பொருளாதார சரிவு மற்றும் நிறுவனப் பின்னடைவு காரணமாக 5 சதவிகித ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது யாஹூ இணையதளம்.
இந்த காலாண்டில் நிறுவனத்தின் வருமானம் 78 சதவிகிதம் சரிந்துவிட்டதும் இந்த அறிவிப்புக்கு காரணம் என யாஹூ தெரிவித்துள்ளது. விற்பனையிலும் 13 சதவிகிதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாம்.
இந்த அறிவிப்பால் வேலை இழப்புக்கு ஆளாவோர் எண்ணிக்கை 600 முதல் 700 வரை இருக்கலாம் என்கிறது யாஹூ. கடந்த ஆண்டும் இதே அளவு ஊழியர்கள் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
யாஹூவின் நிறுவனர் ஜெர்ரி யாங் பதவி விலகிய பிறகு புதிதாகப் பொறுப்பேற்றுள்ள கரோல் பார்ட்ஸ், மீண்டும் மைக்ரோசாப்டுடன் பேசும் முயற்சியில் இறங்கியுள்ளார். கூகுளின் போட்டியைச் சமாளிக்க வேறு வழியே இல்லை என்றும் கூறியுள்ள கரோல் பார்ட்ஸ், இன்னும் கூட சில பணியாளர்களை நீக்க வேண்டியிருப்பதாகக் கூறியுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக