தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சி.என்.மகேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
விழாவையொட்டி வருகிற 13ம் தேதி (திங்கட்கிழமை) தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
ஆனால் 13ம் தேதி அரசு தேர்வுகள் ஏதேனும் அறிவிக்கப்பட்டு இருந்தால் சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், தொடர்புடைய பணியாளர்களுக்கு மட்டும் இந்த விடுப்பு பொருந்தாது. இது செலாவணி முறிவு சட்டத்தின்படி பொதுவிடுமுறை நாள் அல்ல என தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடுமுறைக்குப் பதிலாக 09-07-2011 அன்று அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது என்று ஆட்சியர் அறிவித்துள்ளார்.
ஸ்ரீவை மக்களை பற்றியும் ஊர் நடப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்,உங்களுடைய கருத்துகளையும் பதிவு செய்யலாம்..
மாவட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாவட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், 13 ஜூன், 2011
இன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
சனி, 11 ஜூன், 2011
தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 15ஆம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும், என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவிப்பு
தமிழகம் முழுவதும் சமச்சீர் கல்வி திட்டம் இந்த ஆண்டில் அமல்படுத்த முந்தைய திமுக அரசு முடிவு செய்தது. ஆனால் அதிமுக அரசு பதவி ஏற்றதால் சமச்சீர் கல்வி திட்டம் ரத்து செய்யப்பட்டு முந்தைய பாடத்திட்டம் செயல்படும் என்று அறிவித்தது.
இதனால் புதிய புத்தகம் அச்சடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் கடந்த ஜூன் 1ம் தேதி திறக்க வேண்டிய பள்ளிகள் வரும் 15ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டது
இதனை பள்ளி தலைமையாசிரியர்கள் அனைவருக்கும் தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதா அனுப்பிய சுற்றறிக்கை வழங்கப்பட்டது. அந்த சுற்றறிக்கை படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் வரும் 15ஆம் தேதி திறக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி உத்தரவிட்டார்
புதன், 2 பிப்ரவரி, 2011
பேட்மாநகரம் கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் உண்ணாவிரதம்

காங்., எம்.பி., கல்குவாரியை மூடக்கோரி, பேட்மாநகரம் பகுதி பொதுமக்கள், ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று உண்ணாவிரதம் இருந்தனர்.
ஸ்ரீவைகுண்டம் ஒன்றியம் பேட்மாநகரம் அருகே கல்குவாரிகள் உள்ளது. அங்கு வெடிக்கும் வெடி சத்தத்தால் பேட்மாநகரத்தில் உள்ள கட்டடங்கள், பள்ளிகள், மசூதிகளுக்கு பாதுகாப்பு இல்லாமல், சுவர்களில் கீறல்கள் விழுந்து, மிகப்பெரிய இழப்பு ஏற்படுத்தி வருகிறது. எனவே கல்குவாரிகளை தடை செய்யக்கோரி, பேட்மாநகரம் கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த பேராட்டத்திற்கு பேட்மாநகரம் ஜமாத் தலைவர் பீர் முகமது, ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய மா.கம்யூ. செயலாளர் கந்தசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். பெரம்பூர் தொகுதி மா.கம்யூ., எம்.எல்.ஏ., மகேந்திரன், மாவட்ட செயலாளர் கனகராஜ் ஆகியோர் போராட்டத்தை வலியுறுத்தி பேசினர்.
உண்ணாவிரத போராட்டத்தில், பேட்மாநகரத்தில் பெரியோர்கள், குழந்தைகள் நிம்மதியாக தூங்கவும், இருதயம், கண் நோய் வராமல் பாதுகாக்கவும், விவசாயம் கால்நடைகள் வன விலங்குகளை பாதுகாத்திடவும், கல்குவாரிகளை உடனடியாக மூட வேண்டும் என்று போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதில்பேட்மாநகரம் கிராமத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.
மா.கம்யூ.,எம்.எல்.ஏ.,மகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறாக அமையும் இந்த கல்குவாரிகளை மூடக்கோரி கடந்த 2007 முதல் பேட்மாநகரம் கிராம மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இது அவர்களின் நான்காவது போராட்டமாகும்.
பேட்மாநகரம் பகுதியில் இருக்கும் கல்குவாரி ஆந்திர மாநிலத்தை சேர்ந்த காங்., எம்.பி., ஒருவருக்கு உரிமையானது. அதனால்தான் தமிழகத்தை ஆளும் தி.மு.க., கல்குவாரி பிரச்னையில் மெத்தனம் காட்டி வருகின்றனர், என்றார்.
தகவல் : தூத்துக்குடி வெப்சைடு
வெள்ளி, 6 நவம்பர், 2009
ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பொழியுது பருவமழை
தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து கொட்டிவரும் பருவமழையால் நெல்நாற்று நடவுப்பணிகள் மும்முரமாக நடந்துவருகிறது.
பருவமழையின் காரணமாக பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துவருவதால் தாமிரபரணி ஆற்றில் விவசாயத்திற்கு தேவையானபடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது
ஆற்றுப்பாசனம், கால்வாய் பாசனம் மற்றும் குளத்துப்பாசன பகுதிகளில் நெல் நடவுபணிகளுக்கான ஏற்பாடுகள் நடந்துவருகிறது. மணக்கரை, நடுவக்குறிச்சி, வல்லநாடு, வசவப்பபுரம், ஸ்ரீவைகுண்டம், பேரூர், சிவகளை, கால்வாய், பொன்னங்குறிச்சி, புதுக்குடி, வெள்ளூர், குரும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நெல் நடவு செய்வதற்காக வயல்களை உழுது தயார்படுத்தும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது

லேபிள்கள்:
மாவட்டம்,
ஸ்ரீவை செய்தி,
ஸ்ரீவைகுண்டம்
சனி, 20 ஜூன், 2009
பழகுநர் உரிமம் பெற்றவர் விபத்து ஏற்படுத்தினால் அவரே இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பழகுநர் உரிமம் (எல்.எல்.ஆர்.) பெற்றவர் விபத்து ஏற்படுத்தினால், பாதிக்கப்பட்டவருக்கு அவர் தான் இழப்பீடு வழங்க வேண்டும் என மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியை சேர்ந்த ராஜேஷ் (எ) மணிராஜ் (வயது 17) என்பவர் கடந்த 2002 டிசம்பர் 5ல் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது 60 வயது முதியவர் மீது மோதியதில் அவர் இறந்தார். அவரது குடும்பத்தினர் நஷ்டஈடு கோரி, கீழ்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, விபத்தில் இறந்த முதியவர் குடும்பத்துக்கு ரூ.ஒரு லட்சத்து 90,066 நஷ்டஈடு தொகையை 7.5 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும். இந்த பணத்தை ராஜேஷ் மணிராஜிடம் இன்சூரன்ஸ் நிறுவனம் திரும்ப வசூலித்துக் கொள்ளலாம் என உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து ராஜேஷ்மணிராஜின் தாயார் ஞானசெல்வம், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்து நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவில், பழகுநர் உரிமம் வைத்திருப்பவர் வாகனத்தை ஓட்டிச்செல்லும் போது, அவருக்கு பின்னால் அமர்ந்து, ஓட்டுனர் உரிமம் பெற்ற ஒருவர் வாகனம் ஓட்ட கற்றுக்கொடுக்க வேண்டும் என்பது விதி.
ஆனால், மனுதாரர் மகன் தனியாகவே வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார். எனவே, அவரது வாகனத்தில் சிக்கி இறந்தவர் குடும்பத்துக்கு அவர் தான் இழப்பீடு வழங்க வேண்டும். இறந்தவர் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகையை மனுதாரரிடம் வசூலிக்க வேண்டும் என கீழ்கோர்ட் பிறப்பித்த உத்தரவு சரியானது என்று தீர்ப்பளித்தார்.
லேபிள்கள்:
சிந்தனை செய்,
செய்திகள்,
மாவட்டம்
வெள்ளி, 19 ஜூன், 2009
தூத்துக்குடியிலிருந்து மதுரை, சென்னை பகல்நேர விரைவு ரயில் இயக்க எம்.பி.யிடம் மனு
தூத்துக்குடியிலிருந்து மதுரை, சென்னைக்கு பகல் நேரத்தில் விரைவு ரயில் இயக்க பயணிகள் நலச்சங்கம் தூத்துக்குடி தொகுதி எம்.பி.யிடம் மனு அளித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மதுரை மற்றும் சென்னைக்கு பகல் நேர இரயில் இயக்க கோரி இன்று காலை தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.ஜெயதுரையிடம் பயணிகள் நலச்சங்கத்தின் தலைவர் கல்யாணசுந்தரம், செயலாளர் பிரமநாயகம், துணைச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
தூத்துக்குடியிலிருந்து மதுரைக்கும், சென்னைக்கும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பகல் நேர விரைவு ரயில் இயக்க வேண்டும். கடந்த 2008-09ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் அப்போதைய ரயில்வே அமைச்சர் அறிவித்தபடி தூத்துக்குடி-கோயமுத்தூர் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருநெல்வேலியிலிருந்து மும்பைக்கு இயக்கவிருக்கும் ரயிலை தூத்துக்குடியிலிருந்து இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தெற்கு ரயில்வேயின் திட்டத்தில் இருக்கும் தூத்துக்குடி-மதுரை புதிய ரயில்பாதை அமைக்கும் பணியை உடனடியாக துவக்க வேண்டும். தூத்துக்குடி, குளத்தூர், விளாத்திகுளம், புதூர், பந்தல்குடி, அருப்புக்கோட்டை வழியாக இந்த ரயில் செல்லும் வகையில் ரயில்வே துறை ஆய்வு செய்து தயார் நிலையில் உள்ளது. வரும் பட்ஜெட்டில் அதற்கான பணியைத் தொடர நிதி ஒதுக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அம்மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தன.
பயணிகள் நலச்சங்கத்தின் மனுக்களை பெற்றுக் கொண்ட மக்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.ஜெயதுரை, பொதுமக்களுக்கு பயன்படும் வகையான இத்திட்டங்களுக்காக மக்களவையில் குரல் எழுப்புவதாகவும், தெற்கு ரயில்வேயின் பொதுமேலாளர் மற்றும் முக்கிய அதிகாரிகளை சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார்

செவ்வாய், 16 ஜூன், 2009
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற அலுவலகம் உடைப்பு :மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற அலுவலகம் நேற்று மர்ம நபர்களால் தாக்கப் பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் ஊர்வசி செல்வராஜ். இவருடைய அலுவலகம், கால்நடை மருத்துவமனை அருகே இயங்கி வருகிறது. அலுவலக உதவியாளராக ராமச்சந்திரன் இருந்து வருகிறார். நேற்று அலுவலகத்தை பூட்டிச்சென்றார்.
இன்று காலை வழக்கம் போல திறக்கச் சென்றார், அப்போது அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகள், மின் விளக்குகள் உள்ளிட்டவை உடைக்கப்பட்டிருந்தது அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
லேபிள்கள்:
மாவட்டம்,
ஸ்ரீவை செய்தி,
ஸ்ரீவைகுண்டம்
காயல்பட்டினம் இக்ரா கல்வி சங்க வளர்ச்சிக்கு நிதி உதவி
காயல்பட்டினம் இக்ரா கல்வி சங்க வளர்ச்சிக்காக அமெரிக்காவில் பணியாற்றும் காயல்பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர் நிதி உதவி செய்துள்ளார்.
இக்ரா கல்வி சங்கம் மற்றும் தி பர்ஸ்ட் டிரஸ்ட் ஆகியவை இணைந்து மாநிலத்தின் முதல் மாணவரை காயல்பட்டினத்துக்கு வர வைத்து நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டு நிகழ்ச்சியை ஜூன் 28-ம் தேதி நடத்த முடிவு செய்துள்ளனர்.
இதற்கான ஆலோசனைக் கூட்டம் இக்ரா கல்வி சங்க வளாகத்தில் தலைவர் வாவு காதர் தலைமையில் நடைபெற்றது. செயலர் ஏ.தர்வேஷ் முஹம்மத், துணைச் செயலர் எஸ்.கே.ஸôலிஹ், சிங்கப்பூர் காயல் நல மன்றத் தலைவர் பாளையம் முஹம்மத் ஹஸன், இலங்கை காயல் நலமன்ற துணைச் செயலர் பி.எம்.ரபீக், பாங்காக் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவைத் தலைவர் எம்.எம்.உவைஸ், ஷம்சுத்தீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதில், அமெரிக்காவில் பணியாற்றும் காயல்பட்டினத்தைச் சேர்ந்த சாளை முஹம்மத் முஹியித்தீன் ரூ. 25 ஆயிரம் நிதியை இக்ரா கல்வி சங்க நிர்வாகப் பணிக்காக வழங்கினார்.

திங்கள், 15 ஜூன், 2009
குற்றாலத்தில் ரோப் கார் இயக்க முடிவு: கலெக்டர் ஜெயராமன் தகவல்
நெல்லை மாவட்ட கலெக்டர் ஜெயராமன் நேற்று குற்றாலம் சென்றார். குற்றாலத்துக்கு தேவையான வளர்ச்சி பணிகள் குறித்து அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் கலெக்டர் ஜெயராமன் நிருபர்களிடம் கூறியதாவது:-
குற்றாலத்துக்கு கடந்த 2007-08-ம் ஆண்டு 30 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். 2008- 09-ல் 27 லட்சம் பேர் வந்துள்ளனர்.
சுற்றுலா பயணிகளின் அடிப்படை தேவைகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். கார் பார்க்கிங் வசதி போதிய அளவில் இல்லை. இதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
குற்றாலம் வளர்ச்சி பணிகளுக்கு மத்திய அரசு ரூ.3 கோடியே 62 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது.
சுற்றுலா பயணிகளுக்கு பொழுது போக்கு அம்சங்கள் அதிகளவில் அமைத்து கொடுக்கப்படும். ஆண்டு முழுவதும் குற்றாலத்துக்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்ல தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
வெளிநாட்டு பயணிகள் வந்தால் அவர்கள் தங்குவதற்கு ஸ்டார் ஓட்டல்கள் குற்றாலத்தில் இல்லை. நவீன வசதிகளுடன் 150 அறைகள் இருந்தால் தான் ஸ்டார் ஓட்டல்கள் என்று கூற முடியும்.
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் குற்றாலத்தில் ரோப்கார் இயக்க ஆய்வு செய்யப்படுகிறது.
அருவிக்கரை பகுதிகளில் பெண்கள் உடைமாற்றம் செய்ய உள்ள அறைகள் வசதி குறைவாக இருக்கின்றன. இவற்றில் டைல்ஸ் பதித்து மெருகூட்டப்படும்.
சிற்றருவி நுழைவு வாயில் கேட் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். மெயின் அருவி, ஐந்தருவியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஐந்தருவி படகு குழாமை தூர்வாரி சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பயோகியாஸ் மூலமாக தெருவிளக்குகள் அமைக்கப்படும்.
சாலையோரம் குப்பை கொட்டுவதை தடுக் பிரதான சாலைகளில் மெட்டல் குப்பைத் தொட்டிகள் அமைக்கப்படும்.
குற்றாலம் இன்னும் 30 ஆண்டுகள் கழித்து எப்படி இருக்கும்? அப்போது சுற்றுலா பயணிகளுக்கு என்னென்ன வசதிகள் தேவைப்படும் என்பதை பராசக்தி மகளிர் கல்லூரி மாணவிகள் மூலம் சர்வே செய்யப்பட உள்ளது. அதன் அடிப்படையில் தேவையான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
பேட்டியின்போது ஆர்.டி.ஓ. சண்முகநாதன், தாசில்தார் நம்மை ஆழ்வார் பெருமாள், டி.எஸ்.பி. மயில்வாகணன், பேரூ ராட்சி துணைத் தலைவர் ராமையா, நிர்வாக அதிகாரி பால சுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.

தூத்துக்குடியில் திமுக உட்கட்சி பூசல் உச்சக்கட்டம்: எம்.பி. அலுவலகம் தீவைப்பு

தூத்துக்குடியில் திமுக உட்கட்சி மோதல் உட்சகட்டத்தை எட்டியுள்ளது. நேற்று தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.ஆர். ஜெயதுரையின் அலுவலகம் மர்ம நபர்களால் தீவைத்து எரிக்கப்பட்டது.
தூத்துக்குடியின் புதிய மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எஸ்.ஆர்.ஜெயதுரை தற்போது தூத்துக்குடி காமராஜ் சாலையின் தனது அலுவலகத்தை திறந்துள்ளார். இந்த அலுவலகத்திற்கு நேற்று மதியம் 2.30 மணியளவில், 10பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று வந்து எம்.பி. அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்கியுள்ளது. இதனால் அலுவலகத்தில் தீபரவிய அதில் உள்ளிருந்தவர்கள் உயிருக்குப் பயந்து தப்பியோடினர்.

சமீப காலமாக திமுக வினரின் உட்கட்சி பிரச்சனைகளால் எம்.பி.யின் வரவேற்பு பேனர் கிழிப்பு, எம்.பி. ஆதரவாளரின் கார் கண்ணாடி உடைப்பு போன்ற பல சம்பவங்கள் அரங்கேறி வரும் இவ்வேளையில் எம்பி அலுவலகம் மீது நடந்த இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் உட்கட்சி பூசலின் உச்சகட்டத்தை எட்டியுள்ளதாக பொதுமக்கள் கருதுகின்றனர்.
தீவைப்பு சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வந்த எஸ்.ஆர்.ஜெயதுரை செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. தான் கட்சியின் தலைக்கும், முதல்வர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி ஆகியோரின் கட்டுப்பட்டவனே தவிர வேறு யாருக்கும் கட்டுபட்டவன் அல்ல. சமூக விரோதிகளின் செயல்கள் அதிகரித்து வருகின்றன. என்னை அழிக்கும் முயற்சியில் அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என்று கூறினார்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினரின் அலுவலகம் எரிக்கப்பட்ட சம்பத்தினையடுத்து தூத்துக்குடி எஸ்.பி.பொறுப்பு (பொறுப்பு) அஸ்ராகர்க் நேரில் பார்வையிட்டார். காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காவல் துறையினர் யார்மீது நடவடிக்கை எடுப்பது என்ற குழப்பத்திலிருப்பதாகத் தெரிகிறது.
காயல்பட்டினத்தில் மதரஸô ஆண்டு விழா
காயல்பட்டினம் முஹ்யித்தீன் மதரஸô ஆண்டு விழா மற்றும் மீலாது விழா நடைபெற்றது.
அலியார் தெருவிலுள்ள மதரஸô வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர் அணிவகுப்பு, மாணவ, மாணவிகளுக்கான சன்மார்க்கப் போட்டிகள் நடைபெற்றன.
சிறப்பு விருந்தினராக ஹாமிதிய்யா சன்மார்க்க கல்வி நிறுவன பேராசிரியர் எஸ்.எச். பாதுல் அஸ்ஹப் பேசினார்.

சனி, 13 ஜூன், 2009
தூத்துக்குடி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய திடீர் மழை

தூத்துக்குடியில் இன்று பகல் 2மணியளவில் பலத்த இடியுடன் மழைபெய்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கோடை வெயில் அக்கினி நட்சத்திரம் முடிந்த பின்னரும் கடுமையான வெப்பத்தை சந்தித்த மக்களுக்கு இன்று பெய்த இடியுடன் கூடிய மழை மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது.
இன்று நன்பகல் 2மணியளவில் திடீரென இடி இடித்து ஆழங்கட்டி மழைபோல் பெரும் தூறலாக விழுந்தது. இந்த மழை சுமார் 30 நிமிடங்கள் வரை நீடித்தது. தூத்துக்குடியின் பிரதான சாலையான W.G.C. ரோடு, விக்டோரியா ரோடு, எட்டையபுரம் ரோடு மற்றும் சில தாழ்வான சாலைகளில் தண்ணீர் தேங்கி கிடந்தது. இந்த திடீர் மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்புள்ளது.
தூத்துக்குடி அருகே கரை ஒதுங்கிய டால்பின்: பள்ளி மாணவர்கள் கண்டு உற்சாகம்

தூத்துக்குடி மாவட்டம் மனப்பாடு கடற்கரையில் இன்று ஒதுங்கிய டால்பினை காண பள்ளி மாணவ, மாணவியர்கள் கூட்டம் கூட்டமாக வந்து உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.
கடலில் துள்ளிக்குதித்து விளையாடி சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மகிழ்விப்பது இந்த டால்பினின் தனிச் சிறப்பு ஆகும். மீனவர்களின் நண்பன் எனக் கருதப்படும் டால்பின் இன்று காலை 8.30 மணியளவில் மனப்பாடு கடற்கரையில் ஒதுங்கியது. இது 6அடி நீளம் மற்றும் சுமார் 150கிலோ எடையுடையதாக இருக்கும் எனத் தெரிகிறது.
மனப்பாடு கடற்கரை அருகே ஒதுங்கிய டால்பினை கண்ட மீனவர்கள் அருகில் உள்ளவர்களுக்கு தகவல் அளித்தனர். இதனால் மனப்பாடு சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர்கள் டால்பினை காண கூட்டம் கூட்டமாக திரண்டனர்.
டால்பின் கரை ஒதுங்கியது பற்றி மீனவர் வினோசின், மன்னார் வளைகுடா உயிரியல் காப்பக நிர்வாகிகளுக்கு தகவல் அளித்தார். மேலும் டால்பினின் முதுகு பகுதியில் சிறிது காயம் ஏற்பட்டுள்ளது. பொதுவாக டால்பினுக்கு காயம் ஏற்பட்டால் கரை ஒதுங்குவது வழக்கம். இதேபோல் கடந்த 1973ம் ஆண்டு மனப்பாடு பகுதியில் ஏராளமான டால்பின்கள் கரை ஒதுங்கியது. தற்போது கரை ஒதுங்கிய டால்பினை தண்ணீர் அதிகளவு உள்ள ஆழ்கடல் பகுதியான குண்டாலில் விடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நன்றி : கந்தன், திருச்செந்தூர்
நெல்லையில் ஜூன் 20-ல் பொருள்காட்சி தொடக்கம்

திருநெல்வேலி பொருள்காட்சி மைதானத்தில் இம் மாதம் 20-ம் தேதி தொடங்கி, 45 நாள்கள் நடைபெற உள்ள அரசுப் பொருள்காட்சிக்கான ஏற்பாடுகள் முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தொடக்க விழாவில், மாநில சட்டப் பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப்பன், மாநில அமைச்சர்கள் பரிதி இளம்வழுதி, டி.பி.எம். மைதீன்கான், பூங்கோதை ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இந்த பொருள்காட்சியில் சுமார் அரசுத் துறைகளின் சார்பில் 20 அரங்குகள் இடம்பெறும். இவை அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை விளக்கும் வகையில் அமைக்கப்படும்.
பொருள்காட்சியில் தனியார் கடைகளும், பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெறும்.
இந்நிலையில் முனைப்புடன் நடைபெற்று வரும் அரசுத் துறை அரங்குகள் அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் மு. ஜெயராமன் வியாழக்கிழமை மாலை பார்வையிட்டார்.
அவருடன் மாநகராட்சி ஆணையர் த. மோகன், மாவட்ட செய்தி - மக்கள் தொடர்பு அலுவலர் உல. ரவீந்திரன் மற்றும் துறை அதிகாரிகள் உடன் பங்கேற்றனர்.
பொருள்காட்சியைப் பார்வையிட வரும் பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கவும், செயற்கை நீரூற்றுகளை அமைக்கவும் மாநகராட்சி ஆணையருக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
தொடக்க விழா: பொருள்காட்சி தொடக்க விழா இம் மாதம் 20-ம் தேதி சட்டப் பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப்பன் தலைமையில் நடைபெற உள்ளது.
பொருள்காட்சியை மாநில செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி தொடக்கிவைத்துப் பேசுவார்.
மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பூங்கோதை ஆகியோர் வாழ்த்திப் பேசுவர்.
பொருள்காட்சி குறித்து செய்தி - மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் சி. காமராஜ் விளக்கிப் பேசுவார்.
முன்னதாக, மாவட்ட ஆட்சியர் ஜெயராமன் வரவேற்றுப் பேசுவார்.
மேயர் அ.லெ. சுப்பிரமணியன், எஸ். ராமசுப்பு எம்.பி., சட்டப் பேரவை உறுப்பினர்கள் வீ. கருப்பசாமி பாண்டியன், என். மாலைராஜா ஆகியோர் முன்னிலை வகிப்பர். எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்
வெள்ளி, 12 ஜூன், 2009
குற்றாலத்தில் நேற்று அருவிகளில் தண்ணீர் மிகக்குறைவாகவே விழுகிறது
குற்றாலத்தில் முக்கிய அருவிகளில் நேற்று காலை நிலவரப்படி மிகக் குறைந்த அளவிலேயே தண்ணீர் விழுகிறது. சுற்றுலாப்பயணிகள் வரிசையில் நின்று குளித்து வருகின்றனர்.குற்றாலம் மெயின் அருவியில் நேற்று காலையில் சிறிதளவில் மட்டுமே பாறையை ஒட்டினாற்போல தண்ணீர் விழுகிறது. இதில் சுற்றுலாப் பயணிகள் வரிசையாக நின்று குளித்து வருகின்றனர். ஐந்தருவியில் 3 கிளைகளில் மட்டுமே தண்ணீர் விழுகிறது. வானம் மேகமூட்டமில்லாமல் சாரல் விழவில்லை
தகவல் : அலெக்ஸ், தென்காசி
வியாழன், 11 ஜூன், 2009
செந்தூர் எக்ஸ்பிரஸ் தினந்தோறும் இயக்க தெற்கு ரயில்வே பரிசீலனை: பொதுமேலாளர் ஜெயந்த் தகவல்
திருச்செந்தூரிலிருந்து சென்னை செல்லும் வாராந்திர ரயிலை தினசரி ரயிலாக இயக்குவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜெயந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய அவர், விழுப்புரம்- மயிலாடுதுறை இடையே அகலப்பாதை அமைக்கும் பணி 3 மாதத்தில் முடிவடையும். அதன் பின்னர் திருச்செந்தூர் ரயில் தினசரி ரயிலாக இயக்கப்படும்.
மதுரை-திண்டுக்கல் இடையே 2வது அகலப்பாதை அமைக்கும் பணி முடிந்து விட்டது. செங்கல்பட்டு- விழுப்புரம் இடையே 2வது அகலப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் 2 ஆண்டுகளில் முடிவடையும். சென்னை- திருச்சி அகலப்பாதை மின் மயமாக்குதல் பணி 3 மாதங்களில் முடிந்துவிடும்.
புறநகர் ரயில் பயணிகள் வரிசையில் நிற்காமல் உடனடியாக ரயில் டிக்கெட்டுகளை பெறும் வகையில், ஸ்மார்ட் கார்டு முறையில் டிக்கெட் எடுப்ப்பதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் எழும்பூர் நிலைய மேலாளர் கோவிந்தசாமி, தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி பூபதி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.
தூத்துக்குடி உள்ளிட்ட 6 மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர்கள் புதன்கிழமை இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் எஸ். மாலதி புதன்கிழமை பிறப்பித்தார்.
இடமாறுதல் செய்யப்பட்ட அதிகாரிகள் பெயர், புதிய பொறுப்பு விவரம் (அடைப்பில் பழைய பதவி):
டி. செந்தில்குமார் -தூத்துக்குடி எஸ்.பி. (விருதுநகர் எஸ்.பி.)

புதன், 10 ஜூன், 2009
பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் 3 ஆம் இடம் பிடித்த பாளை. மாணவிக்கு கேடயம் பரிசு.
பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் 3 ஆம் இடம் பிடித்த திருநெல்வேலி பாளை. மாணவிக்கு கேடயம் நினைவாக பரிசு வழங்கப்பட்டதுதிருநெல்வேலி, பாளையில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடந்த விழாவில் பிளஸ் 2 பொது தேர்வில் மாநில அளவில் 3 ஆம் இடம் பிடித்த மாணவி ஜெஸிமாசுலைகாக்கு மாநில பேச்சாளர் அப்துல் ரஹ்மான் பிர்தவ்ச்சி பரிசு வழங்கினார்.
லேபிள்கள்:
இஸ்லாமியர்கள்,
கல்வி,
செய்திகள்,
மாவட்டம்
தூத்துக்குடி எஸ்.பி. தீபக் டாமோர் சி.பி.ஐ.க்கு சென்றார்

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளாராக செயல்பட்டு வந்த தீபக் எம் டாமோர் மத்திய புலணாய்வு பிரிவில் பணியாற்ற விருப்ப மாறுதல் கேட்டுச் சென்றுள்ளார். தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக கடந்த 2007ம் ஆண்டு ஜூலை மாதம் 29ம் தேதி பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் மத்திய புலனாய்வு பிரிவில் பணியாற்ற விருப்ப மாறுதல் கேட்டு சென்னை சென்றுள்ளதாக தெரிகிறது. இதனிடையே தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யாக திருநெல்வேலி எஸ்.பி. ஆஸ்ராகர்க் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக கடலூர் மாவட்ட எஸ்.பி. அஸ்வின் கோட்னிஸ் விரைவில் பதவியேற்றுக் கொள்வார் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தகவல் : தூத்துக்குடி வெப் நியூஸ்
செவ்வாய், 9 ஜூன், 2009
நெல்லையில் பத்திரிக்கையாளர்கள்-பள்ளி நிர்வாகம் மோதல்: கட்டாய நன்கொடை பிரச்சனையால் பரபரப்பு
திருநெல்வேலி சாப்டர் மேல்நிலைப் பள்ளியில் அதிக நன்கொடை வசூலிப்பதாகக் கூறி, இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்று முற்றுகைப் போராட்டம் நடத்தினர். திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள சாப்டர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு அதிக நன்கொடை வசூலிப்பதாக இந்திய மாணவர் சங்கத்தினர் புகார் தெரிவித்து வந்தனர்.இந்நிலையில், அந்த சங்கத்தினர் திங்கள்கிழமை பள்ளியின் தாளாளர் ஞானதுரை, பள்ளித் தலைமையாசிரியர் செல்வகோடி ஆகியோரை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் அருண்பிரவீன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் உச்சிமாகாளி, துணைத் தலைவர் கஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதுகுறித்து அருண் பிரவீன் நிருபர்களிடம் கூறியதாவது, இப்பள்ளியில் இதுவரை இல்லாத வகையில், இந்த ஆண்டு நன்கொடை அதிகமாக வசூலிக்கப்படுகிறது.
6ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களிடம் ரூ.4 ஆயிரமும்,
9, 10-ம் வகுப்பு மாணவர்களிடம் ரூ.6 ஆயிரமும்,
11, 12ம் வகுப்பு மாணவர்களிடம் குறைந்தது ரூ.8 ஆயிரம்
முதல் படிக்கும் பிரிவைப் பொருத்து ரூ.14 ஆயிரம் வரையும் நன்கொடை வசூலிக்கப்படுகிறது.
ஆங்கிலவழிக் கல்வியில் படிக்கிற மாணவர்களிடம் இதைவிட ரூ.2 ஆயிரம் அதிகமாக நன்கொடை வசூல் செய்யப்படுகிறது.
இதேபோல மாநகரில் உள்ள பெரும்பாலான தனியார் பள்ளிகளில் நன்கொடை என்ற பெயரில் பெரிய வசூலே நடக்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதன் காரணமாகத்தான் நாங்கள் போராட்டம் நடத்தி வருகிறோம் என்றார் அருண்பிரவீன்.
இதனிடையே முற்றுகை போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது பத்திரிக்கை புகைப்படக்காரர் ஒருவரின் சட்டையைப் பிடித்து தலைமையாசிரியர் வெளியே தள்ளினார். அப்பொழுது பத்திரிக்கையாளர்கள் ஒன்று சேர்ந்து தலைமை ஆசிரியர் மண்ணிப்பு கேட்கும்படி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த திடீர் முற்றுகைப் போராட்டத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட பள்ளிகளில் நன்கொடை என்ற பெயரில் கட்டாய நிதி வசூல் செய்து வருகின்றனர். அரசு ஒருபுறம் அனைவருக்கும் கல்வித்திட்டம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டம் என்ற பெயரில் பிரச்சாரம் செய்து அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் வேளையில் பள்ளிகளின் இதுபோன்ற கட்டாய நன்கொடை வசூலினை தடுத்து நிறுத்தாவிட்டால் அனைவருக்கும் கல்வித்திட்டம் என்பது மிகவும் அரிதான ஒன்றாகவே இருக்கும்
தகவல் : தூத்துக்குடி வெப் நியூஸ்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)