செவ்வாய், 21 ஏப்ரல், 2009

மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர் அலி இன்று வேட்பு மனு தாக்கல்


மத்திய சென்னை மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் ஹைதர் அலி போட்டியிடுகிறார். தொகுதி முழுவதும் தீவிர சுற்றுப் பயணம் செய்து முக்கிய பிரமுகர்களை சந்தித்து அவர் ஆதரவு திரட்டி வருகிறார்.கோடம்பாக்கம் பிராமணர்கள் நல சங்க தலைவர் ராமமூர்த்தி, ரப்பாணி வைத்திய சாலை நிறுவனர் டாக்டர் சையத்சந்தார் ஆகியோரை சந்தித்து ஆதரவு திரட்டினார். வில்லிவாக்கம் பகுதியிலும் கிறிஸ்தவ தேவாலயங்களில் சென்று பாதிரியார்களை சந்தித்து ஹைதர் அலி ஆதரவு கேட்டார். அப்போது அவர் தனக்கு வாக்களித்தால் உங்களில் ஒருவனாக இருந்து போராடுவேன் என்று கூறினார்.

மனித நேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல்சமது மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர்.

மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர்அலி நாளை தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். 11 மணிக்கு குறளகம் அருகே இருந்து தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று சென்னை மாநகராட்சியில் உள்ள தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.

மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் மயிலாடுத்துறை, பொள்ளாச்சி, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களும் வேட்பு மனுக்களை நாளை தாக்கல் செய்கிறார்கள்.

1 கருத்து:

LinkWithin

Blog Widget by LinkWithin