டெலிபோன், செல்போன், பிராட்பேண்ட் சேவை வழங்குவதில் தனியாருக்கு போட்டியாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் விசேஷகால சலுகைகள் வழங்கி வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்வதோடு புதிய சந்தாதாரர்களையும் சேர்க்கிறது.
தற்போது பிராட்பேண்ட் இண்டர்நெட் இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்களுக்கு அதை பயன்படுத்துவதில் கட்டண சலுகை வழங்கி உள்ளது. பல்வேறு திட்டங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகை அறிவிக்கப்படுகிறது. 1 ஜி.பி. அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு 15 சதவீதம் தள்ளுபடி வழங்குகிறது.
5 ஜி.பி.யில் இருந்து 10 ஜி.பி. வரை பயன்படுத்துவோருக்கு 30 சதவீகித தள்ளுபடி, 10 ஜி.பி.க்கு மேல் உபயோகப்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 40 சதவீகிதம் சலுகையை பி.எஸ்.என்.எல். அளிக்கிறது.
கிராமப்புறங்களில் 2 புதிய பிராட்பேண்ட் திட்டங்கள் 512 கே.பி.பி.எஸ். குறைந்த பட்ச வேகத்துடன் அறிமுகப்படுத்தியுள்ளது. இலவச டவுண்லோடு வசதியும், 400 எம்.பி.க்கு அப்லோடு செய்ய மாத கட்டணம் ரூ.99. ஒரு ஜி.பி. டவுண்லோடு செய்ய மாத கட்டணம் ரூ.150 ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக