துபாய் ஜம்மிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் அமைப்பின் சார்பில் ஹெரிடேஜ் வில்லேஜ் ஆடிட்டோரியத்தில் இஸ்லாமிய கண்காட்சி மற்றும் சொற்பொழிவு நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.
இன்று மாலை ஐந்து மணி முதல் ஒன்பது மணி வரை நடைபெற இருக்கிறது.
ஜம்மிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் அமைப்பின் தமிழகத் தலைவர் ஷெய்க் எஸ். கமாலுத்தீன் மதனீ அவர்கள் இஸ்லாம் ஓர் அறிமுகம் எனும் தலைப்பிலும், ஜம்மிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் அமைப்பின் மாநிலப் பேச்சாளர் கோவை அய்யூப் குர்ஆன் அற்புத இறைவேதம் எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்த உள்ளனர்.
மாலை ஐந்து மணி முதல் கண்காட்சியும், ஏழு மணி முதல் சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடைபெறும்.
இந்நிகழ்வில் அனைத்து சமூகத்தினரும், பெண்களும் கலந்து கொள்ளலாம்.
மேலதிக விபரம் பெற 050 271 6801 , 050 8813666 ஆகிய எண்க்ளிலும், jaqhdubai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக