வெள்ளி, 24 ஏப்ரல், 2009

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்க சுய முன்னேற்ற பயிலரங்கம்

தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) தமிழ் மொழியிலிலேயே தன்னம்பிக்கை மற்றும் சுய முன்னேற்றம் குறித்த பயிலரங்கத்தை ஏற்பாடு செய்துள்ளது

வரும் 24ம் தேதி மாலை 5 மணி முதல் இரவு 8:30 மணி வரை மன்சூரிய்யா பகுதியில் உள்ள 'ரிஃபாயி தீவானியா' (அல் அரபி விளையாட்டரங்கம் அருகே) அரங்கத்தில் இந்தப் பயிலரங்கம் நடக்கிறது.

சங்கத் தலைவர் டி.பி. அப்துல் லத்தீஃப் தலைமையில் நடைபெறும் பயிலரங்கில் சங்கத்தின் கல்விக் குழு செயலாளரும், திருநெல்வேலி ஷஃபி கல்வி அறக்கட்டளையின் தாளாளரும், குவைத் இண்டிகிரேடட் கலாசாலையின் மூத்த நிர்வாக அதிகாரியுமான பேராசிரியர் எம். அப்துல் ஹமீத் பயிற்சியளிப்பார்

மேலதிக விவரங்களுக்கு: www.k-tic.com இணையத்தை பார்க்கவும்.அல்லது q8tic@yahoo.com மற்றும் ktic.kuwait@gmail.com மின்னஞ்சல் முகவரிகளை தொடர்பு கொள்க.

மேலும் http://groups.yahoo.com/group/K-Tic-group என்ற யாஹு குழுமத்திலும் விவரம் பெறலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin