சனி, 29 ஆகஸ்ட், 2009

தூத்துக்குடியில் செப்டம்பரில் பி.எஸ்.என்.எல். மேளா: சலுகை கட்டணத்தில் லேண்ட்லைன்


தூத்துக்குடி மாவட்டத்தில் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இரண்டு நாள் மேளா நடத்த பி.எஸ்.என்.எல். திட்டமிட்டுள்ளது. இதில் சலுகை கட்டணத்தில் லேண்ட் லைன் இணைப்பு வழங்கப்படும் என பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் நடராஜன், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து நிலையங்களிலும் பிராட் பேன்ட் வசதி ஆகஸ்ட் 15ம் தேதி கொடுக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் அந்தந்த தொலைபேசி நிலையங்களில் விண்ணப்பித்து ப்ராட்பேண்ட் இணைப்புகளை உடனே பெற்றுக் கொள்ளலாம்.

தூத்துக்குடி மொபைல் வாடிக்கையாளர்களின் வசதிக்காக அதிகமான கவரேஜை ஏற்படுத்தும் பொருட்டு மாவட்டத்தில் மேலும் 46 செல்டவர் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த வேலைகள் முடிந்து வரும் பொங்கல் அன்று இந்த செல்டவர்கள் இயங்கத் துவங்கும்.

மாவட்டத்தில் 35 இடங்களில் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இரண்டு நாட்கள் மேளா நடத்த பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது. இதில் 500ரூபாய் இணைப்புக் கட்டணம் தள்ளுபடியுடன் வாடிக்கையாளர்கள் தரைவழி தொலைபேசி இணைப்பை பெற்றுக் கொள்ளலாம். மேலும், வில்போன் ப்ரிபெய்டு சேவையும் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது.

ரூ.750க்கு மேல் உள்ள திட்டங்களில் ப்ராட்பேண்ட் இணைப்பு வாங்கும் வாடிக்கையாளர்களுக்கும மோடம் இலவசமாக வழங்கப்படும். கிராமப்புறங்களில் உள்ள 29 தொலைபேசி நிலையங்கள் மூலமாக ப்ராட்பேண்ட் இணைப்பு வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பி.எஸ்.என்.எல். நோவா நெட் கம்ப்யூட்டர் ரூ.1,900க்கு வழங்கப்படும்.

மேலும் இந்த மேளாவில் ரூ.20க்கு, வசந்தம் மற்றும் நியூ தமிழ்நாடு ஆனந் திட்டங்களில் லைப்டைம் கார்டுகள் கிடைக்கும். இந்த சிம்கார்டில் ரூ.5 மதிப்புள்ள டாக்டைமில் பேசிக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார். உடன் உதவி பொது மேலாளர் தாமஸ், துணை கோட்ட பொறியாளர்கள் (வர்த்தகம்) லிங்கபாஸ்கர், (வர்த்தக அபிவிருத்தி) வளனரசு, இளநிலை தொலை தொடர்பு அலுவலர் (வணிகம்) சுரேஷ், செய்தித் தெடர்பாளர் மாரிமுத்து ஆகியோர் பேட்டியின் போது உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin