திங்கள், 27 ஏப்ரல், 2009

அரசுத் துறை வங்கிகளுக்கு 30,000 ஊழியர்கள் தேவை

அரசுத் துறை வங்கிகள் இந்த நிதி ஆண்டு மட்டும் 30 ஆயிரம் பணியாளர்களை நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

உலகம் முழுக்க பொருளாதார மந்தம் நீடிக்கிறது. இந்தியாவை அது பெருமளவு பாதித்தாலும் பணியாளர்கள் பற்றாக்குறை நாளுக்கு நாள் பொதுத்துறை வங்கிகளில் அதிகரித்து வருகிறது.

இந்திய வங்கிப் பணியாளர் தேர்வு மையம் கணித்துள்ளபடி, இந்த ஆண்டு மட்டும் குறைந்தது 30000 பேரை தற்காலிகமாகவாவது வேலைக்கு எடுத்தாக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாம்.

வங்கிகள் விரிவாக்கம், கடன் நிர்வாகம், வசூல் என பல பணிகளுக்காக இந்தப் பணியாளர்கள் தேவைப்படுகிறார்களாம்.

மேலும் வங்கிகள் துணை சேவைகளான இன்சூரன்ஸ், பரஸ்பர நிதி போன்றவற்றின் நிர்வாகத்துக்கு மேலும் கூடுதல் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள் என இந்த மையம்
தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin