தவ்ஜீத் ஜமாத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தவ்ஜீத் ஜமாத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

முதல்வர் இல்லம் முற்றுகை-3000 தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் கைது


ராமநாதபுரத்தில் பள்ளிவாசல் ஒன்று சீல் வைக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் முதல்வரின் இல்லத்தை முற்றுகையிட முயன்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பை சேர்ந்த 3,000பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம் எஸ்.வி. பட்டின, சோழகன்பேட்டையில் உள்ள பள்ளிவாசலில் தொழுகை நடத்துவது தொடர்பாக இரு பிரிவு முஸ்லிம்கள் இடையே தகராறு ஏற்பட்டது.

இது தொடர்பாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தையால் பலன் ஏற்படாததையடுத்து கடந்த 31ம் தேதி மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளும், போலீஸாரும் பள்ளிவாசலை பூட்டி சீல் வைத்தனர்.

மேலும், அங்கு தொழுகைக்கு வந்திருந்தவர்களையும் கைது செய்யப்பட்டனர். இதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கடும் கண்டனம் தெரிவித்தது.

பள்ளிவாசல் சீல் வைக்கப்பட்டதைக் கண்டித்து, சென்னை கோபாலபுரத்தில் உள்ள முதல்வர் கருணாநிதியின் இல்லத்தை தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாநிலத் தலைவர் பக்கீர் முகமது, பொதுச் செயலாளர் அப்துல் அமீது ஆகியோர் தலைமையில் சுமார் 3,000 பேர் முற்றுகையிட முயன்றனர்.

நேற்று அண்ணா சாலை ஆயிரம் விளக்கு மசூதி அருகே திரண்ட அவர்கள் கோபாலபுரம் நோக்கி ஊர்வலமாகச் செல்ல முயன்றபோது போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

அவர்கள் பஸ்கள், வேன்களில் பல்வேறு சமுதாயக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

சனி, 15 ஆகஸ்ட், 2009

ரியாத்-தவ்ஹீத் ஜமாஅத் ரத்த தானம்


இந்திய சுதந்தர தினத்தை முன்னிட்டு சவூதி அரேபியா ரியாத் மாநாகரில் மாபெரும் ரத்த தான முகாம் நடைபெற்றது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலம், நேற்று இந்த முகாமை நடத்தியது.



இதில் தமிழர்கள் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இந்தியர்களும், எகிப்து, சூடான் நாட்டினரும் ஆர்வமுடன் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.


காலை 10 மணிக்கு துவங்கிய இம்முகாமில் 150க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர். சவூதி அரேபியாவில் ரத்த தானம் செய்வோரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு தொடர்ந்து முன்னிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2009

பள்ளிவாசலை பூட்டிய போலீஸ் - கண்டித்து தவ்ஜீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்

கடையநல்லூர்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி வாசலை பூட்டிய போலீசாரை கண்டித்து கடையநல்லூரில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள எஸ்பி பட்டணத்தில் தவ்ஹீத் ஜமாத்திற்கு சொந்தமான பள்ளி வாசல் உள்ளது. இந்த பள்ளி வாசலில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்தபோது அங்கு வந்த போலீசார் அனைவரையும் வெளியே அனுப்பி விட்டு பள்ளிவாசலுக்கு பூட்டு போட்டனர்.

இதனை கண்டித்தும் போலீசார் தவ்ஹீத் ஜமாத்திற்கு எதிராகவும், இஸ்லாமியர்களின் மற்றொரு பிரிவுக்கு சாதகமாக செயல்படுவதாக கூறி ஜமாத் சார்பில் கடையநல்லூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட துணை தலைவர் ஜபரூல்லா தலைமை வகித்தார். மேலாண்மை குழு உறுப்பினர்கள் அப்துல் நாசர், அப்பாஸ் அலி, நகர நிர்வாகிகள் முகமது கோரி, பாவா முன்னிலை வகித்தனர். மாநில மேலாண்மை குழு உறுப்பினர்கள் சைல்புல்லா பேசினார். சுலைமான் நன்றி கூறினார்.

LinkWithin

Blog Widget by LinkWithin