தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மேலப்பாளையம் 29-வது வார்டு செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட துணைத் தலைவர் கே.எஸ். ரசூல்மைதீன் தலைமை வகித்தார். வார்டு தலைவர் செய்யது அப்துல் காதர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. மேலப்பாளையம் அமீன்புரம் பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை உடனடியாக தீர்க்க வேண்டும்.
2. காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
3. மேலப்பாளையத்தில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கு புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
ஸ்ரீவை மக்களை பற்றியும் ஊர் நடப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்,உங்களுடைய கருத்துகளையும் பதிவு செய்யலாம்..
தமுமுக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 29 ஆகஸ்ட், 2009
மேலப்பாளையத்தில் தமுமுக வார்டு கூட்டம்
திங்கள், 10 ஆகஸ்ட், 2009
திருநெல்வேலி மேம்பாலத்தின் கீழ் கடைகள் அமைக்க அனுமதி: தமுமுக வலியுறுத்தல்
திருநெல்வேலி ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் கடையில் கடைகள் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வலியுறுத்தியுள்ளது.
இந்த அமைப்பின் மாவட்ட பொதுக் குழு கூட்டம் திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அமைப்பின் பொதுச் செயலர் எஸ். ஹைதர்அலி தலைமை வகித்தார். மாநில துணைச் செயலர் எஸ். மைதீன் சேட்கான், மாவட்டத் தலைவர் மைதீன்பாரூக், மாவட்டச் செயலர் ஐ. உஸ்மான்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
திருநெல்வேலி மாநகராட்சியில் பணிகள் தேக்கம் இல்லாமல் நடைபெறுவதற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரியை ஆணையராக நியமிக்க வேண்டும்.
பீடித் தொழிலாளர்களின் குறைகளை களைவதற்கு அவர்களுக்கு தனியாக நலவாரியம் அமைக்க வேண்டும். மாநகராட்சியின் வருவாயைப் பெருக்க திருநெல்வேலி சந்திப்பு திருவள்ளுவர் ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ்ப் பகுதியில் கடைகள் அமைக்க அனுமதி வழங்க வேண்டும்.
மாவட்டத்தில் வழிபாட்டுத் தலங்கள், கல்விக் கூடங்கள் ஆகியவை அருகே உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் அகற்றப்பட வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அமைப்பின் பொருளாளர் மிஸ்பாகி, துணைத் தலைவர் ரசூல்மைதீன், துணைச் செயலர் சுல்தான், சர்தார் அலிகான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

லேபிள்கள்:
செய்திகள்,
தமுமுக,
திருநெல்வேலி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)