வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009

இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

தமிழக சட்டசபை இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கியது.

பர்கூர், தொண்டாமுத்தூர், கம்பம், இளையாங்குடி மற்றும் ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 சட்டசபை தொகுதிகளுக்கு ஆகஸ்ட் 18ம் தேதி இடைத் தேர்தல் நடந்தது.

இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.

முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்படும். பின்னர் பிற வாக்குகள் எண்ணப்படும்.

வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

10 மணிக்கு வெற்றி பெறப் போவது யார் என்பது உறுதியாகி விடும். 11 மணிக்குள் முடிவுகள் தெரியும்.

வாக்கு எண்ணும் இடங்கள்..

தொண்டாமுத்தூர் - கோவை தடாகம் சாலை அரசு தொழில்நுட்ப கல்லூரி.

ஸ்ரீவைகுண்டம் - சாயர்புரம் போப் கல்லூரி.

பர்கூர் - கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரி.

இளையாங்குடி - இளையாங்குடி மேல்நிலைப்பள்ளி.

கம்பம் - உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin