திங்கள், 30 மார்ச், 2009

தூத்துக்குடி தேமுதிக வேட்பாளர் பள்ளித் தாளாளர்



தேமுதிகவின் தூத்துக்குட வேட்பாளராகியுள்ள எம்.எஸ்.சுந்தர், பள்ளிக்கூட நிர்வாகி ஆவார்.

மதுரை கே.புதூரில் பிரபலமான பள்ளிக்கூடம் விநாயகா மெட்ரிகுலேஷன் பள்ளி. இதன் நிர்வாகிதான் சுந்தர். மதுரையில் தற்போது இருந்தாலும் கூட இவரது பூர்வீகம் தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் ஆகும்.

எட்டயபுரம் அருகே உள்ள குளத்துல்வாய்பப்ட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். பி.இ படித்துள்ள பொறியாளரான இவர் ரியல் எஸ்டேட் தொழில், கல் குவாரி காண்டிராக்டர், கட்டுமானப் பணி என பன்முகம் கொண்ட சுறுசுறுப்பான மனிதர் ஆவார்.

திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளுக்கும் இணையாக செலவிடக் கூடிய திடமான வேட்பாளரான சுந்தர், சொந்த மாவட்டத்தின் வேட்பாளராகக் கூடிய வாய்ப்பை தனக்கு அளித்த கேப்டனுக்கு நன்றி கூறுகிறார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin