சீன கொரிய செல்போன்களுக்கு ரூ.200 கட்டினால், சர்வதேச அடையாள எண் வழங்க செல்போன் நிறுவனங்களின் சங்கம் முன் வந்துள்ளது. மத்திய அரசு அனுமதிக்குப்பின் இத்திட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட உள்ளது.
விலை மலிவான சீன மற்றும் கொரிய செல்போன்களில் சர்வதேச மொபைல் அடையாள எண். (ஐ.எம்.இ.ஐ) இல்லை. அப்படியே இருந்தாலும், லட்சம் செல்போன்களுக்கு ஒரே எண்ணாக இருக்கின்றன. இதனால் பாதுகாப்பு படையினருக்கு பெரும் பிரச்னை ஏற்பட்டது.
தீவிரவாதிகள் பெரும்பாலும் இந்த செல்போன்களையே தங்களின் தகவல் பரிமாற்றத்துக்கு பயன்படுத்தினர். இதனால் ஐ.எம்.இ.ஐ. இல்லாத சீன மற்றும் கொரிய செல்போன்களுக்கான இணைப்பை ஏப்ரல் 15ல் இருந்து இணைப்பை துண்டிக்கும்படி மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் செல்போன் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது.
ஆனால், இது இன்னும் அமல்படுத்தப்படவில்லை. இந்நிலையில், ஐ.எம்.இ.ஐ. இல்லாத செல்போன்களுக்கு அதை வழங்கும் நவீன சாப்ட்வேரை செல்போன் நிறுவனங்களின் சங்கங்கள் தயாரித்துள்ளன. நாடு முழுவதும் 1,600 சில்லரை விற்பனை நிலையங்களில் ரூ.200 கட்டினால் ஐ.எம்.இ.ஐ.யை கொடுக்கும் திட்டத்தை செயல்படுத்த செல்போன் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
இதன் மூலம் 2 கோடி பேர் தங்களுடைய இணைப்பு ரத்தாவதை தடுத்துக் கொள்ள முடியும். இதற்கு அனுமதி அளிக்கும் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சகத்திடம் செல்போன் நிறுவனங்கள் கேட்டுள்ளன.
உங்களது தகவல் அருமை.
பதிலளிநீக்குஉங்கள் பணி தொடர எனது வாழ்த்துக்கள்.!