வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009

ஸ்ரீவைகுண்டம் இடைத்தேர்தல் காங்கிரஸ் வெற்றி


ஸ்ரீவைகுண்டம் இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுடலையாண்டி 31ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் பதிவான ஓட்டு எண்ணிக்கை சாயர்புரம் போப் கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. 172 வாக்குச் சாவடிகளில் பதிவான 84 ஆயிரத்து 504 ஓட்டுக்கள் 13 ரவுண்ட்களாக எண்ணப்பட்டன.

ஓட்டு எண்ணிக்கை அமைதியாக நடைபெறுவதற்காக, பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு சுழலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. ஸ்ரீவைகு‌ண்‌ட‌ம் தொகு‌தி‌யி‌‌ல் கா‌ங்‌கிர‌ஸ் ச‌ா‌ர்‌பி‌ல் எம்.பி.சுடலையாண்டியும், தே.மு.‌தி.க சா‌ர்‌பி‌ல் எம்.சவுந்திரபாண்டியனு‌ம், இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி சா‌ர்‌பி‌ல் தனல‌ட்சு‌மியு‌ம் வே‌ட்பாள‌ர்களாக போ‌ட்டி‌யிட்டனர்.

ஸ்ரீவைகு‌ண்ட‌ம் ச‌ட்டம‌ன்ற இடை‌த் தே‌‌ர்தலு‌க்கான வா‌க்கு‌ எ‌‌ண்‌‌ணி‌க்கையில், கா‌ங்‌கிர‌ஸ் வே‌ட்பாள‌ர் எம்.பி.சுடலையாண்டி 53827 வா‌க்குக‌ள் பெ‌ற்று வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு அடுத்ததாக, தேமுதிக வேட்பாளர் சவுந்திர பாண்டியன் 22468 வாக்குகள் பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் சுடலையாண்டி 31359 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் சுடலையாண்டிக்கு வாக்கு எண்ணும் மையத்திலேயே, தொகுதி தேர்தல் அதிகாரி, மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன் சான்றிதழ் வழங்கினார். மாவட்ட தேர்தல் அதிகாரி ஆட்சியர் பிரகாஷ், திமுக மாவட்டச் செயலாளர் என்.பெரியசாமி ஆகியோர் உடனிருந்தனர். சுடலையாண்டியின் வெற்றியைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
சக்திமுருகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin