தமிழக அரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழக அரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 18 ஜூன், 2011

ஸ்ரீவைகுண்டம் பள்ளிகளின் புதிய கல்வி கட்டண விபரங்கள்: தமிழக அரசு வெளியிட்டது!

நீதிபதி ரவிராஜ பாண்டியன் கமிட்டி, தனியார் பள்ளிகளுக்கான திருத்தப்பட்ட கல்வி கட்டணத்தை திங்களன்று வெளியிட்டது. அதன்படி ஸ்ரீவைகுண்டம் பள்ளிக்கூடங்களின் புதிய கல்வி கட்டணம் வருமாறு:-

1. ஹிந்து வித்யாலய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி :-

எல்.கே.ஜி : 2250

யூ.கே.ஜி : 2250

வகுப்பு 1 : 2850

வகுப்பு 2 : 2850

வகுப்பு 3 : 2850

வகுப்பு 4 : 2850

வகுப்பு 5 : 2850

வகுப்பு 6 : 3500

வகுப்பு 7 : 3500

வகுப்பு 8 : 3500

வகுப்பு 9 : 4150

வகுப்பு 10 : 4150

வகுப்பு 11 : 6150

வகுப்பு 12 : 6150


2. ST. ஜேம்ஸ் மெட்ரிக் பள்ளி :-

எல்.கே.ஜி : 2600

யூ.கே.ஜி : 2600

வகுப்பு 1 : 3200

வகுப்பு 2 : 3200

வகுப்பு 3 : 3200

வகுப்பு 4 : 3200

வகுப்பு 5 : 3200

வகுப்பு 6 : 4400

வகுப்பு 7 : 4400

வகுப்பு 8 : 4400

வகுப்பு 9 : 6300

வகுப்பு 10 : 6300

3. S T A பள்ளி :-

வகுப்பு 1 : 4600

வகுப்பு 2 : 4600

வகுப்பு 3 : 4600

வகுப்பு 4 : 4600

வகுப்பு 5 : 4600

வகுப்பு 6 : 5150

வகுப்பு 7 : 5150

வகுப்பு 8 : 5150

கடந்த மே மாதம் நீதிபதி கே.கோவிந்தராஜன் தலைமையிலான குழு 10,000 தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணத்தை நிர்ணைத்திருந்தது. அதனை ஏற்றுக்கொள்ளாத சுமார் 6400 பள்ளிகள் மேல் முறையீடு செய்திருந்தனர். அதனை தொடர்ந்தே தற்போது நீதிபதி ரவிராஜ பாண்டியன் கமிட்டி புதிய கட்டணங்களை வெளியிட்டுள்ளது.

வியாழன், 17 மார்ச், 2011

ஹஜ் விண்ணப்பம் ஏப்.30 தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தமிழ்நாடு ஹஜ் கமிட்டி அறிவிப்பு


இன்ஷா அல்லா இந்த 2011ஆம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புவோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என தமிழ்நாடு மாநில ஹஜ் குழு உறுப்பினரும் செயல் அலுவலருமான கா.அலாவுதீன் அறிக்கை கொடுத்துள்ளார்.

அறிக்கை விபரம் :விண்ணப்பங்களை புதிய எண் 13, பழைய எண் 7, மகாத்மா காந்தி சாலை, நுங்கம் பாக்கம், ரோசி டவர் 3வது தளத்தில் தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடம் நேற்று (16ம் தேதி) முதல் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பங்களை www.hajcommittee.com என்ற இணையதளம் மூலமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அடுத்த மாதம் 30ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்

வியாழன், 7 ஜனவரி, 2010

குடும்பத்தின் முதல் பட்டதாரிக்கு பிஇ-எம்எபிபிஎஸ் இலவச கல்வி


சட்டசபையி்ன் இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. ஆளுநர் பர்னாலாவின் உரையுடன் தொடங்கிய இக் கூட்டத்தில் அவரது உரையில் தமிழக அரசின் பல புதிய திட்டங்கள் இடம் பெற்றன.

குடும்பத்தின் முதல் பட்டதாரிக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் இலவச கல்வி அளிக்கப்படும். இதற்கு வருமான மற்றும் ஜாதி சான்றிதழ்கள் ஏதும் தேவையில்லை. வரும் கல்வியாண்டு முதல் அவர்கள் செலுத்த வேண்டிய கல்வி கட்டணம் முழுவதையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என்றார்.

தொடர்ந்து அவர் உரையாற்றிக் கெண்டுள்ளார்.

ஞாயிறு, 15 நவம்பர், 2009

வக்ஃப் வாரிய உறுப்பினராக தலைமை காஜி மீண்டும் நியமனம்

தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினராக தமிழக அரசின் தலைமை காஜி முப்தி சலாஹூதின் முகம்மது அயூப் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரவேற்றுள்ளது.மூன்று மாதங்களுக்கு முன்பு நீக்கப்பட்ட அவரை மீண்டும் வக்ஃப் வாரிய உறுப்பினராக நியமித்த தமிழக அரசுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநிலத் தலைவர் தாவூத் மியாகான் நன்றி தெரிவித்துள்ளார்.

திங்கள், 2 நவம்பர், 2009

நோக்கியா நிறுவனத்தில் சேர பிளஸ்-2 படித்த பெண்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்


தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை நோக்கியா நிறுவனத்திற்கு 1000 பெண்களை ஆப்ரேட்டர் டிரெய்னியாக தேர்வு செய்யும் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வருகிற 7-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது.

இம்முகாமில் கலந்து கொள்ள எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது. மாத ஊதியம் ரூ. 4400 மற்றும் இலவச உணவுடன் ரூ. 10000-க்கான உணவுப்படி, இலவச மருத்துவ வசதி, 60 கி.மீ. சுற்றளவிற்கு இலவச போக்குவரத்தும் அளிக்கப்படும்.

பிளஸ்-2 வில் 60 சதவீத மதிப்பெண் பெற்ற 18 முதல் 23 வயதிற்குட்பட்ட பெண்கள் தங்கள் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை அன்றே வழங்கப்படும்.

சனி, 31 அக்டோபர், 2009

திருச்செந்தூர் இடைத்தேர்தல் ஜனவரி 30-ந் தேதிக்குள் நடத்தப்படும் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா தகவல்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

திருச்செந்தூர் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணன் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால் சட்டசபையில் திருச்செந்தூர் தொகுதிக்கான இடம் 31-7-2009 முதல் காலியாக உள்ளது. இந்த காலி இடத்துக்கு 30-1-2010க்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேர்தல் ஏற்பாடுகள் தொடங்கி விட்டது.

தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டரிடம், திருச்செந்தூர் தொகுதி இடைத்தேர்தல் ஏற்பாடுகளை செய்ய உத்தர விடப்பட்டுள்ளது. தேர்தல் பணியாளர்கள் மற்றும் தகவல் தொடர்புக்கான எல்லா ஏற்பாடுகளையும் விரைவில் செய்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் தொகுதியில் உள்ள பதற்றமான ஓட்டுச்சாவடிகள் பற்றிய கணக்கெடுப்பை மாவட்ட தேர்தல் அதிகாரி நடத்தி உள்ளார். ஓட்டுப்பதிவுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இடைத்தேர்தலை நடத்துவது தொடர்பாக மாவட்ட கலெக்டர் அறிக்கை கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் திருச்செந்தூர் தொகுதி வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் சமீபத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்த போது ஓட்டுப்பதிவை முழுமையாக இணையத்தளத்தில் காட்டினோம். அதே போன்று திருச்செந்தூர் தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவையும் இணையத் தளத்தில் நேரடியாக காணலாம்.

ஓட்டுப்பதிவு நிர்வாக வசதிக்காக எஸ்.எம்.எஸ். வசதியும் பயன்படுத்தப்படும். மத்திய தேர்தல் கமிஷன் திருச்செந்தூர் தொகுதி இடைத்தேர்தல் தேதியை அறிவித்ததும் மற்ற பணிகள் தொடங்கும்.

ஓட்டுப் பதிவுக்கு தேவையான பொருட்களை தயாராக வைத்திருக்க உத்தர விடப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் மற்றும் வேட்பாளர்பட்டியலை வெளியிட தேவையான ஏற்பாடுகளை செய்து கொள்ளவும் அறி வுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த பாராளுமன்றத்தேர்தலின் போது தேர்தல் கமிஷன் மூலம் பெங்களூர் “பெல்” நிறுவனத்திடம் இருந்து மின்னணு எந்திரங்கள் வாங்கப்பட்டன. திருச்செந்தூர் இடைத்தேர்தலுக்கு அந்த மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்படும்.

வாக்காளர் பட்டியலை நிர்வாக வசதிக்காக ஒரே சர்வரில் கொண்டு வந்துள்ளோம். இதன் மூலம் போலி வாக்காளர்களை நீக்க முடியும். இது வரை 12 முதல் 15 சதவீத போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

வாக்காளர் பட்டியலை வீடு வீடாக சென்று சரி பார்த்து 100 சதவீதம் மிகச் சரியான வாக்காளர் பட்டியலை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெயர் இட மாற்றம் மற்றும் பெயர் நீக்குவது போன்ற பணிகள் நடத்தி முடிக்கப்படும். இந்த பணிகள் அடுத்த மாதம் (நவம்பர்) 2-வது வாரத்தில் தொடங்கி நடைபெற உள்ளது.

மின்னணு எந்திரங்களை ஓட்டுச்சாவடிக்கு கொண்டு செல்லும் போது, பெட்டிகளில் ஜி.பி.எஸ்.கருவி பொருத்தப்படும். இதன் மூலம் மின்னணு எந்திரங்கள் எங்கு உள்ளது? எந்த பகுதியில் சென்று கொண்டிருக்கிறது என்பத கண்காணித்து உறுதி செய்து கொள்ள முடியும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் நரேஷ்குப்தா கூறி உள்ளார்.

திங்கள், 19 அக்டோபர், 2009

இனி ஆன்லைனில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை தமிழிலும் பெறலாம்

: சென்னை மாநகராட்சி எல்லைக்குள் பிறப்பு , இறப்பு சான்றிதழ்களை இனிமேல் ஆன்லைனில் தமிழிலேயே பெற முடியும். நவம்பர் மாதம் முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.

கடந்த ஆண்டு பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை ஆன்லைனிலேயே பதிவு செய்து பெறும் நடைமுறையை மாநகராட்சி ஆரம்பித்தது.

இந்த நிலையில் தற்போது தமிழிலேலேய சான்றிதழ் பெறும் முறை நவம்பர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது. இதுதொடர்பான தகவல் பதியும் நடைமுறைகள் அக்டோபர் மாதத்திற்குள் முடிவடையும். நவம்பர் மாதம் இந்த புதிய முறை அமலுக்கு வரும் என்று மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கோனி கூறியுள்ளார்.

முன்பு ஆங்கிலத்தில் மட்டும் சான்றிதழ்கள் தரப்பட்டு வந்தன. ஆனால் அதில் ஏராளமான ஸ்பெல்லிங் மிஸ்டேக்குள் இருப்பதாக புகார் கள் வந்தன. இதையடுத்து ஆன்லைனிலேயே பிழைகளைத் திருத்திக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து கிட்டத்தட்ட 9488 பேர் பிறப்பு சான்றிதழ் பிழை திருத்தத்திற்காகவும், 1458 பேர் இறப்பு சான்றிதழ் பிழை திருத்தத்திற்காகவும் இந்த வாய்ப்பை பயன்படுத்தினர். இதையடுத்தே தமிழிலும் சான்றிதழ்களை வழங்க தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது மாநகராட்சி டேட்டா பேஸில் 50 லட்சம் பிறப்பு தகவல்களும், 25 லட்சம் இறப்புத் தகவல்களும் இடம் பெற்றுள்ளன. தினசரி 5000 பேர் பிறப்பு, இறப்பு சான்றிதழ் கோரி விண்ணப்பித்து வருகின்றனர்.

மாநகராட்சியின் இணையதளம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை 5.31 லட்சம் ஹிட்டுகள் கிடைத்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை பிறப்பு, இறப்பு சான்றிதழ் கோரி விண்ணப்பித்தவர்கள்தான்.

இதுவரை 2.97 லட்சம் பிறப்பு சான்றிதழ்களும், 78,000 இறப்பு சான்றிதழ்களும் டவுன்லோட் செய்யப்பட்டுள்ளன.

தமிழ் எழுத்துக்களுக்காக யுனிகோட் எழுத்துரு பயன்படுத்தப்படவுள்ளதாம். பெயர், பாலினம், பிறப்பு தேதி, பிறப்பிடம், தந்தை- தாய் பெயர்கள், நிரந்தர முகவரி, குழந்தை பிறந்தபோது பெற்றோர் இருந்த முகவரி, பதிவுத் தேதி, விநியோக தேதி ஆகியவை தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இருக்கும்.

இந்த நடைமுறை அமலுக்கு வந்த பின்னர் மருத்துவமனைகள், தங்களது மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தை கள் குறித்த விவரங்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ளீடு செய்யலாம்.

தற்போது பிறப்பு விவரங்களைப் பதிவு செய்து கொள்ள மாநகரில் உள்ள 500க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சிறப்பு லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் ஆகியவை தரப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்தி நேரடியாக சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் பிறப்பு குறித்த விவரங்களை பதிவு செய்ய வேண்டும்

புதன், 14 அக்டோபர், 2009

2010ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள்: தமிழக அரசு அறிவிப்பு

2010ஆம் ஆண்டுக்கான மாநில அரசு அலுவலகங்கள், கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட வணிக வங்கிகளுக்கான அரசு பொது விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

2010ஆம் ஆண்டு மொத்தம் 24 நாட்கள் அரசு பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.


1. ஆங்கில வருடப் பிறப்பு 01-01-2010 வெள்ளிக்கிழமை

2. தமிழ் புத்தாண்டு, பொங்கல் 14-01-2010 வியாழக்கிழமை

3. திருவள்ளூவர் தினம் 15-01-2010 வெள்ளிக்கிழமை

4. உழவர் திருநாள் 16-01-2010 சனிக்கிழமை

5. குடியரசு தினம் 26-01-2010 செவ்வாய்க்கிழமை

6. மிலாடி நபி 27-02-2010 சனிக்கிழமை

7. தெலுங்கு வருடப் பிறப்பு 16-03-2010 செவ்வாய்க்கிழமை

8. மகாவீர் ஜெயந்தி 28-03-2010 ஞாயிற்றுக்கிழமை

9. வங்கி முழுஆண்டு கணக்கு 01-04-2010 வியாழக்கிழமை

10. புனித வெள்ளி 02-04-2010 வெள்ளிக்கிழமை

11. அம்பேத்கர் பிறந்தநாள் 14-04-2010 புதன்கிழமை

12. மே தினம் 01-05-2010 சனிக்கிழமை

13. சுதந்திர தினம் 15-08-2010 ஞாயிற்றுக்கிழமை

14. கிருஷ்ண ஜெயந்தி 01-09-2010 புதன்கிழமை

15. ரம்ஜான் 10-09-2010 வெள்ளிக்கிழமை

16. விநாயகர் சதுர்த்தி 11-09-2010 சனிக்கிழமை

17. வங்கி அரையாண்டு கணக்கு 30-09-2010 வியாழக்கிழமை

18. காந்தி ஜெயந்தி 02-10-2010 சனிக்கிழமை

19. ஆயுத பூஜை 16-10-2010 சனிக்கிழமை

20. விஜயதசமி 17-10-2010 ஞாயிற்றுக்கிழமை

21. தீபாவளி 05-11-2010 வெள்ளிக்கிழமை

22. பக்ரீத் 17-11-2010 புதன்கிழமை

23. முகரம் 17-12-2010 வெள்ளிக்கிழமை

24. கிறிஸ்துமஸ் 25-12-2010 சனிக்கிழமை

இத்தகவல் தமிழக தலைமைச் செயலாளர் கே.எஸ். ஸ்ரீபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனி, 19 செப்டம்பர், 2009

ஜனவரி 21, 22, 23,24 தேதிகளில் உலகத் தமிழ் மாநாடு - கருணாநிதி

சென்னை: கோவையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகத் தமிழ் மாநாடு ஜனவரி மாதம் 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு நடைபெறும் என முதல்வர்கருணாநிதிஅறிவித்துள்ளார்.

சென்னையில் நடந்த கலெக்டர்கள் மாநாட்டின்போது உலகத் தமிழ் மாநாடு கோவையில் பிரமாண்டமான அளவில் நடத்தப்படும் என அறிவித்தார் முதல்வர்கருணாநிதி

இதையடுத்து இன்று அமைச்சர்களுடன் முதல்வர்கருணாநிதிஉலகத் தமிழ் மாநாடு குறித்து ஆலோசனை நடத்தினார்.

இதில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி , வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி, பொங்கலூர் பழனிச்சாமி, மத்திய அமைச்சர் ஆ.ராசா, தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி, நிதித்துறை முதன்மைச் செயலாளர் ஞானதேசிகன், சுற்றுலாத்துறை செயலாளர் இறையன்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதி , கோவையில் 9வது உலகத் தமிழ் மாநாடு, 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 21, 22, 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தெரிவித்தார்.

சனி, 12 செப்டம்பர், 2009

முதல்வர் கருணாநிதி மற்றும் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்புகள் என்னென்ன?

சென்னை: முதல்வர் கருணாநிதி மற்றும் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரது கட்டுப்பாட்டின் கீழ் வரும் பணிகள், பொறுப்புகள் என்ன என்பது குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:

முதல்வரின் பொறுப்புகள்

1. அமைச்சரவை கூட்ட ஏற்பாடுகள்,

2. கொடியேற்று விழா,

3. இந்திய ஆட்சிப் பணி,

4. ஓய்வூதியம்,

5. மாநில பாதுகாப்பு,

6. அரசியல் குற்றங்கள்,

7. அமைச்சர்களுக்கான பொறுப்புகள் ஒதுக்கீடு,

8. அமைச்சர்கள் நியமனம்,

9. அரசு விமானம் மற்றும் ஹெலிகாப்டர்,

10. சம்மன்,

11. சட்டமன்றத்தை கூட்டுதல் மற்றும் கலைத்தல்,

12. சட்டமன்ற விதிகள்,

13. அமைச்சர் அலுவலக ஊழியர்கள்,

14. அரசியல் குற்ற நடவடிக்கைகள்,

15. சாதி, மத பிரச்சினைகள்,

16. குண்டர் சட்டம், பயங்கரவாத செயல்கள் தடுப்பு,

17. கள்ளச்சாராயம், போதை மருந்துகள்,

18. வனக்குற்றங்கள்,

19. விபசாரம், மணல் கடத்தல், திருட்டு வீடியோ போன்ற குற்றத் தடுப்பு,

20.வெளி விவகாரங்கள்,

21. இந்திய பாதுகாப்பு, பொது அமைதி, கைதிகள் மற்றும் குற்றவாளிகள் பரிமாற்றம்,

22. ராணுவம் மற்றும் முன்னாள் ராணுவத்தினர், வீரதீர விருதுகள், முப்படையின் பணிகள்,

23. உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம், கவுரவ விருதுகள், பிற மாநில உறவுகள்,

துணை முதல்வரின் பொறுப்புகள்

1. இந்திய குடிமைப் பணி அதிகாரிகள் தவிர்த்த சிவில் பிரதிநிதிகள்,

2. பொது ஆலோசனைக்குழு, குழுக்கள் மற்றும் கருத்தரங்குகள்,

3. மாவட்ட நீதிபதிகள், கீழ்நிலை பணியாளர்கள்,

4. தினக்கூலி ஊழியர் பணிவரன்முறை, குற்ற மேல்முறையீடுகள்,

5. மாவட்ட வருவாய் அதிகாரிகள், பொதுத் துறை பிரிவு அதிகாரிகள்,

6. உதவி பிரிவு அதிகாரிகள், உதவியாளர்கள், சுருக்கெழுத்தர்-தட்டச்சர்கள்,

7. கருணை அடிப்படை பணி நியமனம், தியாகிகள் ஓய்வூதியம்,

8. அரசு விருந்தினர் இல்லம், விடுமுறைகள், மனித உரிமைகள்,

10. சென்னை ஐகோர்ட்டு, மதுரை ஐகோர்ட்டு கிளை ஆகியவற்றுக்கு அட்வகேட் ஜெனரல், சட்ட அதிகாரிகள் நியமனம், அவர்களுக்கான சிறப்பு கட்டணம்,

11. சட்டப்பேரவை செயலகம், அரசு ஊழியர்கள் மீதான சட்ட நடவடிக்கைகள், எந்த துறைக்கும் ஒதுக்கப்படாத பொதுவான பணிகள், ரகசிய அறிக்கைகள்,

12. அரசியல் மற்றும் நிர்வாகம் பற்றிய முக்கியத்துவம் வாய்ந்த அறிக்கைகள், தலைமைச் செயலகம்,

13. பொதுத்துறை (தபால்), மத்திய ஆவணப் பிரிவு, நூலகம், மாநில விழாக்கள், நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள கட்டிடங்கள், பொது சொத்து பாதுகாப்பு,

14. முப்படை அதிகாரிகள் வருகை, சிவில் பாதுகாப்பு சட்டங்கள்,

15. ராணுவத்திற்கான நில ஆர்ஜிதம்,

16. மக்கள் தொகை கணக்கெடுப்பு, பதவியேற்பு விழாக்கள்,

17. சிறப்பு தபால்தலைக்கான பரிந்துரை, வெளிநாட்டவர், ரெயில்வே நிலங்கள் அதிகாரவரம்பு,

18. வெளிநாட்டு தூதர்கள், இந்திய, வெளிநாட்டு போர்ப்படை கப்பல்கள், பிற மாநில கவர்னர்கள், உயர் அதிகாரிகள்.

முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகிய இருவரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பொறுப்புகள்:

1. வெளிநாட்டு தூதரகங்கள்,

2. வெளிநாட்டு தொடர்புகள்,

3. வெளிநாட்டு முக்கிய பிரமுகர்கள், தூதர்கள், வர்த்தக பிரதிநிதிகள்,

4. வெளிவிவகாரம் தொடர்புடைய கைதிகள், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் வருகை.

இவ்வாறு அரசாணை கூறுகிறது.

வெள்ளி, 11 செப்டம்பர், 2009

அண்ணா நூற்றாண்டு-5 ரூபாய் சிறப்பு நாணயம் வெளியீடு


தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் நடக்கும் அண்ணா நூற்றாண்டு விழாவில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கலந்து கொள்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் அண்ணாவின் உருவ படம் பொறித்த ரூ. 5 நாணயத்தை பிரணாப் வெளியிடுகிறார்.

முன்னாள் தமிழக முதல்வர் அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் வரும் 15ம் தேதி சென்னையில் தமிழக அரசு சார்பில் பிரமாண்டமாக கொண்டாடப்பட இருக்கிறது.

விழாவுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். நிதி அமைச்சர் அன்பழகன் முன்னிலையும், செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி வரவேற்புரையும் நிகழ்த்துகின்றனர்.

இந்த விழாவுக்கு ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மற்றும் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரை சிறப்பு விருந்தினராக அழைக்க தமிழக அரசு திட்டமிட்டிருந்தது.

மேலும், இந்த விழாவின் போது ராஜசேகர ரெட்டி யிடம் பேசி பாலாற்றுக்கு குறுக்கே அணை கட்டுவதை தடுக்க முயற்சி செய்தது. ஆனால், எதிர்பாராதவிதமாக ராஜசேகர ரெட்டி சமீபத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்ததால் அது நிறைவேறாமல் போனது.

இதையடுத்து தற்போது பிரணாப் முகர்ஜி மட்டும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். அவர் விழாவில் அண்ணாவின் உருவ படம் பொறித்த ரூ. 5 நாணயத்தை வெளியிட இருக்கிறார்.

இதை தொடர்ந்து துணை முதல்வர் ஸ்டாலின் அண்ணாவின் இணையதளத்தை துவக்க வைத்து, அவரது நூல்களை வெளியிடுகிறார்.

இந்த விழாவில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் , நிதித்துறை இணை அமைச்சர் பழனிமாணிக்கம், மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி ஆகியோர் சிறப்புரை நிகழ்த்துகின்றனர்

வியாழன், 10 செப்டம்பர், 2009

புதுப் பொலிவுடன் பளிச்சிடும் தமிழக அரசின் இணையதளம்

தமிழக அரசின் இணையதளம் புதுப் பொலிவுடன் பளிச் எனக் காணப்படுகிறது.

பல்வேறு பொதுமக்கள் சேவைப் பிரிவும் இதில் தற்போது இடம் பெற்றுள்ளது. உட்கார்ந்த இடத்திலிருந்தே பல சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள இந்த தளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது.

பிறப்பு, இறப்பு சான்று பெறுவதற்கான விண்ணப்பம், ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிப்பது ஆகியவற்றுக்கு தனித் தனியாக அரசுத் துறைகளின் இணையதளத்திற்குப் போகாமல் இந்தத் தளத்திலேயே அத்தனைத் துறைகளுக்கும் ரவுண்டு அடித்து விட்டு வர முடியும்.

தமிழ் , ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் இணையதளம் அமைந்துள்ளது.

நில உரிமை விவரங்கள் (Encumbarance Certificate), பத்திரப் பதிவு சேவைகள் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டுள்ளன.

பிறப்பு, இறப்பு சான்றிதழுக்கு விண்ணப்பம், இருப்பிடச் சான்று, ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம், நேட்டிவிட்டி சான்றிதழ் ஆகியவற்றுக்கு விண்ணப்பக்கத் தேவையான படிவங்களை டவுன்லோட் செய்து கொள்ளும் வசதியும் இடம் பெற்றுள்ளது.

அரசின் நலத் திட்டங்கள் உள்ளிட்ட விஷயங்களும் இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன. தமிழக அரசின் அன்றைய முக்கிய நிகழ்வு குறித்த புகைப்படங்கள், பத்திரிக்கை செய்திக் குறிப்புகள் உள்ளிட்டவையும் இடம் பெற்றுள்ளன.

மற்றபடி மாவட்டங்கள் குறித்த விவரங்கள், சென்னை மாநகராட்சி உள்ளிட்டவை குறித்த பழைய விவரங்களும் இடம் பெற்றுள்ளன.


வெள்ளி, 4 செப்டம்பர், 2009

தமிழகத்தில் இன்று அரசு விடுமுறை

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மறைவையொட்டி தமிழகத்தில் வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:

ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி விமான விபத்தில் மறைந்த செய்தி கேட்டு, தமிழக மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்தத் துயரத்தில் தமிழகம் முழுவதும் பங்கு பெறுகிறது என்பதற்கு அடையாளமாக வெள்ளிக்கிழமை அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

இந்த விடுமுறை அறிவிப்பினையொட்டி வணிக நிறுவனங்கள், தனியார் தொழில் நிறுவனங்கள் ஆகிய அனைத்திற்கும் விடுமுறை அளித்து, இந்த துயரத்தில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என கருணாநிதி தெரிவித்துள்ளார்.

வங்கிகள்: இந்த விடுமுறை அறிவிப்பினால், தமிழகத்திலுள்ள அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளும் வெள்ளிக்கிழமை மூடப்பட்டிருக்கும்.

நீதிமன்றங்கள்: ராஜசேகர ரெட்டியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நீதிமன்றங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை உயர்நீதிமன்றம், மதுரை உயர்நீதிமன்றக் கிளை மற்றும் தமிழகத்திலுள்ள சார்பு நீதிமன்றங்கள் வெள்ளிக்கிழமை இயங்காது. அதற்கு பதிலாக டிசம்பர் 19-ம் தேதி சனிக்கிழமை நீதிமன்றங்கள் இயங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

சனி, 29 ஆகஸ்ட், 2009

தமிழ்நாட்டில் உலமாக்கள், பணியாளர் நல வாரியம் அமைக்கப்பட்டது

தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கடந்த 2009, பிப்ரவரி 1-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு உலமாக்கள் - உமராக்கள் மாநாட்டை நடத்தியது.

தமிழகம் முழுவதிலுமிருந்து சங்கைக்குரிய உலமா பெருமக்கள், இமாம்கள், பள்ளிவாசல் தர்ஹா பணியாளர்கள், ஜமாஅத் தலைவர்கள் பல்லாயிரக்கணக்கில் பங்கேற்ற இம்மாநாட்டில் மாண்புமிகு அமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

தமிழ்நாட்டில் உலமாக்கள், பணியாளர் நலவாரியம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இம்மாநாட்டில் பிரதான தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. இக்கோரிக்கை முதல்வர் கலைஞர் அவர்கள் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற உறுதுணையாக இருப்பேன் என அம்மாநாட்டில் உரையாற்றிய மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசு வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது

2009-2010ம் ஆண்டிற் கான நிதி நிலை அறிக்கை யில் மாநிலத்தில் உள்ள பள்ளிவாசல்கள், தர்காக் கள் மற்றும் மத்ரஸாக் களில் உள்ள உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக் கென உலமாக்கள் மற்றம் பணியாளர்கள் நல வாரி யம் ஒன்று அமைக்கப்ப டும் என்று அறிவிக்கப்பட் டது.

மேற்காணும் அறிவிப் பின்படி தமிழ்நாட்டி லுள்ள பள்ளிவாசல்கள், தர்காக்கள் மற்றும் மதர ஸாக்களில் உள்ள உலமாக் கள் மற்றும் பணியாளர் களுக்கென உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைத்து அரசு ஆணையிடுகிறது.

இந்நலவாரியத்தில் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மதர ஸாக்களில் பணிபுரி யும் ஆலிம்கள், பேஷ் இமாம்கள், அரபி ஆசிரி யர்கள்ஃஆசிரியைகள், மோதினார் கள், பிலால்கள் மற்றும் இதர பணியாளர் கள், தர்காக்கள் மற்றும் அடக்கஸ்தலங்கள், தைக் காக்கள், ஆஷ_ர்கானாக் கள் மற்றும் முஸ்லிம் அனாதை இல்லங்கள் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் முஜாவர் உள் ளிட்ட பணியாளர்களை உறுப்பினர்களாகச் சேர்க்க லாம்.

இவ்வாறான நிறுவ னங்களில் பணிபுரியும் 18 வயது நிரம்பிய 60 வயதுக்கு மேற் படாத பணியாளர் கள் பதிவு பெற தகுதியு டையவர்கள் என அரசு ஆணை யிடுகிறது.

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரி யத்திற்கு சுற்று சூழல் மற்றும் வக்ஃபு அமைச்சர் மைதீன் கான் தலைவராக நியமனம் செய்யப்படுகி றார். இவ்வாரியத்தில் அலு வல் சார்ந்த உறுப்பினர் களாகக் கீழ்க்கண்ட அலு வலர்கள் நியமிக்கப்படு கிறார்கள்.
அரசு சார்ந்த உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறு பான்மை அரசு நலத்துறை செயலாளர், நிதித்துறை முதன்மைச் செயலாளர், வருவாய்த்துறை முதன் மைச் செயலாளர், சமூக நலத்துறை முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர், உயர்கல்வித் துறை முதன்மைச்செயலா ளர், தொழிலாளர் நலத் துறை ஆணையாளர், சிறு பான்மை நலன் ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நலன் ஆணையர், தமிழ் நாடு வக்ஃப் வாரிய முதன்மை செயல் அலுவ லர் ஆகியோர் அரச சார்ந்த உறுப்பினர்களாகவும்.

அலுவல் சாரா உறுப்பினர்களாக கீழ்க்கண்டவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்

தமிழ்நாடு மாநில ஜமா அத்துல் உலமா சபை தலைவரும் லால்பேட்டை மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரி பேராசிரியருமான மௌலவி ஏ.இ.எம். அப்துர் ரஹ்மான்,

மாநில பொதுச் செயலாளரும் மாநில பொருளா ளர் மௌலவிஎஸ்.எம். முஹம்மது தாஹா. மாநில ஜமாஅத்துல் உலமா சபை கௌரவ தலைவரும் வீரசோழன் ஜாமிஆ கைராத்துல் இஸ்லாம் அரபிக் கல்லூரி முதல்வருமான மௌலவி ஓ.எம். அப்துல் காதிர்,

திருநெல்வேலி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவரும் அல்ஹசனாத் துல் ஜாரியா அரபிக் கல்லூரி முதல்வருமான மௌலவி டி.ஜே.எம். சலாஹ{த்தீன்.

வேலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை செயலாளரும் வாணியம்பாடி மஃதினுல் உலூம் அரபிக்கல்லூரி முதல்வருமான மௌலவி முஹம்மது வலியுல்லாஹ், மாநில துணைப் பொதுச் செயலாளரும் பாபநாசம் ஆர்.டி.பி. காலேஜ் அரபித் துறை பேராசிரியருமான மௌலவி தேங்கை ஷர்புத்தின்.

சென்னை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவரும் மண்ணடி மஸ்ஜிதே மஃமூர் தலைமை இமா மான மௌலவிஓ.எஸ்.எம். முஹம்மது இல்யாஸ், மாநில தகவல் தொடர்பு நிறுவனர் சிதம்பரம் மௌ லவி முஹம்மது இஸ்மா யில் நாஜி, குடியாத்தம் தாருல் உலூம் சயீதிய்யா அரபிக் கல்லூரி நிறுவனர் மௌலவி முஹம்மது அய்ய+ப்,

தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை செயலாள ரும், மன்பவுஸ் ஸலாஹ் அரபிக் கல்லூரி பேராசிரி யருமான மௌலவி எஸ். முஜீபுர் ரஹ்மான்.

தமிழ்நாடு பிலால்கள் சங்கம் தலைவர் ஏ. முஹம்மது ய+னுஸ், தமிழ் நாடு இஸ்லாமிய ஆலயப் பணி உடல் உழைப்பு பிலால்கள் நல சங்கம் மாநில பொதுச் செயலா ளர் முஹம்மது அலி பேக்.

தமிழ் மாநில இமாம்கள் பேரவை மௌலவி எம்.ஜி. ஷிஹாபுத்தீன், சென்னை மந்தைவெளி தலைமை இமாம் மௌலவி ஜி.கே. முஹம்மது இல்யாஸ் ரியாஜி ஆகியோர் உறுப்பி னர்களாக நியமிக்கப்படுகின்றனர்.

உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்களின் சமூக, கல்வி மற்றும் பொரு ளாதார மேம்பாட்டிற் கான அரசு செயற்படுத்தும் பல்வேறு திட்டங்களின் செயலாக்கத்தை கண் காணித்து இப்பிரிவினரின் மேம்பாட்டினை உறுதி செய்ய தக்க ஆலோசனை களை இவ்வாரியம் அரசுக்கு வழங்கும்.

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரி யத்தில் உறுப்பினர்களைச் சேர்த்து வாரிய உறுப்பினர் களுக்கு அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு நல உதவிகளும் வழங்கப்பட வேண்டும் என்று முடிவுச் செய்து உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர் கள் சேர்க்கை மற்றும் உதவி தொகைகள் வழங்கு வதற்கான வழி முறைகள் குறித்து அரசு கீழ்க்கண்ட வாறு ஆணையிடகிறது.

அமைப்பு சாரா தொழி லாளர் நல வாரியத்தில் பதிவு செய்தள்ள உறுப்பி னர்களுக்கு வழங்கப்படும் கீழ்க்கண்ட பல்வேறு நல உதவிகள் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர் களாக பதிவு செய்த கொள் பவர்களுக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும் வழங் கப்படும்:

விபத்து ஈட்டுறுதி திட்டம் விபத்தினால் மரணம் ஏற்பட்டால் ரூ. 1லட்சம் உதவித் தொகை.
விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப ரூ.10ஆயி ரம் முதல் ரூ.1லட்சம் வரை. இயற்கை மரணத்திற் குள்ளானவர் குடும்பத் திற்கு உதவித் தொகை ரூ. 15ஆயிரம்.

கல்வி உதவித் தொகை 10-ம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைக்கு ஆயிரம் ரூபாய்,
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க ளுக்கு ஆயிரம் ரூபாய், 11-ம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைக்கு ஆயிரம் ரூபாய், 12-ம் வகுப்பு படித்து வரும் பெண் குழந் தைக்கு ரூ.1,500 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு ரூ.1,500, முறையான பட்டப் படிப்புக்கு ரூ.1,500, மாணவர் இல்ல வசதியு டன் முறையான பட்டப் படிப்புக்கு ரூ.1,750, முறை யான பட்ட மேற்படிப் புக்கு ரூ.2 ஆயிரம், மாண வர் இல்ல வசதியுடன் முறையான பட்ட மேற்ப டிப்புக்கு ரூ. 3 ஆயிரம்.

தொழிற்கல்வி பட்டப் படிப்புக்கு ரூ. 2ஆயிரம், மாணவர் இல்ல வசதியு டன் தொழிற் கல்வி பட் டப்படிப்புக்கு ரூ.4 ஆயிரம், தொழிற் கல்வி மேற்படிப் புக்கு ரூ.4 ஆயிரம், மாண வர் இல்ல வசதியுடன் தொழிற் கல்வி பட்ட மேற்படிப்பு ரூ. 6 ஆயிரம், ஐ.டி.ஐ. அல்லது தொழிற் பயிற்சி படிப்புக்கு ரூ.1,000, மாணவர் இல்ல வசதியு டன் ஐ.டி.ஐ. அல்லது பல் தொழில் பயிற்சி படிப்புக்கு 1,200, திருமண உதவித் தொகை ரூ.2ஆயிரம்.

மருத்துவ உதவித் தொகை மகப்பேறு மாதம் ஒன்றுக்கு ரூ.1000 வீதம் மொத்தம் 6000 ரூபாய், கருச்சிதைவு, கருக்கலைப்பு ரூ.3000, மூக்குக் கண்ணாடி செலவுத் தொகையை முதியோர் ஓய்வ+தியம் மாதந்தோறும் ரூ.400.

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தின் உறுப்பினர்-செயலராக தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் முதன் மைச் செயல் அலுவலர் நியமனம் செய்யப்படுகி றார்.

18வயது முடிவடைந்த, அனால் 60 வயது முடி வடையாத ஒவ்வொரு வரும் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய தகுதி பெற்ற வராவார். தற்போது நடை முறையில் உள்ள உலமா ஓய்வ+தியத் திட்டத்தின் கீழ் ஓய்வ+தியம் பெறுபவர் களுக்கு இந் நலவாரியத் தில் முதியோர் ஓய்வ+தியம் வழங்கப்படக் கூடாது.

உறுப்பினர் பதவிக்குரிய விண்ணப்பங்களை தகுதி வாய்ந்த நபருக்கு வழங்கி அவர்களிடமிருந்து பெறப் பட்ட உறுப்பினர் சேர்க்கைவிண்ணப்பங் களைத் தொகுத்து, உறுப் பினர்களுக்கு அடையாள அட்டைகளை வக்ஃபு காண்காணிப்பாளர்கள்ஃவக்ஃபு ஆய்வாளர்களின் உதவியுடன் மாவட்ட பிற் படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின லந அலவலர் வாங்குவார். நிதி உதவி வழங்கக் கோரும் விண்ணப்பங்களை ஆய்வு செய்து தகுதியான உறுப் பினர்களுக்கு நல உதவி களை மாவட்ட பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மூலம் வழங்கப் படும்.

வாரிய உறுப்பினர் சேர்க்கைக்குரிய விண் ணப்ப படிவம், வாரியத் தின் விதிமுறைகள், வாரி யத்தின் இதர செயல்பாடு கள் முதலிய அனைத்திற் கும் தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தின் மூலம் நடைமுறைப்படுத் தப்படும் இதர அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் பின்பற்றப் படும் அனைத்து நடை முறைகளும் மேற்கொள் ளப்படும்.
பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கு வதற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு தேவையான நிதி உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரி யத்தின் நிதியிலிருந்து வழங் கப்படும்.
மேற்காணும் நிதி உதவி கள் யாவும் தகுதியான நபர் களுக்கு மட்டுமே அளிக் கப்படும்.

அரசுஃஅரசு சார்ந்த மற்றும் அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிந்து அந்நிறவனங் களில் வழங்கப்படும் அனைத்து சலுகைகளை யும் பெறும் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் இத்திட்டங்களின் கீழ் பயன்களை பெற இயலாது. வேறு நல வாரியங்களில் உறுப்பினராக உள்ள உல மாக்கள் மற்றும் பணியா ளர்கள் ஏதேனும் ஒரு நல வாரியத்தின் மூலம் மட்டும் தான் நலத்திட்ட உதவி களைப் பெற தகுதியுடைய வர் ஆவார்.

மேற்குறிப்பிட்டுள்ள பணிகள் மாவட்டங்களில் சிராக நடைபெறுவதைக் கண்காணிக்கவும் ஆய்வு செய்யவும் மாநில அளவில் உலமாக்கள் மற்றும் பணி யாளர்கள் நல வாரியத் திற்கு அதிகாரம் அளித்து அணையிடப்படுகிறது. சேர்க்கப்பட்ட உறுப் பினர்களின் எண்ணிக்கை, அடையாள அட்டை வழங்கப்பட்ட குடும்பங் களின் எண்ணிக்கை, நல உதவிகள் இனம் வாரியாக வழங்கப்பட்ட எண் ணிக்கை மற்றும் தொகை, மொத்த பயனாளிகளின் எண்ணிக்கை மற்றும் தொகை போன்ற விவரங் கள் அடங்கிய அறிக்கை யினை பதினைந்து நாட் களுக்கு ஒரு முறை அர சுக்கு அனுப்பி வைக்குமறு வாரியத்தின் உறுப்பினர்-செயலர் கேட்டுக் கொள் ளப்படுகிறார்.

புதியதாகத் தோற்றுவிக் கப்படும் இந்நலவாரியத் தில் உலமாக்கள் மற்றும் பணியாளர்களின் நலனுக் காக செயல்படுத்தப்படும் திட்டங்களின் அமலாக் கத்தைக் கண்காணிக்கவும், மேலும் புதிய திட்டங்கள் அமுல் படுத்தப்படுவது குறித்து அரசுக்கு ஆலோ சனைகள் வழங்கவும், மற்றும் இக்குழுவினை முதல் நிலைக் குழுவாகவும் (தினப்படிஃபயணப்படி பெறுவதற்கு), இதன் பதவிக் காலம் 3 ஆண்டுகள் என நிர்ணயித்து, அரசு ஆணை வெளியிடுகிறது.
மேற்குறிப்பிட்டவாறு நல உதவிகள் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்யப் படும்.

உறுப்பினர்களுக்கு வழங்குவதற்காகவும், இதுதொடர்பான பிற பணி களை மேற்கொள்வதற்கா கவும் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரி யத்திற்கு ரூ. 10 லவட்ம் நிதி ஒப்பளிப்பு செய்து அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள் ளது.

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009

8 ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு உதவித் தொகை

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 31.2009

சென்னை ,ஆகஸ்ட் 12 : எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அரசு உதவித்தொகையைப் பெறுவதற்கு ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்கம் புதன் கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உதவித் தொகையை பெறுவதற்கு மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்வு நவம்பர் 8 ம் தேதி நடைபெறுகிறது.


விண்ணப்பங்களை WWW.tn.gov.inldge மற்றும் WWW.pallikalvi.in ஆகிய இணையதளங்களில் இருந்தும் பதிவிறக்கம்(down load) செய்து கொள்ளலாம்.

தேர்வுக் கட்டணம் ரூ.50. இதை அரசு கருவூலகத்தில் செலுத்த வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஆகஸ்டு 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தேசியத் திறனாய்வுத் தேர்வு விண்ணப்பங்களை தொடர்புடைய மண்டல அலுவலகத்திலும், தேசிய வருவாய்வழி தேர்வுக்கான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலரிடமும் சமர்ப்பிக்க வேண்டும்.

தகுதிகள்: தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு கடந்த கல்வி ஆண்டில் (ஏழாம்) 7-ம் வகுப்புத் தேர்வில் 60 சதவீதம் அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்று, இப்போது 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவித் தொகை தேர்வுக்கு, 2009-10ம் ஆண்டில் மாநில அரசு பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம். ஆனால் இந்த மாணவர்களின் பெற்றோரின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ 1.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் , எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 7-ம் வகுப்பு தேர்வில் 50 சதவீத மதிப்பெண்ணும், மற்ற பிரிவினர் 55 சதவீத மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும்.


31-க்குள் விண்ணப்பிக்கவும்: இத்தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் பள்ளித் தலைமை ஆசிரியர், அரசுத் தேர்வுகள் தலைமை அலுவலகத்திலும் கிடைக்கும். மேலும், சென்னை, திருநெல்வேலி, மதுரை, கோவை, திருச்சி, கடலூர், வேலூர் மண்டல துணை இயக்குனர் அலுவலகங்கள், முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்கள், மாவட்ட அலுவலகங்கள், கேந்திரிய வித்யாலயா மண்டல அலுவலகங்கள் ஆகியவற்றிலும் கிடைக்கும்.

புதன், 12 ஆகஸ்ட், 2009

மதுரை, கோவை, நெல்லையில் சோதனை மையங்கள்': தமிழக அரசு அறிவிப்பு


பன்றிக் காய்ச்சல் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைள் குறித்து முதல்வர் கருணாநிதி அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். அப்போது மதுரை, கோவை, நெல்லை ஆகிய நகரங்களில் புதிதாக 3 சோதனை மையங்களை ஏற்படுத்த அவர் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

வெள்ளி, 24 ஜூலை, 2009

இனி, நவீன வாக்குப் பதிவு எந்திரங்கள்

இடைத்தேர்தல் நடைபெற உள்ள கம்பம், தொண்டாமுத்தூர், இளையான்குடி, பர்கூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய ஐந்து தொகுதிகளிலும் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன வாக்குப் பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்று தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்தப் புதிய எந்திரத்தில் எந்த வாக்காளர் எத்தனை மணிக்குத் தனது வாக்கைப் பதிவு செய்தார் என்பதைக் கூடத் துல்லியமாக அறிய முடியும் என்றார்.

ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குப் பதிவு மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தேர்தல் நேர்மையாகவும் நியாயமாகவும் நடைபெற அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்புத் தர வேண்டும் என்றும் நரேஷ் குப்தா கேட்டுக்கொண்டார்.

இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகள் அடங்கிய மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால் அரசின் நலத்திட்ட உதவிகள் எதுவும் அங்கு தேர்தல் முடியும் வரை வழங்கக் கூடாது என்றும் நரேஷ் குப்தா கூறினார்.

ஞாயிறு, 19 ஜூலை, 2009

பாட‌க‌ர் குல்முஹ‌ம்ம‌துவுக்கு க‌லைமாம‌ணி விருது


காரைக்காலைச் சேர்ந்த‌ பாட‌க‌ர் ஹாஜி குல் முஹ‌ம்ம‌துவுக்கு புதுவை அர‌சு கலைமாம‌ணி விருது வ‌ழ‌ங்கி கௌர‌வித்துள்ள‌து.

ச‌மீப‌த்தில் ந‌டைபெற்ற‌ விழாவில் க‌லைமாம‌ணி விருதினை புதுவை முத‌ல்வ‌ர் வைத்திய‌லிங்க‌ம் வ‌ழ‌ங்கினார்.

விழாவில் பொதுப்ப‌ணித்துறை அமைச்ச‌ர் எம்.ஓ.எச்.எஃப். ஷாஜ‌ஹான், அமைச்ச‌ர் க‌ந்த‌சாமி, பாண்டிச்சேரி மேய‌ர் உள்ளிட்ட‌ பிர‌முக‌ர்க‌ள் ப‌ல‌ர் க‌ல‌ந்து கொண்டன‌ர்.

பாட‌க‌ர் குல் முஹ‌ம்ம‌துவின் பாட‌ல்க‌ளைக் கேட்க‌:

http://www.youtube.com/watch?v=u40fPJiOkrk

புதன், 15 ஜூலை, 2009

10 பேருக்கு அறிவியலறிஞர் விருதுகள்


தமிழகத்தில் உள்ள உயர்கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் 10 வல்லுநர்கள், தமிழக அறிவியலறிஞர் விருதுக்குத் தேர்வு பெற்றுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் ரூ.10,000/- பணமுடிப்பு அளிக்கப்பட உள்ளது.

இது தொடர்பாகத் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் உறுப்பினர் செயலர் முனைவர் ச. வின்சென்ட் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் (Tamilnadu State Council for Science and Technology) தமிழக அரசின் உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி பெற்ற நிறுவனம். இதன் நோக்கம் நமது மாநிலத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிப்பது மற்றும் இதன் பயன்களை மக்களுக்கு சென்றடையச் செய்வது முதலியன ஆகும்.

இதற்காக பல்வேறு அறிவியல் தொழில்நுட்பத் திட்டங்களைத் தமிழக அரசு தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் மூலம் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டங்களில் ஒன்று “தமிழக அறிவியலறிஞர் விருது” வழங்கும் திட்டம்.

இதன் மூலம் தமிழகத்தில் உள்ள உயர்கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்களில் பணிபுரிந்து, தமது துறையில் (Discipline) சிறந்து விளங்கும் ஆய்வாளர்கள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கி கௌரவிக்கப்படுகின்றனர். இந்த விருதுகள் கீழ்காணும் துறைகளில் வழங்கப்படுகிறது.

1) வேளாண்மையியல்
2) உயிரியல்
3) வேதியியல்
4) சுற்றுச் சூழலியல்
5) பொறியியல் மற்றும் தொழில்நுட்பம்
6) கணிதவியல்
7) மருத்துவம்
8) இயற்பியல்
9) கால்நடை அறிவியல்
10) சமூகவியல்.

இந்த விருதுகள் வருடந்தோறும் வழங்கப்படுகின்றன. இதன்படி 2008ஆம் ஆண்டிற்கான தமிழக அறிவியலறிஞர் விருது பெறும் சாதனையாளர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. வேளாண்மையியல் - முனைவர் பி. மீனா

உதவிப் பேராசிரியர்,
தென்னை ஆய்வு மையம்,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
ஆழியார்நகர் 642 101.

2. உயிரியல் - முனைவர் ஏ.சேட் சாகுல் அமீது

ரீடர், விலங்கியல் துறை,
சி. அப்துல் ஹக்கீம் கல்லூரி,
மேல்விசாரம் 632 509.

3. வேதியியல் - முனைவர் ஆ. சாமிநாதன்

பேராசிரியர், வேதியியல் துறை,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
அண்ணாமலைநகர் 608 002.

4. சுற்றுச் சூழலியல் - முனைவர் சு பாபு ராசேந்திரன்

ரீடர்,
சுற்றுச் சூழல் உயிர் தொழில்நுட்பவியல் துறை,
பாரதிதாசன் பல்கலைக்கழகம்,
திருச்சி 620 024.

5. பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் - முனைவர் சு. நாராயணசாமி

பேராசிரியர்,
உற்பத்தி நுட்பவியல் துறை,
தேசிய தொழில்நுட்பக் கல்லூரி (NIT),
திருச்சி 620 015.

6. கணிதவியல் - முனைவர் ஆ லெலிஸ் திவாகர்

ரீடர், கணிதவியல் துறை,
அருள் ஆனந்தர் கல்லூரி,
மதுரை 625 514.

7. மருத்துவம் - முனைவர் பி. ராசேந்திரன்

பேராசிரியர், நுண்ணுயிரியல் துறை,
Dr. ALMPGIBMS,
சென்னைப் பல்கலைக்கழகம்,
சென்னை 600 113.

8. மருத்துவம் - முனைவர் எஸ். செயசந்திரன்

பேராசிரியர், பல் மருத்துவம் மற்றும் கதிரியல் துறை,
தமிழ்நாடு பல் மருத்துவக் கல்லூரி,
சென்னை 600 003

9. இயற்பியல் - முனைவர் C.K. மகாதேவன்

ரீடர், இயற்பியல் துறை,
S.T. இந்து கல்லூரி,
நாகர்கோவில் 629 002.

10 . கால்நடை அறிவியல் - முனைவர் ஆ திருநாவுக்கரசு

பேராசிரியர், புள்ளியில் மற்றும் கணிப்பொறியியல் துறை,
சென்னை கால்நடைக் கல்லூரி,
சென்னை 600 007.

2008ஆம் ஆண்டிற்கான தமிழக அறிவியலறிஞர் விருது பெறும் மேற்கண்ட ஆய்வாளர்கள் அனைவருக்கும் ரூ.10,000/- பணமுடிப்பு கொடுப்பதுடன் இவர்களது சாதனைகள் பற்றிய விளக்கக் குறிப்பும் (Citation) வழங்கப்படும்.

இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

சனி, 6 ஜூன், 2009

வாய்பேச முடியாதவர்களுக்கு பி.டெக் படிப்பு: 20-ல் நுழைவுத் தேர்வு

வாய் பேச முடியாத, செவித்திறன் குறைந்த மாணவர்களுக்கான பி.டெக். நுழைவுத் தேர்வு ஜூன் 20-ம் தேதி நடைபெறுகிறது என்று கலசலிங்கம் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பல்கலைக்கழகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வாய் பேச முடியாத, செவித்திறன் குறைந்த 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 6 ஆண்டு பி.டெக். படிப்பு நடத்தப்படுகிறது. இந்த படிப்பில் 2009-10-ம் கல்வி ஆண்டில் சேர வரும் 20-ம் தேதி நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.

தேர்வுக்கான விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. விண்ணப்பத்தைப் பெற ரூ. 10 மதிப்புள்ள அஞ்சல் தலை ஒட்டிய உறையை கலசலிங்கம் பல்கலைக்கழகத்துக்கு எழுதி அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்யவும், மேலும் விவரங்களை அறியவும் இணையதள முகவரி:வாய்பேச முடியாதவர்களுக்கு பி.டெக் படிப்பு: 20-ல் நுழைவுத் தேர்வுசென்னை, ஜூன் 4: வாய் பேச முடியாத, செவித்திறன் குறைந்த மாணவர்களுக்கான பி.டெக். நுழைவுத் தேர்வு ஜூன் 20-ம் தேதி நடைபெறுகிறது என்று கலசலிங்கம் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பல்கலைக்கழகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வாய் பேச முடியாத, செவித்திறன் குறைந்த 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 6 ஆண்டு பி.டெக். படிப்பு நடத்தப்படுகிறது.

இந்த படிப்பில் 2009-10-ம் கல்வி ஆண்டில் சேர வரும் 20-ம் தேதி நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. தேர்வுக்கான விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

விண்ணப்பத்தைப் பெற ரூ. 10 மதிப்புள்ள அஞ்சல் தலை ஒட்டிய உறையை கலசலிங்கம் பல்கலைக்கழகத்துக்கு எழுதி அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்யவும்,

மேலும் விவரங்களை அறியவும் இணையதள முகவரி:www.kalasalingam.ac.in.

LinkWithin

Blog Widget by LinkWithin