வியாழன், 23 ஏப்ரல் 2009 15:02 அருமை வளைகுடா நாட்டில் வளமான தொழிற்புரட்சியில் முன்னணி வகிக்கும் நாடுகளில் முதலிடத்தைப் பெரும் தோஹா (கத்தர்) நாட்டில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள கார்னிஷ் எனப்படும் கடற்கரைப் பகுதி மக்கள் பொழுது போக்கிற்காகவும், நடைப் பயிற்சிகளுக்காகவும் சிறந்த இடமாகத் திகழ்கிறது.
நேற்று கடற்கரை பூங்கா ஓரமாக உள்ள கார் பார்க்கிங் பகுதியில் திடீரென்று மனித உருவத்தை ஒத்த ஒருவிலங்கு(!) வெளிப்பட்டது. இதனைக் கண்ட மக்கள் அதிர்ச்சியில் அலறி ஓடினர். முதல்முறையாக இவ்வுருவத்தைக் கண்ட கத்தர் பெண்மணி ஒருவர் அலறியதைக் கேட்டு அங்குள்ள மக்கள் ஒன்று கூடினர்.
சிலர் தமது கையில் இருந்த மொபைல் போன்கள் மூலம் படம் எடுத்துள்ளனர். (அதில் ஒருவர் எடுத்த போட்டோ இங்கே) தொடர்ந்து துணிச்சலுடன் நெருங்கிய சிலர் அதனை விரட்டிச் சென்று பிடிக்க முயன்ற போது துள்ளிக் குதித்து ஓடி மறைந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
மேலும் இது மனிதனாக இருக்க வாய்ப்பே இல்லை என்றும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.இச்சம்பத்தால் அங்கு பெரும் பரபரப்பும் பீதியும் நிலவுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக