சி
9. இ.உம்மர் (மனிதநேய மக்கள் கட்சி)
10. எஸ்.டி.ரமீஜா பேகம் (சமதா கட்சி)
திருச்சி
11. மன்சூர் அலிகான் (லட்சிய தி.மு.க.)
மயிலாடுதுறை
12. ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி)
தேனி
13. ஆரூண் ரஷீத் (காங்கிரஸ்)
ராமநாதபுரம்
14. சிங்கை ஜின்னா (தே.மு.தி.க.)
15. சலிமுல்லாகான் (மனிதநேய மக்கள் கட்சி)
திருநெல்வேலி
16. எஸ்.செய்யது இமாம் (சமாஜ்வாடி
புதுச்சேரி
17. அசனா (தே.மு.தி.க.)
பிரிந்துக்கிடக்கும் நம் சமுதாய இயக்கங்களை ஒன்று சேர்ப்பது யார்?
முன்வாருங்கள்!குழு அமையுங்கள்!பேச்சுவார்த்தை நடத்துங்கள்!மனமிட்டு பேசுங்கள் நமது சமுதாய நலனுக்காக!வேற்றுமைகளை கலையுங்கள்!ஒன்றுபடுங்கள் நம் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக
நமது ஒற்றுமையின்மையை சரியாக புரிந்துக்கொண்ட திராவிடக்கட்சிகள் நமக்கு நாமே நம்மை எதிரிகளாக்கி கடைசி வரையிலும் இந்த சமுதாயம் (சமுதாய இயக்கங்கள்) ஒன்றுபட்டுவிடக்கூடாது என்று ஒவ்வோரு தேர்தலிலும் மிக நுட்பமாக காய்களை நகர்த்தி வருகிறார்கள். பிரிந்துக்கிடக்கும் சம் சமுதாய இயக்கங்கள் ஒற்றுமையுடன் தேர்தலை எதிர்க் கொண்டால் இன்ஷா அல்லாஹ், இறைவனின் நாட்டப்படி நாம் கைக்காட்டும் நபர்தான் எம்.பி யாகவோ எம்.எல்.ஏ.வாகவோ வரமுடியும் என்பதற்கு பல(வரலாறுகள்) சான்றுகள் உண்டு
எனக்கு தெரிந்த நம் சமுதாய இயக்கங்களை இங்கே பட்டியலிடுகிறேன்.
1. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.
2.இந்திய தேசிய லீக்.
3. தேசிய லீக்.
4மறுமலர்ச்சி முஸ்லீம் லீக்.
5. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.
6. தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்.
7. இந்திய தவ்ஹீத் ஜமாஅத்.
8. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா.
9.ஜனநாயக முஸ்லீம் முன்னேற்றக் கழகம்.
10. சுன்னத்துவல் ஜமாஅத்.
நிச்சயமாக இதுப்போன்ற இயக்கங்கள் நம் சமுதாய நலன் கருதியே ஆரம்பிக்கப்பட்டிருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. சமுதாய நலனில், சமுதாயம் முன்னேற ஒத்த நிலைப்பாட்டை கொண்ட நாம் ஏன் ஒன்று சேர முடியாது, ஏன் ஒற்றுமையுடன் தேர்தலை எதிர்க்கொள்ள முடியாது? இன்ஷா அல்லாஹ் நிச்சயமாக முடியும்.
ஒன்று சேர்ந்துப்பாருங்கள், பத்திரிக்கையாளர்களைக்கூட்டி பிரகடனம் செய்யுங்கள், அரசியல் கட்சிகளை தேடி நாம் செல்ல வேண்டியதிருக்காது மாறாக அவர்கள் நம்மை தேடி வருவார்கள் இன்ஷா அல்லாஹ்
பல்வேறு பிரச்சனைகளில் நாம் வேறுப்பட்டு இருக்கலாம்! நம்முடைய பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக, சமுதாய முன்னெற்றத்திற்காக தயவுசெய்து அதை மறந்து ஒன்றுபடுவோம்
நம் ஒற்றுமையை நிலைநாட்ட இதுவே சரியான தருணம்.மாறி மாறி கொடி பிடித்து அவர்களை வெற்றியடைய செய்ததும் போதும்!வாக்குறுதிகள் கொடுத்து அவர்கள் நம்மை ஏமாற்றியதும் போதும்
சமுதாய நலனில் அக்கறைக் கொண்டவர்களே!நியாவான்களே!
வாருங்கள்!ஒற்றுமை என்னும் கயிற்றை பற்றி பிடிப்போம்!சமுதாய நலனுக்காக ஒற்றுமையுடன் தேர்தலை சந்திப்போம்!ஜெயம் கொள்வோம்! இன்ஷா அல்லாஹ்.
குறிப்பு : இதை எப்படி செயல்படுத்துவது, எப்படியெல்லாம் நம் சமுதாய இயக்கங்களை ஒன்றுசேர்ப்பது என்று உங்களுடைய ஆலோசனைகளை 'கருத்துகள்' பகுதியில் பதியுங்கள்.
ஆக்கம்,-அப்துல் பரக்கத்.
நன்றி : அதிரை எக்ஸ்பிரஸ்
மனித உருவில் புதிரான விலங்கு - கத்தர் நாட்டில் பரபரப்பு!
வியாழன், 23 ஏப்ரல் 2009 15:02 அருமை வளைகுடா நாட்டில் வளமான தொழிற்புரட்சியில் முன்னணி வகிக்கும் நாடுகளில் முதலிடத்தைப் பெரும் தோஹா (கத்தர்) நாட்டில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள கார்னிஷ் எனப்படும் கடற்கரைப் பகுதி மக்கள் பொழுது போக்கிற்காகவும், நடைப் பயிற்சிகளுக்காகவும் சிறந்த இடமாகத் திகழ்கிறது.
நேற்று கடற்கரை பூங்கா ஓரமாக உள்ள கார் பார்க்கிங் பகுதியில் திடீரென்று மனித உருவத்தை ஒத்த ஒருவிலங்கு(!) வெளிப்பட்டது. இதனைக் கண்ட மக்கள் அதிர்ச்சியில் அலறி ஓடினர். முதல்முறையாக இவ்வுருவத்தைக் கண்ட கத்தர் பெண்மணி ஒருவர் அலறியதைக் கேட்டு அங்குள்ள மக்கள் ஒன்று கூடினர்.
சிலர் தமது கையில் இருந்த மொபைல் போன்கள் மூலம் படம் எடுத்துள்ளனர். (அதில் ஒருவர் எடுத்த போட்டோ இங்கே) தொடர்ந்து துணிச்சலுடன் நெருங்கிய சிலர் அதனை விரட்டிச் சென்று பிடிக்க முயன்ற போது துள்ளிக் குதித்து ஓடி மறைந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
மேலும் இது மனிதனாக இருக்க வாய்ப்பே இல்லை என்றும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.இச்சம்பத்தால் அங்கு பெரும் பரபரப்பும் பீதியும் நிலவுகிறது
தூத்துக்குடியில் பிஎஸ்என்எல் மொபைல் பி.சி.ஓ. வசதி அறிமுகம்
இது தொடர்பாக தூத்துக்குடி பிஎஸ்என்எல் தொலைத் தொடர்பு மாவட்டப் பொதுமேலாளர் என்.ஆர். நடராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
அட்சய திருதியை முன்னிட்டு தூத்துக்குடி பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு மொபைல் பி.சி.ஓ. (மொபைல் பொது தொலைபேசி) வசதியை திங்கள்கிழமை முதல் அறிமுகப்படுத்தியுள்ளது
இந்த வசதி மாவட்டம் முழுவதிலும் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. இந்த சிம் கார்டின் விலை ரூ. 221. இத்துடன் இந்த கார்டில் ரூ. 50 இலவச டாக்டைம் கிடைக்கும்.
இதற்கான ரீசார்ஜ் கார்டின் விலை ரூ. 5,515. 30 நாள் வேலிடிட்டி உள்ள இந்த ரீசார்ஜ் கார்டில் ரூ. 9,502 வரை பேசலாம். இந்த கார்டை பயன்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர் 42 சதவிகிதம் நிகர லாபம் அடைய முடியும்.
இந்த கார்டில் இருந்து லோக்கல் மற்றும் எஸ்டிடியில் பேசுவதற்கு நிமிஷத்துக்கு ரூ. 58 காசுகள் வசூலிக்கப்படும். இதன் மூலம் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, இலங்கை நாடுகளுக்கு 8 வினாடிகளுக்கு 58 காசுகளும், ஐரோப்பா, சிங்கப்பூர், இந்தோனேசியா, தாய்லாந்து, குவைத், துபாய்க்கு பேச 5 வினாடிகளுக்கு 58 காசுகளும், சவூதி அரேபியா, ஓமன், கத்தார் மற்றும் பிற நாடுகளுக்கு பேச 4 விநாடிகளுக்கு 58 காசுகளும் கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும்.
இந்த மொபைல் பி.சி.ஓ.வில் வாடிக்கையாளர்கள் வெளி நாடுகளிலும் பேச வசதியாக "கால் கான்பிரன்ஸ்' வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி தமிழ்நாடு மற்றும் வெளி மாநிலங்களுடன் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, இலங்கை, ஐரோப்பா, சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா, குவைத், துபாய், சவூதி அரேபியா, ஓமன், கத்தார் மற்றும் பிற நாடுகளுடனும் கால் கான்பிரன்ஸில் பேசிக் கொள்ளலாம்.
இதற்கான கட்டணம் அமெரிக்கா, இங்கிலாந்து முதலான நாடுகளுக்கு நிமிஷத்துக்கு ரூ. 5.51-ம், ஐரோப்பா, சிங்கப்பூர், மலேசியா, ஓமன், கத்தார் மற்றும் பிற நாடுகளுக்கு நிமிஷத்துக்கு ரூ. 9.85-ம் கால் கான்பிரன்ஸ் கட்டணமாக வசூலிக்கப்படும்
இந்த மொபைல் பி.சி.ஓ. கார்டுகள் மாவட்டத்தில் உள்ள எல்லா பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையங்களிலும், பிஎஸ்என்எல் பிரான்சைஸிகளிடமும் மற்றும் பிஎஸ்என்எல் விற்பனைப் பிரதிநிதிகளிடமும் கிடைக்கும்.
செல்போன் சிம்கார்டு விற்பனையில் தமிழ்நாடு வட்டத்தில் தூத்துக்குடி மாவட்டம் கடந்த நிதியாண்டில் 2-ம் இடம் பிடித்து பரிசு வென்றுள்ளது. இதேபோல, மின் சிக்கனத்தில் தமிழ்நாடு வட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளது.
பிஎஸ்என்எல் அகண்ட அலைவரிசை சேவை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமப் பகுதிகளிலும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் அகண்ட சேவை இணைப்பு பெற மோடம் இலவசமாக வழங்கப்படும். மாத வாடகையும் ரூ. 99 மட்டுமே. இந்த வசதி மாவட்டத்தில் 40 தொலைபேசி நிலையங்களில் செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
பேட்டியின்போது, துணைப் பொது மேலாளர் தாமஸ், உதவிப் பொது மேலாளர் டேவிட் செல்வராஜ், உதவி கோட்டப் பொறியாளர் (விற்பனை) ஐ. லிங்கபாஸ்கர், மக்கள் தொடர்பு அலுவலர் மாரிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.
முன்னதாக மொபைல் பி.சி.ஓ. வசதிக்கான சிம்கார்டு விற்பனையை பொதுமேலாளர் என்.ஆர். நடராஜன் தொடங்கிவைத்தார். முதல் கார்டை காயல்பட்டினத்தைச் சேர்ந்த ரகமத்துல்லா பெற்றுக் கொண்டார்
செவ்வாய், 28 ஏப்ரல், 2009
மனிதநேய மக்கள் கட்சிக்கு “ரெயில் என்ஜின்” சின்னம்
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தென்காசி தொகுதியில் போட்டியிடுகிறார். மனித நேய மக்கள் கட்சி மயிலாடுதுறை, மத்திய சென்னை, ராமநாதபுரம், பொள்ளாட்சி ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
மயிலாடுதுறையில் த.மு.மு.க. மாநில தலைவர் ஜவாஹிருல்லா, மத்திய சென்னையில் பொதுச் செயலாளர் ஹைதர்அலி, ராமநாதபுரத்தில் சலி முல்லாகான், பொள்ளாட்சியில் உமர் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
டாக்டர் கிருஷ்ணசாமியும், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் களமிறங்கியுள்ள 4 வேட்பாளர்களும் தங்களுக்கு ரெயில் என்ஜின் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று கேட்டிருந்தனர். இதன்படி இவர்கள் அனைவருக்கும் ரெயில் என்ஜின் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் ஹைதர் அலி நேற்று ரெயில் என்ஜின் சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார்.
திருவல்லிக்கேணி பகுதியில் எல்லிஸ்.ரோடு, பைகிராஸ்ரோடு, பெல்ஸ் ரோடு, திருவல்லிக் கேணி நெடஞ்சாலை, அபுல்ஹசன் ரோடு, பார்டர் தோட்டம், பெரிய தெரு, பார்த்தசாரதி ரோடு மற்றும் சேப்பாக்க பகுதிகளிலும் ரெயில் என்ஜின் சின்னத்தை காட்டி ஹைதர்அலி ஓட்டு கேட்டார்.
திறந்த ஜீப்பில் சென்று பிரசாரத்தில் ஈடுபட்ட அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மனித நேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் நவுசர் உமரி, த.மு.மு.க. பொருளாளர் ரகமதுல்லா, மனிதநேய மக்கள் கட்சியின் தென் சென்னை மாவட்ட செயலாளர் அப்துல்சலாம், த.மு.மு.க. மாவட்ட தலைவர் சீனிமுகமது மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நேற்று காலையில் மட்டும் திருவல்லிக்கேணி பகுதியில் 20 கிறிஸ்தவ பாதிரியார்களை சந்தித்து ஹைதர் அலி ஆதரவு திரட்டியது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா, மெக்சிகோவில் புதுவகை உயிர் கொல்லி வைரஸ் பரவுகிறது:
வேட்பாளர் கட்டிய டெபாசிட் பணத்தில் ரூ.2,000 கள்ளநோட்டு
அடையாறு, சாஸ்திரி நகர் 3வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ஜே.சுந்தர். இவர் தென்சென்னை மக்களவை தொகுதியில் போட்டியிட, கடந்த 24ம் தேதி அடையாறில் உள்ள 10வது மண்டல மாநகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால், ரூ.5 ஆயிரத்துக்கான டெபாசிட் தொகையை உதவி தேர்தல் அதிகாரியிடம் கொடுத்தார்
ஆறு 500 ரூபாய்களும், இரண்டு 1000 ரூபாய்களும் அதில் இருந்தது. வேட்பாளர்கள் கொடுத்த டெபாசிட் பணத்தை ரிசர்வ் வங்கியில் செலுத்த தேர்தல் அதிகாரிகள் அன்று மாலை சென்றனர். அப்போது ஒரு 1000 ரூபாய் நோட்டும், இரண்டு 500 ரூபாய் நோட்டும் கள்ளநோட்டு என்பதை வங்கி அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதுகுறித்து உதவி தேர்தல் அதிகாரி, மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள தேர்தல் அதிகாரி பாலாஜியிடம் தெரிவித்தார்.
இதையடுத்து சுயேச்சை வேட்பாளரிடம் விசாரிக்கப்பட்டது. தனது நண்பர்கள் மூலம் ஏடிஎம் வங்கியில் இருந்து பணம் பெற்றதாக கூறினார். தொடர்ந்து நடைபெற்ற விசாரணைக்கு பிறகு ஜே.சுந்தரின் வேட்பு மனு ஏற்கப்பட்டது. எனினும், கள்ளநோட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயிரம் "நானோ" கார்கள் புக்கிங் செய்தார் தொழிலதிபர்
கோல்கட்டாவில் ஸ்ரீ சிமென்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எச்.எம்.பாங்குர். கோல்கட்டாவில் உள்ள நானோ புக்கிங் மையத்தில், புவி பாதுகாப்பு நாளான, கடந்த 24 ம் தேதி, ஆயிரம் நானோ கார்களுக்கான விண்ணப்பங்களை அளித்தார்.
பன்றி காய்ச்சல் பீதி: மெக்சிகோவில் 149 பேர் பலி
கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு, உலக நாடுகளை கடும் பீதிக்குள்ளாக்கிய பறவைக் காய்ச்சல் நோய் போன்று, தற்போது பன்றி காய்ச்சல் நோய் பரவி வருகிறது. இந்நோய், பன்றிகள் மூலமாக பரவுவதால் பன்றி காய்ச்சல் (சுவைன் ப்ளூ) என்றும் அழைக்கப்படுகிறது.
இந்நோய்க்கு மெக்சிகோவில் இதுவரை 149 பேர் பலியாகியுள்ளனர். இது தற்போது இங்கிலாந்து, ஸ்பெயின் போன்ற நாடுகளிலும் வேகமாக பரவிவருகிறது.
இது ஓர் தொற்றுநோய் என்பதால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பொதுமக்கள் முகமூடி அணிந்தபடியே நடமாடுகிறார்கள். சுற்றுலாப் பயணிகள் மூலமாக, இந்நோய் பரவக்கூடும் என்ற அச்சம் நிலவுவதால், பல நாடுகள் தங்களது நாட்டுக்கும் வரும் விமானப் பயணிகளை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துக்கின்றன.
மேலும் பல நாடுகள், தங்கள் நாட்டினரை மெக்சிகோ செல்ல வேண்டாம் என்று எச்சரித்து வருகின்றன. இந்நோயை தடுக்க உரிய மருந்துகள் கண்டுப்பிடிக்கப்படவில்லை என்று கூறப்படுவதால், மகளிடையே பெரும் பீதி நிலவுகிறது
பி.எஸ்.என்.எல்.லின் புதிய இணைய டி.வி.
தொலைத் தொடர்புத் துறையின் தொழில்நுட்பப் பிரிவு உறுப்பினர் கே. ஸ்ரீதரா, சென்னை தொலைத் தொடர்பு வட்ட முதன்மை பொதுமேலாளர் பி. வேலுச்சாமி உள்ளிட்டோர் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
இந்தத் திட்டத்தின் கீழ், தொலைபேசி, இன்டர்நெட் இணைப்புடன், செட்-டாப் பாக்ஸýம் வழங்கப்படும்.
இந்தப் புதிய இணைய டி.வி.யில் 150 சேனல்களுக்கு மேல் பார்க்க முடியும்]
வாடிக்கையாளர்களின் வசதிக்காக, புதிய ஹாலிவுட், பாலிவுட் திரைப்படங்கள் கொண்ட இணைய திரைப்பட நூலகம் உருவாக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் எந்த நேரத்திலும் பதிவிறக்கம் செய்து திரைப்படங்களைப் பார்க்கலாம்
குழந்தைகள் சில சேனல்களைப் பார்ப்பதை தடை செய்வதற்கான வசதியும் இதில் உள்ளது
செட்-டாப் பாக்ஸýக்கு ரூ. 2,500 கட்டணம் செலுத்த வேண்டும். மாத வாடகை ரூ. 50 செலுத்த வேண்டும்.
இந்த இணைய டி.வி. இணைப்பு தொடர்பான மேலும் தகவல்களுக்கு, ஜ்ஜ்ஜ்.ம்ஹ்ஜ்ஹஹ்.ண்ய் என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்
நெல்லை தொகுதியில் மோதும் 3 கோடீஸ்வரர்கள்
திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்டிருந்த 35 வேட்பு மனுக்களில் 21 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இவர்களில் 8 பேர் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள். 13 பேர் சுயேச்சைகள்.
அரசியல் கட்சியைச் சேர்ந்த எட்டு பேரில் 3 பேர் கோடீஸ்வரர்கள். வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டபோது இவர்கள் அளித்த உறுதிமொழி பத்திரத்தில் தங்களது சொத்து மதிப்பை தெரிவித்துள்ளனர்
அதன்படி, கோடீஸ்வர வேட்பாளர் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் தேமுதிக வேட்பாளர் சி. மைக்கேல் ராயப்பன். இவரது சொத்து மதிப்பு சுமார் ரூ. 25 கோடி.
இரண்டாவதாக அதிமுக வேட்பாளர் கே. அண்ணாமலை உள்ளார். இவரது சொத்து மதிப்பு சுமார் ரூ. 10.41 கோடி. முன்றாவதாக காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.எஸ். ராமசுப்பு உள்ளார். இவரது சொத்து மதிப்பு சுமார் ரூ. 1.64 கோடி.
திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் 5 பேர் லட்சாதிபதிகள். இவர்களுடன் 13 சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தென்காசி தொகுதியில் அரசியல் கட்சியைச் சேர்ந்த 6 பேரும், சுயேச்சை வேட்பாளர்கள் 6 பேரும் போட்டியிடுகின்றனர்.
இவர்களில் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் டாக்டர் க. கிருஷ்ணசாமியின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 2.44 கோடி. மற்ற 5 அரசியல் கட்சி வேட்பாளர்கள் லட்சாதிபதிகள்.
இவர்களுடன் 6 சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
தகவல் : தினமணி
துபாயில் மொபைல் படக்கண்காட்சி, போட்டி
இதில் பங்கேற்க விரும்புபவர்கள் மொபைலில் படம் எடுத்து அந்த படங்களை discoverers@murdochdubai.ac.ae எனும் மின்னஞ்சல் முகவரிக்கு மே 7ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். புகைப்படங்கள் பெயர், மொபைல் போன் எண், வயது ஆகிய தகவல்களுடன் அனுப்புங்கள்.
இந்த புகைப்படங்கள் வரும் மே 14ம் தேதி முதல் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் புகைப்படக் கண்காட்சியில் இடம்பெறும்.
தேர்ந்தெடுக்கப்படும் முதல் மூன்று படங்களுக்கு பிஜி பிலிம் வழங்கும் நவீன தொழில்நுட்பம் கொண்ட கேமராக்கள் பரிசாக வழங்கப்படும்.இப்போட்டிகளுக்கு கிராண்ட் ஸ்டோர்ஸ் மற்றும் பிஜி பிலிம் ஆகியவை அணுசரணை வழங்கியுள்ளன.
மேலதிக விபரங்களுக்கு www.murdochdubai.ac.ae / 04-435 5700.
எமிரேட்ஸ் ஏவியேஷன் கல்லூரி கலந்துரையாடல்
துபாய் எமிரேட்ஸ் ஏவியேஷன் கல்லூரியில் (www.emiratesaviationcollege.com) ஆசிரியர், பெற்றோர் மற்றும் மாணவர் கலந்துரையாடல் நிகழ்ச்சி கடந்த 25ம் தேதி சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பள்ளி இறுதிக் கல்வி முடித்த மாணவர்கள் ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங், ஏர் டிரான்ஸ்போர்ட் மேனேஜ்மெண்ட், ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், பிஸினஸ் மேனேஜ்மெண்ட் மற்றும் சுற்றுலா மேனேஜ்மெண்ட் உள்ளிட்ட படிப்புகள் படிப்பது சம்பந்தமான நேரடி கலந்தாய்வு நடைபெற்றது. இதில் இத்துறையில் ஆர்வமுள்ள பலர் பங்கேற்றனர்.
தேரிழந்தூர் தாஜுத்தீன் 'சிடி' வெளியீடு:
துபாயில் தேரிழந்தூர் தாஜூத்தீன் பாடிய சமூக விழிப்புணர்வுப் பாடல்களின் தொகுப்பு 'சிடி' வடிவத்தில் வரும் மே 8ம் தேதி இரவு ஏழு மணிக்கு துபாய் லேண்ட்மார்க் ஹோட்டலில் வெளியிடப்படுகிறது.
பெருமானார் காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள், தாயிப் நகரத்து துயர சம்பவம், தாலாட்டும் சீராட்டும், தர்மங்களின் வகைகள், பிரார்த்தனை உள்ளிட்டவற்றை மையமாகக் கொண்டவை.
இந்நிகழ்ச்சி குறித்த விபரமறிய மீரான் 050 56 61493 மற்றும் முதுவை ஹிதாயத் 050 51 96433 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்
மின்னஞ்சல்: muduvaihidayath@gmail.com.
இணையத்தளம்: www.tamilmuslimtube.com, www.mudukulathur.com
நிகழ்ச்சி அமைப்பினை சங்கமம் தொலைக்காட்சி செய்துள்ளது. முதுகுளத்தூர்.காம், மற்றும் மணிச்சுடர் தமிழ் நாளிதழ் ஆகியவை ஊடக ஒருங்கிணைப்பினை செய்து வருகின்றன
இன்று ஸ்ரீவைகுண்டம் கோயிலில் கொடியேற்றம்
விழா நாள்களில் தினமும் கும்பாபிஷேகம், பூங்கோயில், கேடய, சப்பரத்தில் சுவாமி, அம்பாள் திருவீதி உலா, தீபாராதனை நடைபெறும்
திங்கள், 27 ஏப்ரல், 2009
அரசுத் துறை வங்கிகளுக்கு 30,000 ஊழியர்கள் தேவை
உலகம் முழுக்க பொருளாதார மந்தம் நீடிக்கிறது. இந்தியாவை அது பெருமளவு பாதித்தாலும் பணியாளர்கள் பற்றாக்குறை நாளுக்கு நாள் பொதுத்துறை வங்கிகளில் அதிகரித்து வருகிறது.
இந்திய வங்கிப் பணியாளர் தேர்வு மையம் கணித்துள்ளபடி, இந்த ஆண்டு மட்டும் குறைந்தது 30000 பேரை தற்காலிகமாகவாவது வேலைக்கு எடுத்தாக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாம்.
வங்கிகள் விரிவாக்கம், கடன் நிர்வாகம், வசூல் என பல பணிகளுக்காக இந்தப் பணியாளர்கள் தேவைப்படுகிறார்களாம்.
மேலும் வங்கிகள் துணை சேவைகளான இன்சூரன்ஸ், பரஸ்பர நிதி போன்றவற்றின் நிர்வாகத்துக்கு மேலும் கூடுதல் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள் என இந்த மையம்
தெரிவித்துள்ளது
முதல்வர் கருணாநிதி இன்று திடீர் உண்ணாவிரத போராட்டம்
இன்று அட்சய திருதியை கோடி கணக்கில் தங்க நகைகள் குவிப்பு; காலை 6 மணிக்கு கடைகள் திறப்பு
வாடிக்கையாளர்கள் வசதிக்காக ஒரு வாரத்திற்கு முன்பே நகை கடைகளில் அட்வான்ஸ் புக்கிங் தொடங்கி விட்டனர். பல கடைகள் கவர்ச்சிகரமான விலை குறைப்பு மற்றும் பரிசுகளையும் அறிவித்துள்ளன.
ஏற்கனவே நகை வாங்குவதற்காக அட்வான்ஸ் புக்கிங் கோடியை தாண்டி விட்டது.ஏழைகளும் வாங்குவதற்கு வசதியாக 1/2 கிராம் முதல் தங்க நகைகள் வித விதமான மாடல்களில் தயாராகி உள்ளன.
சென்னை நகை தொழிலாளர்கள் தயார் செய்தது மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் நகைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை நகை வியாபாரிகள் வாங்கி குவித்துள்ளனர்.
இன்று காலை 6 மணிக்கே நகை கடைகள் திறக்கிறது. நள்ளிரவு வரை வியாபாரம் சூடு பிடிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
நகை வியாபாரிகள் சங்க தலைவர் எல்.கே.எஸ். செய்யது அகமது கூறியதாவது:-
இந்த மாதம் மட்டும் இந்தியாவில் 30 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. நம் நாட்டில் தங்கம் வாங்கும் ஆர்வம் அதிகமாக உள்ளது. எனவே தங்கம் விற்பனை அதிகமாக உள்ளது.
வழக்கமாக அட்சய திருதியை நாளில் விற்பனை அதிகமாக இருக்கும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.164 குறைவாக உள்ளது. எனவே விற்பனை 10 முதல் 20 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு எல்.கே.எஸ். செய்யது அகமது கூறினார்.
குஜராத்தில், பிரதமரை நோக்கி ஷூ வீச்சு
ஞாயிறு, 26 ஏப்ரல், 2009
இன்று சென்னை ஸ்ரீவை ஜமாஅத் கமிட்டி கூட்டம்
அஸல்லமு அழைக்கும் ( வரஹ்
இன்ஷா அல்லா இன்று மாலை மஹரிப் பின் சென்னை ஸ்ரீவை ஜமாஅத் கமிட்டி கூட்டம் புரசைவாக்கத்தில் நடைப்பெற உள்ளது.
இக்கூட்டத்தில் வரும் மே 2 ஆம் தேதி இன்ஷா அல்லா நடைபெற உள்ள இஸ்திமா செயல்பட்டுகள், மற்றும் சிறப்பு பேச்சள்ளகளை அழைத்து செல்லும் பொறுப்பு பற்றியும் விவாதிக்கப்பட்டுகிறது.
சென்ற ஆண்டு போல இந்த ஆண்டும் சிறப்பாக நடைபெற்று முடிய வல்ல இறைவனிடம் துவா செய்துகொள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
வஸல்லம்
தகவல் : S. சலீம் , சென்னைஸ்ரீவை ஜமாஅத், சென்னை
துபாயில் -இனிய திசைகள் இதழ் அறிமுகம்
நிகழ்ச்சிக்கு இஸ்லாமுதீன் தலைமை வகித்தார். அஹ்மத் இம்தாதுல்லாஹ் வரவேற்றார்.
இனிய திசைகள் ஏழாம் ஆண்டு இதழ்களை திருச்சி மாவட்ட அரசு டவுண் காஜி காரி மவ்லவி கே. ஜலீல் சுல்தான் வெளியிட்டார்.இனிய திசைகள் இதழ் கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டுக்கு பல்வேறு வழிகளில் ஆற்றி வரும் பணிகளை நினைவு கூர்ந்த அவர் இதழின் வளர்ச்சிக்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொண்டார்.
நிகழ்வில் மவ்லவி தாவூத் அலி ஹஜ்ரத், சர்புதீன் ஹாஜியார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள அமீரக இனிய திசைகள் வாசகர் வட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.
கல்வி விழிப்புணர்வு விழா:
துபாயில் இந்திய முஸ்லிம் நல அறக்கட்டளை கல்வி விழிப்புணர்வு விழாவினை வெள்ளிக்கிழமை தேரா லாஸ்ட் ஹவர் ரெஸ்டாரெண்ட்டில் நடத்தியது.பொறியாளர் எல். ஷேக் முஹம்மது தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் எஃப். சவுக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார். என்ன? எங்கே? படிக்கலாம் என்ற உயர்கல்வி படிப்பதற்கான வழிகாட்டுதலை திருச்சி அய்மான் கல்லூரி செயலாளர் சையது ஜாபர் நடத்தினார்.
மடிக் கணினி உதவியுடன் கல்வி குறித்த தகவலை விவரித்தார்.பெற்றொர்கள் அயல்நாட்டில் இருக்கும் சூழ்நிலையில் பிள்ளைகள் தாயகத்தில் இருக்கும் போது அவர்களை கல்வியில் சிறப்பிடம் பெறுவதற்காக எந்த வகையில் ஆலோசனை கூறுவது என்பன போன்ற மனநல ஆலோசனைகளை ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும நலத்துறை மேலாளர் முஹைதீன் பாட்சா வழங்கினார்.
குறிப்பாக பிள்ளைகள் நல்ல விஷயங்கள் செய்யும் போது அவர்களை பாராட்டி உற்சாக மூட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.காயல்பட்டணம் மருத்துவர் பி.எம். செய்யது அஹ்மது அவர்கள் மருத்துவம் படித்த நிகழ்வுகளை விவரித்தார்.
மவ்லவி ஆவூர் இஸ்மாயில் ஹஸனி ஆலிம் பட்டம் பெற்ற தான் உயர்கல்வி கற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதை விவரித்தார். தேரிழந்தூர் தாஜுத்தீன் கல்வி விழிப்புணர்வு பாடலை பாடினார். முதுவை ஹிதாயத் கல்வித் தகவல்களை வழங்கினார்.
சனி, 25 ஏப்ரல், 2009
ஸ்ரீவை தேரோட்டம் புகைப்படம்
இனி எவரஸ்ட் சிகரத்தில் இருந்தும் செல்போனில் பேசலாம்
மைக்ரோசாப்ட்: 23 ஆண்டுகளில் முதல் வருவாய் வீழ்ச்சி!
வெள்ளி, 24 ஏப்ரல், 2009
தமிழகத்தின் பணக்கார வேட்பாளர் சாருபாலா தொண்டமான் சொத்து மதிப்பு ரூ.56.62 கோடி
இதன்மூலம், தமிழ்நாட்டில் போட்டியிடும் வேட்பாளர்களில் இவர் முதலிடம் பிடித்துள்ளார். மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் சிவகங்கை தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இவர் தனக்கு ரூ.27 கோடி சொத்து இருப்பதாக வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார். இதிலும், அவரது மனைவிக்கு சொந்தமான சொத்துகளும் அடங்கும் என கூறப்பட்டுள்ளது.
கோவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரபு வேட்புமனுவில் தனக்கு சொந்தமாக மிக விலை உயர்ந்த பி.எம்.டபிள்யூ.ரக கார் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழகம், புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது
தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளிலும் வேட்பு மனுத்தாக்கல் இன்று மாலையுடன் முடிகிறது. இறுதி வேட்பாளர் பட்டியல் திங்கட்கிழமை (27 ஆம் தேதி) வெளியிடப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதியிலும், புதுச்சேரி தொகுதியிலும் ஒரே கட்டமாக மே 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 17ஆம் தேதி தொடங்கியது.முதல் நாளில் ஏராளமான சுயேட்சைகள் மட்டுமே மனு தாக்கல் செய்தனர். 20ஆம் தேதி அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். காங்கிரஸ் வேட்பாளர்கள் சிலரும் மனு தாக்கல் செய்தனர்.
வேட்புமனு தாக்கலின் 6-வது நாளான நேற்று தமிழ்நாடு முழுவதும் 276 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.கடந்த 5 நாட்களில் இல்லாத அளவுக்கு நேற்றுதான் அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். ''இதுவரை மொத்தம் 744 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்'' என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்தார்.
தென் சென்னை தொகுதியில் 43 பேரும், மத்திய சென்னை தொகுதியில் 33 பேரும், வடசென்னை தொகுதியில் 14 பேரும் இதுவரை வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.வேட்பு மனுதாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 3 மணியுடன் முடிவடைகிறது. தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட ஏராளமான பேர் இன்று மனுதாக்கல் செய்கிறார்கள். வடசென்னை தி.மு.க. வேட்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், மத்திய சென்னை தி.மு.க. வேட்பாளர் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் இன்று வேட்பு மனுதாக்கல் செய்கிறார்கள்.
இன்று வேட்பு மனுதாக்கல் செய்வதற்கு இறுதி நாள் என்பதால் மேலும் ஏராளமான பேர் வேட்பு மனுதாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.25ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது.
மனுக்களை திரும்ப பெற 27ஆம் தேதி (திங்கட்கிழமை) கடைசி நாள். அன்று மாலை வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்படுகிறது.
ஸ்ரீவையில் இன்று தேரோட்டம்
ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவில் சித்திரை திருவிழா தொடங்கியது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் இன்று நடக்கிறது.
இன்று அதிகாலை 5 மணிக்கு சுவாமி தேரில் வைத்து காலை 8.30 மணிக்கு தேரோட்டம் ஆரம்பமாகிறது.தேர் ஊர் முழுவதும் வலம் வரும்.இதன் காரணமாக மின்சாரம் நிறுத்தப்பட்டும் மற்றும் போக்குவரத்து பஸ்களுக்கு மற்று வழி செய்யப்பட்டும்.
இதில் ஸ்ரீவைகுண்டம் டவுண் பஞ்சாயத்து தலைவர் , கவுன்சிலர்கள், ஊரின் முக்கிய பிரமுகர்கள், மற்றும் சுற்று வாட்டரா பொது மக்கள் அனைவரும் கலத்துகொள்வார்கள்.
இதன் ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்கின்றனர்.
நேற்று தமிழகம் முழுவதும் பொது வேலைநிறுத்தம் புகைப்படங்கள்
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்க சுய முன்னேற்ற பயிலரங்கம்
வரும் 24ம் தேதி மாலை 5 மணி முதல் இரவு 8:30 மணி வரை மன்சூரிய்யா பகுதியில் உள்ள 'ரிஃபாயி தீவானியா' (அல் அரபி விளையாட்டரங்கம் அருகே) அரங்கத்தில் இந்தப் பயிலரங்கம் நடக்கிறது.
சங்கத் தலைவர் டி.பி. அப்துல் லத்தீஃப் தலைமையில் நடைபெறும் பயிலரங்கில் சங்கத்தின் கல்விக் குழு செயலாளரும், திருநெல்வேலி ஷஃபி கல்வி அறக்கட்டளையின் தாளாளரும், குவைத் இண்டிகிரேடட் கலாசாலையின் மூத்த நிர்வாக அதிகாரியுமான பேராசிரியர் எம். அப்துல் ஹமீத் பயிற்சியளிப்பார்
மேலதிக விவரங்களுக்கு: www.k-tic.com இணையத்தை பார்க்கவும்.அல்லது q8tic@yahoo.com மற்றும் ktic.kuwait@gmail.com மின்னஞ்சல் முகவரிகளை தொடர்பு கொள்க.
மேலும் http://groups.yahoo.com/group/K-Tic-group என்ற யாஹு குழுமத்திலும் விவரம் பெறலாம்.
வியாழன், 23 ஏப்ரல், 2009
பொது வேலை நிறுத்தம்: கடைகள் அடைப்பு; பஸ்கள் ஓடவில்லை
இதனால் அங்கு போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரி தமிழ் நாட்டில் இன்று பொது வேலைநிறுத்தம் நடத்த முதல்-அமைச்சர் கருணாநிதி அழைப்பு விடுத்தார்.
இதற்கு தி.மு.க. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் ஆதரவு அளித்தன. இதனால் தமிழ்நாடு முழுவதும் இன்று பஸ்கள் ஓடவில்லை. போலீஸ் பாதுகாப்புடன் பஸ்களை இயக்க அரசு தயாராக இருந்தது. ஆனால் வேலை நிறுத்தத்தை ஆதரிக்கும் தொழிலாளர்கள் வேலைக்கு வரவில்லை. அனைத்து பஸ் டெப்போக்களும் மூடப்பட்டன.
சென்னையில் காலையில் இருந்து மாநகர பஸ்கள் ஒன்று கூடஓடவில்லை. வெளியூர்களில் இருந்து வரவேண்டிய எக்ஸ்பிரஸ் பஸ்கள் முன்கூட்டியே புறப்பட்டு சென்னை வந்து சேர்ந்தன.
மாநகர பஸ்கள் ஓடாததால் பிராட்வே, தாம்பரம், சென்ட்ரல், பெரம்பூர், அயனாவரம், வடபழனி, தியாகராய நகர் உள்பட அனைத்து பஸ் நிலையங்களும் வெறிச்சோடியது.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் அண்ணாசாலை, கடற்கரை சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை போன்ற முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
பெரும்பாலான ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள், கார், வேன்கள் மட்டும் ஓடின.
பால் சப்ளை வழக்கம்போல் இருந்தது. குடிநீர் லாரிகள் ஓடின. சரக்கு லாரிகள் குறைந்த அளவில் ஓடியது.
கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன ஒரு சில டீக்கடைகள், சிறிய பெட்டிக்கடைகள் மருந்து கடைகள் மட்டும் திறந்து இருந்தன. சென்னையில் புறநகர் மின்சார ரெயில்கள் வழக்கம் போல் ஓடின.
வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் நாடு முழுவதும் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டு காலை காட்சியும், பகல் காட்சியும் ரத்து செய்யப்பட்டது.
சென்னையில் அனைத்து தியேட்டர்களிலும் காலை, பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. சென்னையில் சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டன. ஸ்டூடியோக்கள் மூடப்பட்டு இருந்தன.
சென்னையில் அரசு அலுவலகங்கள் திறந்து இருந்தன. பஸ்கள் ஓடாததால் ஊழியர்கள் வருகை குறைவாக இருந்தது.
மத்திய அரசு அலுவலகங்கள், பாங்கிகள் வழக்கம் போல் செயல்பட்டன. அவற்றிலும் ஊழியர்கள் வருகை குறைவாக இருந்தது.
சென்னையில் சில கல்லூரிகளில் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இன்று பஸ்கள் ஓடாததால் தேர்வு எழுதச் செல்லும் மாணவ -மாணவிகள் ஆட்டோ பிடித்தும், பெற்றோருடன் இரு சக்கர வாகனங்களில் சென்றும் தேர்வு எழுதினர்.
கோயம்பேடு மார்க்கெட்டில் தினமும் 450-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் வரும். இன்று சுமார் 50 லாரிகளில் மட்டுமே காய்கறிகள் வந்தன.
பெரு வாரியான கடைகள் மூடப்பட்டிருந்தது. நேற்று மீதம் இருந்த காய்கறிகளை மட்டும் ஒருசில கடைகளில் திறந்து வியாபாரம் செய்தனர்.
வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து அம் பத்தூர் தொழிற்பேட்டையில் பெரும்பாலான தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருந்தன.
ஓட்டளிக்க மாற்று ஆவணங்கள் அறிவிப்பு
3. வருமான வரி அடையாள அட்டை (பான் கார்டு)
4. மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை, உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள புகைப்படத்துடன் கூடிய பணியாளர் அட்டை.
7. ஆதிதிராவிடர், பழங்குடியினர். இதர பிற்பட்ட வகுப்பினருக்கு, வழங்கிய புகைப்படத்துடன் கூடிய சான்றுகள்.
8. பென்ஷன் ஆவணங்கள்
9. சுதந்திரப் போராட்ட வீரர் அடையாள அட்டைகள்.
10. ஆயுத லைசென்ஸ் அட்டைகள்.
11. உடல் ஊனமுற்றோருக்கான அடையாள அட்டைகள்.
12. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பணி கார்டுகள்.
13. தொழிலாளர் நல அமைச்சகத்தின், மருத்துவக் காப்பீட்டுத் திட்ட 'ஸ்மார்ட் கார்டு'கள்.
புதன், 22 ஏப்ரல், 2009
ஸ்ரீவையின் சாதனையாளர் எஸ்.ஷங்கர நாராயணன்.
1. நந்தவனத்துப் பறவைகள்
2..கிளிக்கூட்டம்
3. மானுட சங்கமம்
4. காலத்துளி
5. கனவுகள் உறங்கட்டும்
6. மற்றவர்கள்
7. கிரண மழை
8. கடல் காற்று
9. நேற்று இன்றல்ல நாளை
10. தொட்ட அலை தொடாத அலை
11. முத்தயுத்தம்
12. திசை ஒன்பது திசை பத்து
13. கண்ணெறி தூரம்
1. பூமிக்குத் தலை சுற்றுகிறது.
3. எஸ்.ஷங்கர நாராயணனின் குறுநாவல் வரிசை
1. அட்சரேகை தீர்க்கரேகை
2. நிர்மலமான வானில் நட்சத்திரங்கள்
3. காமதகனம்
4. ஒரு துண்டு ஆகாயம்
5. புதுவெள்ளம்
6. சராசரி இந்தியன்
7. கனவு தேசத்து அகதிகள்
8. படகுத்துறை
9. ஆயிரங் காலத்துப் பயிர்
10. பெப்ருவரி-30
11. உயிரைச் சேமித்து வைக்கிறேன்
12. யுத்தம்
13. இரத்த ஆறு
14. இரண்டாயிரம் காலத்துப் பயிர்
15. இருவர் எழுதிய கவிதை
16. மௌனம் டாட் காம்
17. பிளஸ்சீரோ - சீரோ - மைனஸ் சீரோ
18. எஸ்.ஷங்கர நாராயணன் சிறுகதைகள்-1
19. எஸ்.ஷங்கர நாராயணன் சிறுகதைகள்-2
20. கதைப் பெருங்கொத்துக்கள்
21. பிரசவறைக்கு வெளியே வலியுடன் ஆண்கள்
22. பிரபஞ்ச பூதங்கள்
23. லேப்டாப் குழந்தைகள்
24. கடிகாரத்தை முந்துகிறேன்
1. கூறாதது கூறல்
2. ஞானக் கோமாளி
1. ஆகாயப் பந்தல்
2. பரிவாரம்
3. 1997 ன் சிறந்த சிறுகதைகள்
4. 1998 ன் சிறந்த சிறுகதைகள்
5. 1999 ன் சிறந்த சிறுகதைகள்
6. யானைச் சவாரி
7. மாமழை போற்றுதும்
1. தமிழக அரசு பரிசு
2. அக்னி அட்சர விருது
3. பாரத ஸ்டேட் வங்கி விருது
4. திருப்பூர் தமிழ்சங்கப் பரிசு
5. லில்லி தேவசிகாமணி விருது
6. அனந்தாச்சாரி அறக்கட்டளை விருது
7. இலக்கியச் சிந்தனை விருது
8. இலக்கிய வீதி பரிசு
யாஹூவில் 5 சதவிகித ஊழியர்கள் நீக்கம்!
இந்திய தூதருடன் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தினர் சந்திப்பு!
ஸ்ரீவை இளைஞர், ஸ்ரீவைகுண்டத்தில் மணக்கோலத்தில் தனது முதல் படத்தை தொடங்கினர்
பத்திரிகையாளராக இருந்து பல்வேறு துறைகளில் பணியாற்றிய பிறகு திரைப்படத் துறைக்கு வந்த சின்னப்பா கணேசன், தனக்கென சில லட்சியங்களை வகுத்து கொண்டார். அவற்றில் ஒன்று தனது முதல் படம் தொடங்கும் நாளிலேயே தனது திருமணமும் நடக்க வேண்டும் என்பது
நாளை இந்த எண்ணம் ஈடேறுகிறது. அவரது மற்றொரு லட்சியம் மிகவும் உயர்வானது. இலங்கை அகதி ஒருவரை கைப்பிடிக்க வேண்டும் என்பதே அந்த லட்சியம். அதன்படி மகிந்திலி என்னும் மைதிலியை நாளை அவர் திருமணம் செய்து கொள்கிறார். மனைவியை கைப்பிடித்த கையோடு "அண்மைக் காலமாய்' எனும் பெயரிடப்பட்ட தன்னுடைய படத்தை அவர் தொடங்குகிறார்
தூத்துக்குடியில் உள்ள ஸ்ரீவைகுண்டம் பேரூர் சுந்தரதேவி விநாயகர் கோயிலில் திருமணம் நடைபெறுகிறது. "அண்மைக் காலமாய்' படம் ஒரு குடும்பபாங்கான த்ரில்லராக அமையும் என்று இயக்குனர் கூறுகிறார். புதுமுகங்கள் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஸ்ரீவைகுண்டம் பேரூர், ஊட்டி, சென்னை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. புதுமுக இசையமைப்பாளர் சிவரூபன் இசையமைக்கிறார்.
தகவல் : மாலைசுடர்
செய்தி நாள் : 19 - 04 - 2009
கிங்பிஷர் ஏர்லைன்சில் 12 விமானிகள் பணி விலகல்
தொடக்கத்தில் 14 பேர் பதவி விலகுவதாக கடிதம் கொடுத்து இருந்தனர். அவர்களில் 2 பேர் விலகவில்லை. பதவி விலகும் 12 பேரும் கத்தார் ஏர்வேய்ஸ் நிறுவனத்தில் ஜுன் 8-ந்தேதி பணிக்கு சேருகிறார்கள் என்றும் அந்த அதிகாரி கூறினார்
தூத்துக்குடியில், நேற்று சரத்குமார் தலைமையில் சென்று ச.ம.க. வேட்பாளர் மனுதாக்கல்
பின் தூத்துக்குடி தொகுதி ச.ம.க. வேட்பாளர் சாலமோன் என்ற கராத்தே சரவணன், மாவட்ட செயலாளர் சுந்தர் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து ஆலயத்துக்குள் சென்று சரத்குமார் வழிபட்டார்.
வழிபாட்டுக்கு பின்னர் கட்சியினருடன் சேர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக சென்று காமராஜர் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பிறகு தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலம் புறப்பட்டது.
இதில் மாவட்ட செயலாளர் சுந்தர், துணை செயலாளர் மலர் விழி, இளைஞர் அணி செயலாளர் வில்சன், அவை தலைவர் பாலா, நகர செயலாளர் அற்புத ராஜ், சுதாகர் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் சரத்குமார் தலைமையில் வேட்பாளர் கராத்தே சரவணன் சென்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான பிரகாசிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். நிர்வாகிகள் சுந்தர், சுதாகர் உடன் இருந்தனர்.
செவ்வாய், 21 ஏப்ரல், 2009
புதிய பத்து ரூபாய் நாணயம்!
நாணயத்தின் உட்பகுதி ஃபெரஸ் ஸ்டீலாலும், வெளிப்பகுதி நிக்கெல் ப்ரான்ஸாலும் ஆனது. நாணயத்தின் எடை, 8 கிராம்; சுற்றளவு 28 மி.மீ நாணயத்தை வடிவமைத்தவர்கள் National Institute of Design, Ahmedabad. வேற்றுமையில் ஒற்றுமை என்ற கருத்தைக் கருவாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் மற்றும் பிரச்சாரப் படங்கள்
ஸ்ரீவைகுண்டம் வாலிபர் ஒருவர் வேட்புமனு தாக்கல்
அனைத்து தேர்தலிலும் போட்டியிடும் கலக்கும் மேட்டூர் தேர்தல் மன்னன் பத்மராஜன் இந்த தேர்தலிலும் ஆஜர் ஆகிறார். தர்மபுரி தொகுதிக்கு மனு தாக்கல் செய்தார். இது அவருக்கு 101-வது தேர்தல்.
நன்றி : மாலைசுடர்
ஸ்ரீவைகுண்டம் தொண்டருக்கு ஜெயலலிதா இரங்கல்
.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர் அலி இன்று வேட்பு மனு தாக்கல்
மனித நேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல்சமது மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர்.
மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர்அலி நாளை தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். 11 மணிக்கு குறளகம் அருகே இருந்து தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று சென்னை மாநகராட்சியில் உள்ள தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.
மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் மயிலாடுத்துறை, பொள்ளாச்சி, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களும் வேட்பு மனுக்களை நாளை தாக்கல் செய்கிறார்கள்.
பஹ்ரைனில் தமுமுக நடத்தும் ரத்த தான முகாம்
பஹ்ரைன் ஆல்ஹவாஜ பிசினஸ் குரூப் நிறுவனத்தின் இயக்குநர் ஷேக் ஆப்துல் கரீம் ஆஹ்மத் முஹம்மத் ஆல்ஹவாஜ ஆவர்கள் தலைமையில் சல்மானியா மருத்துவமனையில் காலை 7 மணியிலிருந்து இந்த முகாம் நடைபெற்றது
இதில் தமிழர்கள் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களைச் சேர்ந்த பல இந்தியர்களும் பெரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்
பஹ்ரைனில் தொடர்ச்சியாக தமுமுக சார்பில் குருதிக் கொடை வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தாலும் பல்வேறு மாநில சேர்ந்த மக்கள் பெருவாரியாக பங்குபெற்ற குருதிக்கொடை முகாம் இது என்பது குறிப்பிடத்தக்கது
பஹ்ரைனில் தமுமுக செய்துவரும் நல்ல பல சேவைகளினால் பஹ்ரைன் நாட்டுவாசிகள் மத்தியில் தமிழ் மக்கள் குறித்த நல்ல ஆபிப்பிராயம் உள்ளது.
இந்த குருதிக்கொடை நிகழ்ச்சியை பஹ்ரைன் தமுமுக நிர்வாகிகளான முஹைதீன் ஷா, ஏர்வாடி ரிஸ்வான். கறம்பை ஜக்கரியா, அமைந்தகரை ஜாஹிர், ராஜகிரி யூசுப், டாக்டர் ஆலி, ரவூப், தமீமுன் ஆன்சாரி, ரபீக் அகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
பஹ்ரைன் மண்டல தமுமுக தலைவர் முஹைதீன் ஷா இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
திங்கள், 20 ஏப்ரல், 2009
ஸ்ரீவையில் நடைபெற உள்ள இஸ்திமா அறிக்கை வெளியிடு :
தமிழக நாடாளுமன்றத் தொகுதிகள்
1. திருவள்ளூர் (தனி) - 1. கும்மிடிப்பூண்டி, 2. பொன்னேரி (தனி), 3. திருவள்ளூர், 4. பூந்தமல்லி (தனி), 5. ஆவடி, 6. மாதவரம்.
2. வடசென்னை - 1. திருவொற்றியூர், 2. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், 3. பெரம்பூர், 4. கொளத்தூர், 5. திரு.வி.க. நகர் (தனி), 6. ராயபுரம்.
3. தென் சென்னை - 1. விருகம்பாக்கம், 2. சைதாப்பேட்டை, 3. தியாகராய நகர், 4. மயிலாப்பூர், 5. வேளச்சேரி, 6. சோளிங்கநல்லூர்.
4. மத்திய சென்னை - 1. வில்லிவாக்கம், 2. எழும்பூர் (தனி), 3. துறைமுகம், 4. சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி, 5. ஆயிரம் விளக்கு, 6.அண்ணா நகர்.
5. ஸ்ரீபெரும்புதூர் - 1. மதுரவாயல், 2. அம்பத்தூர், 3. ஆலந்தூர், 4. ஸ்ரீபெரும்புதூர் (தனி), 5. பல்லாவரம், 6. தாம்பரம்.
6. காஞ்சிபுரம் (தனி) - 1. செங்கல்பட்டு, 2. திருப்போரூர், 3. செய்யூர் (தனி), 4. மதுராந்தகம் (தனி), 5. உத்திரமேரூர், 6. காஞ்சிபுரம்.
7. அரக்கோணம் - 1. திருத்தணி, 2. அரக்கோணம் (தனி), 3. சோளிங்கர், 4. காட்பாடி, 5. ராணிப்பேட்டை, 6. ஆர்க்காடு
8. வேலூர் - 1. வேலூர், 2. அணைக்கட்டு, 3. கீழ்வைத்தியனான் குப்பம் (தனி), 4. குடியாத்தம் (தனி), 5. வாணியம்பாடி, 6. ஆம்பூர்.
9. கிருஷ்ணகிரி - 1. ஊத்தங்கரை (தனி), 2. பர்கூர், 3. கிருஷ்ணகிரி, 4. வெப்பனஹள்ளி, 5. ஓசூர், 6. தளி.
10. தர்மபுரி - 1. பாலக்கோடு, 2. பெண்ணாகரம், 3. தர்மபுரி, 4. பாப்பிரெட்டிபட்டி, 5. அரூர் (தனி), 6. மேட்டூர்.
11. திருவண்ணாமலை - 1. ஜோலார்பேட்டை, 2. திருப்பத்தூர், 3. செங்கம் (தனி), 4. திருவண்ணாமலை, 5. கீழ் பெண்ணாத்தூர், 6. கலசப்பாக்கம்.
12. ஆரணி - 1. போளூர், 2. ஆரணி, 3. செய்யாறு, 4. வந்தவாசி (தனி), 5. செஞ்சி, 6. மயிலம்.
13. விழுப்புரம் (தனி) - 1. திண்டிவனம் (தனி), 2. வானூர் (தனி), 3. விழுப்புரம், 4. விக்கிரவாண்டி, 5. திருக்கோயிலூர், 6. உளுந்தூர்பேட்டை.
14. கள்ளக்குறிச்சி - 1. ரிஷிவந்தியம், 2. சங்கராபுரம், 3. கள்ளக்குறிச்சி (தனி), 4. கங்கவல்லி (தனி), 5. ஆத்தூர் (தனி), 6. ஏற்காடு (தனி-ப.கு).
15. சேலம் - 1. ஓமலூர், 2. எடப்பாடி, 3. சேலம் மேற்கு, 4. சேலம் வடக்கு, 5. சேலம் தெற்கு, 6. வீரபாண்டி.
16. நாமக்கல் - 1. சங்ககிரி, 2. ராசிபுரம் (தனி), 3. சேந்தமங்கலம் (தனி-ப.கு), 4. நாமக்கல், 5. பரமத்தி வேலூர், 6. திருச்செங்கோடு.
17. ஈரோடு - 1. குமாரபாளையம், 2. ஈரோடு கிழக்கு, 3. ஈரோடு மேற்கு, 4. மொடக்குறிச்சி, 5. தாராபுரம் (தனி), 6. காங்கேயம்.
18. திருப்பூர் - 1. பெருந்துறை, 2. பவானி, 3. அந்தியூர், 4. கோபிச்செட்டிபாளையம், 5. திருப்பூர் வடக்கு, 6. திருப்பூர் தெற்கு.
19. நீலகிரி (தனி) - 1. பவானி சாகர், 2. உதகமண்டலம், 3. கூடலூர் (தனி), 4. குன்னூர், 5. மேட்டுப்பாளையம், 6. அவினாசி (தனி).
20. கோயம்புத்தூர் - 1. பல்லடம், 2. சூலூர், 3. கவுண்டம்பாளையம், 4. கோயம்புத்தூர் வடக்கு, 5. கோயம்புத்தூர் தெற்கு, 6. சிங்காநல்லூர்.
21. பொள்ளாச்சி - 1. தொண்டாமுத்தூர், 2. கிணத்துக்கடவு, 3. பொள்ளாச்சி, 4. வால்பாறை (தனி), 5. உடுமலைப்பேட்டை, 6. மடத்துக்குளம்.
22. திண்டுக்கல் - 1. பழனி, 2. ஒட்டன்சத்திரம், 3. ஆத்தூர், 4. நிலக்கோட்டை (தனி), 5. நத்தம், 6. திண்டுக்கல்.
23. கரூர் - 1. வேடசந்தூர், 2. அரவக்குறிச்சி, 3. கரூர், 4. கிருஷ்ணராயபுரம் (தனி), 5. மணப்பாறை, 6. விராலிமலை.
24. திருச்சிராப்பள்ளி - 1. ஸ்ரீரங்கம், 2. திருச்சிராப்பள்ளி மேற்கு, 3. திருச்சிராப்பள்ளி கிழக்கு, 4. திருவெறும்பூர், 5. கந்தர்வக்கோட்டை (தனி), 6. புதுக்கோட்டை.
25. பெரம்பலூர் - 1. குளித்தலை, 2. லால்குடி, 3. மண்ணச்சநல்லூர், 4. முசிறி, 5. துறையூர் (தனி), 6. பெரம்பலூர் (தனி).
26. கடலூர் - 1. திட்டக்குடி (தனி), 2. விருத்தாச்சலம், 3. நெய்வேலி, 4. பண்ருட்டி, 5. கடலூர், 6. குறிஞ்சிப்பாடி.
27. சிதம்பரம் (தனி) - 1. குன்னம், 2. அரியலூர், 3. ஜெயங்கொண்டம், 4. புவனகிரி, 5. சிதம்பரம், 6. காட்டுமன்னார்கோயில் (தனி).
28. மயிலாடுதுறை - 1. சீர்காழி (தனி), 2. மயிலாடுதுறை, 3. பூம்புகார், 4. திருவிடைமருதூர் (தனி), 5. கும்பகோணம், 6. பாபநாசம்.
29. நாகப்பட்டினம் (தனி) - 1. நாகப்பட்டினம், 2. கீழ்வேளூர் (தனி), 3. வேதாரண்யம், 4. திருத்துறைப்பூண்டி (தனி), 5. திருவாரூர், 6. நன்னிலம்.
30. தஞ்சாவூர் - 1. மன்னார்குடி, 2. திருவையாறு, 3. தஞ்சாவூர், 4. ஒரத்தநாடு, 5. பட்டுக்கோட்டை, 6. பேராவூரணி.
31. சிவகங்கை - 1. திருமயம், 2. ஆலங்குடி, 3. காரைக்குடி, 4. திருப்பத்தூர், 5. சிவகங்கை, 6. மானாமதுரை (தனி).
32. மதுரை - 1. மேலூர், 2. மதுரை கிழக்கு, 3. மதுரை வடக்கு, 4. மதுரை தெற்கு, 5. மதுரை மத்தி, 6. மதுரை மேற்கு.
33. தேனி - 1. சோழவந்தான் (தனி), 2. உசிலம்பட்டி, 3. ஆண்டிப்பட்டி, 4. பெரியகுளம் (தனி), 5. போடி நாயக்கனூர், 6. கம்பம்.
34. விருதுநகர் - 1. திருப்பரங்குன்றம், 2. திருமங்கலம், 3. சாத்தூர், 4. சிவகாசி, 5. விருதுநகர், 6. அருப்புக்கோட்டை.
35. ராமநாதபுரம் - 1. அறந்தாங்கி, 2. திருச்சுழி, 3. பரமக்குடி (தனி), 4. திருவாடானை, 5. ராமாநாதபுரம், 6. முதுகுளத்தூர்.
36. தூத்துக்குடி - 1. விளாத்திகுளம், 2. தூத்துக்குடி, 3. திருச்செந்தூர், 4. ஸ்ரீவைகுண்டம், 5. ஒட்டப்பிடாரம் (தனி), 6. கோவில்பட்டி.
37. தென்காசி (தனி) - 1. ராஜபாளையம், 2. ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி), 3. சங்கரன்கோவில் (தனி), 4. வாசுதேவநல்லூர் (தனி), 5. கடையநல்லூர், 6. தென்காசி.
38. திருநெல்வேலி - 1. ஆலங்குளம், 2. திருநெல்வேலி 3. அம்பாசமுத்திரம், 4. பாளையங்கோட்டை, 5. நாங்குனேரி, 6. ராதாபுரம்.
39. கன்னியாகுமரி - 1. கன்னியாகுமரி, 2. நாகர்கோவில், 3. குளச்சல், 4. பத்மநாபபுரம், 5. விளவங்கோடு, 6. கிள்ளியூர்.
நன்றி : http://mypno.blogspot.com/
பிஎஸ்எல்வி ராக்கெட் பாய்ந்தது
ரேடார் இமேஜிங் செயற்கைக் கோள் ரிசாட்டை (risat-II) இஸ்ரோ இன்று காலை பிஎஸ்எல்வி- சி12 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. அண்ணா பல்கலையில் சிறிய செயற்கைக்கோளும் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
.
இந்திய விண்வெளி ஆய்வுக்கழகமான இஸ்ரோ பூமியின் மேற்பரப்பை எந்த வானிலையிலும் படம்பிடிப்பதற்கான ரேடார் இமேஜிங் செயற்கைக்கோளை இன்று விண்ணில் செலுத்தியது. \ ஸ்ரீஹரிகோடாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி-12 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக இந்த செயற்கைக்கோள் காலை 6.45 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டது.அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கிய சிறிய செயற்கைக்கோளான அனுசாட்டும் விண்ணில் செலுத்தப்பட்டது.திட்டமிட்டபடி பிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்து சென்று 2 செயற்கைக்கோள்களையும் அவற்றின் வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது.
உளவு நோக்கம் இல்லை
விஐடிபல்கலை ஆர்வம்
சோதனைக்கு நடுவே இஸ்ரோ சாதனைசோதனைக்கு நடுவே இஸ்ரோ விஞ்ஞானிகள் பெரும் சாதனை நிகழ்த்தியிருப்பதாக இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-பிஎஸ்எல்வி ராக்கெட் இன்று திட்டமிட்டபடி செலுத்தப்பட்டாலும் நேற்று மாலை கவுண்டவுனின் போது எதிர்பாராத சோதனை ஏற்பட்டது.