செவ்வாய், 29 மார்ச், 2011

ஸ்ரீவைகுண்டத்தில் "அம்மா" என்ற முத்திரையிடப்பட்ட ரூ.100 நேட்டால் பரபரப்பு

ஸ்ரீவைகுண்டத்தில் அம்மா என்ற முத்திரையிடப்பட்ட ரூ.100 வினியோகம் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் கடுமையான விதிமுறைகளால் தேர்தல் வேலைகள் எவ்வித பரபரப்பும் இல்லாமல் அமைதியாக நடக்கிறது. மேலும் வர்த்தக பிரமுகர்கள் பணம் கொண்டு செல்வது கூட பறக்கும் படையினரால் தடுக்கப்பட்டு விட்டது. பின்னர் நீதிமன்றத் தலையீட்டால் வாகன சோதனை கெடுபிடிகள் தளர்த்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஸ்ரீவைகுண்டத்தில் அம்மா என்று ரப்பர் ஸ்டாம்பி்ல் முத்திரை குத்தப்பட்ட ரூ.100 நோட்டுகள் பல்வேறு தரப்பினரிடம் புழக்கத்தில் உள்ளது. இந்த ரூபாய் நோட்டுகளை அதிகமுவினரே இரட்டை இலைக்கு ஓட்டு போட வேண்டும் என்பதற்காக அம்மா என்ற அடையாளத்தை முத்திரையிட்டு வினியோத்தார்களா, அல்லது போலீசையும், தேர்தல் ஆணையத்தையும் திசை திருப்ப யாரேனும் செய்தார்களா என்பது தெரியவில்லை.

இந்த நோட்டை வினியோகித்தது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin