புதன், 19 ஆகஸ்ட், 2009

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 49 (ஓ) ஆர்வம் இல்லை

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் தேர்தல் புறக்கணிப்பு எடுபடவில்லை. 49 (ஓ) குறித்து வாக்காளர்கள் ஆர்வம் காட்டவில்லை.

இந்த தொகுதியில் மொத்தம் உள்ள வாக்காளர்கள் 1,16,607 பேர். அவர்களில் 84,501 பேர் வாக்களித்துள்ளனர். இது 72.46 சதவிகிதம் ஆகும்.

இந்த வாக்குப்பதிவு சதவீதம் 2006-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலை விட கூடுதல் ஆகும். கடந்த 2006-ல் 66.8 சதவிகித வாக்குகள்தான் பதிவாகியிருந்தன. மொத்த வாக்காளர்கள் 1,40,131 பேர். இதில் 93,648 பேர் வாக்களித்திருந்தனர். ஆனால், இடைத்தேர்தலில் அ.தி.மு.க., ம.தி.மு.க. பா.ம.க., புதிய தமிழகம், சமத்துவ மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தன. இருப்பினும், கடந்த தேர்தலைவிட கூடுதல் வாக்குகள் பதிவாகியுள்ளன.

கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருந்த போதிலும், அந்த கட்சிகளின் தொண்டர்கள் தேர்தலை புறக்கணிக்கவில்லை. ஏதோ ஒரு வேட்பாளருக்கு தங்கள் வாக்குரிமையை செலுத்தியுள்ளனர் என்பதையே இந்த வாக்குப்பதிவு சதவிகிதம் உணர்த்துகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

மேலும், தேர்தலை புறக்கணித்த சில கட்சிகள் தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் தேர்தலில் எந்த கட்சிக்கும் வாக்களிக்காமல் 49 (ஓ) போடும்படி அறிவுரை வழங்கியிருந்தனர். ஆனால், அதுவும் வாக்காளர்கள் மத்தியில் எடுபடாமல் போய்விட்டது. ஸ்ரீவைகுண்டம் தொகுதி முழுவதும் 172 வாக்குச் சாவடிகளிலும் 10-க்கும் குறைவானவர்களே 49 (ஓ) வசதியை பயன்படுத்தியுள்ளனர்.

மொத்தத்தில் தேர்தல் புறக்கணிப்பு என்று அரசியல் கட்சிகள் சொன்னதை வாக்காளர்கள் யாரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை.

திமுக, போலீஸ் தள்ளுமுள்ளு ஸ்ரீவைகுண்டம் அருகிலுள்ள ஸ்ரீமூலக்கரை கிராமத்திற்கு அண்மையில் வந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தேர்தலில் 49- ஓ படிவத்தை பயன்படுத்துமாறு தனது கட்சியினருக்கும், ஆதரவாளர்களுக்கும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ஆனால், அக் கிராமத்தில் மொத்தமுள்ள 639 வாக்குகளில் 482 வாக்குகள் பதிவாயின. இது 75.43 சதவிகிதம் ஆகும்.

முக்காணியில் வாக்குச் சாவடிக்குள் உள்ளே இருந்த தேர்தல் பூத் ஏஜெண்டுகளுக்கு சாப்பாடு கொடுப்பதற்கு சென்ற திமுகவினரை போலீஸôர் உள்ளே செல்லவிடாமல் தடுத்தனர். ஆனால், திமுகவினர் கேட்காததால் திமுகவினருக்கும், போலீஸôருக்கும் இடையே தள்ளுமுள்ளு நடைபெற்றது. பின்னர், போலீஸ் படை குவிக்கப்பட்டதும் திமுகவினர் அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர். வயதானவர்கள் பலர் இத் தேர்தலில் ஆர்வமுடன் வாக்களித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin