இன்டர்நெட் சேவையை பயன்படுத்தும் நடுத்தர மக்களின் வசதிக்காக ரூ.3 ஆயிரம் விலையில் நோவாட்டியம் நெட் கம்ப்ïட்டரை நேற்று மதுரையில் பி.எஸ்.என்.எல் அறிமுகப்படுத்தியது.
இண்டர்நெட் சேவையை பயன்படுத்தும் நடுத்தர மக்களின் வசதிக்காக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய குறைந்த விலையிலான கம்ப்ïட்டரை தொலை தொடர்புத்துறை இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த கம்ப்ïட்டரின் அறிமுக விழா நேற்று மதுரையில் நடந்தது. விழாவில் தமிழக பி.எஸ்.என்.எல் தலைமை பொது மேலாளர் டி.வரதராஜன் கலந்து கொண்டு நவீன கம்ப்ïட்டரை அறிமுகப்படுத்தி பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:-
பி.எஸ்.என்.எல் தமிழ்நாடு வட்டம் நடுத்தர மக்களின் இன்டர்நெட் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நோவாட்டியம் சொலுசன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி நவீன கம்ப்ïட்டர் மூலம் பி.எஸ்.என்.எல் தனது வாடிக்கையாளர்களுக்கு இன்டர்நெட் சேவையை ஏற்கனவே சென்னை, பெங்களூர் மற்றும் புனே போன்ற நகரங்களில் அளித்து வருகிறது.
தற்போது சென்னையில் மட்டும் 300 வாடிக்கையாளர்கள் நோவா நெட் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சேவை விரைவில் இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பிராட்பேண்ட் சேவைக்கு மாதம் 200 ரூபாய் மட்டுமே பி.எஸ்.என்.எல் வசூலிக்கிறது. இந்த பிராண்பேன்ட் சேவையை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் 25 ஆயிரம் ரூபாய்க்கு கம்ப்ïட்டர் வாங்க வேண்டிய நிலை இருந்து வந்தது.
இதன்காரணமாகவே பிராட்பேண்ட் சேவையை பலர் பயன்படுத்த முடியவில்லை. அனைவருக்கும் பிராட்பேன்ட் சேவை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ரூ.3 ஆயிரத்துக்கு நோவா நெட் கம்ப்ïட்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
இந்த சேவை குறித்து நோவாட்டியம் சொலுசன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி எஸ்.கணபதிராம் கூறும் போது, "இந்த கம்ப்ïட்டரில் வை-பி மற்றும் லான் இணைப்பும் கொடுக்கலாம். அலுவலக பயன்பாட்டிற்காக ஹார்டு டிஸ்க்கை தனியாக பொருத்தி கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் கம்ப்ïட்டர் திரையை(மானிட்டர்) தனியாக வாங்கி கொள்ள வேண்டும். தற்போது சென்னை, மதுரை உள்பட 7 நகரங்களில் மட்டும் இந்த கம்ப்ïட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவை விரைவில் தமிழகம் முழுவதும் தொடங்கும்" என்றார்.இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக