வெள்ளி, 24 ஏப்ரல், 2009

தமிழக‌ம், புதுச்சேரியில் வே‌ட்புமனு தாக்கல் இன்றுட‌ன் முடிவடைகிறது

தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 ம‌க்களவை தொகுதிகளிலும் வேட்பு மனுத்தாக்கல் இன்று மாலையுடன் முடிகிறது. இறுதி வேட்பாளர் பட்டியல் திங்கட்கிழமை (27 ஆ‌‌ம் தே‌தி) வெளியிட‌ப்படு‌கிறது.

தமிழக‌த்த‌ி‌ல் உள்ள 39 ம‌க்களவை தொகுதியிலும், புதுச்சேரி தொகுதியிலும் ஒரே கட்டமாக மே 13ஆ‌ம் தேதி வா‌க்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 17ஆ‌ம் தேதி தொடங்கியது.முத‌ல் நா‌ளி‌ல் ஏராளமான சுயே‌ட்சைகள் மட்டுமே மனு தாக்கல் செய்தனர். 20ஆ‌ம் தே‌தி அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். காங்கிரஸ் வேட்பாளர்கள் சிலரும் மனு தாக்கல் செய்தனர்.

வேட்புமனு தாக்கலின் 6-வது நாளான நேற்று தமிழ்நாடு முழுவதும் 276 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.கடந்த 5 நாட்களில் இல்லாத அளவுக்கு நேற்றுதான் அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். ''இதுவரை மொத்தம் 744 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்'' என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்தார்.

தெ‌ன் செ‌ன்னை தொகு‌தி‌யி‌ல் 43 பேரு‌ம், மத்திய சென்னை தொகுதியில் 33 பேரும், வடசென்னை தொகு‌தி‌யி‌ல் 14 பேரு‌ம் இதுவரை வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.வேட்பு மனுதாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 3 மணியுடன் முடிவடைகிறது. தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட ஏராளமான பேர் இன்று மனுதாக்கல் செய்கிறார்கள். வடசென்னை தி.மு.க. வேட்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், மத்திய சென்னை தி.மு.க. வேட்பாளர் முன்னாள் மத்திய அமை‌ச்ச‌ர் தயாநிதி மாறன் ஆகியோர் இன்று வேட்பு மனுதாக்கல் செய்கிறார்கள்.

இன்று வேட்பு மனுதாக்கல் செய்வதற்கு இறுதி நாள் என்பதால் மேலும் ஏராளமான பேர் வேட்பு மனுதாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.25ஆ‌ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது.

மனுக்களை திரும்ப பெற 27ஆ‌ம் தேதி (திங்கட்கிழமை) கடைசி நாள். அன்று மாலை வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிட‌ப்படு‌கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin