ஸ்ரீவை ஜமாஅத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஸ்ரீவை ஜமாஅத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 27 அக்டோபர், 2011

ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி தலைவர் பதவியேற்பு


ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி மன்ற புதிய தலைவராக அ.தி.மு.க.வைச் சேர்ந்த பி.அருணாசலம் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் பதவி ஏற்றனர்.

பேரூராட்சி மன்ற பதவியேற்பு விழாவையொட்டி பேரூராட்சி அலுவலகம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதிகாலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் பகல் 12 மணிக்கு மேல் பதிவியேற்ப்பு விழா தொடங்கியது.

மேளதாளங்களுடன், வாண வேடிக்கைகள் முழங்க முதலில் பேரூராட்சி புதிய தலைவர் பி.அருணாசலத்துக்கு பேரூராட்சி நிர்வாக அதிகாரி மணி பதவி பிரமாணம் செய்துவைத்தார்.

பின்னர் தொடர்ந்து உறுப்பினர்கள் தே.பெருமாள் (1வது வார்டு), ம.ராமலெட்சுமி (2வது வார்டு), செய்யது காதர் பாத்திமா (3 வது வார்டு), மு.பராசக்தி (4 வது வார்டு), கு.பிச்சை (5 வது வார்டு), பி.ரீனா (6 வது வார்டு), க.பாமா (7 வது வார்டு), சு.பால்ராஜ் (8 வது வார்டு), பெ.தங்கவேல் (9 வது வார்டு), எம்.எஸ்.ராஜா (10 வது வார்டு), கா.தாமோதரன் (11 வது வார்டு), கே.பாலம்மாள் (12 வது வார்டு), சு.பெருமாள் (13 வது வார்டு), எஸ்.நிலமுடையான் (14 வது வார்டு), ஆர்.அமுதா (15 வது வார்டு), ஜி.பெரியார்செல்வம் ( 16 வது வார்டு), எம்.பொன்பாண்டி (17 வது வார்டு), மு.மாரிமுத்து (18 வது வார்டு) ஆகியோருக்கு பேரூராட்சி புதிய தலைவர் பி.அருணாசலம் பதவி பிரமாணம் செய்துவைத்தார்.

ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில் தலைவர் பதவிக்கு பதவி பிரமாணம் எடுத்துக்கொண்ட புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு கட்சி பிரமுகர்கள், நண்பர்கள், உறவினர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

முடிவில் புதிய தலைவர் பி.அருணாசலம் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள், கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

சனி, 22 அக்டோபர், 2011

ஸ்ரீவை, டவுன் பஞ்சாயத்து தேர்தலில் ஜனாபா செய்யது காதர் பாத்திமா அவர்கள் அமோக வெற்றி

ஸ்ரீவைகுண்டம் டவுன் பஞ்சாயத்து தேர்தலில் 3வது வார்டு அதிமுக சார்பில் போட்டியிட்ட, நமது தெரு சார்த்த ஜனாப் ஜோய்ஸ் முகைதீன் அவர்களின் தாயார் ஜனாபா செய்யது காதர் பாத்திமா அவர்கள் 174 ஓட்டுகள் பெற்று அமோக வெற்றி பெற்று உள்ளார்.

அவர்களுக்கு ஸ்ரீவை மக்கள் நல வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறது. மேலும் சிறப்புடன் பணியாற்ற எல்லாம் வல்ல அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாக ஆமீன்.

வெள்ளி, 1 ஜூலை, 2011

ஸ்ரீவை, சின்ன பள்ளிவாசலில் சிறப்பு பாயன்.

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )

இன்ஷா அல்லா நாளை ( 02-07-11 ) சனிகிழமை நமது சின்ன பள்ளிவாசலில் வைத்து சிறப்பு பாயன் நடைபெற உள்ளது.

இடம் : சின்ன பள்ளிவாசல்

நாள் : 02 – 07 - 2011, சனிகிழமை

நேரம் : அசர் முதல் இஷா தொலூகை வரை

தலைப்பு : " இஸ்லாமிய உறவுகள் "

சிறப்பு உரை : ஜனாப் அப்துல் மஜீத் மற்றும் காஜா முகைதீன் பாகவி

நிகழ்ச்சி ஏற்பட்டு : சென்னை ஸ்ரீவை ஜமாஅத்.

நமது ஜமாஅத் மக்கள் அனைவரும் கலந்து கொள்ள அன்புடன் கேட்டு கொள்கிறோம்.

வஸ்ஸலாம்
ஸ்ரீவை மக்கள்


தகவல் : சிராஜ்தீன், சென்னை

சனி, 7 ஆகஸ்ட், 2010

ஸ்ரீவையில் நாளை சட்டமன்ற தேர்தலா ?

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )

ஸ்ரீவையில் நாளை சட்டமன்ற தேர்தலா? என அடுத்த ஆண்டு தானே சட்டமன்ற தேர்தல் என்று நீங்கள் நினைப்பது உண்மை. ஆனால் இது நமது ஊர் முதவிலுல் ஹைய்ராத் மஜ்லிஸில் பொது தேர்தல் நாளை ( 08 -08 -2010 ) காலையில் 10.00 மணி அளவில் நடக்க இருக்கிறது. நாளையாவது நடக்குமா? என்ற கேள்வி ஒரு புறம் இருக்கிறது.

நமது ஊரை ஏன் இப்படி கிண்டலாக எழுதி இருக்கிறாக்கள் என்று நினைக்க வேண்டாம். மிக மிக வருத்தத்துடன் எழுதுகிறோம்

சட்டமன்ற தேர்தலை மிஞ்சும் வகையில் பெரும் குழப்பங்கள் நமது ஊரில் நடந்து வருகிறது. இப்போது ஊர் இரண்டு குழுவாக பிரிந்து நிற்கிறது . ஊர் இரண்டானால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் என்பது போல் சிலர் சுயலாபதிகாக செயல்படுகிறார்கள் என்று நினைக்கும் அளவுக்கு வந்தது விட்டது. ஊரின் ஒற்றுமை பற்றி கவலைப்பட நமக்கு என்ன என்று செயல்படுகிறார்கள் .

துபாய், சவுதி. மற்றும் சென்னையில் வசிக்கும் ஸ்ரீவை ஜமாஅத் சார்ந்த மற்றும் ஸ்ரீவை ஊரில் இருத்து வெளியேறிய நமது நண்பர்கள் உறவினர்கள் அனைவரும் முதவிலுல் ஹைய்ராத் மஜ்லிஸ் என்னும் ஸ்ரீவை ஜமாஅத் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறாக்கள்.

எல்லா ஊர்களிலும் பிரச்னைகள் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் ஊரின் ஒற்றுமை கருதி சமாதானமாக அல்லது விட்டு கொடுத்து செயல்படுகிறார்கள் . நமது ஊரில் மட்டும் ஏன் இப்படி அடித்து கொள்ளும் அளவுக்கு உள்ளனர் என்பது வல்ல இறைவன் அல்லா ஒருவனுக்கே தெரியும்.

வஸ்ஸலாம்
ஸ்ரீவை மக்கள்

புதன், 24 பிப்ரவரி, 2010

ஸ்ரீவை மக்களின் உதவியை நாடி ஒரு வேண்டுகோள்......

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )

நமது ஸ்ரீவை ஜமாஅத் பள்ளி வாசலில் வேலை பார்த்து கொண்டிருந்த நமது பிலால் ( மோதினார் ) ஜனாப் K.M. முகைதீன் பிச்சை அவர்களுக்கு அதிக வயதாகி விட்டதால் இன்ஷா அல்லாஹ் ஓய்வு பெற இருக்கிறார்.

எனவே அவர்களுக்கு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் ஸ்ரீவை ஜமாஅத்தை சார்த்த நமது மக்கள் தங்களால் இயன்ற அளவு பண உதவியை செய்ய அன்புடன் கேட்டு கொள்கிறோம்.

மேலும் பிலால் ( மோதினர் ) ஜனாப் K.M. முகைதீன் பிச்சை அவர்கள் எழுதிய கடிதம் உங்களது பார்வைக்கு





ஈமெயில் உதவி : ஜனாப் S. சலீம்,சென்னை.போன்:91 98412 34511,

சனி, 12 டிசம்பர், 2009

வஃபாத்து செய்தி

அஸ்ஸல்லம் அழைக்கும் ( வரஹ் )

ஸ்ரீவை சார்த்த ஜனாப் ஹனிபா அவர்களின் தாயார் ஜனாபா பல்கிஸ் அவர்கள் நேற்று (11-12-09) இரவில் 10.00 மணி அளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் வைத்து காலமானார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் ஜானஷா இன்ஷாஅல்லா இன்று லுஹர் தொழுகைக்கு பின் சென்னை புரசைவாக்கம் பள்ளி வாசலில் வைத்து நல்லடக்கம் செய்யப்படுகிறது.

அன்னாரின் மறுமைப்பேறு சிறக்கவும்,எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து,ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்கவும் அவர்களது ஹக்கில் அனைவரும் துவா செய்துகொள்ளோம

தொடர்பு கொள்ள :

ஜனாப் ஹனிபா : 91 98846 47567

திங்கள், 30 நவம்பர், 2009

வஃபாத்து செய்தி

அஸ்ஸல்லம் அழைக்கும் ( வரஹ் )

ஸ்ரீவை புதுத் தெருவை சார்த்த ஜனாப் M. A. ஷாஜஹான் அவர்களின் தாயார் இன்று காலை (30-11-09) காலமானார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜானஷா இன்ஷாஅல்லா இன்று மாலை 3.30 மணிக்கு நமது பள்ளி வாசலில் வைத்து நல்லடக்கம் செய்யப்படுகிறது

அன்னாரின் மறுமைப்பேறு சிறக்கவும்,எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து,ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்கவும் அவர்களது ஹக்கில் அனைவரும் துவா செய்துகொள்ளோம

வஸ்ஸலாம்
srivaimakkal@gmail.com

தகவல் : ஜனாப். சிராஜ்தீன், சென்னைஸ்ரீவைஜமாஅத்

ஞாயிறு, 8 நவம்பர், 2009

ஸ்ரீவை புதுக்குடி சேர்ந்தவர் சென்னை விபத்தில் மரணம் துக்கத்தில் மனைவியும் மரணம்

கணவர் விபத்தில் இறந்ததை அறிந்த மனைவி பரிதாபமாக இறந்தார். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை அடுத்துள்ள புதுக்குடியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(48). இவர் காண்ட்ராக்ட் தொழிலில் ஈடுபட்டுவருகிறார்.

தொழில் நிமித்தமாக சென்னை சென்றிருந்த இவர் அங்கு விபத்தில் இறந்துவிட்டார். பாலகிருஷ்ணன் இறந்த தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டத்தை அடுத்துள்ள வெள்ளூரில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

கணவர் இறந்த தகவல் கேட்ட அவரது மனைவி செல்வி(40) மூர்ச்சையானார். ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லும் வழியில் இறந்தார்

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2009

ஸ்ரீவையில் தினமும் பெண்களுக்கான சிறப்பு பாயன்

ஸ்ரீவையில் ரமலான் மாதம் நோன்பு முன்னிட்டு சின்னபள்ளிவாசல்யில் வைத்து ஸ்ரீவை பெரிய பள்ளிவாசல் இமாம் அவர்கள் பெண்களுக்கான சிறப்பு பாயன் செய்து வருகிறார் .

தினமும் காலை 11.00 மணி முதல் 12.00 வரை இன்ஷாஅல்லா நடைபெறுகிறது . அனைத்து பெண்களும் கலத்து கொண்டு சிறப்பு பெற அன்புடன் கேட்டு கொள்கிறோம்

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2009

நேற்று சென்னையில் சென்னைவாழ் ஸ்ரீவைகுண்டம் இஸ்லாமிய ஜமாஅத் 2 ஆம் ஆண்டு விழா

நேற்று சென்னையில் சென்னைவாழ் ஸ்ரீவைகுண்டம் இஸ்லாமிய ஜமாஅத் 2 ஆம் ஆண்டு விழா சிறப்பாக நடந்தது .

சென்னைவாழ் ஸ்ரீவைகுண்டம் இஸ்லாமிய ஜமாஅத் கடந்த 2007 ஆகஸ்ட் 15 ஆம் தேதி தொடங்க்கப்பட்டு 2 ஆம் ஆண்டு முடித்து 3வது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது.

இதையடுத்து நேற்று சென்னையில் சென்னை ஸ்ரீவை ஜமாஅத் சார்பில் குடும்ப சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்து சிறப்பாக நடந்தது

காலை 10 மணி அளவில் ஸ்ரீவை சார்த்த ஜனாப் K.M.C. பாட்சா அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்தார் . விழாவில் இந்திய சுதந்திரத்துக்கு பாடுப்பாட்டு வரலாற்றில் இருந்து மறைக்கப்பட்ட இஸ்லாமிய தியாகிகளை பற்றி பேசப்பட்டதுபின் புரசைவாக்கம் ஆலிம் அவர்களை வைத்து சிறப்பு பாயன் நடந்தது

மதியம் அனைவருக்கும் சாப்பாடு பரிமாறப்பட்டது .பின்னர் தொடர்த்து நிகழ்ச்சி நடைபெற்றது . ஸ்ரீவைகுண்டம் சார்த்த மக்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009

புதன், 12 ஆகஸ்ட், 2009

சென்னைவாழ் ஸ்ரீவைகுண்டம் இஸ்லாமிய ஜமாஅத் 2 ஆம் ஆண்டு விழா அழைப்பிதல்

அஸ்ஸல்லம் அழைக்கும் ( வரஹ் )

ஸ்ரீவை மக்கள் அனைவருக்கும் நமது சென்னை ஸ்ரீவை ஜமாஅத் 2 ஆம் ஆண்டு விழா இன்ஷாஅல்லாஹ் வருகின்ற ஆகஸ்ட் 15 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக் கொள்கிறோம்

நமது ஊரை சார்த்த அனைத்து சொந்த்தங்களும் கலந்து கொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டு கொள்கிறோம்



" சென்னை ஸ்ரீவை ஜமாஅத் அமைப்பின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எங்களது உள்ளங்கனித்த வாழ்த்துகளை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம் "

" எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரும் ஒற்றுமையுடன் நீண்ட ஆயுளையும் , நமது துவாக்களையும் நிறைவேற்றி வைப்பானாக " அமீன்

வஸ்ஸலம்:
srivaimakkal@gmail.com

குறிப்பு : ஒரு கிளிக் செய்தல் அழைப்பிதல் பெரிதாக பார்க்கலாம்

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009

ஸ்ரீவையில் நேற்று புனித பராஅத் இரவு

ஸ்ரீவை பெரிய பள்ளி வாசலில் மஃரிபு தொழுகைக்குப் பின்னர் மூன்று முறை யாசீன் ஓதி துஆ செய்யப்பட்டது.

முதலாம் யாசீன் ஸலாமத்தான நீண்ட ஆயுளுக்காகவும், இரண்டாம் யாசீன் பலா முசீபத் கஷ்ட நஷ்டங்கள் நீங்கிடவும், மூன்றாம் யாசீன் ரிஸ்க் விஸ்தீரனம் வேண்டியும் துஆ செய்யப்பட்டது

ஊர் மக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

ஞாயிறு, 12 ஜூலை, 2009

திருமண வாழ்த்துக்கள்

அஸ்ஸல்லம் அழைக்கும் ( வரஹ் )

இன்று ( 12 -07- 2009 ) நமது ஊரை சார்த்த பெரிய பள்ளிவாசல் நடுத் தெருவில் வசிக்கும் ஜனாப் இப்ராகிம் அவர்களின் மகளுக்கும், மானுஊர் சார்த்த ஜனாப் முகைதீன்கான் அவர்களின் மகனுக்கும், ஸ்ரீவை சின்ன பள்ளிவாசல் மண்டபத்தில் வைத்து (இன்ஷா அல்லா) திருமணம் நடைபெற உள்ளது.

மணமக்கள் ஹக்கில் அனைவரும் துவா செய்து கொள்ளயோம்.

بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ

மணமக்களுக்கு எங்களது உள்ளங்கனிந்த, இல்ல திருமண வாழ்த்துக்கள்


வஸ்ஸலம்:
srivaimakkal@gmail.com

வெள்ளி, 3 ஜூலை, 2009

வஃபாத்து செய்தி :

அஸ்ஸல்லம் அழைக்கும் ( வரஹ் )

ஸ்ரீவை பெரிய பள்ளி வாசல் தெருவை சார்த்த மர்ஹும் ஜனாப் ஷேய்க் சித்தாமாதர் அவர்களின் மகன் ஜனாப் முஹம்மது இக்பால் ( மாதர் ஸ்டோர் ) அவர்கள் இன்று மாலை (03-07-09) காலமானார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் மறுமைப்பேறு சிறக்கவும்,எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து,ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்கவும் அவர்களது ஹக்கில் அனைவரும் துவா செய்துகொள்ளோம

வஸ்ஸலாம்
srivaimakkal@gmail.com

ஞாயிறு, 28 ஜூன், 2009

திருமண வாழ்த்துக்கள்

அஸ்ஸல்லம் அழைக்கும் ( வரஹ் )


இன்று ( 28 -06- 2009 ) நமது ஊரை சார்த்த ஜனாப் அப்துல்காதர் ( சதக்கதுல்லா அப்பா கல்லூரி, நூலகர் ) அவர்களின் மகனுக்கும், கொங்கராயகுறிச்சி சார்த்த ஜனாப் அலி அக்பர் ( கன்னியாகுமரி துணை ஆட்சியாளர் ) அவர்களின் மகளுக்கும், பாளையங்கோட்டை சாந்தி நகரில் உள்ள இதய திருமண மண்டபத்தில் வைத்து (இன்ஷா அல்லா) திருமணம் நடைபெற உள்ளது.


மணமக்கள் ஹக்கில் துவா செய்து கொள்ளயோம்.


மணமக்களுக்கு எங்களது உள்ளங்கனிந்த, இல்ல திருமண வாழ்த்துக்கள்


வஸ்ஸலம்:

srivaimakkal@gmail.com

சனி, 27 ஜூன், 2009

ஸ்ரீவையில் இன்று சிறப்பு பாயன் நடைப்பெறுகிறது

அஸ்ஸல்லம் அழைக்கும் ( வரஹ் )

ஸ்ரீவையில், இன்று சென்னை ஸ்ரீவை ஜமாஅத் சார்பாக சிறப்பு இஸ்லாமிய பாயன் நடைப்பெறுகிறது.

சென்னை புரசைவாக்கம் பள்ளியில் இருத்து ஆலிம்களை வரவழைத்து ஸ்ரீவை சின்ன பள்ளி வாசலில் வைத்து ஊர் மக்களுக்கு காலை 10.00 மணி முதல் மதியம் 12.30 வரையும், பிறகு மதியம் 2.00 மணி முதல் 4.30 மணி வரையும் சிறப்பு பாயன் நடைப்பெறுகிறது.

ஸ்ரீவை மக்கள் அனைவரும் கலத்து கொண்டு பயன் பெற அன்புடன் கேட்டு கொள்கிறோம்

வஸ்ஸலாம்
srivaimakkal@gmail.com

ஞாயிறு, 14 ஜூன், 2009

திருமண வாழ்த்துக்கள்

அஸ்ஸல்லம் அழைக்கும் ( வரஹ் )


இன்று (14 -06- 2009 ) நமது ஊர் மீராஸ்தார் தெருவை சார்ந்த ஜனாப் அப்துல் காதர் அவர்களின் ( ஜனாப் ஜெயிலானி அவர்களின் தம்பி ) மகனுக்கும்,டவுன் பேட்டை சார்த்த ஜனாப் ஜாகிர் அவர்களின் மகளுக்கும், பேட்டை வசந்தம் திருமண மண்டபத்தில் வைத்து (இன்ஷா அல்லா) திருமணம் நடைபெற உள்ளது.

மணமக்கள் ஹக்கில் துவா செய்து கொள்ளயோம்.

மணமக்களுக்கு எங்களது உள்ளங்கனிந்த, இல்ல திருமண வாழ்த்துக்கள்

தொடர்புக் கொள்ள

MR. ஜெயிலானி ௦௦ 00 91 93610 33078

வஸ்ஸலம்:
srivaimakkal@gmail.com

வஃபாத்து செய்தி :

அஸ்ஸல்லம் அழைக்கும் ( வரஹ் )

ஸ்ரீவை தெற்கு தெருவை சார்த்த ஹிஜ M.A. ஜப்பார் அவர்களின் துணைவியார் ஷகார்ஜன்அவர்கள் இன்று காலை(14-06-09) காலமானார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இன்ஷா அல்லா நாளை காலை நல்லடக்கம் செய்யப்படுகிறது

அன்னாரின் மறுமைப்பேறு சிறக்கவும்,எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து,ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்கவும் அவர்களது ஹக்கில் அனைவரும் துவா செய்துகொள்ளோம


தொடர்பு கொள்ள :

M.A. ஜப்பார் : 00 91-94431 86914 , வீடு : 91 4630 255214

M.A ஹமீம் : 00 91 - 97916 96014

M. அப்துல் ரஹீம் : 0091 - 99419 29269



வஸ்ஸலாம்


srivaimakkal@gmail.com

புதன், 27 மே, 2009

சென்னைஸ்ரீவைஜமாஅத் மாணவனின் படிப்புக்கு உதவியது

அஸ்ஸல்லம் அழைக்கும் ( வரஹ் )

ஸ்ரீவை ஜமாஅத் சார்த்த 2வது தெருவில் வசிக்கும் ஜனாப் ரஹ்மதுல்லா அவர்களின் மகன் பாதுஷா கடந்த 10ம் வகுப்பு பொது தேர்வில் 428 ம‌‌தி‌ப்பெ‌ண்க‌ள் எடு‌த்து தேர்ச்சி பெற்றுள்ளார்.

அந்த மாணவன் தொடர்த்து படிக்க பொருளாதார வசதி இல்லை என்பதை அறிந்த சென்னைஸ்ரீவைஜமாஅத் மாணவனின் படிப்பை தொடர தொழில் கல்வி அல்லது உயர் கல்விக்கு ஏற்பாடு செய்துள்ளது. அதற்கு எங்களது உள்ளங்கனிந்த வாழ்த்துக்கள்.

மாணவனின் பொருளாதார நிலையை,சென்னைஸ்ரீவைஜமாஅத் அமைப்புக்கு எடுத்து கூறிய ஸ்ரீவை ஊர் சார்த்த மர்ஹும் ஜனாப் R.M. பாட்சா அவர்களின் மகன் ஜனாப் R.M.B. ஜவ்ஹர் ஷா அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்

" எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரும் ஒற்றுமையுடன் நீண்ட ஆயுளையும் , நமது துவாக்களையும் நிறைவேற்றி வைப்பானாக " அமீன்

வஸ்ஸலாம்

srivaimakkal@gmail.com

LinkWithin

Blog Widget by LinkWithin