செவ்வாய், 28 ஏப்ரல், 2009

துபாயில் மொபைல் படக்கண்காட்சி, போட்டி

துபாயில் முர்டோச் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம் மொபைல் போன் மூலம் எடுக்கப்படும் சிறந்த படங்களுக்கான போட்டி மற்றும் கண்காட்சியை நடத்த இருக்கிறது

இதில் பங்கேற்க விரும்புபவர்கள் மொபைலில் படம் எடுத்து அந்த படங்களை discoverers@murdochdubai.ac.ae எனும் மின்ன‌ஞ்ச‌ல் முக‌வரிக்கு மே 7ம் தேதிக்குள் அனுப்ப‌ வேண்டும். புகைப்ப‌ட‌ங்க‌ள் பெய‌ர், மொபைல் போன் எண், வ‌ய‌து ஆகிய‌ த‌க‌வ‌ல்க‌ளுட‌ன் அனுப்புங்கள்.

இந்த புகைப்ப‌ட‌ங்க‌ள் வரும் மே 14ம் தேதி முத‌ல் க‌ல்லூரி வ‌ளாக‌த்தில் ந‌டைபெறும் புகைப்ப‌ட‌க் க‌ண்காட்சியில் இட‌ம்பெறும்.

தேர்ந்தெடுக்கப்படும் முதல் மூன்று படங்களுக்கு பிஜி பிலிம் வ‌ழ‌ங்கும் நவீன தொழில்நுட்ப‌ம் கொண்ட‌ கேம‌ராக்க‌ள் பரிசாக வ‌ழ‌ங்க‌ப்ப‌டும்.இப்போட்டிக‌ளுக்கு கிராண்ட் ஸ்டோர்ஸ் ம‌ற்றும் பிஜி பிலிம் ஆகிய‌வை அணுச‌ர‌ணை வ‌ழ‌ங்கியுள்ள‌ன‌.

மேல‌திக‌ விப‌ர‌ங்க‌ளுக்கு www.murdochdubai.ac.ae / 04-435 5700.

எமிரேட்ஸ் ஏவியேஷ‌ன் க‌ல்லூரி க‌ல‌ந்துரையாட‌ல்

துபாய் எமிரேட்ஸ் ஏவியேஷ‌ன் கல்லூரியில் (www.emiratesaviationcollege.com) ஆசிரிய‌ர், பெற்றோர் ம‌ற்றும் மாண‌வ‌ர் க‌ல‌ந்துரையாட‌ல் நிக‌ழ்ச்சி கடந்த 25ம் தேதி ச‌னிக்கிழ‌மை ந‌டைபெற்ற‌து.

இந்நிக‌ழ்ச்சியில் ப‌ள்ளி இறுதிக் க‌ல்வி முடித்த‌ மாண‌வ‌ர்க‌ள் ஏரோநாட்டிக‌ல் இன்ஜினிய‌ரிங், ஏர் டிரான்ஸ்போர்ட் மேனேஜ்மெண்ட், ஏரோஸ்பேஸ் இன்ஜினிய‌ரிங், எல‌க்ட்ரானிக்ஸ் அண்ட் க‌ம்ப்யூட்ட‌ர் இன்ஜினிய‌ரிங், பிஸின‌ஸ் மேனேஜ்மெண்ட் ம‌ற்றும் சுற்றுலா மேனேஜ்மெண்ட் உள்ளிட்ட‌ ப‌டிப்புக‌ள் ப‌டிப்ப‌து ச‌ம்ப‌ந்த‌மான‌ நேர‌டி க‌ல‌ந்தாய்வு ந‌டைபெற்ற‌து. இதில் இத்துறையில் ஆர்வ‌முள்ள‌ ப‌ல‌ர் ப‌ங்கேற்ற‌ன‌ர்.

தேரிழ‌ந்தூர் தாஜுத்தீன் 'சிடி' வெளியீடு:

துபாயில் தேரிழ‌ந்தூர் தாஜூத்தீன் பாடிய‌ ச‌மூக‌ விழிப்புண‌ர்வுப் பாட‌ல்க‌ளின் தொகுப்பு 'சிடி' வடிவத்தில் வரும் மே 8ம் தேதி இரவு ஏழு ம‌ணிக்கு துபாய் லேண்ட்மார்க் ஹோட்ட‌லில் வெளியிட‌ப்ப‌டுகிற‌து.

பெருமானார் கால‌த்தில் ந‌டைபெற்ற‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள், தாயிப் ந‌க‌ர‌த்து துய‌ர‌ ச‌ம்ப‌வ‌ம், தாலாட்டும் சீராட்டும், த‌ர்ம‌ங்க‌ளின் வ‌கைக‌ள், பிரார்த்த‌னை உள்ளிட்ட‌வற்றை மைய‌மாக‌க் கொண்ட‌வை.

இந்நிக‌ழ்ச்சி குறித்த‌ விப‌ர‌ம‌றிய‌ மீரான் 050 56 61493 ம‌ற்றும் முதுவை ஹிதாய‌த் 050 51 96433 ஆகியோரை தொட‌ர்பு கொள்ள‌லாம்

மின்ன‌ஞ்ச‌ல்: muduvaihidayath@gmail.com.
இணைய‌த்த‌ள‌ம்: www.tamilmuslimtube.com, www.mudukulathur.com

நிக‌ழ்ச்சி அமைப்பினை ச‌ங்க‌ம‌ம் தொலைக்காட்சி செய்துள்ள‌து. முதுகுள‌த்தூர்.காம், ம‌ற்றும் ம‌ணிச்சுட‌ர் த‌மிழ் நாளித‌ழ் ஆகிய‌வை ஊட‌க‌ ஒருங்கிணைப்பினை செய்து வ‌ருகின்ற‌ன‌

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin