திருச்சி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சாருபாலா தொண்டமான் போட்டியிடுகிறார். அவர் மனுதாக்கல் செய்தார். அப்போது வேட்புமனுவுடன் தனது சொத்து மதிப்பையும் இணைத்து இருந்தார். அதில், தனக்கு ரூ.56.62 கோடி சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், தமிழ்நாட்டில் போட்டியிடும் வேட்பாளர்களில் இவர் முதலிடம் பிடித்துள்ளார். மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் சிவகங்கை தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இவர் தனக்கு ரூ.27 கோடி சொத்து இருப்பதாக வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார். இதிலும், அவரது மனைவிக்கு சொந்தமான சொத்துகளும் அடங்கும் என கூறப்பட்டுள்ளது.
கோவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரபு வேட்புமனுவில் தனக்கு சொந்தமாக மிக விலை உயர்ந்த பி.எம்.டபிள்யூ.ரக கார் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக