புதன், 9 பிப்ரவரி, 2011

நமது செல்போனில் வேண்டாத அழைப்புகளை தடுக்க பதிவு செய்யலாம்.

புதுடெல்லி : செல்போனில் தொல்லை அழைப்புகளுக்கு இன்னும் 20 நாட்கள்தான் காலம். அதன் பிறகு அவற்றை முற்றிலும் நிறுத்த நாளை முதல் பதிவு செய்யும் வசதியை தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அறிவித்துள்ளது. செல்போனில் விருப்பமற்ற அழைப்பை தவிர்க்க தேசிய அழைக்காதீர் பதிவேடு ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டது. அதில் பதிவு செய்த பிறகும் தொல்லை அழைப்புகள் தொடர்வதாக டிராய்க்கு ஏராளமான புகார்கள் குவிந்தன. அழைக்காதீர் பதிவேடு, அழைக்கலாம் பதிவேடு என்று இரண்டு இருந்ததால் அதில் குழப்பம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. எனவே, எளிமையான புதிய வசதியை டிராய் இப்போது அறிவித்துள்ளது. அதன்படி விருப்பமற்ற அழைப்புகளை தடுக்க நாளை முதல் பதிவு செய்யலாம். இதற்கு 1909 என்ற எண்ணுக்கு அழைத்தோ அல்லது எஸ்எம்எஸ் அனுப்பியோ இதை செய்ய முடியும். பதிவு செய்யும் செல்போன் வாடிக்கையாளர்களுக்கு மார்ச் 1ம் தேதி முதல் தொல்லை அழைப்புகளில் இருந்து விடுதலை கிடைக்கும். 1909 என்ற எண்ணில் அழைத்தால், விருப்பமற்ற அழைப்புகளை முற்றிலும் நிறுத்துவது அல்லது குறிப்பிட்ட துறைகளை சேர்ந்த அழைப்புகளை நிறுத்துவது தொடர்பாக விவரங்கள் தெரிவிக்கப்படும். அதன்படி, விருப்பத்தை தேர்வு செய்து பதிவு செய்யலாம். எஸ்எம்எஸ் செய்பவர்கள், முற்றிலும் தடை செய்ய ஷிஜிகிஸிஜி 0 என்று டைப் செய்து 1909க்கு அனுப்பலாம். குறிப்பிட்ட துறைகளின் அழைப்பு, எஸ்எம்எஸ்களை பெற விரும்புவோர் ‘0’க்கு பதிலாக அதற்குரிய எண்களை சேர்த்து அனுப்ப வேண்டும். உதாரணமாக, வங்கி, கிரெடிட் கார்டு, நிதி தொடர்பான அழைப்புகள் தேவை என்றால் ‘1’ என்றும், ரியல் எஸ்டேட் என்றால் ‘2’ என்றும் இரண்டும் தேவை என்றால் ஷிஜிகிஸிஜி 1,2 என்று எஸ்எம்எஸ் செய்ய வேண்டும். கல்வி &3, சுகாதாரம் &4, ஆட்டோமொபைல் &5, பொழுதுபோக்கு &6, சுற்றுலா &7 என விருப்பமான பிரிவுகளை தேர்வு செய்ய அதற்குரிய எண்களையும் பயன்படுத்தலாம். பதிவு செய்பவர்களுக்கு மார்ச் 1ம் தேதி முதல் இந்த வசதி அமலுக்கு வரும் என்று டிராய் அறிவித்துள்ளது

செய்தி:  தினகரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin