டெல்லி: பிஎஸ்என்எல் செல்போன் மற்றும் லேண்ட் லைன் கட்டணங்கள் அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளன
வரும் மார்ச் 1ம் தேதி முதல் பி.எஸ்.என்.எல். லேண்ட்லைன் மற்றும் வில் போன்களின் கட்டணத்தை நிமிடத்துக்கு 33 காசாகவும், எஸ்.டி.டி. கட்டணத்தை நிமிடத்துக்கு 50 காசாகவும் குறைக்கவிருப்பதாக, தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா ராஜ்யசபாவில் தெரிவித்தார்.
'இந்தியா கோல்டன் 50' என்ற புதிய திட்டம் மூலம் பிரீ பெய்டு மொபைல் சந்தாரர்களுக்கு எஸ்.டி.டி. கட்டணம் 50 காசுகளாக குறைக்கப்படுவதாகவும் அவர் கூறினார். இதன்படி மார்ச் 1ம் தேதி முதல் நாட்டின் எந்த பகுதிக்கும் 50 காசில் செல்போனில் பேசலாம்.
இதற்கான இணைப்பு பெற, சேவை வரி உள்பட ஆரம்ப கட்டணமாக ரூ.375 செலுத்த வேண்டும். இதில் பேசுவற்கான மதிப்பு ரூ.30 தரப்படும், பயன்பாட்டிற்கான கால அளவு 30 நாட்கள்.
60 வினடிக்கு ஒரு யுனிட் என கணக்கிடப்படும். உள்ளூர், எஸ்.டி.டி. அழைப்புகளுக்கு ஒரு நிமிடத்துக்கு 50 காசு. வெளிநாடுகளுக்கு (ஐ.எஸ்.டி.) அமெரிக்கா, கனடா, பிரிட்டன், இலங்கை நாடுகளுக்கு ரூ.7.20ம், நேபாளம், வங்கதேசம், பூட்டான், மாலத்தீவு, பாகிஸ்தானுக்கு ரூ.9ம்,
ஐரோப்பா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஆங்காங், குவைத், பஹ்வான் ஐக்கிய அரபு நாடுகளுக்கு ரூ.9.60 கட்டணம் வசூலிக்கப்படும். உலகின் இதர பகுதிகளுக்கு கட்டணம் ரூ.12.
இனி '95' வேண்டாம்!:
இதற்கிடையே 95 என்ற எண்ணை உபயோகித்து எஸ்.டி.டி. பேசும் வசதி நாளை (28ம் தேதி) முதல் ரத்து செய்யப்படுவதாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் தெரிவித்துள்ளது.இதற்கிடையே 95 என்ற எண்ணை உபயோகித்து எஸ்.டி.டி. பேசும் வசதி இன்று (28ம் தேதி) முதல் ரத்து செய்யப்படுவதாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது இந்த வசதியை வைத்துள்ள சந்தாதாரர்கள் இனிமேல் எஸ்.டி.டி. பேசுவதற்கு 0 என்ற எண்ணை உபயோகிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக