சனி, 25 ஏப்ரல், 2009

மைக்ரோசாப்ட்: 23 ஆண்டுகளில் முதல் வருவாய் வீழ்ச்சி!


சான் பிரான்ஸிஸ்கோ: கடந்த 23 ஆண்டுகளில் முதல் முறையாக வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது ஐடி ஜாம்பவான் நிறுவனமான மைக்ரோசாப்ட்
அமெரிக்க பங்குச் சந்தையில் பட்டியலிட்டதிலிருந்து சரிவையே கண்டிராத நிறுவனமாகத் திகழ்ந்தது மைக்ரோசாப்ட்
முதல் முறையாக இந்தக் காலாண்டில்தான் மைக்ரோசாப்டின் வருவாய் 6 சதவிகிதம் குறைந்துள்ளது. வாடிக்கையாளர்கள் புதிய கம்ப்யூட்டர்கள் வாங்கக் கொடுத்திருந்த ஆர்டர்களை திடீர் திடீரென ரத்து செய்து வருவதால், விண்டோஸுக்கான தேவை இந்த காலாண்டில் வெகுவாகக் குறைந்துவிட்டதாம்.
ஆனால் இந்த மோசமான வர்த்தக சூழல் இந்தக் காலாண்டோடு முடிந்துவிடும் என்றும், அடுத்த காலாண்டில் மந்த நிலை இருந்தாலும் விரைவில் பழைய ட்ராக்குக்கு விற்பனை திரும்பும் என்றும் மைக்ரோசாப்ட் நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.
'கடந்த காலாண்டில் மார்க்கெட் நிலவரம் மோசமாக இருந்தாலும், திருப்தியளித்த ஒரு விஷயமும் உண்டு. அது, சிக்கன நடவடிக்கை மற்றும் இருக்கிற ஆர்டர்களைத் தக்கவைத்துக் கொள்ள வாடிக்கையாளர் சேவைப் பணியாளர்கள் செய்த முயற்சி. இதனால் வருவாய் குறைந்தாலும், நஷ்டத்துக்குச் செல்லாமல் தவிர்க்கப்பட்டது', என்கிறார் மைக்ரோசாப்ட் சிஎப்ஓ க்றிஸ் லிட்டெல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin