குவைத் நாட்டிற்கான இந்தியத் தூதராக பொறுப்பேற்றிற்கும் அஜய் மல்ஹோத்ராவை குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் தலைவர் டி.பி. அப்துல் லத்தீஃப் காஸிமி, பொதுச் செயலாளர் அ.பா. கலீல் அஹ்மத் ஆகியோர் தலைமையில் அதன் நிர்வாகிகளும், ஆலோசகர்களும் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
மூத்த ஆலோசகர்கள் எம். ஜமால் ஜஃபர் மற்றும் ஏ. அப்துல் காதர் ஆகியோர் சங்கத்தின் நோக்கங்கள், செயல்பாடுகள் குறித்து தூதரிடம் விளக்கினர். 2006ம் ஆண்டு முதல் தமிழ் மக்களுக்கு இந்தச் சங்கம் ஆற்றி வரும் சேவைகள் மற்றும் பணிகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர்
சங்கத்தின் மூலமாக செய்யப்படும் கல்விப் பணிகள், இந்திய தமிழ் சமூகத்தைச் சேர்ந்த மாணவ-மாணவியருக்கு தேவையான உதவிகள், வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகள் போன்றவற்றை கல்விக்குழு செயலாளர் முனைவர் எம். அப்துல் ஹமீத் விளக்கினார்.ஊடகத் துறை இயக்குநர் ஏ.அப்துர் ரஜ்ஜாக் சங்கத்தின் இணையத் தளத்தை (www.k-tic.com) தூதரிடம் காட்டி அதன் சேவைகளை எடுத்துரைத்தார்.
இச் சந்திப்பின்போது சங்கத்தின் துணைத் தலைவர் எம்.எஸ். முஹம்மது மீராஷா, பொருளாளர் ஜி. ஸஃபியுல்லாஹ், தணிக்கையாளர் எஸ்.எம்.எம். செய்யது அபூ தாஹிர், துணைச் செயலாளர் எம். ஜாஹிர் ஹுஸைன், தகவல் தொடர்பாளர் என். அலி முஹைதீன் மற்றும் மக்கள் தொடர்பாளர் ஏ. ஷம்சுத்தீன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதற்கிடையே கடந்த ஏப்ரல் 2ம் தேதி குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம், குவைத் இந்தியத் தூதரகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
K-Tic சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையத் தளம்: www.k-tic.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக