ஞாயிறு, 29 மார்ச், 2009

நபிமொழி : 204 - NABIMOZI – 204 – PART - II

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய

அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)(இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

நபிமொழி : 204 - NABIMOZI – 204 – PART - II

நவாஸ் இப்னு ஸம்ஆன் (ரலி) அறிவிக்கின்றார்கள்:

''தஜ்ஜாலை விட்டும் அல்லாஹ் காப்பாற்றி விட்ட ஒரு கூட்டத்தாரிடம் அடுத்து ஈஸா நபி வருவார்கள். அவர்களின் முகங்களை தடவும் ஈஸா நபி அவர்கள், அவர்களிடம் சொர்க்கத்தில் உள்ள அவர்களுக்குரிய தகுதிகளைப் பற்றிக் கூறுவார்கள்... அது சமயத்தில் ஈஸாவிடம் அல்லாஹ் ''நான் என் அடியார்கள் சிலரை வெளியாக்கி உள்ளேன். அவர்களிடம் யாரும் சண்டை செய்ய முடியாது. எனவே என் அடியார்களை தூர் மலைப்பக்கம் ஒன்று சேர்ப்பீராக'' என்று கூறுவான்.

பின்பு யஹ்ஜுஜ், மஹ்ஜுஜ் கூட்டத்தாரை அல்லாஹ் வெளிப்படுத்துவான். அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் விரைந்து வருவார்கள். அவர்களில் முதல் கூட்டத்தார், ''தப்ரீயா'' எனும் சிறு கடலைக் கடந்து செல்வார்கள். அதில் உள்ள தண்ணீர் முழுவதையும் குடித்து விடுவார்கள். அவர்களின் அடுத்தக் கூட்டம் வருவர் ''இங்கு ஒரு காலத்தில் தண்ணீர் இருந்தது'' என்று கூறுவார்கள். (அந்த அளவுக்கு வறண்டு போய் கிடக்கும்).

அல்லாஹ்வின் நபியான ஈஸா(அலை) அவர்களும், அவர்களின் தோழர்களும் (ஒரு மலையில்) தடுத்து வைக்கப்பட்டிருப்பார்கள். இன்று உங்களிடம் 100 தீனார் (பொற்காசு) இருப்பதைவிட, அவர்களில் ஒருவருக்கு ஒரு மாட்டின் தலை இருப்பது சிறந்ததாக இருக்கும். ஈஸா நபி அவர்களும், அவர்களின் தோழர்களும் அல்லாஹ்விடம் துஆ செய்வார்கள். உடனே அல்லாஹ் அவர்களின் கழுத்துகளில் அமர்ந்து கொத்தும் பறவைகளை அனுப்புவான். அப்போது அவர்கள் ஓர் உயிர் இறப்பது போல் ஒரே சமயத்தில் அனைவரும் இறந்து விடுவார்கள்.

பின்பு ஈஸா நபியும், அவர்களின் தோழர்களும் (மலையிலிருந்து) தரைக்கு இறங்கி வருவார்கள். பூமியில் ஒரு சாண் இடம் கூட மீதமில்லாமல் யஹ்ஜுஜ், மஹ்ஜுஜ் கூட்டத்தினரின் சடலங்களும், துர்நாற்றமும், பிணவாடையுமே இருக்கும். உடனே ஈஸா நபியும், அவர்களின் தோழர்களும் அல்லாஹ்விடம் துஆ செய்வார்கள். ஒட்டகத்தின் கழுத்துக்களைப் போல் உள்ள பறவையை அல்லாஹ் அனுப்புவான். அது அவர்களின் உடல்களைச் சுமந்து சென்று, அல்லாஹ் நாடிய இடத்தில் தூக்கிப் போட்டு விடும்.

பின்பு அல்லாஹ் மழையைப் பொழியச் செய்வான். எந்த ஒரு வீடும், கூடாரம் அதிலிருந்த தப்பித்து விடாது. இதனால் கண்ணாடி போல் பூமி ஆகும் வரை மழை சுத்தமாக்கிவிடும். பின்பு பூமிக்கு ''உன் விளைச்சல் பொருட்களை வெளிப்படுத்து, உன் பரக்கத்தை மீண்டும் வெளியாக்கு'' என்று கூறப்படும். அன்றைய நாளில் ஒரு கூட்டம் ஒரு மாதுளம் பழத்தை சாப்பிடும். அதன் தோலின் கீழ் மக்கள் இளைப்பாறுவார்கள்.

(அவர்களின்) கால் நடைகளிலும் பரக்கத் செய்யப்படும். ஒரு ஒட்டகத்தின் பாலை, மனிதர்களில் பெரும் கூட்டம் குடிக்கும் அளவுக்கு இருக்கும். மேலும் ஒரு பசுமாட்டின் பாலை, மக்களில் ஒரு பிரிவினர் குடிக்கும் அளவுக்கு இருக்கும். ஓர் ஆட்டின் பாலை ஒரு குடும்பமே குடிக்கும் அளவுக்கு இருக்கும்.

இது மாதிரியான நிலையில் அல்லாஹ் குளிர்ந்த காற்றை வீசச் செய்வான். அவர்களின் அக்குள்களுக்குக் கீழ் அவர்களை வந்து சேரும். அனைத்து முஸ்லிமான, மூஃமினான உயிர்கள் அப்போது கைப்பற்றப்படும். மக்களில் கெட்டவர்கள் மட்டுமே இருப்பார்கள். கழுதைகளின் நடத்தை போல் வெட்கமுற்று இருப்பார்கள். (அப்போதுதான்) அவர்களிடம் மறுமை ஏற்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்) ( ரியாளுஸ்ஸாலிஹீன் 1808 )

''ஒவ்வொரு தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் - நபிகள் நாயகம் (ஸல்)''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்

நன்றி : Z.M அப்துல் காதர், அபுதாபி.
தகவல் : ஆறாம்பன்னைவாசிகள் குரூப்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin