'சுவைன் ப்ளூ' என்னும் பன்றி காய்ச்சல் என்ற புதிய வகை நோய்க்கு மெக்சிகோவில் 149 பேர் பலியாகியுள்ளனர். இந்நோய் பிற நாடுகளுக்கும் வேகமாக பரவி வருவதால் உலகளவில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.
கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு, உலக நாடுகளை கடும் பீதிக்குள்ளாக்கிய பறவைக் காய்ச்சல் நோய் போன்று, தற்போது பன்றி காய்ச்சல் நோய் பரவி வருகிறது. இந்நோய், பன்றிகள் மூலமாக பரவுவதால் பன்றி காய்ச்சல் (சுவைன் ப்ளூ) என்றும் அழைக்கப்படுகிறது.
இந்நோய்க்கு மெக்சிகோவில் இதுவரை 149 பேர் பலியாகியுள்ளனர். இது தற்போது இங்கிலாந்து, ஸ்பெயின் போன்ற நாடுகளிலும் வேகமாக பரவிவருகிறது.
இது ஓர் தொற்றுநோய் என்பதால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பொதுமக்கள் முகமூடி அணிந்தபடியே நடமாடுகிறார்கள். சுற்றுலாப் பயணிகள் மூலமாக, இந்நோய் பரவக்கூடும் என்ற அச்சம் நிலவுவதால், பல நாடுகள் தங்களது நாட்டுக்கும் வரும் விமானப் பயணிகளை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துக்கின்றன.
மேலும் பல நாடுகள், தங்கள் நாட்டினரை மெக்சிகோ செல்ல வேண்டாம் என்று எச்சரித்து வருகின்றன. இந்நோயை தடுக்க உரிய மருந்துகள் கண்டுப்பிடிக்கப்படவில்லை என்று கூறப்படுவதால், மகளிடையே பெரும் பீதி நிலவுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக