மும்பை: எந்த வங்கியின் கார்டாக இருந்தாலும் அவற்றை எல்லா ஏடிஎம்மிலும் செலுத்திப் பணம் எடுக்கலாம். அதற்கு கட்டணம் கிடையாது என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்த புதிய ஆணை அமலுக்கு வருகிறது.
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி நேற்று அனுப்பிய சுற்றறிக்கையில், 2009 ஏப்ரல் 1ம் தேதி முதல் எந்த வங்கியின் ஏடிஎம்மில் கார்டைப் பயன்படுத்தி பணம் எடுத்தாலும் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
இதன்மூலம், அடுத்த மாதம் 1ம் தேதி முதல் வேறு வங்கியின் ஏடிஎம்மில் பணம் எடுத்தாலும் இப்போது பிடிக்கப்படும் ரூ.20 கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.
எனவே, அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் வங்கிகள் எதனுடைய ஏடிஎம்மிலும் கார்டை நுழைத்து கட்டணம் இன்றி கரன்ஸி நோட்டுக்களை எண்ணியபடி வெளியேறலாம்.
தவிர, பண இருப்பை அறிவது, மினி ஸ்டேட்மென்ட்டின் பிரின்ட் பெறுவது என அனைத்து சேவைகளும் ஏற்கனவே உள்ளதுபோல இலவசமாகவே நீடிக்கும்.
இந்த புதிய அறிவிப்பு மூலம் சிறு பணப் பரிவர்த்தனைகளுக்கு வங்கிகளை நேரடியாக அணுகுவது வெகுவாகக் குறையும். நேர விரையம் தவிர்க்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக