ஸ்ரீவை மக்களை பற்றியும் ஊர் நடப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்,உங்களுடைய கருத்துகளையும் பதிவு செய்யலாம்..
செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009
ஸ்ரீவை இடைத்தேர்தல்: வாக்குரிமை இல்லாத அரசியல் கட்சி வேட்பாளர்கள்
ஸ்ரீவைகுண்டம் தொகுதி இடைத் தேர்தலில் இன்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக துவங்கியுள்ளது. தொகுதியில் போட்டியிடும் முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் நான்கு பேருக்கும் வாக்குரிமை இல்லாததல் இன்று அவர்கள் வாக்களிக்கவில்லை..
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் இடைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை விறுவிறுப்பாக துவங்கியுள்ளது. பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களான காங்கிரஸ் சுடலையாண்டி, கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் தனலட்சுமி, பாஜக வேட்பாளர் சந்தனகுமார் ஆகியோருக்ககான வாக்குரிமை தூத்துக்குடியில் உள்ளதால் வாக்களிக்க முடியவில்லை.
தேமுதிக வேட்பாளர் சவுந்திர பாண்டியனுக்கு சென்னையில் வாக்குரிமை உள்ளது. அதனால் அவரும் வாக்களிக்க முடியாத நிலையில் உள்ளார். இதர சுயேட்சை வேட்பாளர்கள் 8பேரில் ஒரு சிலரைத் தவிர அனைவரும் தொகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் வாக்களிப்பதில் எந்தவித சிக்கலுமில்லை. முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களின் வாக்குப்பதிவு இல்லாமல் ஸ்ரீவைகுண்டம் தொகுதி தேர்தல் அமைதியாக நடைபெற்று வருகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக