திங்கள், 27 ஏப்ரல், 2009

இன்று அட்சய திருதியை கோடி கணக்கில் தங்க நகைகள் குவிப்பு; காலை 6 மணிக்கு கடைகள் திறப்பு


இன்று திருதியை. இந்த நாளில் தங்க நகைகள் வாங்குவது சிறப்பாக கருதப்படுகிறது. ஆண்டுதோறும் அட்சய திருதியை நாளில் தங்கம் விற்பனை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டும் தங்கம் வாங்க மக்கள் தயாராகி வருகிறார்கள். சென்னையில் 3 ஆயிரம் நகை கடைகள் உள்ளன. இதில் பிரபலமான பெரிய நகை கடைகள் தியாகராய நகரில் உள்ளன. நாளை நகை கடைகளில் கூட்டம் அலை மோதும்.

வாடிக்கையாளர்கள் வசதிக்காக ஒரு வாரத்திற்கு முன்பே நகை கடைகளில் அட்வான்ஸ் புக்கிங் தொடங்கி விட்டனர். பல கடைகள் கவர்ச்சிகரமான விலை குறைப்பு மற்றும் பரிசுகளையும் அறிவித்துள்ளன.

ஏற்கனவே நகை வாங்குவதற்காக அட்வான்ஸ் புக்கிங் கோடியை தாண்டி விட்டது.ஏழைகளும் வாங்குவதற்கு வசதியாக 1/2 கிராம் முதல் தங்க நகைகள் வித விதமான மாடல்களில் தயாராகி உள்ளன.

சென்னை நகை தொழிலாளர்கள் தயார் செய்தது மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் நகைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை நகை வியாபாரிகள் வாங்கி குவித்துள்ளனர்.

இன்று காலை 6 மணிக்கே நகை கடைகள் திறக்கிறது. நள்ளிரவு வரை வியாபாரம் சூடு பிடிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

நகை வியாபாரிகள் சங்க தலைவர் எல்.கே.எஸ். செய்யது அகமது கூறியதாவது:-

இந்த மாதம் மட்டும் இந்தியாவில் 30 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. நம் நாட்டில் தங்கம் வாங்கும் ஆர்வம் அதிகமாக உள்ளது. எனவே தங்கம் விற்பனை அதிகமாக உள்ளது.

வழக்கமாக அட்சய திருதியை நாளில் விற்பனை அதிகமாக இருக்கும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.164 குறைவாக உள்ளது. எனவே விற்பனை 10 முதல் 20 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு எல்.கே.எஸ். செய்யது அகமது கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin