தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் பதிவு செய்ய திருச்சி மற்றும் சேலத்தில் சிறப்பு முகாம்கள் 4 நாள்கள் நடைபெறவுள்ளன. இதில்,திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் குத்சியா காந்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தொடங்கிய நாள் முதல் பல்வேறு வேலைப் பிரிவுகளில் படித்தவர்கள் முதல் படிக்காதவர்கள் வரை ஆயிரக்கணக்கான மனுதாரர்களை பணியமர்த்தியுள்ளது.
மேலும், வெளிநாட்டு வேலையளிப்போரிடம் இருந்து பணியாளர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், சென்னையில் உள்ள அலுவலகத்திற்கு வந்து பதிவு செய்வதால் பயனாளிகளின் நேரம், பயணம் மற்றும் செலவினை போக்கும் பொருட்டும் அவர்கள் பகுதிக்கே வந்து நேரடியாக பதிவு செய்து கொள்வதற்கு ஏதுவாக தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் திருச்சி மற்றும் சேலத்தில் சிறப்பு முகாம்களை நடத்த முடிவு செய்துள்ளது.
வரும் 23 மற்றும் 24 தேதிகளில் (சனி, ஞாயிறு) திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும், 30 மற்றும் 31 தேதிகளில் (சனி, ஞாயிறு) சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெறும்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கான சிறப்பு பதிவு முகாம்களில் தங்களின் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் மூன்று நகல்கள் மற்றும் 4 புகைப்படத்துடன் வந்து கலந்து கொள்ளலாம். அனுபவம் மற்றும் பாஸ்போர்ட் இல்லாதவர்களும், கல்வி அல்லாத தொழில் அனுபவம் உள்ளவர்களும் கலந்து கொள்ளலாம்.
பதிவு கட்டணமாக லேபர், கொத்தனார், கார்பெண்டர், ஸ்டீல் பிட்டர், பிளம்பர், பெயிண்டர் முதல் ஐ.டி.ஐ. டிப்ளமோ, தொழில் அனுபவம் பெற்றவர்கள், ஹோட்டல் பணியாளர்கள், பட்டப் படிப்பு படித்தவர்கள் வரையிலான பணியிடங்களுக்கு ரூ. 442-ம், நர்ஸ், பாரா மெடிக்கல் டெக்னீஷியன்கள் மற்றும் அனைத்து மருத்துவப் பணியாளர்கள், பொறியியல் பட்டப்படிப்பு, முதல் நிலை இன்ஜினீயரிங், முதுநிலை கணக்காளர், முதுநிலை பட்டதாரிகள், முதுநிலை மேலாண்மை படித்தவர்கள், கணினி பட்டப் படிப்பு வரை ரூ. 772-ம், டாக்டர்கள் ரூ. 995-ம் செலுத்தி விண்ணப்பப் படிவத்தை பெற்று பதிவு செய்து கொள்ளலாம்.
தமிழக அரசு நிறுவனத்தின் இந்த சிறப்பு பதிவு முகாமின் வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது தொடர்பாக மேலும் விவரங்களுக்கு 9444690026, 9381800181, 9940276356 ஆகிய செல்போன் எண்களிலும், 044- 24464268 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
செய்தி: தினமணி
ஸ்ரீவை மக்களை பற்றியும் ஊர் நடப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்,உங்களுடைய கருத்துகளையும் பதிவு செய்யலாம்..
திருநெல்வேலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருநெல்வேலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், 20 ஜனவரி, 2010
வியாழன், 7 ஜனவரி, 2010
நெல்லையில் அறிவியல் கண்காட்சி ரயில்
திருநெல்வேலிக்கு வந்த அறிவியல் கண்காட்சி ரயிலை ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் புதன்கிழமை ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பக் கழகம் சார்பில் கடந்த அக்டோபர் 2-ம் தேதி காந்திநகரில் இருந்து இக்கண்காட்சி ரயில் புறப்பட்டது. வடமாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களுக்கு சென்று விட்டு, இந்த ரயில் கடந்த 4-ம் தேதி திருவனந்தரம் வழியாக செவ்வாய்க்கிழமை திருநெல்வேலி ரயில் நிலையத்திற்கு வந்தது.
ரயில் நிலையத்தில் 5வது பிளாட்பாரத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்த ரயிலில் உள்ள அறிவியல் கண்காட்சி அரங்கை மாவட்ட ஆட்சியர் மு. ஜெயராமன் திறந்துவைத்துப் பார்வையிட்டார்.
ரயில் நிலைய மேலாளர் கல்யாணி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர், பள்ளி மாணவ, மாணவிகள் வரிசையில் நின்று ரயிலில் உள்ள கண்காட்சி அரங்கை கண்டு ரசித்தனர்.
கண்காட்சியில் அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த அரிய தகவல்களுடன் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.
அனைத்து தகவல்கள், விளக்கங்கள், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெற்று இருந்தன. இதனால், பள்ளி மாணவிகள் அதைப் படித்து புரிவதற்கு மிகவும் சிரமப்பட்டனர்.
இந்த கண்காட்சி ரயிலில் அரங்கை பற்றி விளக்கிட 38 பேர் உள்ளனர். இவர்களில் 3 பேர் தமிழ் பேச தெரிந்தவர்கள். பெரும்பானவர்கள் இந்தி, ஆங்கிலத்தில் பேசியதால் மாணவர்கள் அவர்கள் கூறியதை புரிந்து கொள்ளுவதில் சிரமப்பட்டனர். மாணவர்களை அழைத்து வந்த ஆசிரியர்களும், மாணவர்களுடன் அரங்கை பார்த்து ரசித்து வந்தனர்.
இந்த கண்காட்சியை 8-ம் தேதி வரை பார்க்கலாம். அதன்பின் இந்த ரயில் திண்டுக்கல் செல்லும்
வியாழன், 19 நவம்பர், 2009
நெல்லை மனித நேய மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் அறிவிப்பு
மனித நேய மக்கள் முன்னேற்றக் கழக திருநெல்வேலி மாவட்ட, மாநகர நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அமைப்பின் நிறுவனர் எஸ். முகம்து ரவி புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தலைமை நிலையச் செயலராக ராஜா முகம்மது, தலைமை சட்ட ஆலோசகராக அப்துல் ஜப்பார், கொள்கைப் பரப்புச் செயலர்களாக முஸ்தபா, இமாம் முகம்து அலி, மாவட்டத் தலைவராக எஸ்.ஏ. ஷேக், வர்த்தக அணிச் செயலராக சுல்தான், மருத்துவ சேவை அணிச் செயலராக தாஹிர் ஒசாமா, திருநெல்வேலி மாநகரச் செயலராக மவுலானா, மாநகரப் பொருளாளர் மற்றும் செய்தித் தொடர்பாளராக எம்.ரிபாயி .

லேபிள்கள்:
அரசியல்,
இஸ்லாமியர்கள்,
திருநெல்வேலி
செவ்வாய், 10 நவம்பர், 2009
இந்தியாவிலேயே முதன்முறையாக நெலலை பல்கலையில் கடல்சார் பொருளாதார மேற்படிப்பு
இந்தியாவிலேயே முதன் முறையாக நெல்லை பல்கலைக்கழகத்தில் கடல்சார் பொருளாதார மேம்பாடு குறித்த முதுகலைப் பட்டபடிப்பு (எம்ஏ) வரும் கல்வியாண்டு முதல் அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்காக யுஜிசி முதல் கட்டமாக ரூ.34 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இதுகுறித்து நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சபாபதி மோகன்,பதிவாளர் மாணிக்கம் ஆகியோர் கூறுகையில்,
இந்திய கடற்கரை ஒருபுறம் குஜராத்திலும், மறுபுறம் கொல்கத்தாவிலும் தொடங்கி தமிழ்நாடு வரை சுமார் 7,500 கி.மீ. நீளமுடையது.
தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் கடல் சார்ந்த பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகள், தொழிற்சாலைகள், துறைமுகங்கள், மீன்பிடி தொழில்கள், சுற்றுலா, தாதுவளம் பயன்பாடு, உப்பு தயாரிப்பு போன்றவை நடந்து வருகின்றன.
குறிப்பாக தமிழக் கடற்கரை பகுதிகளில் கடல்பாசி, கடற் புல், கடற் தாவரங்கள் உள்ளிட்டவை சுற்று சூழலை பாதுகாக்கும் பொக்கிஷமாக உள்ளன.
இத்தனை வளங்கள் இருந்த போதிலும் கடல் சார்ந்த பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கை தரம் பின் தங்கிய நிலையிலேயே உள்ளது. எனவே இருக்கும் வளங்களை வைத்து இவர்களது ஏழ்மையை போக்கவும், பொருளாதாரத்தை உயர்த்தவும் ஆராய்ச்சிகள்
அவசியமாகின்றன.
இதற்காக நெல்லை பல்கலைக்கழகத்தில் கடல்சார் பொருளாதார வளம் மற்றும் மேம்பாடு குறி்த்த எம்ஏ பாடத் திட்டத்தை செயல்படுத்த யுஜிசியிடம் அனுமதி கோரப்பட்டது. தற்போது இதற்கான அனுமதியை யுஜிசி வழங்கியதுடன் ரூ. 34 லட்சம் நிதியும் ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்தியாவிலேயே முதன்முறையாக நெல்லை பல்கலைக்கழகத்தில் தான் இந்த பாடப்பிரிவு துவக்கப்படுகிறது என்றனர்

வெள்ளி, 6 நவம்பர், 2009
கனமழை தூத்துக்குடி மாவட்ட அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை தமிழகத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. தற்போது குமரிக் கடலில் நிலை கொண்டுள்ள இதன் காரணமாக, அனைத்து மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கோ.பிரகாஷ் பிரகாஷ் அறிவித்துள்ளார்.
இதேபோல தமிழகம் முழுவதும் பெய்து வரும் கனமழைக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், புதுக்கோட்டை, திருச்சி, திருநெல்வேலி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
நன்றி : செல்வா, திருநெல்வேலி
லேபிள்கள்:
செய்திகள்,
திருநெல்வேலி,
தூத்துக்குடி
நெல்லை ரயில் நிலையத்தில் முன்பதிவு மையம் இடமாற்றம்
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு மையம் முன் அறிவுப்பு ஏதும் இன்றி வட பகுதியில் உள்ள புதிய கட்டடத்தின் முதல் தளத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டது.
சந்திப்பு ரயில் நிலையத்தின் வடக்குப் பகுதியில் புதிதாக நுழைவுவாயில் கட்டப்பட்டுள்ளது. இதன் தரைத்தளத்தில் ரயில் நிலைய அதிகாரிகள் அறை, பயணிகள் தங்கும் அறை, உடனடி டிக்கெட் மையம், பார்சல் அலுவலகம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. முதல் தளத்தில் முன்பதிவு டிக்கெட் மையம் கட்டப்பட்டுள்ளது. இந்த மையம் புதன்கிழமை முதல் செயல்படத் தொடங்கியுள்ளது.

வியாழன், 5 நவம்பர், 2009
ஜனவரி 15ல் 108 ஆண்டுகளுக்கு பின் அரிய சூரிய கிரகணம்
108 வருடத்திற்கு பிறகு வரும் 'கங்கண சூரிய கிரகணம்' வரும் ஜனவரி 15ம் தேதி நிகழ்க்கிறது.
அரிய நிகழ்வாக 2010 ஜனவரி மாதம் இரண்டு கிரகணங்கள் நிகழவுள்ளன. புத்தாண்டு அன்று முதல்நாள் சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது.
ஜனவரி 15ம் தேதி சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இக்கிரகணம் தமிழகத்தில் கன்னியாகுமரி , நெல்லை , தூததுக்குடி, விருதுநகர், நாகப்பட்டிணம், கடலூர், ராம்நாடு, சிவகங்கை, திருச்சி , புதுகோட்டை,தஞ்சாவூர் உள்பட 12 மாவட்டங்களில் தெளிவாகத் தெரியும்.
இதுகுறித்து கலெக்டர் ராஜேந்திர ரத்னு நிருபர்களிடம் கூறுகையில்,
இந்த சூரிய கிரகணம் மிகவும் சிறப்பானது. இதற்குப் பெயர் கங்கண சூரிய கிரகணம். இதற்கு முன்னர் 1901ம் ஆண்டு நவம்பர் 11ம் நாள் கங்கண சூரிய கிரகணம் நிகழ்ந்துள்ளது.
மீண்டும் 2019 டிசம்பர் அன்றுதான் கங்கண சூரியகிரகணம் தமிழத்தில் தெரியும். புவியை நிலவு ஒரு நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. இதனால் புவிக்கு அருகே வரும்போது 3 லட்சத்து 57 ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தொலைவிலும், புவியை விட்டு விலகி செல்கையில் 4 லட்சத்து 7 ஆயிரத்து 100 கிலோமீட்டர் தொலைவிலும் நிலவு இருக்கும்.
தொலைவில் இருக்கும் போது நிலவின் தோற்றம் சிறியதாக இருக்கும். எனவே புவியை விட்டு விலகிச் செல்கையில் சூரிய கிரகணம் நடந்தால் சந்திரனால் சூரியனை முழுமையாக மறைக்க முடியாது. இதனையே கங்க சூரிய கிரகணம் என்கிறோம்.
ஜனவரி முதல் நாள் நிகழும் சந்திர கிரகணம் அதிகாலை 12.21க்குத் துவங்கி சுமார் 1.24 மணிக்கு முடிகிறது என்றார் ராஜேந்திர ரத்னு.

குற்றால அருவிகளில் வெள்ளம் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

கனமழை காரணமாக பழையகுற்றால அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதாலும், மெயின் அருவியில் இரவு மின் விளக்கு எரியாததாலும் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
குற்றாலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலையில் இருந்து இரவு வரை தொடர்ந்து மழை பெய்தது. இதனால் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. மாலையில் மெயின் அருவியில் ஆர்ச் மீது தண்ணீர் கொட்டியது. இரவு அருவி பகுதியில் உள்ள மின் விளக்குகள் எரியாததால் சுற்றுலா பயணிகள் அருவியில் சென்று குளிக்க போலீசார் தடை விதித்தனர்.அருவிக்கு செல்லும் பகுதியின் குறுக்கே கயிறு கட்டி போலீசார் தடை ஏற்படுத்தியிருந்தனர்.
டவுன் பஞ்., ஊழியர்கள் மழை காரணமாக மின்விளக்கு சுவிட்சை போடாமல் சென்று விட்டதால் விளக்குகள் எரியவில்லை என்று அப்பகுதி வியாபாரிகள் கூறினர்.பழையகுற்றால அருவியில் மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அருவிக்கு செல்லும் பகுதி வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டது. இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. ஐந்தருவியிலும் தண்ணீர் வரத்து அதிகரித்தது.
சனி, 31 அக்டோபர், 2009
நெல்லை, தூத்துக்குடியில் பரவலாக மழை
நெல்லை, தூத்துக்குடியில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் கார் பருவ சாகுபடி செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மலைப் பகுதியில் அணைகளின் நீர் பிடிப்பு இடங்களிலும் மிதமான மழை பெய்து வருகிறது. தொடர்ந்து இப்பகுதியில் மழை நீடித்தால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும்
நேற்று ஸ்ரீவைகுண்டத்தில் 36 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.இதனால் ஸ்ரீவைகுண்டம் அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

தூத்துக்குடி,
ஸ்ரீவைகுண்டம்
வியாழன், 29 அக்டோபர், 2009
நெல்லையில் பள்ளி பேருந்து மீது தனியார் பேருந்து மோதல்: மாணவிகள் உட்பட 3பேர் பலி

திருநெல்வேலியில் இன்று காலை பள்ளி பேருந்து மீது தனியார் பேருந்து மோதியதில் 11ம் வகுப்பு மாணவி, பேருந்தின் டிரைவர் ஆகியோர் பரிதாபமாக பலியாகினர்.
திருநெல்வேலி, பாளையில் லட்சுமிராமன் மெட்ரிகுலேசன் பள்ளி இயங்கி வருகிறது. இன்று காலையில் பள்ளியிலிருந்து புறப்பட்ட பள்ளி பேருந்து திருநெல்வேலி மாநகர் பகுதிகளில் பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு பாளையங்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது. கே.டி.சி. நகர் அருகே, தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தும் பள்ளி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.
இதில் அப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வரும் கற்பக வள்ளி என்ற மாணவி,இந்துஜா(16)என்ற பிளஸ் 1 மாணவியும், பேருந்தின் டிரைவர் மாரியப்பன் ஆகியோர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 20 மாணவ, மாணவிகள் காயம் அடைந்துள்ளனர்.
மதிமுக, த.மு.மு.க., தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட அமைப்புக்களை சேர்ந்தவர்கள் ஆஸ்பத்திரிக்கு விரைந்துவந்து ரத்ததானம் வழங்கி உதவினர். பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தகவல் : செல்வா, திருநெல்வேலி
நெல்லை ராணி அண்ணா கல்லூரியில் நவ. 4-ல் வேலைவாய்ப்பு முகாம்
திருநெல்வேலி பேட்டை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் நவம்பர் 4-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மு. ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி மாவட்ட கல்லூரிகளில் 2006 ஆம் ஆண்டு முதல் 2009 ஆண்டு வரை பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ. ஆகியவை படித்துள்ளவர்களும், இப் படிப்புகளை இறுதியாண்டு படிப்பவர்களும் திருநெல்வேலி பேட்டை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் நவம்பர் 4 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.
இதேபோல, பொறியியல் பட்டதாரிகளுக்கும், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. படித்தோருக்கும் திருநெல்வேலி அருகே சர்.சி.வி. ராமன் நகரில் உள்ள ஐன்ஸ்டின் பொறியியல் கல்லூரியிலும், பாவூர்சத்திரத்தில் உள்ள எம்.எஸ்.பி. வேலாயுதநாடார் லட்சுமிதாய் பாலிடெக்னிக் கல்லூரியிலும் நவம்பர் 5 ஆம் தேதி காலை 9 மணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும்.
இதில் கலந்துகொள்ள விரும்பும் மாணவ, மாணவிகள் தாங்கள் படித்த கல்லூரியில் விண்ணப்ப படிவத்தை பெற்று, முதல்வரின் கையெழுத்தோடு இம் மாதம் 30 ஆம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், திருநெல்வேலி என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், தகவலுக்கு பொறியியல் துறையைச் சார்ந்தோர் 94434 - 24479, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. படித்தோர் 98944 - 06548 ஆகிய செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றார் ஜெயராமன்.

திங்கள், 26 அக்டோபர், 2009
காயல்பட்டினத்தில் ஓய்வு பெற்ற இமாம் கெüரவிப்பு
காயல்பட்டினத்தில் ஓய்வு பெற்ற இமாம் பணமுடிப்பு வழங்கி கெüரவிக்கப்பட்டார்.
காயல்பட்டினம் செய்து ஸலாஹூத்தீன் பள்ளி என்ற மேலப் பள்ளிவாசலில் கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி ஓய்வு பெற்ற இமாம் தாழையூத்தைச் சேர்ந்த முஹம்மத் கானுக்கு பண முடிப்பு வழங்கி கெüரவிக்கப்பட்டது.
விழாவிற்கு பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி தலைவர் பி.எஸ்.ஏ.பல்லாக்கு லெப்பை தலைமை வகித்தார்.
பள்ளியின் முன்னாள் முத்தவல்லி பி.எம்.ஏ.முஹ்யித்தீன் அப்துல் காதிர் இமாமுக்கு பொன்னாடை போர்த்தி கெüரவித்தார். நிர்வாகக் குழு உறுப்பினர் எம்.எஸ். ஸதக்கத்துல்லாஹ் வாழ்த்திப் பேசினார்.
பள்ளித் துணைத் தலைவர் எஸ்.எஸ்.எம்.புஹாரி பள்ளி சார்பில் இமாமுக்கு பணமுடிப்பை வழங்கினார்.
விழாவில் நிர்வாகக் குழு உறுப்பினர் இல்யாஸ், மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபைச் செயலர் பாளையம் இப்ராகிம், இலங்கை கொழும்பு அல்ஜாமி உல் அள்ஃபர் பி.எம்.ஏ.பல்லாக் லெப்பை, முஹியத்தீன் டிவி இயக்குநர் ஜே.எம்.அப்துர் ரஹீம் மற்றும் ஜமா அத்தினர் கலந்து கொண்டனர்.

ஞாயிறு, 25 அக்டோபர், 2009
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் நாக் குழு நாளை ஆய்வு
பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் தேசிய தர மதிப்பீட்டுக் (நாக்) குழுவினர் திங்கள், செவ்வாய் ஆகிய இரண்டு தினங்கள் தர மதிப்பீடு செய்ய உள்ளனர்.
இதுகுறித்து கல்லூரியின் முதல்வர் முனைவர் ஹெச். செய்யது உதுமான், ஒருங்கிணைப்பாளர் ஏ. நிசமத்துல்லா ஆகியோர் சனிக்கிழமை கூறியதாவது: எமது கல்லூரிக்கு 2003 ஆம் ஆண்டில் "நாக்' குழு வழங்கிய தர மதிப்பீடு சான்றிதழ் இந்த ஆண்டுடன் காலாவதியாகிறது. எனவே, அங்கீகாரத்தை புதுப்பிப்பதற்காக அக் குழுவினர் கல்லூரியில் உள்ள வசதிகளை ஆய்வு செய்ய உள்ளனர். அதன் அறிக்கையை "நாக்' அமைப்பிடம் தாக்கல் செய்வார்கள்.
2003-ம் ஆண்டு "நாக்' அங்கீகாரம் பெற்ற பின்பு 6 ஆண்டுகளில் தன்னாட்சி, ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ், பல்வேறு உள்கட்டமைப்புகள், புதிய பாடத் திட்டங்கள், ஆசிரியர் நியமனம், கிராம சீரமைப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் கல்லூரி வளர்ச்சி கண்டுள்ளது.
எனவே, இந்த முறை மதிப்பீடு செய்யும் "நாக்' குழுவினர் கல்லூரிக்கு "ஏ கிரேடு' வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.
"நாக்' குழுவினரின் தர மதிப்பீட்டுக்கான ஏற்பாடுகளை கல்லூரித் தாளாளர் பத்ஹூர் ரப்பானி வழிகாட்டுதலின்பேரில் கல்லூரி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

சனி, 24 அக்டோபர், 2009
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழா: 312 பேர் நேரடியாக பெற்றனர்
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 17-வது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு, பல்கலைக்கழக இணைவேந்தரும், மாநில உயர்கல்வித் துறை அமைச்சருமான க. பொன்முடி தலைமை தாங்கி 312 பேருக்கு நேரடியாக பட்டங்களையும், பதக்கங்களையும் வழங்கிப் பேசினார்.
பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஒüவை நடராஜன் பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார்.
88 பெண்களும், 107 ஆண்களும் என மொத்தம் 195 பேர் பிஎச்.டி. பட்டம் பெற்றனர். முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் பெறுவோராக 24 பெண்கள், 3 ஆண்கள் என மொத்தம் 27 பேர் எம்.ஃபில் பட்டமும், 42 பெண்கள், 6 ஆண்கள் என மொத்தம் 48 பேர் முதுகலைப் பட்டமும், 41 பெண்கள், 1 ஆண் என மொத்தம் 42 பேர் இளங்கலைப் பட்டமும் பெற்றனர். பதக்கம் பெற்ற 117 பேரில், 107 பேர் பெண்கள். 10 பேர் மட்டுமே ஆண்கள்.
இவர்கள் தவிர, தபால் மூலம் பட்டம் பெறுவோரில் 528 பேர் எம்.ஃபில் பட்டமும், 4,346 பேர் முதுகலைப் பட்டமும், 14,550 பேர் இளங்கலைப் பட்டமும் என மொத்தம் 19,424 பேர் பட்டம் பெறுகின்றனர்.
இந்த ஆண்டு நேரடியாகவும், தபால் மூலமும் மொத்தம் 19,736 பேர் பட்டம் பெற்றுள்ளனர். இவர்களில், தொலைநெறி தொடர்கல்வி மூலம் பயின்று பட்டம் பெறுவோரும் அடங்குவர்.
திங்கள், 12 அக்டோபர், 2009
மழை வேண்டி மேலப்பாளையத்தில் சிறப்புத் தொழுகை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மழை வேண்டி மேலப்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
மேலப்பாளையம் மண்டல அலுவலகம் அருகே உள்ள திடலில் நடைபெற்ற தொழுகையை மஸ்ஜிதுர் ரஹ்மான் இமாம் எஸ்.ஒய். செய்யது மஸ்ஊது நடத்தினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலாண்மைக் குழு தலைவர் எம். ஷம்சுல்லுஹா, உறுப்பினர் எம்.எஸ். சுலைமான், மாவட்டத் தலைவர் யூசுப் அலி, செயலாளர் சாதிக், பொருளாளர் நேஷனல் ஷாகுல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தொழுகையில் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.

வியாழன், 24 செப்டம்பர், 2009
மதிதா இந்துக் கல்லூரியில் புத்தகத் திருவிழா தொடக்கம்
திருநெல்வேலி மதிதா இந்துக் கல்லூரியில் புத்தகத் திருவிழா புதன்கிழமை தொடங்கியது.
கல்லூரி கலையரங்கில் நடைபெறும் இந்த கண்காட்சி மற்றும் விற்பனை தொடக்க விழாவிற்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) வி. பொன்னுராஜ் தலைமை தாங்கினார். கல்விச் சங்க பொருளாளர் தளவாய் ராமசாமி கண்காட்சியைத் தொடக்கி வைத்தார்.
இந்த கண்காட்சியில் பாரதி புத்தகாலயம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், கிழக்கு பதிப்பகம், ஹிக்கின் பாதம்ஸ், தமிழ்நாடு புக் ஹவுஸ், யாதுமாகி பதிப்பகம், விகடன் பதிப்பகம் ஆகிய வெளியீட்டாளர்களின் ஏராளமான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. கண்காட்சியில் இடம்பெற்றுள்ள சிற்றிதழ்கள் குறித்து பேராசிரியர் திருநீலகண்டன் அறிமுக உரையாற்றினார்.
இந்த கண்காட்சி வெள்ளிக்கிழமை வரை கல்லூரி வேலைநேரங்களில் நடைபெறும். பொதுமக்களும் கண்காட்சியைப் பார்வையிடலாம். முன்னதாக, கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் கருப்பையா வரவேற்றார். நூலகர் நீலகண்டன் நன்றி கூறினார்

புதன், 23 செப்டம்பர், 2009
சுவாமி நெல்லையப்பர் பிரதான சாலையில் அரசு மதுக் கடை அமைக்க எதிர்ப்பு
திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் பிரதான சாலை பகுதியில் அரசு மதுக் கடை அமைக்கக் கூடாது என, அனைத்து மோட்டார் தொழிலாளர்கள் பாதுகாப்பு நலச் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆட்சியரிடம் அச் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை அளித்த மனு: சுவாமி நெல்லையப்பர் கோயில் பிரதான சாலையில் உள்ள எம்.பி.எம். வணிக வளாகம் அருகே புதிதாக அரசு மதுக் கடை அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாகத் தெரிகிறது. அந்த இடத்தைச் சுற்றி 50-க்கும் மேற்பட்ட வாகனப் பழுதுநீக்கும் தொழில்நிறுவனங்கள் உள்ளன. அங்கே மதுக் கடை அமைத்தால் தொழிலாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடையூறு ஏற்படும்.
சில தினங்களுக்கு முன்பு அங்கு மதுக் கடை அமைக்க ஆரம்பக்கட்ட வேலைகள் நடைபெற்றன. அப்போது கழிவுகளை எரித்தபோது தீவிபத்து நேரிட்டது.
அருகே அரசின் உணவுப் பொருள் சேமிப்புக் கிடங்கும் உள்ளது. மேலும், தொழில் செய்யும் இடத்தில் மதுக் கடை அமைத்தால் அது பல்வேறு வகைகளில் இடையூறாக இருக்கும்.எனவே, தொழில் மற்றும் தொழிலாளர்களின் நலன்கருதி அரசு மதுக் கடைக்கு கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.
நெல்லையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொடியேற்று விழா
திருநெல்வேலி பேட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கொடியேற்று விழா நடைபெற்றது.
ரொட்டிக் கடை பஸ் நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த விழாவுக்கு, கட்சியின் மாநில துணைத் தலைவர் எஸ்.எம். கோதர்மைதீன் தலைமை வகித்து, கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.
இளைஞர் அணி நிர்வாகி க. அப்துல்ஸ்லாம் சுபேர், என். சம்சுதீன், முகம்மது கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் கட்சியின் நிர்வாகி அப்துல் ரஹ்மான் ஷிப்லி, வீ.ம. திவான் முகைதீன், சாகுல்ஹமீது, முஹம்மது அசன் உள்பட பலர் பங்கேற்றனர்

திங்கள், 21 செப்டம்பர், 2009
ஹஜ் பயணிகளுக்கு நாளை மறுநாள் தடுப்பூசி முகாம்
புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு பாளையங்கோட்டையில் செப். 23-ல் தடுப்பூசி போடப்படுகிறது.
தமிழ்நாடு ஹஜ் கமிட்டி மூலம் இந்த ஆண்டில் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு, பாளையங்கோட்டை மேட்டுத் திடலில் உள்ள காதிரி நகர் முஸ்லிம் அனாதை நிலைய வளாகத்தில் இம் மாதம் 23-ம் தேதி காலை 10 மணிக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை முஸ்லிம் அனாதை நிலைய தலைவர் எம். ஜமால் முகம்மது, செயலர் எம். ஷாகுல் அமீது மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

செப். 25-ல் தனியார் வேலைவாய்ப்பு சந்தை நிகழ்ச்சி
திருநெல்வேலியில் தனியார் வேலைவாய்ப்பு சந்தை நிகழ்ச்சி இம்மாதம் 25ஆம் தேதி நடைபெறுகிறது.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் வே.ப. சுஜயசேகரன் சனிக்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
தனியார் நிறுவனங்களில் ஏற்படும் காலியிடங்களுக்கு அவரவர் விருப்பத்திற்கு இணங்க தகுதியான நபர்களைத் தேர்வு செய்வதற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு சந்தை நிகழ்ச்சி மாதம்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் வேலை அளிப்போரும், வேலை வேண்டுவோரும் நேருக்கு நேர் சந்தித்து பேச வாய்ப்பு உள்ளது. இதனடிப்படையில் இம்மாதம் 25ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு வேலைவாய்ப்பு சந்தை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
தனியார் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து வரும் 24ஆம் தேதிக்குள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலருக்கு தெரிவிக்கலாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)