சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று தூத்துக்குடி வருகை தந்தார். பீச் ரோட்டில் உள்ள பனிமயமாதா கோவில் முன்பு மேள, தாளத்துடன் ச.ம.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின் தூத்துக்குடி தொகுதி ச.ம.க. வேட்பாளர் சாலமோன் என்ற கராத்தே சரவணன், மாவட்ட செயலாளர் சுந்தர் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து ஆலயத்துக்குள் சென்று சரத்குமார் வழிபட்டார்.
வழிபாட்டுக்கு பின்னர் கட்சியினருடன் சேர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக சென்று காமராஜர் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பிறகு தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலம் புறப்பட்டது.
இதில் மாவட்ட செயலாளர் சுந்தர், துணை செயலாளர் மலர் விழி, இளைஞர் அணி செயலாளர் வில்சன், அவை தலைவர் பாலா, நகர செயலாளர் அற்புத ராஜ், சுதாகர் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் சரத்குமார் தலைமையில் வேட்பாளர் கராத்தே சரவணன் சென்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான பிரகாசிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். நிர்வாகிகள் சுந்தர், சுதாகர் உடன் இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக