செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

"புகைப்பட அடையாள அட்டை இல்லாதவர்கள் 13 ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்'

ஸ்ரீவைகுண்டம் தொகுதி இடைத்தேர்தலில் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் பயன்படுத்த 13 ஆவணங்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கோ. பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப் பெற்றவர்கள் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வரும்போது, அடையாள அட்டையை கண்டிப்பாக கொண்டுவரவேண்டும்.

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் தங்கள் அடையாளத்தை நிரூபிக்க தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 13 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வாக்களிக்க வரும்போது தவறாமல் கொண்டுவரவேண்டும்.

13 ஆவணங்கள் பற்றிய விவரம்:

பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வருமான வரித்துறையினரால் வழங்கப்பட்டுள்ள நிரந்தர கணக்கு அட்டை (பான் கார்டு), ஊழியர்களுக்கு மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சித் துறை நிறுவனங்கள் அல்லது தனியார் நிறுவனங்கள் வழங்கியுள்ள புகைப்பட அடையாள அட்டை. பொதுத்துறை வங்கிகள், தபால் நிலையங்கள் வழங்கியுள்ள புகைப்படத்துடன் கூடிய பாஸ் புத்தகங்கள், கிஸôன் பாஸ் புத்தகங்கள் (28.2.2009-க்குள் கணக்கு தொடங்கி இருக்க வேண்டும்), சொத்து ஆவணங்கள் (புகைப்படத்துடன் கூடிய பட்டா, ஒப்பந்த பதிவுப் பத்திரங்கள்).

அதிகாரம் பெற்ற அலுவலரால் வழங்கப்பட்ட எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. சான்றிதழ்கள் (28.2.2009-க்குள் வழங்கப்பட்டிருக்க வேண்டும்). புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணங்கள் (முன்னாள் ராணுவத்தினர் ஓய்வூதிய ஆணை, முன்னாள் ராணுவத்தினர் மனைவிக்கு வழங்கப்பட்ட துறைச் சான்றிதழ், முதியோர் ஓய்வூதிய ஆணை, விதவைகள் ஓய்வூதிய ஆணை).

சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, 28.2.2009-க்குள் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய துப்பாக்கி உரிமம், 28.2.2009-க்குள் ஊனமுற்றோர் இயக்குநரகம் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அட்டை (28.2.2009-க்குள் வழங்கப்பட்டிருக்க வேண்டும்), தொழிலாளர்கள் திட்டத்திற்கான அமைச்சரகம் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய ஸ்மார்ட் கார்டு ஆகிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்றார் ஆட்சியர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin