இந்தியாவில் வழங்கப்படும் எச்1பி விசாக்களில் 25 சதவீதம், சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தில் அளிக்கப்படும் என்று அமெரிக்க துணைத் தூதர் ஆன்ட்ரூ சிம்கினின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள எச்1பி விசாக்களில் நான்கில் ஒரு பகுதி, சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் மூலம் விநியோகிக்கப்படும்.
அமெரிக்காவில் ஆறு வருடங்கள் தங்கியிருந்த பின்னர் கிரீன் கார்டு கோரி விண்ணப்பிக்க வழி உள்ளது. இதை பயன்படுத்திக் கொண்டு, எச்1பி விசா மூலம் அங்கு செல்வோர் கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் நிலை உள்ளது. இதனால்தான் எச்1பி விசாக்கள் வழங்குவதில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
ஒருவர் அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கும் திட்டத்துடன் இருப்பதாக சந்தேகப்பட்டால் அவரது விசா விண்ணப்பத்தை நாங்கள் நிராகரித்து விடுவோம்.
இந்தியாவும், அமெரிக்காவும் பல விஷயங்களில் பொதுவானவையே. இரு நாடுகளிலும் வர்த்தகத்திற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன என்றார் சிம்கின்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக