வேலை வாய்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேலை வாய்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 20 ஜனவரி, 2010

திருநெல்வேலி, தூத்துக்குடி சேர்ந்தவர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கான சிறப்பு பதிவு முகாம்

தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் பதிவு செய்ய திருச்சி மற்றும் சேலத்தில் சிறப்பு முகாம்கள் 4 நாள்கள் நடைபெறவுள்ளன. இதில்,திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் குத்சியா காந்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தொடங்கிய நாள் முதல் பல்வேறு வேலைப் பிரிவுகளில் படித்தவர்கள் முதல் படிக்காதவர்கள் வரை ஆயிரக்கணக்கான மனுதாரர்களை பணியமர்த்தியுள்ளது.

மேலும், வெளிநாட்டு வேலையளிப்போரிடம் இருந்து பணியாளர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், சென்னையில் உள்ள அலுவலகத்திற்கு வந்து பதிவு செய்வதால் பயனாளிகளின் நேரம், பயணம் மற்றும் செலவினை போக்கும் பொருட்டும் அவர்கள் பகுதிக்கே வந்து நேரடியாக பதிவு செய்து கொள்வதற்கு ஏதுவாக தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் திருச்சி மற்றும் சேலத்தில் சிறப்பு முகாம்களை நடத்த முடிவு செய்துள்ளது.

வரும் 23 மற்றும் 24 தேதிகளில் (சனி, ஞாயிறு) திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும், 30 மற்றும் 31 தேதிகளில் (சனி, ஞாயிறு) சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெறும்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கான சிறப்பு பதிவு முகாம்களில் தங்களின் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் மூன்று நகல்கள் மற்றும் 4 புகைப்படத்துடன் வந்து கலந்து கொள்ளலாம். அனுபவம் மற்றும் பாஸ்போர்ட் இல்லாதவர்களும், கல்வி அல்லாத தொழில் அனுபவம் உள்ளவர்களும் கலந்து கொள்ளலாம்.

பதிவு கட்டணமாக லேபர், கொத்தனார், கார்பெண்டர், ஸ்டீல் பிட்டர், பிளம்பர், பெயிண்டர் முதல் ஐ.டி.ஐ. டிப்ளமோ, தொழில் அனுபவம் பெற்றவர்கள், ஹோட்டல் பணியாளர்கள், பட்டப் படிப்பு படித்தவர்கள் வரையிலான பணியிடங்களுக்கு ரூ. 442-ம், நர்ஸ், பாரா மெடிக்கல் டெக்னீஷியன்கள் மற்றும் அனைத்து மருத்துவப் பணியாளர்கள், பொறியியல் பட்டப்படிப்பு, முதல் நிலை இன்ஜினீயரிங், முதுநிலை கணக்காளர், முதுநிலை பட்டதாரிகள், முதுநிலை மேலாண்மை படித்தவர்கள், கணினி பட்டப் படிப்பு வரை ரூ. 772-ம், டாக்டர்கள் ரூ. 995-ம் செலுத்தி விண்ணப்பப் படிவத்தை பெற்று பதிவு செய்து கொள்ளலாம்.

தமிழக அரசு நிறுவனத்தின் இந்த சிறப்பு பதிவு முகாமின் வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது தொடர்பாக மேலும் விவரங்களுக்கு 9444690026, 9381800181, 9940276356 ஆகிய செல்போன் எண்களிலும், 044- 24464268 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

செய்தி: தினமணி

திங்கள், 2 நவம்பர், 2009

நோக்கியா நிறுவனத்தில் சேர பிளஸ்-2 படித்த பெண்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்


தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை நோக்கியா நிறுவனத்திற்கு 1000 பெண்களை ஆப்ரேட்டர் டிரெய்னியாக தேர்வு செய்யும் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வருகிற 7-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது.

இம்முகாமில் கலந்து கொள்ள எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது. மாத ஊதியம் ரூ. 4400 மற்றும் இலவச உணவுடன் ரூ. 10000-க்கான உணவுப்படி, இலவச மருத்துவ வசதி, 60 கி.மீ. சுற்றளவிற்கு இலவச போக்குவரத்தும் அளிக்கப்படும்.

பிளஸ்-2 வில் 60 சதவீத மதிப்பெண் பெற்ற 18 முதல் 23 வயதிற்குட்பட்ட பெண்கள் தங்கள் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை அன்றே வழங்கப்படும்.

வங்கி எழுத்தர் பணி: பெண்களுக்கு இலவசப் பயிற்சி


பாரத ஸ்டேட் வங்கியின் எழுத்தர்கள் பணிக்கான தேர்வு குறித்த மூன்று நாள் இலவசப் பயிற்சி பெண்களுக்கு வியாழக்கிழமை (நவ. 5) முதல் தொடங்கவுள்ளது.

11 ஆயிரம் எழுத்தர் பணியிடங்கள் உள்ள இத்தேர்வு நவம்பர் 8 - ம் தேதி நடைபெறவுள்ளது.

"சக்ஸஸ் ஸ்கூல் ஆஃப் பாங்கிங்' என்ற நிறுவனம் இந்த இலவசப் பயிற்சியை நடத்துகிறது.

இதில் வேத கணித நுட்பங்கள் மூலம் கணிதக் கேள்விகளுக்கு துரித மற்றும் எளிதான தீர்வுகள், ஆங்கில இலக்கணம் உள்ளிட்டவை குறித்துப் பயிற்சி அளிக்கப்படும். சென்னை எழும்பூரில் உள்ள உலகப் பல்கலைக்கழக சேவை மையத்தில் பயிற்சி நடைபெறவுள்ளது. பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்கள் தேர்வு நுழைவுச் சீட்டு நகலுடன் வர வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு: 92822 33333, 93848 44405

வியாழன், 29 அக்டோபர், 2009

நெல்லை ராணி அண்ணா கல்லூரியில் நவ. 4-ல் வேலைவாய்ப்பு முகாம்

திருநெல்வேலி பேட்டை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் நவம்பர் 4-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மு. ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி மாவட்ட கல்லூரிகளில் 2006 ஆம் ஆண்டு முதல் 2009 ஆண்டு வரை பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ. ஆகியவை படித்துள்ளவர்களும், இப் படிப்புகளை இறுதியாண்டு படிப்பவர்களும் திருநெல்வேலி பேட்டை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் நவம்பர் 4 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.

இதேபோல, பொறியியல் பட்டதாரிகளுக்கும், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. படித்தோருக்கும் திருநெல்வேலி அருகே சர்.சி.வி. ராமன் நகரில் உள்ள ஐன்ஸ்டின் பொறியியல் கல்லூரியிலும், பாவூர்சத்திரத்தில் உள்ள எம்.எஸ்.பி. வேலாயுதநாடார் லட்சுமிதாய் பாலிடெக்னிக் கல்லூரியிலும் நவம்பர் 5 ஆம் தேதி காலை 9 மணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும்.

இதில் கலந்துகொள்ள விரும்பும் மாணவ, மாணவிகள் தாங்கள் படித்த கல்லூரியில் விண்ணப்ப படிவத்தை பெற்று, முதல்வரின் கையெழுத்தோடு இம் மாதம் 30 ஆம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், திருநெல்வேலி என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், தகவலுக்கு பொறியியல் துறையைச் சார்ந்தோர் 94434 - 24479, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. படித்தோர் 98944 - 06548 ஆகிய செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றார் ஜெயராமன்.

வியாழன், 10 செப்டம்பர், 2009

எச்1பி விசா வாங்கலையோ! விசா வாங்கலையோ

வாஷிங்டன்: அமெரிக்காவி்ல் பணியாற்றத் தேவைப்படும் 20,000 எச்1பி விசாக்களை வாங்க ஆளில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

சாப்ட்வேர் என்ஜினியர்கள், டாக்டர்கள், பொறியாளர்கள் உள்ளிட்டோர் அமெரிக்காவில் பணியாற்ற இந்த விசா அவசியம் என்ற நிலையில் கடந்த ஆண்டு வரை எச்1பி விசா கிடைப்பது என்பது மிகப் பெரிய விஷயமாக இருந்து வந்தது.

ஆண்டுதோறும் உலகம் முழுவதும் 65,000 எச்1பி விசாக்களையே அமெரிக்கா வழங்கி வந்தது. இதில் பெரும்பாலானவற்றை இந்தியர்களும் சீனர்களுமே வாங்கி வந்தனர்.

இந் நிலையில் பொருளாதாரத் தேக்கம் காரணமாக அமெரிக்காவில் வேலைவாய்ப்புகள் குறைந்து போய்விட்டதால் விசாக்களை வாங்க போதுமான ஆட்கள் இல்லை.

இதனால் இந்த ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட 65,000 விசாக்களில் 20,000 விசாக்கள் இன்றும் வினியோகிக்கப்படவே இல்லை. அடுத்த மாத்தோடு இந்த விசாக்களின் கோட்டா முடிந்துவிடும்.

இதனால் அடுத்த ஆண்டு்க்கான கோட்டாவை 65,000ல் இருந்து 50,000 வரை அமெரிக்கா குறைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா வில் கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்புக்கு தட்டுப்பாடு நிலவுவது குறிப்பிடத்தக்கது

புதன், 26 ஆகஸ்ட், 2009

24,000 பேருக்கு வேலை!-டிசிஎஸ்


பெங்களூர்: டிசிஎஸ் சமீபத்தில் தேர்வு செய்த 24,000 பேருக்கும் வேலை தரப்படும் என்று டாடா கன்ஸல்டன்ஸி நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மகாலிங்கம் இதுபற்றிக் கூறுகையில், இனி ஐடி துறையில் பெரிய வீழ்ச்சிக் காலம் இருக்காது. வேகமான மீட்சிக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது ஐடி துறை. 20 சதவீத வளர்ச்சியை இந்தத் துறை எட்டும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்த ஆண்டு 46.3 பில்லியன் அளவுக்கு ஐடி துறை வருவாய் ஈட்டியுள்ளது. அடுத்த காலாண்டில் இது 3 முதல் 4 சதவிகித அளவு உயரும் வாய்ப்புள்ளதாக நாஸ்காம் கூறியுள்ளதை கவனிக்க வேண்டும்.

சமீபத்தில் 24,000 பேரை பணிகளுக்காக தேர்வு செய்துள்ளோம். இவர்கள் அனைவருக்கும் நிச்சயம் வேலை தரப்படும் என்றார்.

இவர்களில் ஒரு பகுதியினருக்கு ஏற்கெனவே பணி ஆணைகள் வழங்கப்பட்டுவிட்டனவாம். விரைவில் இரு தவணையாக மற்றவர்களுக்கும் பணி ஆணைகள் வழங்கப்பட்டு விடுமாம்.

சவுதி அரேபியாவில் வேலைவாய்ப்பு: ஆக. 29, 30-ல் நேர்முகத் தேர்வு

சவுதி அரேபியாவில் பணியாற்ற விரும்பும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான நேர்முகத் தேர்வு நாகர்கோவிலில் இம் மாதம் 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:

சவுதி அரேபியாவில் உள்ள ஒரு முன்னணி கட்டுமான நிறுவனத்தில் பணியாற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். வளைகுடா நாடுகளில் 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்று ஐ.டி.ஐ. பயின்ற எலக்ட்ரீசியன்கள், பிளம்பர்கள், 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்ற ஐ.டி.ஐ. தகுதி அல்லாத ஸ்பிரே பெயிண்டர்கள், டைல்ஸ் பொருத்துபவர்கள், மேசன்கள், சட்டரிங் கார்பெண்டர்கள், ஸ்டீல் பிக்ஸ்சர்கள் மற்றும் பினிசிங் கார்பெண்டர்கள் அதிக அளவில் தேவைப்படுகின்றனர்.

எனவே, தகுதி உள்ளவர்கள் தங்களின் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் மற்றும் இரண்டு புகைப்படத்துடன் நாகர்கோவில் கோணம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இம் மாதம் 29, 30-ம் தேதிகளில் காலை 9 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 93818 00181, 94446 90026, 044-24464269 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

புதன், 19 ஆகஸ்ட், 2009

ஓமன்யில் வேலை வாய்ப்பு

Dear all friends,

The following vacancies availble in AROMATICS OMAN LLC,SOHAR,OMAN.


Apply through online www.aromatics.co.om

Ref : 401


--------------------------------------------------------------------------------
JOB POSITION/TITLE
Payroll Clerk

--------------------------------------------------------------------------------
JOB DESCRIPTION
Basic Function and Responsibilities:

• Gather information of employees’ attendance/absenteeism and other required information from all divisions.

• Prepare documentation to record all payroll related transactions and coordinate with Finance department.

• Prepare on timely, monthly basis payroll, annual bonus and related statements taking into consideration the cut of date.

• Prepares salary certificates, maintains employee leave records, overtime, sending pay slips and maintaining bank records and other employee records related to payroll.

• Produce reports to the line Managers, Directors, Management Team and whenever required.

• Maintaining the confidentiality of all personal and pay related information of the system.


Experience & Qualification:

• Diploma holder in Accounting/Finance/Commerce or equivalent qualification with a minimum of 3 years experience in payroll and related functions.

• IT literate and strong knowledge of HRMS systems.

• Good English communication skills.


--------------------------------------------------------------------------------
JOB LOCATION
Oman

--------------------------------------------------------------------------------
LEVEL OF JOB/CATEGORY
Full Time

--------------------------------------------------------------------------------
WORK EXPERIENCE
Min: 3 years Max: years

--------------------------------------------------------------------------------
EXPIRY DATE
24/08/2009

COMPANY AROMATICS OMAN LLC,

Ref : 400

--------------------------------------------------------------------------------
JOB POSITION/TITLE
Payroll Officer

--------------------------------------------------------------------------------
JOB DESCRIPTION
Basic Function and Responsibilities:

• Ensures timely payment of salary and other dues of employees on due dates and ensures Payroll and related activities are handled efficiently.

• Ensures proper records are maintained for all employees for payroll and related functions.

• Verifying the salary structure for New Joiners & Final settlement for resigned employees.

• Proper documentation to record all payroll related transactions.

• Ensures in coordination with Manager / Head – Financial Accounts, all transactions are processed through Finance department.

• Coordination with External and internal Auditor for completion of audit on a timely basis for payroll related activity.



Experience & Qualification:

• Graduate degree in Accounting/Finance/Commerce or equivalent Qualification with a minimum of 4 years experience in payroll and related functions.

• IT literate and strong knowledge of HRMS systems.

• Good English communication skills.

--------------------------------------------------------------------------------
JOB LOCATION
Oman

--------------------------------------------------------------------------------
LEVEL OF JOB/CATEGORY
Full Time

--------------------------------------------------------------------------------
WORK EXPERIENCE
Min: 4 years Max: years

--------------------------------------------------------------------------------
EXPIRY DATE
24/08/2009


Thanks To Mr.S.Emam Kadher Niyas, Yanbu,Saudi Arabia.

LinkWithin

Blog Widget by LinkWithin