திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் 3 கோடீஸ்வரர்கள் தேர்தலில் மோதுகின்றனர்
திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்டிருந்த 35 வேட்பு மனுக்களில் 21 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இவர்களில் 8 பேர் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள். 13 பேர் சுயேச்சைகள்.
அரசியல் கட்சியைச் சேர்ந்த எட்டு பேரில் 3 பேர் கோடீஸ்வரர்கள். வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டபோது இவர்கள் அளித்த உறுதிமொழி பத்திரத்தில் தங்களது சொத்து மதிப்பை தெரிவித்துள்ளனர்
அதன்படி, கோடீஸ்வர வேட்பாளர் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் தேமுதிக வேட்பாளர் சி. மைக்கேல் ராயப்பன். இவரது சொத்து மதிப்பு சுமார் ரூ. 25 கோடி.
இரண்டாவதாக அதிமுக வேட்பாளர் கே. அண்ணாமலை உள்ளார். இவரது சொத்து மதிப்பு சுமார் ரூ. 10.41 கோடி. முன்றாவதாக காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.எஸ். ராமசுப்பு உள்ளார். இவரது சொத்து மதிப்பு சுமார் ரூ. 1.64 கோடி.
திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் 5 பேர் லட்சாதிபதிகள். இவர்களுடன் 13 சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தென்காசி தொகுதியில் அரசியல் கட்சியைச் சேர்ந்த 6 பேரும், சுயேச்சை வேட்பாளர்கள் 6 பேரும் போட்டியிடுகின்றனர்.
இவர்களில் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் டாக்டர் க. கிருஷ்ணசாமியின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 2.44 கோடி. மற்ற 5 அரசியல் கட்சி வேட்பாளர்கள் லட்சாதிபதிகள்.
இவர்களுடன் 6 சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
தகவல் : தினமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக