செயற்கைக்கோளுடன் இணைந்த பிளாக்பெரி சேவையை ஜிஎஸ்எம் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம்.
சென்னை வாடிக்கையாளர்களுக்கென்று இரண்டு சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
முதல் சேவை தனிநபர் வாடிக்கையாளர்களுக்கானது. மின்னஞ்சல், இணையதள தேடல்கள், யாகூ மெசன்ஜர், கூகுள் டாக் உள்ளிட்டவை சேவைகள் இதில் உள்ளன. மாதாந்திர கட்டணம் ரூ. 299, ரூ. 499, ரூ. 999 என மூன்று வகைத் திட்டங்கள் இதில் உள்ளன.
இரண்டாவது சேவை நிறுவனங்களுக்கென்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் நிறுவனங்களுக்குத் தேவையான மின்னஞ்சல், தகவல் தொடர்புகள், குறிப்புகள் உள்ளிட்ட சேவைகளைப் பெறலாம்.
மாதாந்திர கட்டணம் ரூ. 425, ரூ. 625, ரூ. 875 என மூன்று திட்டங்கள் இதில் உள்ளன. பிளாக்பெரி சேவைகளைப் பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் 1503 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு தங்கள் பெற விரும்பும் சேவை குறித்து பதிவு செய்ய வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பிளாக்பெரி 8700ஜி, பிளாக்பெரி கர்வ், பிளாக்பெரி போல்ட் 9000 ஸ்மாட்போன் ஆகிய ரக செல்போன்கள் சென்னை, ஆர்.கே. நகர் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையத்தில் விற்பனைக்கு உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக