வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009

ஸ்ரீவைகுண்டம் கா‌ங்‌கிர‌ஸ் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் பத‌வி ஏ‌ற்பு


அண்மையில் நடந்து முடிந்த ஸ்ரீவைகு‌ண்டம்,தொண்டாமுத்தூர் ச‌ட்ட‌ம‌ன்ற தொகு‌தி‌யி‌ல் வெ‌ற்ற‌ி பெ‌ற்ற கா‌ங்‌கிர‌ஸ் உறு‌ப்‌பின‌ர்க‌ள் நேற்று பத‌வி ஏ‌ற்று‌க் கொ‌ண்டன‌ர்.

சமீபத்தில் நடந்த 5 சட்டம‌ன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் கம்பம், இளையான்குடி, பர்கூர் ஆகிய தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற்றது.தொண்டாமுத்தூர், ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் ராமகிருஷ்ணன், சுப.மதியரசன், நரசிம்மன்ஆகியோர் கடந்த 25ஆ‌‌ம் தேதி பதவி ஏற்றுக் கொண்டனர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் கந்தசாமி (தொண்டாமுத்தூர்), சுடலையாண்டி (ஸ்ரீவைகுண்டம்) ஆகியோர் நேற்று
முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் பதவி ஏற்று கொண்டனர். அவை‌த் தலைவ‌ர் அறையில் நடந்த நிகழ்ச்சியில் அவர்கள் இருவருக்கும் அவை‌த் தலைவ‌ர் ஆவுடையப்பன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இ‌ந்த ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌‌ல் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பொன்முடி, வீரபாண்டி ஆறுமுகம், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சனம், ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் யசோதா, பீட்டர் அல்போன்ஸ் ஆ‌கியோ‌ர் கலந்து கொண்டனர்.

நன்றி : சக்திவேல்,சென்னை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin