தமுமுக சார்பில் பஹ்ரைனில் நேற்று ரத்த தான முகாம் நடைபெற்றது.
பஹ்ரைன் ஆல்ஹவாஜ பிசினஸ் குரூப் நிறுவனத்தின் இயக்குநர் ஷேக் ஆப்துல் கரீம் ஆஹ்மத் முஹம்மத் ஆல்ஹவாஜ ஆவர்கள் தலைமையில் சல்மானியா மருத்துவமனையில் காலை 7 மணியிலிருந்து இந்த முகாம் நடைபெற்றது
இதில் தமிழர்கள் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களைச் சேர்ந்த பல இந்தியர்களும் பெரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்
பஹ்ரைனில் தொடர்ச்சியாக தமுமுக சார்பில் குருதிக் கொடை வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தாலும் பல்வேறு மாநில சேர்ந்த மக்கள் பெருவாரியாக பங்குபெற்ற குருதிக்கொடை முகாம் இது என்பது குறிப்பிடத்தக்கது
பஹ்ரைனில் தமுமுக செய்துவரும் நல்ல பல சேவைகளினால் பஹ்ரைன் நாட்டுவாசிகள் மத்தியில் தமிழ் மக்கள் குறித்த நல்ல ஆபிப்பிராயம் உள்ளது.
இந்த குருதிக்கொடை நிகழ்ச்சியை பஹ்ரைன் தமுமுக நிர்வாகிகளான முஹைதீன் ஷா, ஏர்வாடி ரிஸ்வான். கறம்பை ஜக்கரியா, அமைந்தகரை ஜாஹிர், ராஜகிரி யூசுப், டாக்டர் ஆலி, ரவூப், தமீமுன் ஆன்சாரி, ரபீக் அகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
பஹ்ரைன் மண்டல தமுமுக தலைவர் முஹைதீன் ஷா இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
aa
பதிலளிநீக்கு