இந்த வாரம் 200 மார்கெட்டிங் அலுவலர்களை வேலையை விட்டு நீக்கிய கூகுள் நிறுவனம், இப்போது 360 பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் 'வாடகைக்கு' பணியமர்த்துகிறது.
20 ஆயிரம் பணியாளர்களைக் கொண்ட கூகுள் நிறுவனம் இந்த ஆண்டில் மட்டுமே இதுவரை மூன்று கட்டமாக வேலை நீக்கங்களை அமல்படுத்தியுள்ளது. பல ஆயிரக் கணக்கான ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
போனவாரம்தான் 200 மார்க்கெட்டிங் அலுவலர்களை நீக்கியது கூகுள். ஆனால் இப்போது வேலைக்கு ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டதாம். இதனால் இப்போது 360 பேரை வேலைக்கு எடுத்தாக வேண்டிய சூழ்நிலை.
எனவே இவர்கள் அனைவரும் வாடகைக்கு அமர்த்துகிறது கூகுள். அதாவது குறித்த காலம் வரை மட்டுமே இவர்கள் பணியிருப்பார்கள். அதன்பிறகு எந்த கேள்வியும் கேட்காமல் வெளியேறிவிட வேண்டும் என்பது கண்டிஷன். காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து தனது வெப்சைட்டில் விளம்பரமும் வெளியிட்டுள்ளது கூகுள்.
பொருளாதார வீழ்ச்சி காரணமாக கூகுள் நிறுவனம் தனது ரேடியோ ஓலிபரப்பை
நிறுத்திவிட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக