ஸ்ரீவை மக்களை பற்றியும் ஊர் நடப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்,உங்களுடைய கருத்துகளையும் பதிவு செய்யலாம்..
செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் வாக்குப் பதிவு தொடங்கியது
ஸ்ரீவைகுண்டம், தொகுதியில் இடைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. ஸ்ரீவைகுண்டம் மக்கள் பெரும் ஆர்வத்துடன் நீண்ட வரிசைகள் நின்று வாக்களித்து வருகின்றனர்.
மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். ஐந்து தொகுதிகளிலும் வெளி மாநில அதிரடிப்படைப் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாக்குப் பதிவு விவரங்களை உடனுக்குடன் தலைமை தேர்தல் அதிகாரிக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
வாக்குப் பதிவு முடிவடைந்ததும், மின்னணு எந்திரங்களின் கட்டுப்பாட்டு பிரிவில் உள்ள `குளோஸ்' பட்டனை அழுத்தியபின் முறைப்படி ஓட்டு எண்ணும் இடங்களுக்கு மின்னணு எந்திரங்கள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படும்
இத் தேர்தலை அதிமுக, மதிமுக, பாமக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்து விட்டன.
சட்டசபையில் கட்சிகளின் பலம்
மொத்த தொகுதிகள் - 235
திமுக - 95
அதிமுக - 58
காங்கிரஸ் - 34
பாமக - 18
சிபிஎம் - 9
சிபிஐ - 6
மதிமுக - 3
விடுதலைச் சிறுத்தைகள் - 2 (செல்வம் ராஜினாமா செய்து விட்டார் - ஆனால் ராஜினாமா இதுவரை ஏற்கப்படவில்லை)
தேமுதிக - 1
சுயேச்சை - 1
நியமனம் - 1
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக