பி.எஸ்.என்.எல்.லின் புதிய இணைய டி.வி. "மைவே பி.எஸ்.என்.எல்' (ஙவரஅவ ஆநசக) சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
தொலைத் தொடர்புத் துறையின் தொழில்நுட்பப் பிரிவு உறுப்பினர் கே. ஸ்ரீதரா, சென்னை தொலைத் தொடர்பு வட்ட முதன்மை பொதுமேலாளர் பி. வேலுச்சாமி உள்ளிட்டோர் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
இந்தத் திட்டத்தின் கீழ், தொலைபேசி, இன்டர்நெட் இணைப்புடன், செட்-டாப் பாக்ஸýம் வழங்கப்படும்.
இந்தப் புதிய இணைய டி.வி.யில் 150 சேனல்களுக்கு மேல் பார்க்க முடியும்]
வாடிக்கையாளர்களின் வசதிக்காக, புதிய ஹாலிவுட், பாலிவுட் திரைப்படங்கள் கொண்ட இணைய திரைப்பட நூலகம் உருவாக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் எந்த நேரத்திலும் பதிவிறக்கம் செய்து திரைப்படங்களைப் பார்க்கலாம்
குழந்தைகள் சில சேனல்களைப் பார்ப்பதை தடை செய்வதற்கான வசதியும் இதில் உள்ளது
செட்-டாப் பாக்ஸýக்கு ரூ. 2,500 கட்டணம் செலுத்த வேண்டும். மாத வாடகை ரூ. 50 செலுத்த வேண்டும்.
இந்த இணைய டி.வி. இணைப்பு தொடர்பான மேலும் தகவல்களுக்கு, ஜ்ஜ்ஜ்.ம்ஹ்ஜ்ஹஹ்.ண்ய் என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக