மக்களவை தேர்தலில் போட்டியிட சுயேச்சை வேட்பாளர் கட்டிய டெபாசிட் பணத்தில் ரூ.2,000 கள்ளநோட்டு கண்டுபிடிக்கப்பட்டது
அடையாறு, சாஸ்திரி நகர் 3வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ஜே.சுந்தர். இவர் தென்சென்னை மக்களவை தொகுதியில் போட்டியிட, கடந்த 24ம் தேதி அடையாறில் உள்ள 10வது மண்டல மாநகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால், ரூ.5 ஆயிரத்துக்கான டெபாசிட் தொகையை உதவி தேர்தல் அதிகாரியிடம் கொடுத்தார்
ஆறு 500 ரூபாய்களும், இரண்டு 1000 ரூபாய்களும் அதில் இருந்தது. வேட்பாளர்கள் கொடுத்த டெபாசிட் பணத்தை ரிசர்வ் வங்கியில் செலுத்த தேர்தல் அதிகாரிகள் அன்று மாலை சென்றனர். அப்போது ஒரு 1000 ரூபாய் நோட்டும், இரண்டு 500 ரூபாய் நோட்டும் கள்ளநோட்டு என்பதை வங்கி அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதுகுறித்து உதவி தேர்தல் அதிகாரி, மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள தேர்தல் அதிகாரி பாலாஜியிடம் தெரிவித்தார்.
இதையடுத்து சுயேச்சை வேட்பாளரிடம் விசாரிக்கப்பட்டது. தனது நண்பர்கள் மூலம் ஏடிஎம் வங்கியில் இருந்து பணம் பெற்றதாக கூறினார். தொடர்ந்து நடைபெற்ற விசாரணைக்கு பிறகு ஜே.சுந்தரின் வேட்பு மனு ஏற்கப்பட்டது. எனினும், கள்ளநோட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக