பரபரப்பாக பேசப்பட்ட டாடாவின் ஒரு லட்சம் ரூபாய் "நானோ" கார் புக்கிங் முடிந்து விட்டது. ஆயிரம் நானோ கார்களுக்கு புக்கிங் செய்தார் கோல்கட்டாவை சேர்ந்த பிரபல தொழிலதிபர்.
கோல்கட்டாவில் ஸ்ரீ சிமென்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எச்.எம்.பாங்குர். கோல்கட்டாவில் உள்ள நானோ புக்கிங் மையத்தில், புவி பாதுகாப்பு நாளான, கடந்த 24 ம் தேதி, ஆயிரம் நானோ கார்களுக்கான விண்ணப்பங்களை அளித்தார்.
நானோ கார்களுக்கான புக்கிங் தொகையாக 42 லட்சம் ரூபாய்க்கான "செக்"கை அளித்தார் பாங்குர். பி.எம்.டபிள்யு., வோக்ஸ்வாகன், மெர்சிடிஸ் கார்களின் விலையை விட சற்றே குறைவான தொகை இது.
"பூமி பாதுகாப்புக்கு பல வகையில் நாங்களும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். நானோ கார், மாசு கட்டுப்பாட்டுக்கு மிகவும் வழிவகுக்கிறது. உலக வெப்பமயமாதலை தடுக்க உதவுவதால் ஆயிரம் கார்களுக்கு "புவி பாதுகாப்பு நாளில்" புக்கிங் செய்தேன்" என்று பாங்குர் கூறினார்.
ஆயிரம் கார்களை புக்கிங் செய்தாலும், கம்ப்யூட்டர் உதவியுடன் குலுக்கல் நடக்கும் என்பதால், எத்தனை கார் ஒதுக்கப்படும் என்பது பின்னர் தான் தெரியும். கோல்கட்டாவில் உள்ள ஸ்ரீ சிமென்ட்ஸ் நிறுவனம் மிகவும் பிரபலமானது. நாடு முழுவதும் சிமென்ட் சப்ளை செய்கிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக