ஸ்ரீவைகுண்டம் தொகுதி இடைத்தேர்தலையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 133 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இத் தொகுதியில் இதுவரை மொத்தம் 107 தேர்தல் விதிமுறை மீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தி.மு.க.வினர் மீது 41, தே.மு.தி.க.வினர் மீது 38, காங்கிரஸ் கட்சியினர் மீது 13, புதிய தமிழகம் கட்சியினர் மீது 5, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது 5, மற்றவர்கள் மீது 5 என வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரசார நிறைவு விழா பொதுக்கூட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்திற்கு அனுமதி இல்லாமல் சென்றதாக 18 வாகனங்களின் உரிமையாளர்கள் மீது ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இத் தொகுதி முழுவதும் தேர்தலையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மொத்தம் 133 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். துப்பாக்கி உரிமம் பெற்றவர்கள் தங்கள் துப்பாக்கிகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அவ்வாறு 358 துப்பாக்கிகள் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக