சனி, 28 மார்ச், 2009

தொழுவோம் வாரீர்

தொழுவோம் வாரீர்தொழுதால் தீரும் தொல்லைகள் யாவும்

தினம் ஐவேளை தொழுதிட வேணும்

மறந்தால் நாசம் மறுமையில் மோசம்

மஹ்ஷர் வெளியில் மருகிட நேரும்

படைப்பில் மேலாக நமைநாயன் படைத்தான்

பகுத்து அறிகின்ற அறிவாற்றல் கொடுத்தான்

கருவில் உருவாகி நாமிருந்தபோது

கருணைக் கனிவோடு உணவீத்து காத்தான்

அருளின் இறையோனை நாம் நினைத்து தொழுதால்

பெருமைப் பெறுவோமே இருலோகில் நாமே

மறையாம் குர்ஆனின் நெறிப்பேணி நின்று

மன்னர் பெருமானார் நபிப்பாதை சென்று

மண்ணின் மாயைகள் நமைச்சூழுமுன்னே

மாண்பின் இறையோனை தொழுதாலே மேன்மை

மரணம் வருமுன்னே தொழுதிடுவோம் இங்கு

மண்ணறை சென்றபின்னே தொழுதிடுதல் எங்கு

முஃமீன் அடையாளம் தொழுகை என்றார் நபி

முனைப்புடன் நாளுமே தொழுதாலே நிம்மதி

இருளைப் போக்கிடும் இழிநிலை மாற்றிடும்

இறையருள் சூழ்ந்திடும் இன்னல் பறந்தோடிடும்

குப்ரின் தீங்கான செயலின்றி வாழ

கப்ரின் வேதனையில் வீழாது மீள

சுவனத்தின் திறவுகோல் தொழுகை என்றார் நபி

கவனத்தில் பேணியே தொழுதாலே மேம்பதி

மறுமை தீர்ப்பன்று மகிழ்வோடு விண்ணில்

மாண்புடன் நாம் வாழ தொழவேண்டும்

மண்ணில் உணர்ந்து தொழுதோர்க்கு உயர்வான சுவணம்

உதறித் திரிந்தோர்க்கு கேடான நரகம்.

நன்றி : muslim_guys@yahoo.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin