புதன், 30 செப்டம்பர், 2009

வஃபாத்து செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ஸ்ரீவைகுண்டம் பெரிய பள்ளிவாசல் நடுத்தெருவை சார்ந்த மர்ஹும் ஜனாப் A.அப்துல் காதர்(அரிசி கடை) அவர்களின் மகன் ஜனாப் A.கலீலுர்ரஹ்மான் இன்று (30-09-2009) வபாத்தானார்கள் என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்,அன்னாரின் மஃக்பிரதிர்காக அணைவரும் துவா செய்து கொள்ளவும்

வியாழன், 24 செப்டம்பர், 2009

காஷ்மீரை தனி நாடாக்க வேண்டும்-கடாபி


நியூயார்க்: காஷ்மீர் தனி நாடாக வேண்டும் என்று ஐ.நா. கூட்டத்தில் பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் லிபிய அதிபர் கடாபி.

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நியூயார்க் வந்த கடாபி, பொதுச் சபையில் சுமார் ஒரு மணி நேரம் பேசினார் (அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரம் கால் மணி நேரம்தான்).

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை கடுமையாக சாடிப் பேசிய கடாபி, காஷ்மீர் பிரச்சினையையும் பெரிதாகப் பேசி இந்தியாவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளார்.

அவர் பேசுகையில், ஐ.நா. சபையும், பாதுகாப்பு கவுன்சிலும் உருவாக்கப்பட்ட பின்னர் 65 போர்கள் நடந்துள்ளன. இதற்கு மேலும் இதுபோல நடக்க்க கூடாது.

பாதுகாப்பு கவுன்சில் என்று கூறுவதை விட தீவிரவாத கவுன்சில் என்று கூறினால் பொருத்தமாக இருக்கும்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ளன நிரந்தர உறுப்பினர்களுக்கு வீட்டோ அதிகாரம் இருக்கக் கடாது. ஆப்பிரிக்க யூனியன், லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவற்றுக்கு சபையில் பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும். மேலும், நிரந்தர உறுப்பு நாடுகளை சுழற்சி முறையில், அதாவது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

ஜான் கென்னடி, மார்ட்டின் லூதர் கிங் ஆகியோரின் படுகொலைகள் குறித்து சரியான விசாரணை நடத்தப்படவில்லை. அதை ஐ.நா. செய்ய வேண்டும். அதேபோல கொரியா, வியட்நாம், ஈராக், ஆப்கானிஸ்தான் போர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

பின்லேடன் ஒரு தலிபான் என்று யார் சொன்னது. பின் லேடன் தலிபான் அல்ல, அவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவரும் அல்ல.

பன்றிக் காய்ச்சல் தானாக பரவவில்லை. மாறாக ராணுவ ஆய்வகத்திலிருந்து பரப்பி விடப்பட்டுள்ளது இது.

அமெரிக்க அதிபராக பாரக் ஒபாமா நிரந்தரமாக நீடித்தால் நான் சந்தோஷப்படுவேன்.

காஷ்மீர் தனி நாடாக வேண்டும்...

காஷ்மீர் இந்தியாவுக்கும் சொந்தமானதல்ல, பாகிஸ்தானுக்கும் சொந்தமானதல்ல. அது ஒரு தனி நாடாக, சுதந்திர நாடாக இருக்க வேண்டும். அது இந்தியா, பாகிஸ்தானுக்கு உரிமை இல்லாத தனி நாடாக வேண்டும். இதன்மூலம் இந்தப் பிரச்சனைக்கு நாம் முடிவு கட்டலாம்.

ஐ.நா. பாதுகாப்பு சபையில் மேலும் எந்த நாட்டையும் சேர்க்கக் கூடாது என்றார் கடாபி.

ஸஹாபாக்களின் வாழ்வினிலே

இரு கண் எனக்கிருந்தால் இறைவழியில் போரிட்டிருப்பேனே!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ் ஸாஇதீ(ரலி) அறிவித்தார்கள்;
நான் மர்வான் இப்னு ஹகமைப் பள்ளிவாசலில் பார்த்தேன். நான் அவரை நோக்கிச் சென்று அவருக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டேன். அப்போது அவர் எங்களுக்கு அறிவித்தார். ஸைத் இப்னு ஸாபித்(ரலி) என்னிடம் தெரிவித்தார்கள்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எனக்கு, 'இறைநம்பிக்கை கொண்டவர்களில் (அறப்போர் புரியச் செல்லாமல் தங்கள் இருப்பிடத்திலேயே) தங்கிவிட்டவர்களும் இறைவழியில் போரிடச் சென்றவர்களும் சமஅந்தஸ்துடையவர்களாக மாட்டார்கள்" என்னும் (திருக்குர்ஆன் 04:95) இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள். அதை நபி(ஸல்) அவர்கள் எனக்கு ஓதிக் காட்டிக் கொண்டிருந்தபோது அவர்களிடம் அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம்(ரலி) வந்து, 'இறைத்தூதர் அவர்களே! என்னால் அறப்போரில் கலந்து கொள்ள முடியுமென்றால் நான் அறப்போரில் பங்கெடுத்திருப்பேன்" என்று கூறினார்கள். அவர் கண்பார்வையற்ற மனிதராக இருந்தார். எனவே, அப்போது அல்லாஹ் தன் தூதருக்கு (வேத வெளிப்பாட்டை) அருளினான். நபி(ஸல்) அவர்களின் தொடை அப்போது என் தொடையின் மீதிருந்தது. (வேத வெளிப்பாடு வரத் தொடங்கிய காரணத்தால்) அது என் மீது (கனத்துப் போய்) கடுமையாக (அழுத்த) ஆரம்பித்தது. எந்த அளவிற்கென்றால் நான் என் தொடையின் மீதிருந்தது. (வேத வெளிப்பாடு வரத் தொடங்கிய காரணத்தால்) அது என் மீது (கனத்துப் போய்) கடுமையாக (அழுத்த) ஆரம்பித்தது. எந்த அளவிற்கென்றால் நான் என் தொடை நசுங்கி விடும் என்று அஞ்சினேன். பிறகு அவர்களுக்கு (இந்நிலை நீக்கப்பட்டு) லேசாக்கப்பட்டது. அப்போது அல்லாஹ், 'தகுந்த காரணமின்றி (தங்கிவிட்டவர்கள்)" என்னும் வாசகத்தை (மேற்கண்ட வசனத்துடன் சேர்த்து) அருளியிருந்தான்.

ஆதாரம்;புஹாரி எண் 2832

இறைவழியில் போரிட்டவர்களும்-போருக்கு செல்லாமல் தங்கிவிட்டவர்களும் சம அந்தஸ்துடையவர்கள் ஆகமாட்டார்கள் என்ற இறைவசனம் இறங்கிய மாத்திரமே, இரு கண்களும் தெரியாத அப்துல்லா இப்னு உம்மிமக்தும்[ரலி] அவர்கள், அந்த அறப்போர் புரிந்த தியாகிகளுடைய அந்தஸ்து நமக்கு கிடைக்காமல் போய்விட்டதே என்ற வேதனையோடு இறைத்தூதரிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! என்னால் அறப்போரில் கலந்து கொள்ள முடியுமென்றால் நான் அறப்போரில் பங்கெடுத்திருப்பேன்" என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியபோது வல்ல ரஹ்மான், அப்துல்லாஹ் இப்னு உம்மிமக்தூம்[ரலி] அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் 'தகுந்த காரணமின்றி' என்ற வாசகத்தை வசனமாக இறக்கி அருள்கிறான் என்றால், இந்த செய்தியில் நாம் அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம்[ரலி] அவர்களின் ஆர்வத்தை கவனிக்க கடமைப்பட்டுள்ளோம். கண்பார்வையில்லா நிலையிலும் அறப்போரில் பங்கெடுக்க முடியவில்லையே என்று வேதனை பட்டார்களே! அதுதான் ஈமானிய உறுதி! இன்றைக்கு நாடுகளாலும், செல்வத்தாலும், வலிமையாலும், தளவாடங்களாலும் ஓரளவு வலிமை பெற்ற நிலையிலும், 'எதிரியின் படையின் எண்ணிக்கையில் பாதி அளவு படை இருந்தாலே போர் கடமை' என்று நமக்கு நாமே ஃபத்வா வழங்கிக்கொண்டு, உலக அளவில் முஸ்லிம்களின் ரத்தம் ஆறாக ஓட்டப்படுவதை பார்த்து கண்மூடி இருக்கிறோமே நாம் தான் கண்ணிருந்தும் குருடர்கள். ஆனால் கண் பார்வையில்லாத நிலையிலும் தனது எண்ணத்தால் அப்துல்லாஹ் இப்னு உம்மிமக்தூம் [ரலி] அவர்கள், எங்கோ உச்சத்திற்கு சென்றுவிட்டார்கள்.

அல்லாஹ் அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம்[ரலி] அவர்களை பொருந்திக்கொள்வானாக!

"வருங்கால சந்ததிக்கு வளமான புவியை விட்டுச் செல்வோம்' : உலக மாநாட்டில் இந்தியச் சிறுமி வலியுறுத்தல்

பருவநிலை மாறுபாட்டின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள புவியைக் காப்பாற்றுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா , சீன அதிபர் ஹூ ஜிந்தாவோ உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார் இந்தியச் சிறுமி யுகரத்னா ஸ்ரீவாஸ்தவா (படம்) .

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் பருவநிலை மாறுபாடு குறித்த மாநாட்டில் செவ்வாய்க்கிழமை உலகில் உள்ள 300 கோடி குழந்தைகளின் சார்பாக ஸ்ரீவாஸ்தவா பேசியதாவது:

பருவநிலை மாறுபாடு காரணமாக புவியில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இமயமலையில் உள்ள பனிப்பாறைகள் உருகிக்கொண்டிருக்கின்றன, பனிக்கரடிகள் இனம் அழிந்து கொண்டிருக்கிறது, 5ல் 2 பேருக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கவில்லை, புவியின் வெப்பம் அதிகரித்து வருகிறது, பலதரப்பட்ட தாவர இனங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன, பசிபிக் பெருங்கடலின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இதைத்தான் வருங்கால சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்ல இருக்கிறோம்.

பருவநிலை மாறுபாட்டிற்கு நாடுகளின் அரசியல், நில எல்லைகள் தெரியாது. அதன் தாக்கம் பாரபட்சமின்றி அனைவருக்கும் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.

உலக நாடுகளின் தலைவர்கள் குளிர்சாதனப் பெட்டி பொருத்தப்பட்ட அறைகளில் அமர்ந்து கொள்கைகளை உருவாக்கும் போது பசுமை இல்ல வாயுவின் வெப்பம் தாங்காமல் அழும் குழந்தையையும், உயிர்வாழக் கெஞ்சும் தாவரங்களின் வேண்டுகோளையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதனால் உலக நாடுகளின் தலைவர்கள் புவியின் பருவநிலை மாறுபாட்டின் தாக்கத்தை குறைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இன்று நான் உங்களைக் கேட்பது போன்று வருங்கால சந்ததியினர் நம்மை கேள்வி கேட்கும் நிலை வரக்கூடாது என்று பேசினார் ஸ்ரீவாஸ்தவா. உத்தரப் பிரதேச மாநிலம் லக்னெüவில் செயின்ட் ஃபிடெலிஸ் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் ஸ்ரீவாஸ்தவா, ஐ.நா.சுற்றுச்சூழல் திட்டத்தின் இளைஞர் அமைப்பான தன்ஸôவில் உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா.பொதுச்செயலர் பான் கி-மூன் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உலகத் தமிழ் ஒற்றுமை மாநாடு: மலேசியாவில் நாளை தொடங்குகிறது

பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் சார்பில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உலகத் தமிழ் ஒற்றுமை மாநாடு வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 25) தொடங்குகிறது.

மலேசியப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில் உலகம் முழுவதும் இருந்து சுமார் 500 தமிழ் அறிஞர்கள், தொழிலதிபர்கள் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் இருந்து 60 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் ம. ராசேந்திரன், பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் நிறுவனர் வா.மு. சேதுராமன், மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவர் டத்தோ சாமிவேலு, மலேசிய அமைச்சர் கோ. சூகூன், சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பொறுப்பு அலுவலர் க. ராமசாமி, பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி, பேராயர் எஸ்றா சற்குணம், சென்னை பச்சையப்பன் கல்லூரி பேராசிரியர் வா.மு.சே. ஆண்டவர் உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

2 நாள்கள் நடைபெறும் மாநாட்டுக்கு முதல்வர் கருணாநிதி, நிதி அமைச்சர் க. அன்பழகன், தமிழக பாஜக தலைவர் இல. கணேசன் ஆகியோர் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளனர் என்று பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் இயக்குநர் வா.மு.சே. திருவள்ளுவர், செய்தியாளர்களிடம் புதன்கிழமை தெரிவித்தார்

பி.எஸ்.என்.எல். புதிய டெலிபோன் டைரக்டரி இன்று முதல் விநியோகம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல். சார்பில் புதிய டெலிபோன் டைரக்டரி வியாழக்கிழமை (செப். 24) முதல் விநியோகம் செய்யப்படுகிறது.

இது தொடர்பாக மாவட்ட பி.எஸ்.என்.எல். தொலைத் தொடர்பு பொதுமேலாளர் என்.ஆர். நடராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பி.எஸ்.என்.எல். தரைவழி, வில்போன் வாடிக்கையாளர்களுக்கான புதிய டெலிபோன் டைரக்டரி 24.9.2009 முதல் விநியோகம் செய்யப்படுகிறது.

அந்தந்த தொலைபேசி நிலையத்தை சேர்ந்த வாடிக்கையாளர்கள் அந்தந்த தொலைபேசி நிலையங்களில் பணம் செலுத்திய 7.8.2009 அல்லது 7.9.2009 பில்லை காண்பித்து,

டைரக்டரியை பெற்றுக் கொள்ளலாம்.

துண்டிக்கப்பட்ட தரைவழி மற்றும் வில்போன் இணைப்புகளுக்கு அதன் துண்டிக்கப்பட்ட மாத கட்டணங்கள் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படுவதுடன், நிலுவைத் தொகையினை ஆறுமாத கால தவணைகளில் செலுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது.

எனவே, வாடிக்கையாளர்கள் சேவை மையம் மற்றும் மேளா நடைபெறும் இடங்களில் அதற்கான விண்ணப்பத்தை கொடுத்து மறுபடியும் தங்களது இணைப்பை பொற்றுக்கொள்ளலாம்.

புதிய தரைவழி மற்றும் வில் இணைப்புகளுக்கு இப்போது அமைப்புக் கட்டணம் ரூ. 500 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

புதிய தரைவழி மற்றும் வில் இணைப்புகள் வேண்டுவோர் ரூ. 100 மட்டும் செலுத்தி புதிய இணைப்புகளை பெற்றுக் கொள்ளலாம்.

மீதமுள்ள வைப்புத் தொகையை நான்கு தவணைகளில் செலுத்தலாம். இந்த சலுகை 21.10.2009 வரை நீடிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்

மதிதா இந்துக் கல்லூரியில் புத்தகத் திருவிழா தொடக்கம்

திருநெல்வேலி மதிதா இந்துக் கல்லூரியில் புத்தகத் திருவிழா புதன்கிழமை தொடங்கியது.

கல்லூரி கலையரங்கில் நடைபெறும் இந்த கண்காட்சி மற்றும் விற்பனை தொடக்க விழாவிற்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) வி. பொன்னுராஜ் தலைமை தாங்கினார். கல்விச் சங்க பொருளாளர் தளவாய் ராமசாமி கண்காட்சியைத் தொடக்கி வைத்தார்.

இந்த கண்காட்சியில் பாரதி புத்தகாலயம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், கிழக்கு பதிப்பகம், ஹிக்கின் பாதம்ஸ், தமிழ்நாடு புக் ஹவுஸ், யாதுமாகி பதிப்பகம், விகடன் பதிப்பகம் ஆகிய வெளியீட்டாளர்களின் ஏராளமான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. கண்காட்சியில் இடம்பெற்றுள்ள சிற்றிதழ்கள் குறித்து பேராசிரியர் திருநீலகண்டன் அறிமுக உரையாற்றினார்.

இந்த கண்காட்சி வெள்ளிக்கிழமை வரை கல்லூரி வேலைநேரங்களில் நடைபெறும். பொதுமக்களும் கண்காட்சியைப் பார்வையிடலாம். முன்னதாக, கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் கருப்பையா வரவேற்றார். நூலகர் நீலகண்டன் நன்றி கூறினார்

சிம்லாவில் பிளாஸ்டிக் தார் ரோடு

திருப்பரங்குன்றம் : மதுரை பேராசிரியர் வாசுதேவன் கண்டுபிடித்த பிளாஸ்டிக் தார் ரோடு சிம்லாவில் அமைக்கப்பட்டது. மறு பயன்பாட்டிற்கு பயன்படாத பாலித்தீன் கவர்கள், பிஸ்கட், சாக்லேட் கவர்கள், தெர்மாகோல் போன்றவற்றை மீண்டும் பயன்படுத்தவும், அவற்றை எரிப்பதால் பூமி வெப்பமடைவதை தடுக்கவும் மதுரை தியாகராஜர் இன்ஜி., கல்லூரி பேராசிரியர் வாசுதேவன் ஆராய்ச்சி மேற் கொண்டார். இவற்றை ஜல்லிகளில் கலந்து, அவற்றுடன் தார் சேர்த்து பிளாஸ்டிக் ரோடு அமைத்தார்.


உலகில் முதன்முறையாக இவரது கண்டுபிடிப்பான பிளாஸ்டிக் ரோடு 2000ல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், மும்பையிலும் உருவாயின. தற்போது கேரளாவில் பல இடங்களில் அமைக்கப்படுகிறது. சாதாரண தார்ரோட்டை காட்டிலும் பிளாஸ்டிக் ரோடுகள் பல ஆண்டுகள் நீடித்து உழைக்கும், பராமரிப்பு செலவு கிடையாது. இதன்மூலம் அரசுக்கு ஆண்டுக்கு பல கோடி மிச்சமாகும் என்பதை நிரூபித்தார்.

மத்திய அரசு அங்கீகாரம்: பிளாஸ்டிக் தார் சாலையின் தன்மை, தரம், உழைப்பு, ஆயுள், பயன்கள், செலவுகள். சாதாரண தார் ரோட்டுக்கும், பிளாஸ்டிக் தார் ரோட்டுக்கும் உள்ள வித்தியாசம் ஆகிய விபரம் அடங்கிய குறிப்புளை சமீபத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் புத்தகமாக வெளியிட்டது. மத்திய கிராம வளர்ச்சி அமைச்சகத்தின் தேசிய கிராமப்புற ரோடுகள் வளர்ச்சி நிறுவனம், கிராமப்புறங்களில் பிளாஸ்டிக் தார் ரோடுகள் அமைக்க அங்கீகரித்து வழிமுறைகளை வகுத்தது. சிம்லாவில் பிளாஸ்டிக் தார் ரோடு: டில்லி அறிவியல் தொழில்நுட்ப மையம் இந்த தொழில்நுட்பத்தை அங்கீகரித்து அனைத்து மாநிலங்களிலும் பிளாஸ்டிக் தார் ரோடு அமைப்பதற்கான ஆராய்ச்சிக்காக ரூ. 42 லட்சம் நிதி வழங்கியது. இமாசல பிரதேசம் சிம்லாவில் "டெஸ்ட்' பிளாஸ்டிக் தார் ரோடு அமைக்க அம்மாநில அரசு, பேராசிரியர் வாசுதேவனிடம் கேட்டது.

பேராசிரியர்கள் வாசுதேவன், ராமலிங்க சந்திரசேகர், வேல்கென்னடி, சுந்தரக்கண்ணன் சிம்லா சென்றனர். அங்கு ஜூபார் ஹட்டி விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் "டுடூ' என்ற ஊரில் ஒரு கி.மீட்டருக்கு பிளாஸ்டிக் தார் ரோடு அமைத்தனர். வாசுதேவன் கூறுகையில், " பிளாஸ்டிக் தார் ரோடு அமைப்பதை அங்குள்ள அதிகாரிகள் பாராட்டினர். அக்டோபருக்குள் அங்கு பல இடங்களில் பிளாஸ்டிக் தார் ரோடு அமைக்க முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில் அமைக்க விரும்புவோர் 0452-248 2240 , 94864 86728 ல் தொடர்பு கொள்ளலாம்' என்றார்.

புதன், 23 செப்டம்பர், 2009

அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத ஸ்ரீவை., தாலுகா : மக்கள் தினமும் அவதி

ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலக வளாகத்தில் பொது மக்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர் கழிப்பிட வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் அவதிபடுகின்றனர்.

ஸ்ரீவைகுண்டம் தாலுகாவின் தலைநகரமாக உள்ளதால் தாலுகாவின் நிர்வாக அலுவலகமான வட்டாட்சியர் அலுவலகம் ஸ்ரீவைகுண்டத்தில் பிரதானமாக இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தின் வளாகத்தில் தான் அரசு சார்நிலை கருவூலம் மற்றும் மாவட்ட துணை சிறை ஆகிய அலுவலகங்கள் இயங்கி வருகிறது.

தினந்தோறும் அலுவலக நாட்களில் சான்றிதழ் பட்டா மாறுதல், ரேசன்கார்டுகள், என பல்வேறு பணிகளுக்கு தாலுகா அலுவலகத்திற்கும் கைதிகளை பார்பதற்கு மற்றும் கருவூல பணிகளுக்கு என ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மேற்கண்ட அலுவலகங்களுக்கு வந்து செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலோனோர் பெண்கள். இவர்கள் அவசரத்திற்கு கூட செல்லமுடியாமல் அவதிபடுகின்றனர்.

மேலும் இங்கு பொதுமக்களுக்கு என குடிநீர் வசதிகள் ஏதும் இல்லை. அடிப்படை வசதிகளை மக்களுக்கு செய்து கொடுக்கும் பொருப்புள்ள துறையான வருவாய்துறை மக்களின் அனைத்து விசயங்களுக்கும் இவர்களை பொறுப்பு ஆகும்

ஆனால் இந்த பொறுப்புள்ள அலுவலக வளாகத்தில் இதுபோன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பது உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனையே மேலும் இங்கு தினம்தோறும் வரும் வாகனங்களை நிறுத்துவதற்கென தனியாக செட்கள் ஏதும் இல்லை இதனால் வாகனங்களை இஸ்டத்துக்கு நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் சில நேரங்களில் தாசில்தார் வாகனம் வருவதற்கு தடையாக உள்ளது.

தனியாக அமைக்கபட்ட செட்டுகளில் புதிய பில்டிங் கட்டிவிட்டதால் வாகனங்கள் நிறுத்த முடியவி�ல்லை ஏதோ அக்காலத்தில் சில புண்ணிய வான்கள் மரங்களை நட்டுவைத்ததால் அந்த நிழலில் மக்கள் இளைப்பாறுகின்றனர்.

புராதானமான தாலுகாவாகிய ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தின் வளாகத்தில் இந்த அடிப்படை வசதிகள் ஏற்படுத்திட வேண்டும் மேலும் ஒவ்வொறு தாலுகா அலுவலகங்களிலும் மக்கள் சாசன அறிவிப்புகள் என்கிற, அறிவிப்பு பலகைகள் குறிப்பாக பலகை:

1.சாதிசான்று - 15 நாட்கள்

2. வருமான சான்று -15 நாட்கள்

3.இருப்பிடசான்று 30 நாட்கள்

4. இதரபள்ளி சான்றுகள் 15 நாட்கள்

5.வாரிசு சான்றிதழ் -15 நாட்கள்

6.பிறப்பு இறப்பு சான்றிதழ் - 15 நாட்கள்

7. பட்டாமாற்றம் - 15-30 நாட்கள் என்ற சாசன பலகையும் லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் குற்றம் என்ற பலகையும், அறிவிப்பு: சாதிசான்று உட்பட ஏனைய சான்றுகளை பெற விடுமுறை இல்லாத நாட்களில் காலை 10 மணி முதல் 1மணி வரை மனுக்கள் பெறப்படும் மனுக்களை வாங்கிய தினத்தில் இருந்து மூன்று தினங்களில் சான்றுகள் வழங்கபடும்.

அறிவிப்பு: கோரிக்கை தொடர்பாக வரும் பொதுமக்கள் தங்கள் கோரிக்கையை வட்டாட்சியரிடமோ தலைமை இடத்து துணைவட்டாட்சியரிடமோ நேரில் தெரிவிக்க வேண்டும் ஏஜெண்டுகள் மூலம் தெரிவிக்க கூடாது கோரிக்கை தொடர்பாக ஏஜெண்டுகள் வந்தால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பலகையும்

தகவல்மையம் : பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை இங்கு கொடுத்து தகவல் தெரிந்து கொள்ளலாம் மனுக்களுக்கு ஒப்புதல் ரசீது பெற்று கொள்ளவும் என்கிற தகவல்பலகைகள் தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் இடம் பெற்றுள்ளது. இதுபோன்ற மக்கள் சாசன அறிவிப்புகள் ஏதும் ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தின் வளாகத்தில் வைக்கபடவில்லை. அடிப்படை வசதிகளும் இல்லை, அறிவிப்பு பலகையும் இல்லை இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர்.

மேற்கண்ட தகவல் சாசன பலகையும் அடிப்படை வசதிகளும் போர்கால நடவடிக்கையில் ஏற்படுத்த படவேண்டும் என்பதே பொது மக்களின் கோரிக்கை.

ஆபத்து, அவசர காலங்களில் பொது மக்களை பாதுகாக்கவும், மீட்கவும், பராமரிக்கவும் போர்கால நடவடிக்கை எடுத்து பாதுகாக்கும் வருவாய்துறை தேர்தல் என்றால் பலநாட்கள் கண்தூங்காமல் பணிபுரியும் வருவாய்துறை, நலப்பணிகளான இலவச திட்டங்கள் நிவாரணபணிகள் என்றால் வீடு, மனைவி, குழந்தைகள் என்று அனைத்தையும் மறந்து களத்தில் மாவட்டத்தின் கலெக்டர் முதல் கடைசி பணியாளர் வரை கண்அயராமல் கடைமையாற்றும் வருவாய்துறையின் அலுவலகம் இவ்வாறு அடிப்படை வசதிகளின்றி கிடப்பது உண்மையில் வருத்தத்திற்குறியது ஆகும்.

உடனடியாக மாவட்ட, தாலுகா நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து முட்செடிகளின் ஆக்கிரமிப்பில் இருக்கும் தாலுகா அலுவலகத்தை பொலிவுர செய்திட வேண்டும் இது பொதுமக்களின் கோரிக்கை புராதானமான தாலுகா அலுவலம் பொலிவு பெருமா? பார்ப்போம்.

தகவல் : தினமலர்

போலி ஆவணங்கள் மூலம் ரூ.6 லட்சம் கையாடல்: பஞ். தலைவருக்கு போலீஸ் வலை

ஸ்ரீவைகுண்டம் அருகே ஸ்ரீமூலக்கரை பஞ்சாயத்தில், போலி ஆவணங்கள் மூலம் ரூ.6 லட்சத்து 66 ஆயிரம் கையாடல் செய்த பஞ்சாயத்து தலைவர் உள்பட 3 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் யூனியனில், ஸ்ரீமூலக்கரை பஞ்சாயத்து உள்ளது. இந்த பஞ்சாயத்தின் தலைவராக பேச்சிமுத்து, உதவியாளராக நவநீத கிருஷ்ணன், பஞ்சாயத்து துணைத் தலைவராக ஜவஹர்ஷா ஆகியோர் உள்ளனர். இவர்கள், கடந்த 2008ம் ஆண்டு மே மாதம் 2ம் தேதி முதல் 2009ம் ஆண்டு ஜுன் மாதம் 9ம் தேதி வரை பஞ்சாயத்தில் உள்ள நிதியை போலி ஆவணங்கள் தயார் செய்து பணத்தை கையாடல் செய்துள்ளனர்.

குறிப்பாக, இதுவரை போலி ஆவணங்கள் தயார் செய்து, ரூ.6 லட்சத்து 66 ஆயிரத்து 335 கையாடல் செய்துள்ளனர். இந்த பணம் கையாடல் சம்பவம், யூனியன் வளர்ச்சி அதிகாரிகள் பஞ்சாயத்து கணக்குகளை சரிபார்த்த போது தெரிவந்தது. இதனையடுத்து, ஸ்ரீவைகுண்டம் யூனியன் பி.டி.ஓ., சோமசுந்தரம் போலீசில் புகார் செய்தார்.

இச்சம்பவம் குறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து பஞ்சாயத்து தலைவர் பேச்சிமுத்து, பஞ்சாயத்து துணை தலைவர் ஜவஹர்ஷா, உதவியாளர் நவநீத கிருஷ்ணன் ஆகியோரை தேடிவருகின்றனர்

தொழுகையின் முக்கியத்துவம்

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)
“உங்களில் ஒருவருடைய வீட்டு வாயிலின் அருகில் ஆறு ஒன்று ஓடுகிறது என வைத்துக் கொள்வோம். அதில் அவர் ஒவ்வொரு நாளும் ஐவேளை குளித்து வந்தாரென்றால், அவருடைய உடலில் சிறிதளவாயினும் அழுக்கு எஞ்சியிருக்குமா?” என நபி அவர்கள் தம் தோழர்களிடம் வினவினார்கள்.

அதற்குத் தோழர்கள், “இல்லை! அவருடைய உடலில் சிறிதளவும் அழுக்கு இராது” என்றார்கள். “இது போன்றுதான் ஐவேளைத் தொழுகையும்! அல்லாஹ் இத்தொழுகைகளின் மூலம் பாவக்கறைகளைப் போக்குகின்றான்” என்று நபி அவர்கள் அருளினார்கள். (புகாரி, முஸ்லிம்)


அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
ஒருவர் ஓர் அன்னியப் பெண்ணை முத்தமிட்டார். உடனே தம் தவறை உணர்ந்து வெட்கமும், வேதனையும் அடைந்தார். “நம் கதி என்னவாகுமோ?”என நினைத்து அண்ணல் நபி அவர்களிடம் ஓடி வந்து நிலைமையை விளக்கினார். செய்த தவறை உணர்ந்து வேதனையால் துடிக்கும் அவருக்கு நபி அவர்கள் பின்வரும் திருமறையின் வசனத்தை ஓதி ஆறுதல் அளித்தார்கள்.

“பகலின் இரு முனை(களாகிய காலை, மாலை)களிலும் இரவு சிறிது கழிந்த நேரத்திலும் தொழுகையை நிலைநாட்டுவீராக! நிச்சயமாக நன்மைகள் பாவங்களைப் போக்கிவிடும்.” (திருக்குர்ஆன் 11:114) இதைக் கேட்ட அந்த மனிதர் “எனக்கு மட்டும்தானா?” என வினவினார். “இல்லை! இது என்னைப் பின்பற்றும் உம்மத்தினர் (சமூகத்தினர்) அனைவருக்கும்தான்” என நவின்றார்கள் நபி அவர்கள். (புகாரி, முஸ்லிம்)

அறிவிப்பாளர் : உபாதா பின் ஸாமித் (ரலி)
அண்ணல் நபி நவின்றார்கள்: “ஐவேளைத் தொழுகைகளை அல்லாஹ் மக்கள் மீது கடமையாக்கியுள்ளான். எவர் சிறந்த முறையில் ஒளு செய்து, இத்தொழுகைகளை உரிய நேரத்தில் நிறைவேற்றுகிறாரோ இன்னும் எவருடைய உள்ளம் தொழுகையில் பணிந்திருக்கிறதோ அவரை மன்னிப்பது இறைவனின் பொறுப்பாகும். மேலும், எவர் இவ்வாறு தொழுகையைப் பேணிச் செயல்படவில்லையோ அவரை இறைவனின் மன்னித்தருளுதல் எனும் பொறுப்பான வாக்குறிதி சேராது. இறைவன் நாடினால் அவரை மன்னிப்பான், நாடினால் தண்டிப்பான்.” (அபூதாவூத்)


அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி)
நபிகள் நாயகம் அவர்கள் ஒருநாள் தொழுகையைக் குறித்து உரை நிகழ்த்தினார்கள். அப்போது பின்வருமாறு கூறினார்கள்: “எவர் தம் தொழுகைகளைச் சாpயான முறையில் பேணி வருகின்றாரோ அவருக்கு - அவரது தொழுகை இறுதித் தீர்ப்புநாளில் ஔpயாகவும் ஆதாரமாகவும் அமையும். ஈடேற்றத்திற்கு காரணமாக அமையும். எவர் தமது தொழுகைகளைப் பேணவில்லையோ அவருக்கு அத்தொழுகை ஒளியாகவும் அமையாது, ஆதாரமாகவும் ஆகாது, ஈடேற்றத்திற்கான சாதனமாகவும் இருக்காது. (முஸ்னத் அஹ்மத், இப்னு ஹிப்பான்)


அறிவிப்பாளர்: அனஸ் (ரலி)
நபி அவர்கள் நவின்றார்கள்: “இது நயவஞ்சகனின் தொழுகையாகும். அவன் உட்கார்ந்து கொண்டு, சூரியன் மஞ்சளித்துப் போகும்வரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றான். இணை வைப்பாளர்களுக்குரிய சூரிய வழிபாட்டு நேரம் வரும்போது அவன் எழுகின்றான், சீக்கிரம் சீக்கிரமாக நான்கு ரக்அத்களை கொத்தி எடுக்கின்றான் (கோழி தன் அலகை பூமியில் கொத்தி எடுப்பதைப்போல) அவன் தன் தொழுகையில் அல்லாஹ்வைச் சிறிதும் நினைவு கூர்வதில்லை.” (முஸ்லிம்)


அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி)
நபி அவர்கள் நவின்றார்கள்: உலகத்தை நிர்வகிக்கும் பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ள பகல் நேர இரவு நேர வானவர்கள், வைகறை வேளையிலும் மாலைப்பொழுதினிலும் தொழுகையில் அவர்கள் ஒன்று கூடுகிறார்கள். தம் பணியை பரஸ்பரம் ஒப்படைக்கின்றார்கள். உங்கள் மத்தியில் இருக்கும் வானவர்கள் தம் இறைவனிடம் செல்லும்போது, “நீங்கள் என் அடியாரை எந்த நிலையில் விட்டு வந்தீர்கள்?” என்று அவன் வினவுவான். அதற்கவர்கள்,

“நாங்கள் உன் அடியார்களிடம் சென்றபோது அவர்கள் தொழுகையில் இருந்ததைக் கண்டோம். நாங்கள் அவர்களை விட்டு வரும்போது கூட அவர்கள் தொழும் நிலையிலேயே விட்டு வந்தோம்” என்பார்கள். (புகாரி, முஸ்லிம்)


உமாடிபின் கத்தாப் (ரலி) அவர்களைப்பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தம்முடைய ஆளுநர்கள் அனைவருக்கும் பின்வருமாறு கடிதம் அழுதினார்கள்: உங்களுடைய பணிகளில் என்னிடம் அனைத்தையும் விட அதிக முக்கியத்துவம் வாய்ந்தது தொழுகையே! எவன் தன் தொழுகையைப் பேணுகின்றானோ அதனைக் கண்காணித்த வண்ணம் இருப்பானோ அவன் தன் மார்க்கம் முழுவதையும் பேணி நடப்பான். எவன் தன் தொழுகையை வீணடித்து விடுகின்றானோ அவன் மற்ற விஷயங்களைத் தாராளமாக வீணடிக்கக் கூடியவனாகவே இருப்பான். (மிஷ்காத்)


அறிவிப்பாளர் : அப+ஹுரைரா (ரலி)
நபி அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளில் ஏழு வகையான மனிதர்களுக்கு அல்லாஹ் தன் நிழலில் இடம் கொடுப்பான். 1. நீதி செலுத்தும் அரசன். 2. அல்லாஹ்வின் வணக்கத்தில் தன் இளமையைக் கழித்த வாலிபன். 3.எந்த மனிதனின் உள்ளம் பள்ளிவாசலின் நினைவிலேயே இருக்கின்றதோ அந்த மனிதன். அவன் பள்ளிவாசலை விட்டு வெளியே செல்லும்போது மீண்டும் பள்ளிவாசலுக்குள் புகுவதை எதிர்பார்த்த வண்ணமிருப்பான். 4.எந்த இரு மனிதர்களுடைய நட்புக்கு அல்லாஹ்வும் அவனது மார்க்கமும் அடிப்படைகளாக அமைந்திருந்தனவோ அந்த மனிதர்கள். அவர்கள் அதே உணர்வுடன் ஒன்று கூடுவார்கள், அதே உணர்வுடன் பிரிவார்கள். 5. தனிமையில் இறைவனை நினைவு கூர்வதால் கண்களில் கண்ணீர் வழிந்தோடும் மனிதன். 6. உயர் குடும்பத்தைச் சேர்ந்த அழகான பெண்ணொருத்தி தகாத செயல் செய்திட அழைத்தபோது, இறையச்சத்தின் காரணத்தால் அவ்வழைப்பை ஏற்க மறுத்துவிட்ட மனிதன். 7. தன் வலக்கரம் கொடுப்பதை இடக்கரம் அறியாத வகையில் தருமம் செய்த மனிதன்.”(புகாரி, முஸ்லிம்)


அறிவிப்பாளர் : ஷக்காத் பின் அவ்ஸ் (ரலி)
நான் நபி அவர்கள் இவ்வாறு கூறியதைக் கேட்டிருக்கின்றேன் “வெளிப்பகட்டுக்காகவே தொழுதவன் (ஷிர்க் செய்தவன்) இணை வைத்தவன் ஆவான். வெளிப்பகட்டுக்காகவே நோன்பு நோற்றவனும் இணை வைத்தவன்தான், வெளிப்பகட்டுக்காகவே கொடை அளித்தவனும் இணை வைத்தவனே!” (முஸ்னத் அஹமத்

பாஸ்போர்ட்-இனி தபாலில் விண்ணப்பிக்க முடியாது


சென்னை: வரும் 25ம் தேதி முதல் அஞ்சல் மற்றும் கூரியர் மூலம் அனுப்பப்படும் பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பதாரர்களிடமிருந்து கவுண்டர்களில் நேரடியாகவும், பல்வேறு மாவட்டங்களில் உள்ள 50 விரைவு அஞ்சல் மையங்கள் மூலமாகவும்,

மாவட்ட ஆட்சியர் அலுவலங்களில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட பாஸ்போர்ட் பிரிவுகள் மூலமாகவும், அங்கீகரிக்கப்பட்ட டிராவல் ஏஜென்சிகள் மூலமும், தபால் மற்றும் கூரியர் மூலமும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது விண்ணப்பதாரர்கள் தங்களுடைய கோப்பு எண்களை பெறுகின்றனர். ஆனால், மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு தபால் அல்லது கூரியர் மூலம் விண்ணப்பங்களை அனுப்பும் விண்ணப்பதாரர்கள், இந்த கோப்பு எண்ணை பெறுவதில் சிரமங்கள் ஏற்படுகின்றன.

ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் கோப்பு எண்ணை தெரியப்படுத்துவதும், அதற்கான கடிதங்கள் அனுப்புவதும் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு மிகுந்த பணிச் சுமையை ஏற்படுத்துகிறது.

அத்துடன் பாஸ்போர்ட் விண்ணப்பத்துடன் இணைக்கப்படும் ஆவணங்களின் நகல்படிகளை மூல ஆவணங்களுடன் சரி பார்க்க இயலாததால் போலியான ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படுகின்றன.

மாவட்ட அளவில் விண்ணப்பங்களை ஏற்கும் திட்டம் பரவலாக்கப்பட்டிருப்பதால் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு விண்ணப்பங்களை தபால் அல்லது கூரியர் மூலம் அனுப்ப வேண்டாம் என்று விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அவர்கள் தங்களுக்கு அருகில் உள்ள மாவட்ட பாஸ்போர்ட் பிரிவிலோ அல்லது விரைவு அஞ்சல் மையங்களிலோ விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதனால் வரும் 25ம் தேதியில் இருந்து தபால் மற்றும் கூரியர் மூலம் அனுப்பப்டும் பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அந்த விண்ணப்பங்கள் அவர்களுக்கே திருப்பி அனுப்பப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தபால் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று ஆடம்பரமாக விளம்பரம் செய்துவிட்டு இப்போது ஜகா வாங்கியுள்ளது பாஸ்போர்ட் அலுவலகம்.

இந்தத் திட்டத்தை ஆரம்பிக்கும்போதே இந்த சிக்கல்கள் வருமே என்று இவர்களுக்குத் தெரியாதா..?

மேலும் சிக்கல் இருந்தால் அதைத் தீர்ப்பதற்கான வழிகளை ஆராய்வதை விட்டுவிட்டு இந்தத் திட்டத்தையே கைவிட்டுள்ளனர் பாஸ்போர்ட் அதிகாரிகள்.

இதுவல்லவோ பொறுப்புணர்வு!.

சென்னை-ரூ.5.5 கோடி சீன பொம்மைகள் பறிமுதல்!

ரூ.5.5 கோடி மதிப்புள்ள தடை செய்யப்பட்ட சீன பொம்மைகளை சென்னையில் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இந்தியாவில் சீன பொம்மைகள் முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால் திருவொற்றியூர் விம்கோ நகரில் உள்ள தனியார் கண்டெய்னர் நிறுவனத்தில் தடையை மீறி இந்தப் பொம்மைகள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அதிகாரிகள் சென்று கண்டெய்னர்களை சோதனை செய்தனர்.

சீனாவில் இருந்து சட்ட விதிகளுக்கு புறம்பாக உரிய ஆவணங்கள் இல்லாத குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன. பின்னர், பொம்மைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவைகளின் மதிப்பு சுமார் ரூ.5.5 கோடி.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுங்கத்துறை ஆணையர் ராஜன், "கடந்த சில நாட்களாக கண்டெய்னரில் உள்ள பொருட்களை சோதனை செய்து வருகிறோம். இங்கு வந்துள்ள சீனா பொம்மைகளுக்கு விலாசம் மற்றும் ஏனைய ஆவணங்கள் இல்லை. மேலும், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகியும் இந்த பொம்மைகளை பெற்றுக் கொள்ள யாரும் வரவில்லை. மேலும் பல கண்டெய்னர்களை சோதனை செய்யப் போகிறோம்," என்றார்.

வறட்சி மாவட்டமாக அறிவிக்கப்படுமா தூத்துக்குடி?

தென்மேற்குப் பருவமழை பொய்த்ததால் தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தின் பிரதான நீராதாரம் தாமிரபரணி ஆறுதான். இம் மாவட்டத்தில் தாமிரபரணி பாசனத்தில் 46,107 ஏக்கர் நன்செய் நிலங்கள் பிசானம், கார் என இருபோக சாகுபடி முறையில் இருந்து வருகின்றன.

தாமிரபரணி ஆற்றின் பாபநாசம், மணிமுத்தாறு ஆகிய இரு அணைகள் மூலம் இந்த நன்செய் நிலங்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி பாசனத்தில் நெற்பயிரே முழுமையாகப் பயிரிடப்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளாக போதுமான தண்ணீர் இல்லாத காரணத்தால், வாழையும் பல இடங்களில் பயிரிடப்பட்டு வருகிறது.

இந் நிலையில், நிகழாண்டில் தென்மேற்குப் பருவமழை பொய்த்ததால், மாவட்டத்தில் உள்ள 46,107 ஏக்கர் நிலங்களுக்கும் கார் சாகுபடிக்கு அனுமதி வழங்கி தண்ணீர் விடப்படவில்லை.

வாழைப்பயிர் உள்ள இடங்கள் தவிர, இந்த ஆண்டு சுமார் 30 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர் சாகுபடி செய்ய தயாராக இருந்த நிலையில், கார் சாகுபடிக்கு அனுமதி வழங்கப்படாததால், நெல் சாகுபடி நடைபெறவில்லை. இதன் காரணமாக விவசாயிகளுக்கு சுமார் ரூ.400 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்கிறார், தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி நதிநீர் பாதுகாப்புப் பேரவைத் தலைவர் எஸ். நயினார் குலசேகரன்.

இதேபோன்று, மாவட்டத்தில் அத்திமரப்பட்டி, காலாங்கரை, ஸ்ரீவைகுண்டம், சாயர்புரம் பகுதியில் சுமார் ஒரு கோடி வாழைகள் பயிரிடப்பட்டுள்ளன. இவற்றில் பல லட்சம் வாழைகள் தண்ணீர் இல்லாமல் கருகியுள்ளன. மேலும், ஏராளமான வாழைகள் கருகும் நிலையில் உள்ளன. இதன்மூலம் விவசாயிகளுக்கு சுமார் ரூ. 100 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

எனவே, தூத்துக்குடி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து, அதற்கான

நிவாரணப் பணிகளைத் தொடங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

இதே கருத்தையே வலியுறுத்தினார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்டப் பொருளாளர் எஸ். சங்கரசுப்பு.

இது தொடர்பாக அரசுக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஏற்கனவே மனு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறிய சங்கரசுப்பு, மாவட்டத்தில் இந்த ஆண்டிற்கான நிலவரியை ரத்து செய்ய வேண்டும் என்றார்.

வடகிழக்குப் பருவமழையும் இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு இருக்காது என்ற தகவல்களால் விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், எட்டையபுரம், கோவில்பட்டி, கயத்தாறு,

புதூர் உள்ளிட்ட பகுதிகளில் மானாவாரி பயிர் சாகுபடி செய்ய விவசாயிகள் வடகிழக்குப் பருவமழையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

சுவாமி நெல்லையப்பர் பிரதான சாலையில் அரசு மதுக் கடை அமைக்க எதிர்ப்பு


திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் பிரதான சாலை பகுதியில் அரசு மதுக் கடை அமைக்கக் கூடாது என, அனைத்து மோட்டார் தொழிலாளர்கள் பாதுகாப்பு நலச் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஆட்சியரிடம் அச் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை அளித்த மனு: சுவாமி நெல்லையப்பர் கோயில் பிரதான சாலையில் உள்ள எம்.பி.எம். வணிக வளாகம் அருகே புதிதாக அரசு மதுக் கடை அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாகத் தெரிகிறது. அந்த இடத்தைச் சுற்றி 50-க்கும் மேற்பட்ட வாகனப் பழுதுநீக்கும் தொழில்நிறுவனங்கள் உள்ளன. அங்கே மதுக் கடை அமைத்தால் தொழிலாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடையூறு ஏற்படும்.

சில தினங்களுக்கு முன்பு அங்கு மதுக் கடை அமைக்க ஆரம்பக்கட்ட வேலைகள் நடைபெற்றன. அப்போது கழிவுகளை எரித்தபோது தீவிபத்து நேரிட்டது.

அருகே அரசின் உணவுப் பொருள் சேமிப்புக் கிடங்கும் உள்ளது. மேலும், தொழில் செய்யும் இடத்தில் மதுக் கடை அமைத்தால் அது பல்வேறு வகைகளில் இடையூறாக இருக்கும்.எனவே, தொழில் மற்றும் தொழிலாளர்களின் நலன்கருதி அரசு மதுக் கடைக்கு கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.

நெல்லையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொடியேற்று விழா

திருநெல்வேலி பேட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கொடியேற்று விழா நடைபெற்றது.

ரொட்டிக் கடை பஸ் நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த விழாவுக்கு, கட்சியின் மாநில துணைத் தலைவர் எஸ்.எம். கோதர்மைதீன் தலைமை வகித்து, கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.

இளைஞர் அணி நிர்வாகி க. அப்துல்ஸ்லாம் சுபேர், என். சம்சுதீன், முகம்மது கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் கட்சியின் நிர்வாகி அப்துல் ரஹ்மான் ஷிப்லி, வீ.ம. திவான் முகைதீன், சாகுல்ஹமீது, முஹம்மது அசன் உள்பட பலர் பங்கேற்றனர்

திங்கள், 21 செப்டம்பர், 2009

இஸ்லாமிய சமூக சேவை மையம் சார்பில் நலத்திட்ட உதவிகள்

தூத்துக்குடியில் இஸ்லாமிய சமூக சேவை மையம் சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் தாஃவா மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அல்- இஸ்லாஹ் டிரஸ்ட் மற்றும் இஸ்லாமிய சமூக சேவை மையத்தின் தலைவர் எச்.எம். அஹமத் இக்பால் தலைமை வகித்தார்.

நிர்வாகிகள் பொருளாளர் சுலைமான், துணைத் தலைவர் அண்ணல் மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகமது அலி என்பவரின் தாய்க்கு கர்ப்பப்பை அறுவை சிகிச்சைக்காக ரூ. 10 ஆயிரம், ரஹ்மத்துல்லா என்பவரின் மகளுக்கு மருத்துவ உதவியாக ரூ. 5 ஆயிரம் வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, குவைத் ஐ.ஜி.சி. மற்றும் அல்-இஸ்லாஹ் டிரஸ்ட் மற்றும் இஸ்லாமிய சமூக சேவை மையம் இணைந்து ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள அரிசி மற்றும் மசாலா பொருள்கள் சுமார் 200 பேருக்கு பித்ரா எனும் பெருநாள் உதவியாக வழங்கப்பட்டது.

இஸ்லாமிய சமூக சேவை மைய செயலர் சம்சுதீன் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

காயல்பட்டினம் பள்ளியில் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா

காயல்பட்டினம் சுபைதா மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளித் தாளாளர் வாவு எஸ். காதர் தலைமை வகித்தார்.

பள்ளித் தலைமை ஆசிரியை ஜெஸிமா முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக திருச்செந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன் கலந்துகொண்டு மாணவிகளுக்கு அரசின் இலவச சைக்கிள்களை வழங்கினார்.

முடிவில் உதவித் தலைமை ஆசிரியை ஏ. நீர்ஜஹான் நன்றி கூறினார்.

ஹஜ் பயணிகளுக்கு நாளை மறுநாள் தடுப்பூசி முகாம்

புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு பாளையங்கோட்டையில் செப். 23-ல் தடுப்பூசி போடப்படுகிறது.

தமிழ்நாடு ஹஜ் கமிட்டி மூலம் இந்த ஆண்டில் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு, பாளையங்கோட்டை மேட்டுத் திடலில் உள்ள காதிரி நகர் முஸ்லிம் அனாதை நிலைய வளாகத்தில் இம் மாதம் 23-ம் தேதி காலை 10 மணிக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை முஸ்லிம் அனாதை நிலைய தலைவர் எம். ஜமால் முகம்மது, செயலர் எம். ஷாகுல் அமீது மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

செப். 25-ல் தனியார் வேலைவாய்ப்பு சந்தை நிகழ்ச்சி

திருநெல்வேலியில் தனியார் வேலைவாய்ப்பு சந்தை நிகழ்ச்சி இம்மாதம் 25ஆம் தேதி நடைபெறுகிறது.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் வே.ப. சுஜயசேகரன் சனிக்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

தனியார் நிறுவனங்களில் ஏற்படும் காலியிடங்களுக்கு அவரவர் விருப்பத்திற்கு இணங்க தகுதியான நபர்களைத் தேர்வு செய்வதற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு சந்தை நிகழ்ச்சி மாதம்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் வேலை அளிப்போரும், வேலை வேண்டுவோரும் நேருக்கு நேர் சந்தித்து பேச வாய்ப்பு உள்ளது. இதனடிப்படையில் இம்மாதம் 25ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு வேலைவாய்ப்பு சந்தை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

தனியார் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து வரும் 24ஆம் தேதிக்குள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலருக்கு தெரிவிக்கலாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.

ஞாயிறு, 20 செப்டம்பர், 2009

ஈகைப் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சிகள்

நாளை ‌தி‌ங்க‌ட்‌கிழமை செ‌ப்ட‌ம்ப‌ர் 21ஆ‌ம் தே‌தி ரம்ஜான் திருநாளை முன்னிட்டு மக்கள் தொலைக்காட்சி‌யி‌ல் அ‌ன்றைய நாள் முழுவது‌ம் சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்குகிறது.

இ‌ன்று காலை 8.30 ம‌ணியள‌வி‌ல், க‌ட‌ற்பூ‌க்களு‌ம் சா‌ய்வு நா‌ற்கா‌லியு‌ம் ‌நிக‌ழ்‌ச்‌சி ஒ‌ளிபர‌ப்பா‌கிறது.

இ‌ந்த ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல், கடலோர கிராமத்தில் தன் எழுத்துப் பயணத்தைத் தொடங்கி சாகித்ய அகாதமி விருது வரைக்குமான தனது எழுத்துப் பயணம் குறித்து எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் தனது அனுபவ‌ங்களை பகிர்ந்து கொள்‌கிறா‌ர்.

உலகெங்கும் வாழும் இஸ்லாமிய சகோதரர்கள் தன் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்ளும் வா‌ழ்‌த்துக‌ள் நிகழ்ச்சி காலை 9 ம‌ணியள‌வி‌ல் நேரடி ஒ‌ளிபர‌ப்பா‌கிறது.

ஹஜ் புனிதப் பயணம் போக விரும்புகிறவர்களுக்கு வழிகாட்டும் பயணம் போகலாம் நிகழ்ச்சி காலை 10.30 மணிக்கும், பகல் 12 மணிக்கு புதுக்கவிதை உலகின் முடிசூடா மன்னன் கவிக்கோ அப்துல் ரகுமானுடன் ஓர் சந்திப்பும் ஒளிபரப்பாகிறது.

விதவிதமாய் பிரியாணி சமைப்பதை செய்முறையோடு விளக்கும் நிகழ்ச்சி பிரியமுள்ள பிரியாணி. இந்த நிகழ்ச்சி பகல் 1 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி `தமிழா ஆஸ்கர் தமிழா...' ஆஸ்கர் திரைப்பட விழாவில் 2 விருதுகளைப் பெற்ற ஏ.ஆர்.ரகுமானைப் பற்றியும், இசைக் குறுந்தகடு பற்றியும் அதன் பின்னணி பற்றியுமான பதிவு.

இரவு 8.30 மணிக்கு தி மெசேஜ் நபிகள் நாயகத்தைப் பற்றிய திரைப்படம் குறித்த ஒரு பார்வை ஒ‌ளிபர‌ப்பா‌கிறது.

நோன்பு (ஈகை) பெருநாள் - வாழ்த்துக்கள் !

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அனைத்து இஸ்லாமிய மக்களுக்கும் ஸ்ரீவை மக்கள் சார்பில் எங்களது உள்ளங்கனித்த இனிய ஈகை பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

" எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரின் நோன்பு மற்றும் நமது துவாக்களையும் நிறைவேற்றி வைப்பானாக " அமீன்

வஸ்ஸலம்:
ஸ்ரீவைமக்கள்

ஈமானின் கிளைகள்

1) அல்லாஹ்வை நம்புவது.
2) இறைத்தூதர்களை நம்புவது.
3) மலக்குமார்களை நம்புவது.
4) அல்குர்ஆனையும் ஏனைய இறைவேதங்களையும் நம்புவது.
5) நன்மை, தீமை அனைத்தும் அல்லாஹ்வால் நிர்ணயிக்கப்பட்டதே! என்ற விதியை நம்புவது.
6) உலக அழிவு நாளை நம்புவது.
7) மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதை நம்புவது.
8) மரணத்திற்குப் பின் எழுப்பப்பட்டு ஓரிடத்தில் ஒன்று சேர்க்கப்படும் மஹ்ஷரை நம்புவது.
9) முஃமின் செல்லுமிடம் சொர்க்கம் என நம்புவது.
10) அல்லாஹ்வை நேசிப்பது.
11) அல்லாஹ்வுக்குப் பயப்படுவது.
12) அல்லாஹ்வின் அருளில் ஆதரவு வைப்பது.
13) அல்லாஹ்வின் மிதே தவக்குல் வைப்பது.
14) நபி(ஸல்) அவர்களை நேசிப்பது.
15) நபி(ஸல்) அவர்களை கண்ணியப்படுத்துவது.
16) இறைநிராகரிப்பை விட நெருப்பில் எறியப்படுவதே மேல்! எனும் அளவிற்கு இஸ்லாத்தை நேசிப்பது..
17) அல்லாஹ்வைப் பற்றியும் அவனது மார்க்கததைப் பற்றியுமுள்ள கல்வியை கற்பது.
18) கல்வியைப் பரப்புவது.
19) அல்குர்ஆனை கற்பது மற்றும் கற்றுக் கொடுப்பதன் மூலம் அதனை கண்ணியப்படுத்துவது.
20) தூய்மையாக இருப்பது.
21) ஐவேளை-கடமையான -தொழுகைகளை நிறைவேற்றுவது.
22) ஜகாத் கொடுப்பது.
23) ரமலான் மாதம் நோன்பு நோற்பது.
24) இஃதிகாஃப் இருப்பது.
25) ஹஜ் செய்வது.
26) அல்லாஹ்வுடைய பாதையில் அறப்போர் புரிவது.
27) அல்லாஹ்வுடைய பாதையில் அறப்போர் புரிவதற்காக ஆயத்தமாவது, தயார் நிலையில் இருப்பது.
28) -அறப்போரில்- எதிரியை சந்திக்கும் போது உறுதியாக நிற்பது, புறமுதுகிட்டு ஓடாமலிருப்பது.
29) முஸ்லிம்களின் ஆட்சித் தலைவருக்கு போரில் கனீமத்தாகக் கிடைத்த பொருட்களில் ஐந்தில் ஒரு பங்கைக் கொடுப்பது.
30) அல்லாஹ்விற்காக அடிமையை உரிமை விடுவது.
31) குற்றவாளி அதற்குரிய பரிகாரங்களை நிறைவேற்றுவது. (1. கொலை, 2. லிஹார், 3. ரமலான் நோன்பின் போது உடலுறவு கொள்ளல் போன்றவற்றின் பரிகாரங்கள்)
32) ஒப்பந்தங்களை நிறைவேற்றுவது.
33) அல்லாஹ்வின் எண்ணிலடங்கா அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவது.
34) தேவையற்ற விஷயங்களிலிருந்து நாவை பாதுகாப்பது.
35) அமாநிதத்தை உரியவரிடம் ஒப்படைப்பது.
36) கொலை செய்யாதிருப்பது.
37) கற்பைப் பேணுவது, தவறான வழிகளில் இச்சையைத் தீர்த்துக் கொள்ளாதிருப்பது.
38) திருடாதிருப்பது.
39) உணவு மற்றும் பானங்களில் -ஹலால்,ஹராம்- பேணுவது.
40) மார்க்கத்திற்கு முரணான அனைத்து வீண், விளையாட்டுகளை விட்டும் தூரமாவது.
41) ஆண்கள், பட்டாடை மற்றும் கரண்டைக்கு கீழ் ஆடைகளை அணியாதிருப்பது..
42) ஹராமான பொருளாதாரத்தை உட்கொள்ளாதிருப்பது, செலவு செய்வதில் நடுநிலையை கடைபிடிப்பது.
43) மோசடி, பொறாமை போன்ற தீயபண்புகளை தவிர்ப்பது.
44) மனித கண்ணியத்திற்கு பங்கம் விளைவிக்காதிருப்பது.
45) அல்லாஹ்வுக்காகவே -மனத்தூய்மையுடன்- நல்லறங்கள் புரிவது.
46) நல்லவைகளைச் செய்தால் மகிழ்வது, தீயவைகளைச் செய்துவிட்டால் கவலைப்படுவது.
47) பாவமன்னிப்பின் மூலம் அனைத்துப் பாவங்களையும் போக்குவது..
48) அகீகா மற்றும் (ஹஜ்ஜின் போது கொடுக்கப்படும்)ஹதீ, உழ்ஹிய்யா போன்ற இறைநெருக்கத்தைப் பெற்றுத் தரும் காரியங்களைச் செய்வது.
49) (இஸ்லாமிய)ஆட்சித் தலைவருக்குக் கட்டுப்படுவது.
50) முஸ்லிம்களின் கூட்டமைப்புடன் இணைந்திருப்பது.
51) மக்களுக்கு மத்தியில் நீதமாக தீர்ப்பளிப்பது.
52) நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பது.
53) நல்லவைகளிலும் இறையச்சமான காரியங்களிலும் ஒருவருக்கொருவர் உறுதுணையாயிருப்பது.
54) வெட்கப்படுவது.
55) பெற்றோருக்கு பணிவிடை செய்வது.
56) உறவினர்களுடன் இணைந்து வாழ்வது.
57) நற்குணத்துடன் நடப்பது.
58) அடிமை மற்றும் பணியாட்களிடம் நல்லமுறையில் நடப்பது.
59) அடிமை எஜமானுக்குக் கட்டுப்படுவது.
60) பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினரின் உரிமைகளைப் பேணுவது, அவர்களுக்கு மார்க்கத்தைப் போதிப்பது.
61) முஸ்லிம்களை நேசிப்பது, அவர்களுக்கு மத்தியில் ஸலாத்தைப் பரப்புவது.
62) ஸலாத்திற்கு பதிலுரைப்பது.
63) நோயாளியை விசாரிப்பது.
64) முஸ்லிம்களில் மரணித்தவர்களுக்காக தொழுகை நடத்துவது.
65) தும்மியவருக்கு -யர்ஹமுகல்லாஹ் என -பதிலுரைப்பது.
66) இறைநிராகரிப்பாளர்கள் மற்றும் சமூகவிரோதிகளை விட்டும் தூரமாகியிருப்பது, அவர்கள் விஷயத்தில் கடுமையாக நடந்து கொள்வது.
67) அண்டை வீட்டாருடன் கண்ணியமாக நடப்பது.
68) விருந்தினர்களை கண்ணியப்படுத்துவது.
69) பிறரின் குறைகளை மறைப்பது.
70) சோதனைகளில் பொறுமையை மேற்கொள்வது.
71) உலக விஷயத்தில் பற்றற்று இருப்பது, உலக ஆசைகளைக் குறைத்துக் கொள்வது.
72) மார்க்க விஷயத்தில் ரோஷப்படுவது.
73) வீணான அனைத்துக் காரியங்களையும் புறக்கணிப்பது.
74) அதிகமாக தர்மம் செய்வது.
75) சிறியவர்களுக்கு இரக்கம் காட்டுவது, பெரியவர்களை மதிப்பது.
76) பிரச்சினைக்குரியவர்களுக்கு மத்தியில் சமாதானம் செய்து வைப்பது.
77) தனக்கு விரும்புவதை தனது முஸ்லிம் சகோதரனுக்கும் விரும்புவது.
78) துன்பம் தரும் பொருட்களை பாதையை விட்டும் அகற்றுவது.



(குறிப்பு: மேற்கூறப்பட்ட 77 கிளைகளும் ஹதீஸ் க வல்லுனர்களில் ஒருவரான இமாம் பைஹகீ(ரஹ்) அவர்கள் ஷுஃபுல் ஈமான் -ஈமானின் கிளைகள்- எனும் நூலில் அல்குர்ஆன் மற்றும் ஹதீஸின் அடிப்படையில் தொகுத்துக் தந்தவைகளில் தலைப்புகளாகும். இவைகளை குர்ஆன் மற்றும் ஹதீஸின் அடிப்படையில் விரிவாகக் கற்று அதன்படி செயல்படுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.)

ரூ.1.6 கோடிக்கு ஏலம் போன எம்.எப். ஹூசேனின் ஓவியம்

நியூயார்க்: புகழ் பெற்ற ஓவியர் எம்.எப். ஹூசேனின் ஓவியம் ரூ. 1.6 கோடிக்கு ஏலம் போயுள்ளது.

ஹூசேன் வியாழ்க்கிழமை 94வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அன்றைய தினம் நியூயார்க்கில் உள்ள சோத்பி ஏல மையத்தில் அவருடைய ஓவியம் ஏலத்திற்கு விடப்பட்டது.

முதலில் குறைந்த விலையே நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஏலம் நடந்த மையத்திற்கு ஹூசேன் வந்த பின்னர் ஏலத் தொகை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே போனது.

இறுதியில் ரூ. 1.6 கோடிக்கு அவருடைய படைப்பு ஏலம் போனது.


நாளை ரமலான்: தலைமை காஜி

புனித ரமலான் பண்டிகை தமிழ்நாட்டில் திங்கள்கிழமை (செப்டம்பர் 21) கொண்டாடப்படும் என்று தமிழ்நாட்டின் தலைமைக் காஜி சலாவூதின் முகமது அயூப் அறிவித்துள்ளார்.


சென்னையில் சனிக்கிழமை இரவு பிறை தெரியவில்லை; இதையடுத்து ரமலான் பண்டிகை திங்கள்கிழமை கொண்டாடப்படும் என அவர் கூறியுள்ளார்.

ரம்ஜான்: காயல்பட்டினத்தில் மின் தடையை தவிர்க்க தேமுதிக கோரிக்கை

ரம்ஜான் பண்டிகையன்று காயல்பட்டினத்தில் மின் தடையை தவிர்க்க வேண்டுமென தேமுதிகவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக அதன் நகரச் செயலர் எம்.எச்.எம். சதக்கத்துல்லாஹ் மின் வாரிய அதிகாரிகளுக்கு அனுப்பிய மனு:

நோன்பு முடிவு பெறும் ரம்ஜான் பண்டிகையன்று ஏற்கெனவே அறிவித்துள்ள 2 மணி நேர மின்தடையை தவிர்த்து அன்று முழுவதும் சீரான மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

நெல்லையில் இலவச மருத்துவ முகாம்

திருநெல்வேலியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

பாரத் பெட்ரோலிய கார்ப்பரேஷன் நிறுவனமும் வண்ணார்பேட்டையில் உள்ள ஸ்ரீசுதர்சன் மருத்துவமனை ஆகியவை சார்பில் இலவச மருத்துவ முகாமை நடைபெற்றது.

வாகன ஓட்டுனர்கள், நடத்துநர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் முகாமில் கலந்துகொண்டனர். நீரிழிவு நோய், ரத்தக் கொதிப்பு, கண் போன்றவைகளுக்கான பரிசோதனைகள் நடைபெற்றன

அதிகக் கட்டணம் வசூலிக்கக் கூடாது


திருநெல்வேலி மாநகரப் பகுதியில் பயணிகளிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் அதிகக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என, மாநகர காவல் துறை துணை ஆணையர் எஸ்.எஸ். மாணிக்கராவ் தெரிவித்தார்.

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் ஏற்படும் விபத்துகளைத் தடுத்தல், போக்குவரத்து விதிமுறைகளைக் கடுமையாக அமல்படுத்துதல் தொடர்பாக காவல் துறையினர் சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்டோ ஓட்டுநர்கள் பங்கேற்றனர். கூட்டத்துக்கு மாநகர காவல் துறை துணை ஆணையர் எஸ்.எஸ். மாணிக்கராவ் (குற்றம் மற்றும் போக்குவரத்து) தலைமை வகித்தார்.

கூட்டத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வழங்கப்பட்ட அறிவுரைகள்:

மது குடித்துவிட்டு ஆட்டோ ஓட்டக் கூடாது. குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் பயணிகளை ஆட்டோவில் ஏற்றக் கூடாது. அரசு விதிமுறைக்கு உள்பட்டு பள்ளிக் குழந்தைகளை ஆட்டோவில் ஏற்ற வேண்டும். ஓட்டுநர்கள் கட்டாயம் சீருடை அணிய வேண்டும். பதிவு எண்களை உரிய வடிவத்தில் ஆட்டோவில் எழுத வேண்டும். ஓட்டுநர் உரிமம், ஆட்டோவுக்கான உரிய ஆவணங்கள் கண்டிப்பாக ஆட்டோவில் இருக்க வேண்டும். பயணிகளிடம் அதிகக் கட்டணம் வசூலிக்கக் கூடாது.

ஓட்டுநர் இருக்கையில் பயணிகளை அமர வைக்கக் கூடாது. குற்றச் செயல்களைத் தடுக்கவும், கண்டுபிடிக்கவும் கிடைத்த தகவல்களை ஆட்டோ ஓட்டுநர்கள் காவல் துறைக்கு தெரிவித்து உதவ வேண்டும்.

சனி, 19 செப்டம்பர், 2009

ஜனவரி 21, 22, 23,24 தேதிகளில் உலகத் தமிழ் மாநாடு - கருணாநிதி

சென்னை: கோவையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகத் தமிழ் மாநாடு ஜனவரி மாதம் 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு நடைபெறும் என முதல்வர்கருணாநிதிஅறிவித்துள்ளார்.

சென்னையில் நடந்த கலெக்டர்கள் மாநாட்டின்போது உலகத் தமிழ் மாநாடு கோவையில் பிரமாண்டமான அளவில் நடத்தப்படும் என அறிவித்தார் முதல்வர்கருணாநிதி

இதையடுத்து இன்று அமைச்சர்களுடன் முதல்வர்கருணாநிதிஉலகத் தமிழ் மாநாடு குறித்து ஆலோசனை நடத்தினார்.

இதில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி , வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி, பொங்கலூர் பழனிச்சாமி, மத்திய அமைச்சர் ஆ.ராசா, தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி, நிதித்துறை முதன்மைச் செயலாளர் ஞானதேசிகன், சுற்றுலாத்துறை செயலாளர் இறையன்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதி , கோவையில் 9வது உலகத் தமிழ் மாநாடு, 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 21, 22, 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தெரிவித்தார்.

தூர்தர்ஷனுக்கு வயது 50!

இந்திய தொலைக்காட்சியான தூர்தர்ஷன் துவக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இதன் பொன் விழா ஆண்டையொட்டி (1959-2009), சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரதகான சபாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் ஜெகத்ரட்சகன்,

தூர்தர்ஷன் சேனலை தொலைக்காட்சி வைத்திருக்கும் 91 சதவீத இந்தியர்கள் விரும்பிப் பார்க்கிறார்கள். இதன் 30 சேனல்களை 35 கோடி மக்கள் பார்த்து வருகின்றனர்.

தனியார் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு 7 கோடி மக்களைத்தான் சென்றடைகிறது. நடுநிலையுடன் நாட்டு நடப்புகளை மக்களுக்கு புகட்டும் ஆசிரியராக தூர்தர்ஷன் விளங்குகிறது. பல சேனல்களில் செய்திகள் வாசிக்கப்பட்டாலும், பொதிகை சேனல் தான் உண்மையான செய்திகளை தருகிறது.

ஆசியாவிலேயே மிகப்பெரிய, புகழ் வாய்ந்த சேனல் தூர்தர்ஷன்தான். மகாபாரதம், ராமாயணம் ஆகிய இதிகாசங்களை தத்ரூபமாக ஒளிபரப்பியது. பண்பாட்டை காக்கும் ஒரே நிறுவனம் தூர்தர்ஷன்தான் என்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தூர்தர்ஷன் ஓய்வு பெற்ற தலைமை துணை இயக்குனர் பி.வி.கிருஷ்ணமூர்த்தி, ஓய்வு பெற்ற தலைமை என்ஜினீயர் என்.எஸ்.கணேசன், கர்நாடக இசை கலைஞர் எம்.பாலமுரளி கிருஷ்ணா, நடனக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம், எஸ்.வி.சேகர் எம்.எல்.ஏ. ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தீபாவளி-5 நிமிடத்தில் முடிந்த 11 ரயில்களின் முன்பதிவு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை- சென்னை இடையே 11 அதிவிரைவு சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு ஐந்தே நிமிடத்தில் முடிந்தது. இதனால் பொது மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

வரும் அக்டோபர் 17ம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடும் இழுத்தடிப்புக்குப் பிறகு மதுரை-சென்னை இடையே 11 அதிவிரைவு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே ஒருவழியாய் அறிவித்தது.

அதன்படி, அக்டோபர் 14ம் தேதி நாகர்கோயில்- சென்னை சென்ட்ரல் (வண்டி எண்-0605).

அக்டோபர் 15ம் தேதி நாகர்கோயில்- சென்னை சென்ட்ரல் (0606).

அக்டோபர் 15ம் தேதி மதுரை- சென்னை சென்ட்ரல் (0631).

அக்டோபர் 16ல் சென்னை சென்ட்ரல்- மதுரை (0632).

அக்டோபர் 17ம் தேதி மதுரை- சென்னை சென்ட்ரல் (0671).

அக்டோபர் 18ம் தேதி நாகர்கோயில்- சென்னை சென்ட்ரல் (0648).

அக்டோபர் 18ம் தேதி சென்னை சென்ட்ரல்- மதுரை (0672).

அக்டோபர் 19ம் தேதி திருநெல்வேலி- சென்னை எழும்பூர் (0618).

அக்டோபர் 19ம் தேதி சென்னை சென்ட்ரல்- நாகர்கோயில் (0645).

அக்டோபர் 20ம் தேதி நாகர்கோயில்- திருச்சி (0656) என மொத்தம் 11 அதிவிரைவு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டது.

இதற்கான முன்பதிவு நேற்று காலை 8 மணிக்கு துவங்கி 8.05 மணிக்கெல்லாம் முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இ-டிக்கெட் மூலம் முன்பதிவு நடப்பதாலும், புரோக்கர்கள் தலையீட்டாலும் முன்பதிவு 5 நிமிடங்களுக்குள் முடிந்து விட்டதாக குற்றம் சாட்டப்படுகின்றது.

நோன்புப் பெருநாள் - ஈகைத் திருநாள்!

நோன்பு பெருநாள் தினத்தில் எதையேனும் உண்ணாமல் நபி(ஸல்) அவர்கள் தொழும் திடலுக்கு புறப்பட மாட்டார்கள். அறிவிப்பாளர் புரைதா (ரலி) நூல்கள்: திர்மிதி, தாரகுத்னீ.

நபி(ஸல்) அவர்கள் நோன்பு பெருநாள் தொழுகைக்கு செல்லுமுன் ஒற்றைப்படையாக பேரீத்தப்பழத்தை உண்ணுவார்கள். அறிவிப்பாளர் அனஸ் (ரலி) நூல்கள்: புகாரி, அஹ்மத்.

தொழுகைக்கு செல்வதற்கும் திரும்பி வருவதற்கும் வெவ்வேறான வழியை நபி(ஸல்) அவர்கள் ஏற்படுத்திக் கொண்டார்கள். அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) நூல்: அபூதாவூத்.


நபி(ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகைகளை (பள்ளியில் தொழாமல்) முஸல்லா எனும் மைதானத்திற்கு சென்று தொழுவார்கள். அறிவிப்பாளர் அபூ ஸயீத் அல் குத்ரி (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

நபி(ஸல்) அவர்கள் இரண்டு பெருநாள் தொழுகைகளையும் பள்ளியில் தொழாமல் திடலுக்கு செல்பவர்களாக இருந்தார்கள். (அன்றைய தினம்) முதலில் தொழுகையைத் துவங்குவார்கள். அறிவிப்பாளர் அபூஸயீத் (ரலி) நூல்: புகாரி.

இரு பெருநாள் தொழுகைகளை நபி(ஸல்) அவர்களுடன் பல முறை தொழுதிருக்கிறேன் அவற்றில் பாங்கும் இகாமத்தும் சொல்லப்பட்டதில்லை. அறிவிப்பாளர் ஜாபிர் பின் சமூரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி.

நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையை தொழுதால் அதற்கு முன்னும் பின்னும் எந்தத் தொழுகையையும் தொழ மாட்டார்கள். அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி.

நபி (ஸல்) அவர்கள் (பெருநாள் தொழுகையில்) முதல் ரக்அத்தில் ஓத துவங்குவதற்கு முன் 7 தக்பீர்களும் இரண்டாம் ரக்அத்தில் ஓத துவங்குவதற்கு முன் 5 தக்பீர்களும் கூறுவார்கள். அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: அபூதாவூத்.

நபி (ஸல்) ஏழு - ஐந்து என்று பெருநாள் தொழுகையின் இரண்டு ரக்அத்களில் தக்பீர் சொல்வார்கள் அதன் முன்னும் பின்னும் எதையும் தொழ மாட்டார்கள். அறிவிப்பாளர் அம்ரு பின் ஆஸ் (ரலி) நூல்: அஹ்மத்.

இரண்டு பெருநாள்களிலும் ஜூம்ஆவிலும் நபி(ஸல்) அவர்கள் முதல் ரக்அத்தில் 'ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா...' என்ற (87வது) அத்தியாயத்தையும் இரண்டாம் ரக்அத்தில் 'ஹல் அதாக்க ஹதீஸூல் காஷியா..' என்ற (88வது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள். அறிவிப்பாளர் நுஃமான் பின் பஷீர் (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி.

இரு பெருநாள் தொழுகைகளில் 'காஃப் வல் குர்ஆனில் மஜீத்' என்ற (50வது) அத்தியாயத்தையும் 'இக்தரபதிஸ்ஸாஅத்' என்ற (54வது) அத்தியாயத்தையும் நபி(ஸல்) அவர்கள் ஓதுவார்கள். அறிவிப்பாளர் உமர் (ரலி) நூல்: திர்மிதி.

நபி(ஸல்) அவர்களும் அபூபக்கர் - உமர் போன்ற நபித் தோழர்களும் (மக்களுக்கு) பிரச்சாரம் செய்யும் முன்பு பெருநாள் தொழுகைகளைத் தொழுவார்கள். அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸயீ.

உரை நிகழ்த்துவதற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்கள் மீது சாய்ந்தவாறு அல்லாஹ்வுக்கு அஞ்சுமாறும் அவனுக்கு கட்டுப்படுமாறும் கட்டளையிட்டார்கள். தர்மத்தை வலியுறுத்திப் பேசினார்கள். அறிவிப்பாளர் ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம்.

பெருநாளன்று (பெண்களாகிய) நாங்கள் (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் செல்ல வேண்டுமெனவும், திரைமறைவில் உள்ள பெண்களையும் கன்னிப் பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம். மாதவிலக்கு ஏற்பட்டுள்ள பெண்கள் (தொழும் திடலுக்குச் சென்று) மக்களுக்குப் பின்னால் இருந்து கொண்டு மக்களுடன் சேர்ந்து தக்பீர் கூறுவார்கள். அறிவிப்பாளர் உம்மு அத்தியா (ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்.

புஆஸ் (எனும் போர்) பற்றி அன்ஸாரிகள் இயற்றிய கவிதைகளை இரண்டு சிறுமிகள் பாடிக் கொண்டிருந்தனர். அங்கு வந்த அபூபக்கர்(ரலி) அவர்கள் இறைத்தூதருடைய இல்லத்தில் ஷைத்தானின் இசைக் கருவிகளா... என்று கேட்டார்கள். இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் அபூபக்கரே! அந்தச் சிறுமிகளை விட்டுவிடும் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பெருநாள்கள் உள்ளன. இது நமக்குரிய பெருநாளாகும் என்றார்கள் இது பெருநாள் தினத்தில் நடந்தது. அறிவிப்பாளர் அன்னை ஆயிஷா (ரலி) நூல்: புகாரி.

தப்ஸ் அடித்து பாடிக்கொண்டிருந்த இரண்டு சிறுமிகளைப் பார்த்து அபூபக்கர்(ரலி) அதட்டினார்கள். அதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள் அந்த சிறுமிகள் பாடுவதை விட்டு விடுங்கள். இது பெருநாளைக்குரிய தினமாகும் என்றார்கள். அறிவிப்பாளர் அன்னை ஆயிஷா (ரலி) நூல்: புகாரி.

உலமாக்கள் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் உலமாக்கள் நலவாரியத்தில் உறுப்பினராக சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சியர் கோ. பிரகாஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டில் உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கான சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலைகளில் திட்டமிட்ட உறுதியான முன்னேற்றத்தை அடைவதற்கென உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.

அதில், பதிவு செய்யப்படும் உறுப்பினர்களுக்கு அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் பின்பற்றப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்குவதற்கான விதிமுறைகள் குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்நல வாரியத்தில் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸôக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ் இமாம்கள், அரபி ஆசிரியர்கள், ஆசிரியைகள், மோதினார்கள், பிலால்கள் மற்றும் இதர பணியாளர்கள், தர்காக்கள் மற்றும் அடக்க ஸ்தலங்கள், தைக்காக்கள், ஆஷீர்கானாக்கள் மற்றும் முஸ்லீம் அனாதை இல்லங்கள் ஆகியவைகளில் பணிபுரியும் முஜாவர் உள்ளிட்ட பணியாளர்கள் உறுப்பினர்களாக சேரலாம்.

இவ்வாறான நிலையங்களில் பணிபுரியும் 18 வயது நிரம்பிய 60 வயதுக்கு மேற்படாத பணியாளர்கள் பதிவு பெற தகுதியுடையவர்கள்.

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்பவர்களுக்கு, விபத்தில் மரணம் ஏற்பட்டால் ரூ. 1 லட்சம் உதவித் தொகை, ஊனம் ஏற்பட்டால் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை உதவித் தொகை, இயற்கை மரணத்திற்கு உள்ளானவர் குடும்பத்திற்கு ரூ. 15 ஆயிரம் உதவித் தொகை, குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு உதவித் தொகைகள் வழங்கப்படும்.

தற்போது நடைமுறையில் உள்ள உலமா ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுபவர்கள் இந்நல வாரியத்தில் முதியோர் ஓய்வூதியம் பெறத் தகுதியற்றவராவர்.

அரசு அல்லது அரசு சார்ந்த மற்றும் அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிந்து, அந்நிறுவனங்களில் வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் பெறும் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்களை பெற இயலாது.

வேறு நலவாரியங்களில் உறுப்பினராக உள்ள உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் ஏதேனும் ஒரு நல வாரியத்தின் மூலம் மட்டும்தான் நலத்திட்ட உதவிகளைப் பெற தகுதியுடையவர் ஆவார்.

பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை இலவசமாக வாரியத்தால் வழங்கப்படும். உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்வதற்கு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகலாம் என்றார் ஆட்சியர்.

ஸ்ரீவைகுண்டத்தில் பஸ் மறியல்: போலீஸ் தடியடி

ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கால்வாய்க்கு இரவில் செல்லும் பஸ் இயக்கப்படாததால், பயணிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களை போலீஸôர் தடியடி நடத்தி கலைத்தனர்.

ஸ்ரீவைகுண்டத்திலிருந்து தினமும் இரவு 9 மணிக்கு கால்வாய் கிராமத்திற்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது.

இந்த பஸ் வெள்ளிக்கிழமை இரவு கால்வாய்க்கு செல்லாமல் திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்ஸôக இயக்கப்பட்டது. இதனால், இரவில் கால்வாய் கிராமத்திற்கு செல்லும் 30-க்கும் மேற்பட்ட பயணிகள், ஸ்ரீவைகுண்டம் நான்குமுக்கு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

மறியலில் ஈடுபட்டோரை அப்புறப்படுத்த காவல் துறையினர் தடியடி நடத்தினர். இதனால், கூட்டத்தினர் கலைந்து ஓடினர். பின்னர் கிராம மக்களிடம் காவல்துறையினரும், போக்குவரத்து துறை அதிகாரிகளும் சமாதானப் பேச்சு நடத்தினர்.

இதில், உடன்பாடு எட்டப்பட்டு கால்வாய் கிராமத்திற்கு உடனடியாக பஸ் இயக்கப்பட்டது. அந்த பஸ்ஸில், பயணிகள் வீடுகளுக்குத் திரும்பினர்.

நவதிருப்பதி கோயில்களில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு

நவதிருப்பதி கோயில்களில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு நடைதிறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

புரட்டாசி சனிக்கிழமைகளில் நவதிருப்பதி கோயில்கள் காலையில் நடைதிறக்கப்பட்டு இரவு வரை பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக திறந்திருக்கும்.

ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ கள்ளபிரான் கோயில், நத்தம் ஸ்ரீ விஜயாசனப்பெருமாள் கோயில், திருப்புளியங்குடி ஸ்ரீ காய்சினிவேந்தர் பெருமாள் கோயில், பெருங்குளம் ஸ்ரீ மாயக்கூத்தர் பெருமாள் கோயில், தென்திருப்பேரை ஸ்ரீ மகரநெடுங்குழைக்காதர் கோயில், திருக்கோளூர் ஸ்ரீ வைத்தமாநிதி பெருமாள் கோயில், இரட்டைத்திருப்பதி ஸ்ரீ அரவிந்தலோசனார் பெருமாள் கோயில், ஸ்ரீ தேவர்பிரான் பெருமாள் கோயில், ஆழ்வார்திருநகரி ஸ்ரீ ஆதிநாதர்பெருமாள் கோயில் உள்ளிட்ட நவதிருப்பதி கோயில்களில் புரட்டாசி

சனிக்கிழமைதோறும் (5 சனிக்கிழமைகள்) அதிகாலை 5.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு விஷ்வரூபதரிசனம், திருமஞ்சனஅலங்காரம், தீபாராதனை நடைபெறும்.

இரவு 9 மணிவரை பக்தர்கள் வழிபாட்டுக்காக நடை திறந்திருக்கும். இந்த கோயில்களில் ரூ.2, ரூ.10 கட்டண தரிசனமும், தர்ம தரிசனமும் உண்டு.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி தங்கபாண்டியன், இராமசுப்பிரமணியன் மற்றும் அறங்காவலர்கள் செய்துள்ளனர்.

வெள்ளி, 18 செப்டம்பர், 2009

மனம் மகிழ்விற்க வரும் ஈகை திருநாள்.

இனிய பெருநாள் இதமான பேறு நாள்!

காலை உதயம் தொடங்கியதும் - இதயம் தன்னில் இன்பம் வழியும் நன்னாள்!

முப்பது திங்கள் செய்திட்ட ஊழியத்திற்கு,

இறைவன் அல்லாஹ் தரும் விருந்து இந்த நாள்!

ஏழை,பணக்காரன்,முதலாளி,தொழிலாளி பாகுபாடின்றி கொண்டாடித் திளைக்க வரும் பொன்னாள்.!

வருக!வருகவே!வந்து மகிழ்வுத்தருகவே

நன்றி : அதிரை POST

வரவேற்கத்தகுந்த தேசிய அடையாள திட்டம்

நாட்டு மக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் திட்டத்திற்காக பொது பட்ஜெட்டில் 120 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இது தாமதமாக மேற்கொள்ளப்பட்ட திட்டம் என்றாலும் சிறப்பான முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாகும்.

மேற்கத்திய நாடுகள் மற்றும் வளைகுடா நாடுகளில் இந்த அடையாள அட்டை நிலவில் உள்ளதால் இந்திய மக்கள் இதை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.

இந்தியாவிலுள்ள 117 கோடி மக்களுக்கும் இந்த பிரத்யேக அடையாள அட்டை வழங்கும் பொறுப்பை ‘இந்திய சிறப்பு அடையாள அட்டை ஆணையம்’ எனும் ஆணையத்தை அரசு அமைத்ததோடு இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை தலைவராக இருந்த நந்தன் நீல்கனியை தலைவராகவும் நியமித்துள்ளது.

12 முதல் 18 மாதங்களுக்குள் அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

117 கோடி மக்களுக்கும் இந்த அடையாள அட்டையை வழங்குவது சாத்தியமா என்று அரசு கவலைப்பட தேவையில்லை.

ஏனெனில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய தேர்தலுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டுவிட்டது.
மேலும் அனைத்து குடும்பங்களுக்கும் ரேசன் கார்டும் வழங்கப்பட்டு விட்டது.

இவையெல்லாம் சாத்தியமாகும் போது ஒருங்கிணைந்த அடையாள அட்டை என்பதும் சாத்தியமே.இந்த அடையாள அட்டை புழக்கத்தில் வந்துவிட்டால் அது நாட்டிற்கும் மக்களுக்கும் மிகப்பெரிய பயனை தரும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு இந்திய குடிமகன் தான் ஒரு இந்தியன் என்பதை நிரூபிக்க பாஸ்போர்ட் தேர்தல் அடையாள அட்டை ரேசன் கார்டு போன்றவற்றை தற்போது பயன்படுத்தி வருகின்றான்.
இதன்றி டிரைவிங் லைசென்ஸம் பயன்படுகின்றன.

இதில் மேலே கூறிய பாஸ்போர்ட் தேர்தல் அடையாள அட்டை ரேசன் கார்டு போன்றவற்றை ஒருவர் எப்பொழுதும் தன் கையில் வைத்திருக்கமாட்டார். தேவைப்படும் பொழுது மட்டுமே எடுத்து செல்வார்.டிரைவிங் லைசென்ஸ் ஒருவரிடம் எப்பொழுதும் இருக்கும் என்றாலும் அதை வாகனம் வைத்திருப்பவர் மட்டுமே வைத்திருப்பார்.

எனவே எப்பொழுதும் கைவசம் வைத்திருக்கக்கூடிய அடையாள அட்டை என்பது காலத்தின் கட்டாயம்.இந்த அடையாள அட்டை என்பது இந்திய மக்கள் தொகையை துல்லியமாக தெரிவிப்பதோடு ஆண் பெண் குழந்தைகள் என தனித்தனியாக கணக்கெடுக்க முடியும். மிக முக்கியமாக அந்நிய நாட்டினர் ஊடுருவுவதை தடுக்கும்.

தமிழக மேற்கு வங்க அரசியல் வாதிகளை போன்றவர்களுக்கு இது வயிற்றில் புளியை கரைக்கும். ஏனெனில் இலங்கை தமிழர்களையும் வங்க தேசத்து மக்களையும் இந்தியாவில் குடியமர்த்தி அரசியல் லாபம் பெறுவது முடியாமல் போகும். எனவே அவர்களை போன்றவர்கள் இதை எதிர்க்கவும் வாய்ப்புண்டு.

இந்த திட்டம் பயனுள்ள ஒரு திட்டமாக இருந்தாலும் இது வெறும் அடையாள அட்டையாக மட்டும் இல்லாமல் அதை தயாரிக்கும் போதே பிற நாடுகளில் இருப்பதை போன்று ஒவ்வொருவரின் கைரேகைகளையும் பதிவு செய்ய வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் இந்தியாவின் எப்பகுதியில் ஒருவர் திருட்டு கொலை போன்ற குற்றங்கள் செய்தாலும் அவர்களின் கைரேகைகள் மூலமாக குற்றவாளி இவர் தான் என்று 10 நிமிடத்தில் சொல்லிவிட முடியும்.குற்றம் புரிபவர்கள் தாம் எப்படியும் கண்டுபிடிக்கப்பட்டுவிடுவோம் எனும் நிலை வரும்போது நாட்டில் குற்றங்கள் குறையும். குண்டுவெடிப்பு நேரங்களில் குற்றவாளியை கண்டுபிடிக்க இயலாத போது ஏதாவதொரு முஸ்லிமை பிடித்து இவன்தான் குற்றவாளி என்று கூறி ஃபைலை குளோஸ் பண்ணும் நிலை போலீஸாருக்கு ஏற்படாது.

வளைகுடா நாடுகளில் அங்கு பணிபுரியும் வெளிநாட்டினருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டு கைரேகையும் எடுக்கப்படுகின்றன. அந்த அடையாள அட்டையின் எண்ணை கம்பியூட்டரில் தேடினால் அவரது முகவரி தொலைபேசி எண் அவர் எங்கு பணி புரிந்தார் எந்த நாட்டை சார்ந்தவர் எந்த தேதியில் வந்தார் எத்தனை வருடமாயிற்று போன்ற ஆதி முதல் அந்தம் வரை உள்ள அவரது அனைத்து விபரங்களும் தெரிந்து விடும்.

இது போன்று நாம் தயாரிக்கும் அடையாள அட்டை இருக்குமானால் பயனுள்ளதாக இருக்கும். விபச்சாரத்தில் ஈடுபட்டு பிடிபடும் போது தாங்கள் கணவன் மனைவி என்று கூறி பெரும்பாலானவர்கள் தப்பித்து விடுகின்றனர். அடையாள அட்டை புழக்கத்துக்கு வந்து விட்டால் இது போன்ற தவறுகளும் தடுக்கப்படும். விபத்துக்கள் ஏற்படும் சமயங்களில் அடையாளம் தெரியாத ஒருவர் மரணமடைந்தார் அல்லது காயமடைந்தார் எனும் பத்திரிகை செய்திகள் குறையும்.

ஒருவர் தன் கைவசம் எப்பொழுதும் அதை வைத்திருப்பதால் அவரை அடையாளம் கண்டு அவரது உறவினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்து பாதுகாக்க முடியும். அடையாள அட்டையில் ஒருவருக்கு வழங்கப்பட்ட எண்ணில் வருமானம் முதற்கொண்டு அனைத்து விபரங்களும் அடங்கிவிடுமாதலால் அரசு வழங்கும் நலத்திட்டங்கள் தவறானவர்களுக்கு செல்லாமல் உரியவர்களுக்கு மிக சுலபமாக போய் சேரும்.மொத்தத்தில் இது வரவேற்கப்படவேண்டிய ஒன்று.

முதற்கட்ட பணியில் இது சிரமமாக தெரிந்தாலும் நாளடைவில் அது மிக மிக எளிதானதே. ஒரு குழந்தை பிறந்த உடன் பிறப்பு சான்றிதழ் வழங்கும்போதே அடையாள அட்டையையும் வழங்கிவிடலாம்.இந்த ஒருங்கிணைந்த அடையாள அட்டையானது குற்றம் புரிபவர்களுக்கு கசப்பானது என்றாலும் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் இது மிகவும் இனிப்பான செய்தி என்றால் அது மிகையல்ல.

நன்றி: உணர்வு வார இதழ்

ஊழல்: 123 அரசு அதிகாரிகளின் பெயர் முதல்முறையாக இணைய தளத்தில் வெளியீடு

தகவல் அறியும் உரிமை சட்டத்திற்குட்பட்டு, மத்திய கண்காணிப்பு ஆணையம் ஊழல் வழக்கில் குற்றம்சாற்றப்பட்டு, அபராதம் விதிக்கப்பெற்ற அல்லது தண்டனை பெற்ற 123 அரசு அதிகாரிகளின் பெயரை முதல்முறையாக இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே லஞ்ச ஊழல் புரிந்த அதிகாரிகளின் எண்ணிக்கையையும், அவர்கள் பணிபுரியும் துறைகள் பற்றியும் மட்டுமே வெளியிட்டிருந்த நிலையில், தற்போது முதல்முறையாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பெயர் விவரங்கள் கண்காணிப்பு ஆணையத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தண்டனை பெற்றவர்களா? அல்லது வழக்கு விசாரணை நடைபெற்று வரும் அதிகாரிகளா? என்பன போன்ற விவரங்களும் இடம்பெற்றுள்ளன. ஜூலை மாதத்தில் 101 அதிகாரிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இவர்களில் 17 பேர் தேசியமயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகள். டேல்லி மேம்பாட்டு ஆணையத்தில் பணியாற்றும் 13 பேர், டெல்லி நகர்மன்றத்தில் பணியாற்றும் 11 பேரும் இவர்களில் அடங்குவர்.

விசாரணை நடைபெறும் 22 அதிகாரிகளில் உள்துறையைச் சேர்ந்த 7 பேரும், 4 ஐ.பி.எஸ் அதிகாரிகளும், மத்திய நேரடி வரிகள் வாரியத்தைச் சேர்ந்த 7 பேரும் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே அமைச்சகம், நியூ இந்தியா காப்பீட்டு நிறுவனம், ஓ.என்.ஜி.சி ஆகியவற்றைச் சேர்ந்த 29 அதிகாரிகளுக்கு எதிராக மிக அதிகளவு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று ஊழல் தடுப்புப் பிரிவு பரிந்துரை செய்துள்ளது.

சென்னை போக்குவரத்துக் கழகத்திற்கு மேலும் 100 வோல்வோ பஸ்கள்


சென்னை: எம்.டி.சி என அழைக்கப்படும் சென்னைப் பெருநகரபோக்குவரத்து் கழகம், மேலும் 100 வோல்வோ சொகுசுப் பேருந்துகளை வாங்கத் திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே 30 வோல்வோ பஸ்களை எம்டிசி புழக்கத்தில் விட்டுள்ளது. இந்த வகைப் பேருந்துகளுக்கு பயணிகளிடம் நல்லாதரவும், நல்ல வசூலும் கிடைத்திருப்பதால் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் மேலும் 100 பஸ்களுக்கு தற்போது ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

கடந்த 2007ம் ஆண்டு சென்னை மாநகரில் முதல் முறையாக வோல்வோ பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

வோல்வோவுக்குக் குறையாத கிராக்கி...

பொருளாதார மந்த நிலை காணப்பட்ட நிலையிலும் கூட இந்தியாவில் வோல்வோ பேருந்துகளுக்கு கிராக்கி குறையவில்லை. இதனால் வோல்வோ நிறுவனம் நஷ்டத்தை சந்திக்காமல் வண்டியை ஓட்டிக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு வோல்வோ நிறுவனம் 600 பேருந்துகளை டெலிவரி செய்யவுள்ளது. இது கடந்த ஆண்டை விட 50 சதவீதம் அதிகமாகும்.

பெங்களூரில் உள்ள வோல்வோ பஸ் தொழிலகம் எந்தவித ஆள் குறைப்பும் இன்றி சிறப்பான முறையில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மக்களுக்கு மிகவும் செளகரியமாக இருப்பதால் வோல்வோ பஸ்களுக்கு கிராக்கி அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக டவுன் பஸ்களாக இவை தற்போது இயக்கப்பட ஆரம்பித்த பின்னர் இந்த வகை பஸ்களில் அதிக அளவிலான பயணிகள் பயணம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

ஏசி வசதியுடன், செளகரியமாக,போக்குவரத்துசிக்கலைச் சந்திக்காமல் செல்ல முடிவதால் இந்த வகை பஸ்களுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது.

வோல்வோ டவுன் பஸ்களின் எண்ணிக்கை தமிழகத்தில் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் விரைவில் மிகப் பெரிய அளவில் வோல்வோ டவுன் பஸ்கள் சாலைகளில் ஓடும் நிலை உருவாகும் என வோல்வோ நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஓடும் வோல்வோ பஸ்கள் அனைத்துமே பெங்களூர் தொழிற்சாலையில்தான் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.

பஸ்களுக்கு இன்சூரன்ஸ்...

இந் நிலையி்ல் சென்னையில் நடந்த கலெக்டர்கள் மாநாட்டில் பேசிய முதல்வர் கருணாநிதி,

தமிழகத்தில் அரசுப்போக்குவரத்து் கழகங்களால் 20,000 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பேருந்துகளுக்குக் காப்பீடு செய்யப்படுவதில்லை.

அரசுப் போக்குவரத்து க் கழக பேருந்துகளால் ஏற்படும் விபத்துக்களில் பாதிக்கப்படுபவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் மிகுந்த கால தாமதமும், அதிக செலவும் ஏற்படுவதால், விபத்து தொடர்பான இழப்பீடுகளை பாதிக்கப் பட்டவர்கள் உடனடியாக பெறும்வகையில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்குச் சொந்தமான பேருந்துகளைக் காப்பீடு செய்து கொள்ள அரசு முடிவு செய்துள்ளது என்றார்.

வியாழன், 17 செப்டம்பர், 2009

உலகின் முதல் 64 GB மெமரி கார்டு : டோஷிபா நிறுவனம் வெளியிட்டது

ஜப்பானை சேர்ந்த டோஷிபா நிறுவனம் உலகின் முதல் 64 GB மெமரி கார்டினை வெளியிட்டுள்ளது. இதன் விலை 630 டாலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் 35 MB per Second வேகத்தில் தகவல்களை எழுதவும் , 60 MB per Second வேகத்தில் தகவல்களை படிக்கவும் இயலும் . இது சந்தை விற்பனைக்கு வரும் நவம்பர் மாதம் வரலாம் என எதிபார்க்கப்படுகிறது.

மேலும் சில புதிய 32 GB , 16 GB வகை கார்டுகளையும் வெளியிடுகிறது. இதன் சிறப்பு என்னவெனில் , இதில் 35 MB per Second வேகத்தில் தகவல்களை எழுதவும் , 60 MB per Second வேகத்தில் தகவல்களை படிக்கவும் இயலும் என்பது தான் .

கடமையா‌க்க‌ப்ப‌ட்ட ஸகா‌த்து‌ல் ‌பி‌த்ரா

இஸ்லா‌ம் ம‌க்க‌ள் ‌மீது உ‌ள்ள ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பை இ‌ந்த ரமலா‌ன் மாத‌த்‌தி‌ல் நினைவு கூரும்போது அத்துடன் நினைவுக்கு வரு‌ம் ம‌ற்றொரு கடமை ஸகாத்துல் பித்ராவாகும். புனித நோன்பை ஒட்டி விதியாக்கப்பட்ட கடமையாக ஸகாத்துல் பித்ரா விளங்குகிறது.

அ‌ல்லா‌ஹ‌்‌வி‌ன் கடமைகளை ‌நிறைவே‌ற்றுவது எ‌ப்படி கடமையோ அதுபோ‌ன்றே ஒரு ம‌னித‌ன், ம‌ற்ற ம‌னிதனு‌க்கு செ‌ய்ய வே‌ண்டியது‌ம் மு‌க்‌கியமான கடமையா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. இர‌ண்டையு‌ம் ஒரு‌ங்கே ‌நிறைவே‌ற்றுவதுதா‌ன் இபாத‌த் வண‌க்க‌ம் எ‌ன்று இ‌ஸ்லா‌ம் கருது‌கிறது.

அல்லாஹ்வுடைய ஏவலுக்குக் கட்டுப்பட்டு ஒருமாதம் நோன்பு நோற்று விட்டு அடுத்த நாள் பெருநாள் தினத்தை சந்தோஷமாகக் கொண்டாட தயாராகும் போது நாம் மட்டும் சந்தோஷமாக பெருநாள் கொண்டாடக் கூடாது. ந‌ம்முட‌ன் நோ‌ன்‌பிரு‌ந்தவ‌‌ர்வகளு‌ம் ச‌ந்தோஷமாக பெருநா‌ள் கொ‌ண்டாட வகை வே‌ண்டு‌ம் எ‌ன்பத‌ற்காக‌த்தா‌ன் ஸகா‌து‌ல்‌பி‌த்ராவை நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.

ஸகா‌த்து‌ல் ‌பி‌த்ரா எ‌ல்லோ‌ர் ‌மீது‌ம் கடமையா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. ஒரு அடிமை‌க்கு‌ம் இது பொரு‌ந்து‌ம். அதே சமய‌ம், எ‌ல்லோராலு‌ம் இதனை‌ச் செ‌ய்ய இயலு‌ம்.

அதாவது, இந்த பித்ராவை பணக்காரர்கள் மட்டுமல்லாமல் தனது குடு‌ம்ப‌த்‌தின‌ர் பெருநாளை‌க் கொ‌ண்டாட செலவு போக, யா‌ரிட‌ம் ‌சி‌றிது பணமோ, பொரு‌ள் வச‌தியோ இருக்கிறதோ அவர்கள் அனைவரும் இந்த பித்ராவை கொடுக்க வேண்டும். இது கடமையா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இ‌‌ஸ்லா‌ம் மத‌த்தை‌ச் சே‌ர்‌ந்த அனைவ‌ர் ‌மீது‌ம் ‌பி‌த்ரா கடமை‌யா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. பண‌ம், பொரு‌ள் இ‌ல்லாதவ‌ர்க‌ள் கூட, பேரீச்சம்பழம், தீட்டிய கோதுமை ஆகியவற்றில் (ஒரு ஸலாவு) கொடுப்பதை நபி (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள் என இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

ஒரு குடு‌ம்ப‌த்‌தி‌ல் உ‌ள்ள ‌பி‌ள்ளைகளு‌க்கு‌ம், பெ‌ண்களு‌க்கு‌ம், வயதான மு‌தியவ‌ர்களு‌க்கு‌ம், நோ‌ன்பு நோ‌ற்க முடியாம‌ல் இரு‌ப்பவ‌ர்களு‌க்குமாக சே‌ர்‌த்து அ‌ந்த குடு‌ம்ப‌த்‌தி‌ன் தலைவ‌ர் ‌பி‌த்ரா கொடு‌க்க வே‌ண்டியது அவ‌சியமா‌கிறது.

இதை‌த்தா‌ன் ஒருவ‌ன் ‌பி‌த்ராவாக‌க் கொடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்ற க‌ட்டாய‌ம் ஏது‌ம் இ‌ல்லை. த‌ன்னா‌‌ல் இய‌ன்றதையு‌ம், பெறுவத‌ற்கு ஏ‌ற்றதான ஒரு பொருளை ‌பி‌த்ராவாக‌ அ‌ளி‌க்கலா‌ம். ம‌க்க‌ள் எதனை உ‌ண்ண இயலுமோ அதனையே ‌பி‌த்ராவாக‌ அ‌ளி‌க்க வே‌ண்டு‌ம்.

நாங்கள் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் நோன்புப் பெருநாள் தர்மமாக ஏதேனும் உணவையோ, பேரீச்சம் பழத்தையோ தீட்டப்படாத கோதுமையோ பாலாடைக் கட்டியையோ அல்லது உலர்ந்த திராட்சையோ ஒரு ஸலாவு (பித்ரா) கொடுப்போம் என அபூ ஸயீதுல் குத்ரி (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி)

இ‌ந்‌தியா‌வி‌ல் அ‌ரி‌‌சி, கோதுமை போ‌ன்றவை உணவாக உ‌ட்கொ‌ள்ள‌ப்படு‌கிறது. எனவே அதனையு‌ம் ‌பி‌த்ராவாக‌க் அ‌ளி‌க்கலா‌ம்.

‌பி‌த்ரா அ‌‌ளி‌க்கு‌ம் முறை

பி‌த்ரா கொடு‌ப்பத‌ற்கு ஒரு அளவு உ‌ள்ளது. ‌பி‌த்ராவை எ‌ப்போது கொடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்ற கால ‌நிலையு‌ம் ‌நி‌ர்‌ண‌யி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. அதே‌ப்போல ‌பி‌த்ராவை எ‌ப்படி‌க் கொடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் இ‌ஸ்லா‌மிய ம‌க்களு‌க்கு அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

நாங்கள் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் நோன்புப் பெருநாள் தர்மமாக ஏதேனும் உணவையோ, பேரீச்சம் பழத்தையோ தீட்டப்படாத கோதுமையோ பாலாடைக் கட்டியையோ அல்லது உலர்ந்த திராட்சையோ ஒரு ஸாவு (பித்ரா) கொடுப்போம் என அபூ ஸயீதுல் குத்ரி (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி)

‌பி‌த்ராவை ஒரு ஸாவு அளவு கொடுக்க வேண்டும் என்று மேலேயுள்ள நபி மொழி கூறுகிறது. இரண்டு கைகளாலும் நான்கு முறை அள்ளிக் கொடுப்பதே ஒரு ஸாவு என்று கூறப்படுகிறது. எனவே, நாம் கொடுக்கும் உணவுப் பொருட்களை இந்த முறையில் அளந்து கொடுக்கலா‌ம்.

இ‌ந்த ‌பி‌த்ராவை பெருநாளைக்கு ஓரிரு நாட்களுக்கு முன் அல்லது பெருநாள் தொழுகைக்கு முன் கொடுத்துவிட வேண்டும். பெருநாள் தொழுகைக்குப் பிறகு கொடு‌க்கு‌ம் எதுவு‌ம் பித்ராவாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

மக்கள் தொழுகைக்கு புறப்படுவதற்கு முன்பே நோன்புப் பெருநாள் தர்மத்தை கொடுத்து விடுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள் என இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி)
பித்ரா கொடுப்பதற்கான கடைசி நேரம் கூறப்பட்டுள்ளது. ஆனால், ஆரம்ப நேரம் பற்றிக் கூறப்படவில்லை.

ஸஹாபாக்களும் பெருநாளைக்கு ஓரிரு நாட்களுக்கு முன் கொடுத்துள்ளார்கள். ஸஹாபாக்கள் நோன்புப் பெருநாள் தர்மத்தை பெருநாளைக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் முன்னதாகவே கொடுத்து வந்தார்கள் என இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி)

‌பி‌த்ரா‌க்களை‌ப் பெற ஏழைக‌ள் ‌வீடு ‌வீடாக வர வே‌ண்டிய அவ‌சிய‌த்தை‌த் தடு‌க்குமாறு‌ம், ‌பி‌த்ரா கொடு‌ப்பவ‌ர்க‌ள், த‌ங்களது பொரு‌ட்களை ஒரே இட‌த்‌தி‌ல் சே‌ர்‌த்து, அ‌வ்வூ‌ர் ஏழை, எ‌ளியவ‌ர்களை அழை‌த்து அ‌ந்த இட‌த்‌திலேயே அனைவரு‌ம் ‌பி‌த்ரா வழ‌ங்‌கினா‌ல், ஏழைக‌ளி‌ன் அவல‌ங்களு‌க்கு எ‌ளிதாக ‌தீ‌ர்வு காணலா‌ம் எ‌ன்று கூற‌ப்படு‌கிறது.

‌பி‌த்ராவை‌ இதுபோ‌ன்று ஒரே இட‌த்‌தி‌ல் பல‌ர் அ‌ளி‌ப்பதா‌ல் அ‌திகமான ஏழைகள் நன்மையடைவார்கள். தனித்தனியாகக் கொடுக்கும் போது ஒரு சிலர் மட்டுமே நன்மையடைவர். இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமானால் ஏழைகளின் வாழ்வு பிரகாசமானதாக அமையும். கொடுக்கும் பித்ரா அர்த்தமுள்ளதாக இருக்கும்.

ஆகவே நோன்புப் பொருநாளுக்காக தயாராகுவதோடு, ஒவ்வொரு முஸ்லிமும் தங்கள் மீது கடமையான ஸகாத்துல் பித்ராவை வழங்கி நன்மைகளில் பங்கு பெறத் தயாராகுவோமாக.

இந்தியாவில் 2 கார்களை அறிமுகம் செய்த நிஸ்ஸான்


நிஸ்ஸான் நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஆதிக்கத்தை உருவாக்க அதிரடி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதையடுத்து நேற்று ஒரே நாளில் நிஸ்ஸான் எக்ஸ் டிரைல் ஸ்போர்ட் கார் மற்றும் சொகுசு டியனா சேடான் என்ற இரண்டு கார்களின் புதிய மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

தற்போது சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி ஜப்பானின் மூன்றாவது பெரிய ஆட்டோமொபைல் தயாரிப்பாளரான நிஸ்ஸானைஇந்தியாில் கவனம் செலுத்து தூண்டியுள்ளது.

நிஸ்ஸான் நிறுவனம் இந்த கார்களை ஜப்பானில் தயாரித்து கப்பல் மூலம்இந்தியாுக்கு 109 சதவீத இறக்குமதி வரியுடன் கொண்டு வருகிறது. இதனால் எக்ஸ் டிரைல் காரின் விலை ரூ. 20 லட்சமாகவும், டியானா காரின் விலை ரூ. 21 லட்சமாகவும் இருக்கிறது.

இது குறித்து நிஸ்ஸான்இந்தியாநிறுவனத்தின் பொது இயக்குனர் கிமினோபு டோகுயாமா கூறுகையில், 2009ம் ஆண்டில் நாங்கள் அதிகம் முதலீடு செய்யவிருக்கும் நாடுஇந்தியாதான்.

இந்தியாவை உலக சந்தையின் முக்கிய பகுதியாக தேர்வு செய்துள்ளோம். இதுவரைஇந்தியாில் எக்ஸ் டிரைல் கார்கள் 1000மும், டியானா செடான் 300ம் விற்றுள்ளன. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த கார்களின் புதிய மாடல்கள் நன்றாக போகும் என எதிர்பார்க்கிறோம்.

2012ல்இந்தியாில் 9 ரக கார்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். அதில் 5 இந்தியாவிலே தயாரிக்கப்படும்.

வரும் மே 2010ம் ஆண்டு முதல் சென்னை தொழிற்சாலையில் இருந்து மைக்ரா ரக காரின் புதிய மாடல் தயாரிக்கப்படும். மைக்ரா கார் தயாரிப்பில் தயாரிப்பு செலவு முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியா வில் தயாரிக்கும் போது தரமும் நன்றாக இருக்கிறது. அதே சமயத்தில் பணமும் மிச்சமாகிறது.

டோயோடா, ஹோன்டா நிறுவனத்துடன் ஒப்பிடுகையில் நாங்கள் இந்திய சந்தைக்கு தாமதமாக தான் வந்துள்ளோம் என்றார்

இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் விஜயகாந்த்


தே.மு.தி.க. சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னை துறைமுகம், மரைக்காயர் தெருவில் உள்ள ஆஷா மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் தலைமை தாங்கி, நோன்பு கஞ்சி குடித்தார். மத்திய சென்னை மாவட்ட செயலாளர் க.செந்தாமரைக்கண்ணன், பகுதி செயலாளர் விசாகன்ராஜா, கவுன்சிலர் சர்தார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கவுன்சிலர்கள் பிரபாகரன், சரவணன், நிர்வாகிகள் கமாலுதீன், ஆயிரம் விளக்கு கோவிந்தன், திருவல்லிக்கேணி முன்னா செல்வக்குமார், அயன்புரம் செல்வம், முகமதுபாபு, ரமேஷ் உள்பட பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நோன்பு கஞ்சி குடித்தனர்.

நிகழ்ச்சியில் தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் பேசிசும்போது, "கானூரில் நான் தர்கா கட்டி கொடுத்து இருக்கிறேன். நான் எப்போது எல்லாம் அமைதியில்லாமல் இருக்கிறோனோ அப்போதெல்லாம் நான் அந்த தர்க்காவிற்கு சென்று விடுவேன். என் வீட்டு பூஜையறையில் எல்லா மத கடவுள்களின் படமும் இடம் பெற்று உள்ளது. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதில் உண்மையிலே எனக்கு சந்தோஷமாக இருக்கிறது'' என்றார்.

ஸ்டேட் பாங்க் தேர்வு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி

ஸ்டேட் பாங்கில் நாடுமுழுவதும் 11 ஆயிரம் எழுத்தர் பணியிடங்களுக்கான எழுத்துதேர்வுகள், 8-11-09 மற்றும் 15-11-09 ஆகிய நாட்களில் நடக்கிறது.இதற்கான இலவசபயிற்சிவகுப்புகள் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது.

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக வரும் 19ம் தேதி காலை 10 மணிக்கு ஸ்டேட் பாங்க் எழுத்துதேர்வுக்கான இலவச பயிற்சிவகுப்புகள் துவங்குகின்றன. திருச்செந்தூர், உடன்குடி பகுதியை சேர்ந்தவர்கள் இளம் முன்னோடிசங்கம் இணைந்து ஆறுமுகநேரியில் நடத்தும் பயிற்சிவகுப்புகளிலும் விளாத்திகுளம் கோவில்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் விளாத்திகுளம் வேம்பு மக்கள் சக்தி இயக்கத்தில் நடத்தும் பயிற்சியில் கலந்துகொள்ளலாம்.

பயிற்சி வகுப்புகள் வரும் 19 முதல் துவங்கி தேர்வுநாள் வரை அனைத்து சனி,ஞாயிறு விடுமுறை நாட்களில் நடக்கும். இவ்வாறு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கச்சி சுவாமிநாதன் காலமானார்


சென்னை வானொலியில் 14 ஆண்டுகள் தொடர்ந்து ஒலிபரப்பான ""இன்று ஒரு தகவல்'' மூலம் லட்சோப லட்சம் நேயர்களின் இதயத்தில் நீங்கா இடம் பெற்ற தென்கச்சி கோ. சுவாமிநாதன் (63) மாரடைப்பால் புதன்கிழமை காலமானார்.

அவருக்கு மனைவியும் மகளும் உண்டு.

வேளாண்மைப் பட்டதாரியான சுவாமிநாதன், தமிழ்நாடு அரசுப் பணியில் விவசாய அலுவலராக வாழ்க்கையைத் தொடங்கினார். அரியலூர் மாவட்டம் தென்கச்சிப்பெருமாள் நத்தம் என்ற ஊரில் பிறந்ததால் அந்த ஊரின் பெயரைச் சுருக்கி "தென்கச்சி' என்று அழைக்கப்படலானார்.

1977 முதல் 1984 வரை திருநெல்வேலி வானொலி நிலையத்தின் பண்ணை இல்ல ஒலிபரப்புப் பிரிவில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் ஆசிரியராகி சென்னைக்கு வந்தார். பிறகு உதவி இயக்குநராக பணி ஓய்வு பெற்றார்.

சிறந்த எழுத்தாளராகவும், நகைச்சுவைப் பேச்சாளராகவும் திகழ்ந்த அவர் நல்ல சிந்தனையாளர். அவருடைய ஊரின் ஊராட்சி மன்றத் தலைவராகவும் பதவி வகித்திருக்கிறார். பல நூல்களையும் எழுதியிருக்கிறார்

ரமலான்: ஏழைகளுக்கு இலவச அரிசி அளிப்பு

திருநெல்வேலி, செப். 17: புனித ரமலான் பண்டிகையையொட்டி, மேலப்பாளையத்தில் ஏழைகளுக்கு இலவச அரிசி வேஷ்டி, சேலைகளை அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான் வழங்கினார்.

முன்னாள் எம்.எல்.ஏ. வி.எஸ்.டி. சும்சுல் ஆலம், முஸ்லிம் மேல்நிலைப் பள்ளித் தாளாளர் எம்.ஏ.எஸ். முகம்மது அபுபக்கர், மேலப்பாளையம் மண்டலத் தலைவர் எஸ்.எஸ். முகமதுமைதீன், தென்னிந்திய இஷா அப்துல் இஸ்லாம் சபை இணைச் செயலர் எல்.கே.எஸ். முகம்மது மீரான், மாமன்ற உறுப்பினர்கள் கே.எஸ். ரகுமத் பீவி, சைபுன்னிசா பேகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக பைத்துல்- மால் செயலர் எஸ்.எம். அப்துல் கபூர் வரவேற்றார். பொருளாளர் பி.எம். காஜா நஜீமுதீன் நன்றி கூறினார்.

மேலப்பாளையம் பைத்துல்- மால் இஸ்லாமிய தன்னார்வ தொண்டு நிறுவனம் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது.

யூசுபியா இல்லத்தில் இப்தார் நிகழ்ச்சி

திருநெல்வேலியை அடுத்த ராமையன்பட்டியில் உள்ள யூசுபியா அனாதை இல்லத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கு அனாதை இல்லத் தலைவர் எம். அகமதுகான் தலைமை வகித்தார்.

நல்லாசிரியர் விருதுபெற்ற கல்லணை மகளிர் பள்ளித் தலைமை ஆசிரியர் நடராஜன், சங்கர் மேல்நிலைப் பள்ளி தமிழ் ஆசிரியர் ஹமீதா பீவி ஆகியோர் நிகழ்ச்சியில் பாராட்டப்பட்டனர்.

முனைவர்கள் கண்ணபிரான், திருமலைக்குமாரசாமி, சண்முகவேல், பள்ளித் தலைவர் கோதர் மைதீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட பொருளர் அப்துல் வஹாப், மாவட்ட துணைச் செயலர் எம். முகம்மது அலி, தென்மண்டல அமைப்புச்

செயலர் எஸ். மில்லத் இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, யூசுபியா மக்கள் தொடர்பு அலுவலர் உஸ்மான் வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் சேர்மக்கனி நன்றி கூறினார்.

புதன், 16 செப்டம்பர், 2009

லைலத்துல் கத்ர்

ரமளானில் கடைசிப் பத்து நாட்களில் ஒரு நாளாகிய லைலத்துல் கத்ரின் மகத்துவத்தை நாம் அறிவோம். எனினும் அதன் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்து அதை நாம் பெற வேண்டும் எனும் ஆவலில் நாம் செயல்பட வேண்டும். அல்லாஹ் இதைப்பற்றி குர் ஆனில் கூறுவதையும் முறையாக கவனத்தில் கொள்ள வேண்டும்.




அல்லாஹ் லைலத்துல் கத்ர் எனும் ஓர் இரவின் நன்மையைப்பற்றி குறிப்பிடும்போது, "அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது" என்று கூறுகின்றான். பார்க்க (97 :3)

அதாவது அந்த ஓர் இரவின் நன்மை ஆயிரம் மாதத்தின் நன்மைகளுக்குச் சமம் என்று குறிப்பிடுகின்றான். ஆயிரம் மாதங்கள் என்பது சுமார் 83 வருடங்களும் நான்கு மாதங்களும் ஆகும். அதாவது ஒரு நாளின் நன்மை சராசரி மனித ஆயுளையும் விட அதிகமான ஆண்டுகளின் நன்மையை அளிக்க வல்லது என்பதைச் சிந்திக்க வேண்டும். நமது வாழ்க்கையில் ஒரு 10 லைலத்துல் கத்ரு இரவின் நன்மைகள் முழுமையாக நாம் பெற்றால் கூட அது 833 வருடங்களுக்கு நிகரான நன்மைகளை நமக்குப் பெற்றுத்தரும். 20 ஆண்டுகளின் லைலத்துல் கத்ரினை பெற்றால் 1666 வருடங்கள் என்று முந்தைய சமுதாயத்தினரின் ஆயுளின் அளவிற்கு நன்மைகளினைப் பெற்று தரவல்லது என்பதை நினைத்துப் பார்க்கும் போதே நமக்கு அல்லாஹ்வின் இந்த மகத்தான வெகுமதியினைத் தவற விடக்கூடாது எனும் எண்ணம் வரும்.

நமது வாழ்க்கையில் நாம் சந்தித்த கடந்த ரமலான்களில் லைலத்துல் கத்ரின் நன்மையை நாம் பெற்றுள்ளோமா என்பதை அல்லாஹ்வே நன்கறிவான். ஆயினும் அதைப் பெற நாம் நாடியுள்ளோமா? அதற்காக முறையாக நபி(ஸல்) வழியில் முயன்றுள்ளோமா? அதைப் பெறக்கூடிய பாக்கியம் வேண்டி அல்லாஹ்விடம் பிராத்தித்துள்ளோமா? என்பதை நாம் நம்மையே கேட்டு பதில் பெற வேண்டும். இதற்கு இறைவனிடம் இரு கரம் ஏந்தி பிராத்திப்பதுடன் அதை நபி(ஸல்) அவர்கள் வழியில் முயல வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் நோன்பு கடமையாக்கப்பட்ட பின்னர் ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தின் கடைசிப் பத்து நாட்களில் 'இஃதிகாப்' இருந்தார்கள் என்று நபி வழியில் காண முடிகிறது.

அபூ ஸஈத் அல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள் ரமளானின் முதல் பத்து இரவுகளில் இஃதிகாஃப் இருந்தார்கள். பிறகு நடுப் பத்தில் இஃதிகாஃப் இருந்தார்கள். பிறகு சொன்னார்கள்: நிச்சயமாக நான் முதல் பத்தில் லைலத்துல் கத்ர் இரவைத் தேடிப் பெறுவதற்காக இஃதிகாஃப் இருந்தேன். பிறகு நடுப்பத்தில் இருந்தேன். பிறகு எனது கனவில் வானவர் தோன்றி, அந்த இரவு கடைசிப்பத்து நாளில் உள்ளது என்று அறிவித்தார். உங்களில் யார் இந்தக் கடைசி நாட்களில் இஃதிகாஃப் இருக்க விரும்புகிறாரோ அவர் இஃதிகாஃப் இருக்கட்டும். (முஸ்லிம்)

ஆகையால் கடைசிப் பத்து நாட்களில் அதைத் தேடிக் கொள்ளுமாறு கூறினார்கள், மேலும் அதன் இரவுகளை வணக்கங்கள் மூலம் சிறப்பிப்பார்கள்; தங்கள் குடும்பத்தினர்களையும் ஏவுவார்கள் என்றும் ஹதீஸ்கள் கூறுகின்றன.

நபி(ஸல்) அவர்கள் தாமும் தமது குடும்பத்தினரும் விழித்திருந்து லைலத்துல் கத்ரு இரவைப் பெற வணக்கங்களில் ஈடுபட்டதைப் போல், நாம் முயல வேண்டும். இயன்றால் அவர்கள் கடைசிப் பத்து நாட்கள் பள்ளியில் 'இஃதிகாப்' இருந்ததைப் போல் இஃதிகாப் இருக்க வேண்டும். நமது வாழ்நாளில் நேரம் கிடைக்கும் போது ரமலானில் குறைந்தது ஒரு முறையேனும் நபிவழியான (ஸுன்னத்தான) இந்த 'இஃதிகாப்' இருக்க வேண்டும் என்று உள்ளத்தினால் நாட்டம் கொள்ளவேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : எவர் துர்பாக்கியசாலிகளோ அவர்களைத் தவிர அனைவரும் லைலத்துல் கத்ரைப் பெற்றுக்கொள்வார்கள்.

நாம் அதைப் பெற்ற பாக்கியசாலிகளா துர்பாக்கியசாலிகளா என்பது நாமறியோம். அல்லாஹ்வே நன்கறிவான். ஆனால் பரவலாக இதை மறந்தவர்களாக முஸ்லிம்கள் பலர் வாழும் நிலையும் குறிப்பாகக் கடைசிப் பத்து நாட்களில் நமது பொன்னான நேரத்தை இவற்றைவிடவும் அதிகமாக இதர அலுவல்கள் பெருநாளின் தேவைகள் துணிமணிகள், காலணிகள், அணிகலன்கள், வாசனை திரவங்கள்,போன்ற இதர பொருட்களை வாங்கும் நிமித்தம் கடைவீதிகளில் கழிந்து விடுவதும் மாலையில் வெளியேறி இரவில் தாமதமாக அசதியுடன் வீடு திரும்பி இரவு தொழுகைகள் பஜ்ரு தொழுகை ஸஹ்ர் (உட்பட) லைலத்துல் கத்ர் எனும் மகத்தான இரவு போன்ற அனைத்தும் தவறிவிடும் நிலையையும் காண முடிகிறது. அவையெல்லாம் லைலத்துல் கத்ரு என்னும் இந்தப் பொன்னான வாய்ப்பை இழக்க வைக்க முஸ்லிம்களுக்கு எதிரான ஷைத்தானின் முயற்சி என்றால் அது மிகையாகாது. இம்முயற்சியை முறியடிக்கும் விதமாக நமது தேவைகளை கடைசிப் பத்து நாட்களுக்கு முன்னரே அல்லது இரவுக்கு முன்பே தாமதமின்றி வாங்கி நேர விரயமின்றி, கடைசிப் பத்து இரவுகளில் அதிகமான வணக்கங்கள், நல்ல அமல்கள் புரிந்து கண்ணிய மிக்க இந்த லைலத்துல் கத்ரை பெற முயல வேண்டும்.

இதர எத்தனையோ விஷயங்களுக்கு கண் விழித்து இருக்கும் நாம் இந்த மகத்தான கடைசிப் பத்து இரவுகளிலும் நரகமீட்சி பெரும் விதத்தில் துவா செய்யவும் லைலத்துல் கத்ர் இரவினை முறையாகப் பெற்றிடவும் முனைந்திட வேண்டும். ஆனால் சிலர் இந்த லைலத்துல் கத்ர் எனும் கண்ணியமிகு இரவு ஒரே ஒரு இரவில் இருப்பதாக அதுவும் ரமலானின் 27ம் நாளில் இருப்பதாகத் தவறாக நம்பி, அந்த ஓரிரவை மட்டும் விசேஷமாக சிறப்பிக்கும் அமல்களில் ஈடுபடுவதையும் காண முடிகிறது.

நபி(ஸல்) அவர்கள் இப்படி ரமலான் 27 எனும் ஒரே இரவை சிறப்பிக்குமாறு கூறாததாலும் அவர்கள் வாழ்க்கையில் இது 21,23,25,27,29 போன்ற வெவ்வேறு ஒற்றைப்படை இரவுகளில் வந்துள்ளதாக அறிவித்துள்ளதாலும் 27ஆம் இரவை மட்டுமே சிறப்பிப்பது நபி வழிக்கு மாற்றமானது என்பதை நமது மறுமைக்காக கவனத்தில் கொள்ள வேண்டும். நமது அமல்களை நபிவழியில் மாற்றிக்கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் மற்ற மாதங்களில் வணக்க வழிபாடு விஷயத்தில் ஆர்வம்காட்டாத அளவு ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் அதிக அளவில் வணக்கவழிபாடுகளில் ஈடுபடுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம்.

ரமளானின் கடைசிப் பத்து நாட்கள் வந்துவிட்டால் நபி(ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக்கொள்வார்கள். இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள். அந்நாட்களில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடத் தம் குடும்பத்தினரை எழுப்பி விடுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

லைலத்துல்கத்ரில் பிரார்த்தனை:

லைலத்துல் கத்ரில் அதிக அளவு பிரார்த்தனை புரிய நபி(ஸல்) அவர்கள் ஒரு துவாவை கற்றுதந்துள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதரே லைலத்துல்கத்ர் இரவை நான் அடைந்துகொண்டால் அதில் நான் என்ன பிரார்த்திப்பது? என்று வினவினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அல்லாஹும்ம இன்னக அஃபுவுன் துஹிப்புல் அஃப்வ ஃபஅஃபுஅன்னீ (பொருள்: இறைவா நீ மன்னிப்பவன். மன்னிப்பையே விரும்புபவன். எனவே என்னுடைய பாவங்களை மன்னித் தருள்வாயாக!)
அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா, அஹமத்.

இத்தகைய புனிதமிக்க ரமளானின் கடைசிப் பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் அதிக உபரியான வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு வல்ல இறைவனின் அருளை அடைவோமாக!

அல்லாஹ் நமக்குப் புனித ரமலானின் சிறப்புமிகு நாட்களின் அமல்களை முறையாக நிறைவேற்ற உதவிடவும் நமது பிராத்தனைகளை ஏற்று அருள் புரிந்திடவும் நமக்கு பாவமன்னிப்பளித்திடவும் நம் அனைவரையும் நரகில் இருந்து பாதுகாத்திடவும் புனித ரமலானின் அனைத்து நன்மைகளையும் முழுமையாக பெற்றிடும் விதத்தில் அல்லாஹ்வின் ஏற்பிற்குரியதாக நமது அமல்கள் அமைந்திடவும் அதன் மூலம் நமது இம்மை மறுமை வாழ்க்கை வெற்றி பெற்றிடவும் இந்த புனித ரமலான் முதல் என்றென்றும் பிராத்திப்போமாக.

-ஆக்கம்: இப்னு ஹனீஃப்

நன்றி : சத்தியமார்க்கம்

மாத‌ந்தோறு‌ம் 3 நா‌ட்க‌ள் நோ‌ன்பு நோ‌ற்பது மு‌ஸ்தஹபாகு‌ம்

ஒ‌வ்வொரு மாதமு‌ம் மூ‌ன்று நா‌ட்க‌ள் நோ‌ன்பு நோ‌ற்பது மு‌ஸ்தஹபாகு‌ம். இது கு‌றி‌த்து அபூ ஹூரைரா (ர‌ழி) அவ‌ர்க‌ள் கூ‌றினா‌ர்க‌ள். "ஒ‌வ்வொரு மாதமு‌ம் மூ‌ன்று நா‌ட்க‌ள் நோ‌ன்பு நோ‌ற்பது, இர‌ண்டு ர‌த் அ‌த் ளுஹா தொழுவது ம‌ற்று‌ம் தூ‌ங்க‌ச் செ‌ல்லு‌ம் மு‌ன் ‌வி‌த்ரு தொழுவது எ‌‌ன்ற மூ‌ன்று ‌விஷய‌ங்களை எனது நேசரா‌கிய ந‌பி (ஸ‌ல்) அவ‌ர்க‌ள் என‌க்கு வ‌ஸி‌ய்ய‌த் செ‌ய்தா‌ர்க‌ள்." (ஸ‌ீஹஹூ‌ல் புகா‌ரி, ஸ‌ஹ‌ீ‌‌ஹ‌் மு‌ஸ்‌லி‌ம்)

அபூத‌ர்தா (ர‌ழி) அவ‌ர்க‌ள் கூ‌றியதாவது :"எனது நேச‌ர் என‌க்கு மூ‌ன்று ‌விஷய‌ங்களை உபதேச‌ம் செ‌ய்தா‌ர்க‌ள். நா‌ன் மர‌ணி‌க்கு‌ம்வரை அதை ‌விடவே மா‌ட்டே‌ன். ஒ‌வ்வொரு மாதமு‌ம் ‌மூ‌ன்று நா‌ட்க‌ள் நோ‌ன்பு நோ‌ற்பது, ளுஹா தொழுவது இ‌ன்னு‌ம் ‌வி‌த்ரு தொழாதவரை நா‌ன் தூ‌ங்கா‌ம‌லிரு‌ப்பது." (ஸ‌ஹ‌ீ‌‌ஹ‌் மு‌ஸ்‌லி‌ம்)

அ‌ப்து‌ல்லா‌ஹ‌் இ‌ப்னு அ‌ம்ரு (ர‌ழி) அவ‌ர்க‌ள் அ‌றி‌வி‌க்‌கிறா‌ர்க‌ள் :"ஒ‌வ்வொரு மாதமு‌ம் மூ‌ன்று நா‌ட்க‌ள் நோ‌ன்பு நோ‌ற்பது வருட‌‌ம் முழுவது‌ம் நோ‌ற்பது போ‌ன்றாகு‌ம்" என ந‌பி(ஸ‌ல்) அவ‌ர்க‌ள் கூ‌றினா‌ர்க‌ள். (ஸ‌ீஹஹூ‌ல் புகா‌ரி, ஸ‌ஹ‌ீ‌‌ஹ‌் மு‌ஸ்‌லி‌ம்)

ந‌பி மொ‌ழி‌யி‌ல் சு‌ட்டி‌க்கா‌ட்ட‌ப்ப‌ட்ட மூ‌ன்று நா‌ட்க‌ள் எ‌ன்பது ஒ‌வ்வொரு மா‌த‌த்‌தி‌ன் ‌பிறை 13, 14, 15வது நா‌ட்களை‌க் கு‌றி‌க்கு‌ம். அதனை அ‌ய்யாமு‌ல் ‌பீ‌ழ் எ‌ன்று கூற‌ப்படும‌். அ‌வ்வாறே ந‌பி (ஸ‌ல்) அவ‌ர்க‌ள் மாத‌த்‌தி‌ன் எ‌ந்த நா‌ட்களையு‌ம் ‌மூ‌ன்று நோ‌ன்பு‌க்காக கு‌றி‌ப்பா‌க்காம‌ல் நோ‌ற்றத‌ற்கான ஆதார‌ங்களு‌ம் உ‌ள்ளன.

முஆத‌த்த‌ல் அத‌வி‌ய்யா(ர‌ழி) அவ‌ர்க‌ள் கூ‌றினா‌ர்க‌ள் : நா‌ன் அ‌ன்னை ஆ‌‌யஷா (ர‌ழி) அவ‌ர்க‌ளிட‌ம், "ந‌பி (ஸ‌‌‌ல்) அவ‌ர்க‌ள் ‌ஒ‌வ்வொரு மாதமு‌ம் மூ‌ன்று நா‌ட்க‌ள் நோ‌ன்‌பிரு‌ந்தா‌ர்களா?" எ‌ன்று கே‌ட்டே‌ன். அ‌ன்னையவ‌ர்க‌ள் "ஆ‌ம்!" எ‌ன்றா‌ர்க‌ள். "மாத‌த்‌தி‌ன் எ‌ந்த‌ப் பகு‌தி‌யி‌ல் நோ‌ற்றா‌ர்க‌ள்?" எ‌ன‌க் கே‌ட்டே‌ன். "மாத‌த்‌தி‌ன் எ‌ந்த‌ப் பகு‌தி‌யி‌ல் நோ‌ற்பது எ‌ன்பது ப‌ற்‌றி ந‌பி (ஸ‌ல்) அவ‌ர்க‌ள் மு‌க்‌கிய‌த்துவ‌ம் எடு‌த்து‌க் கொ‌ள்ள‌வி‌ல்லை" என ப‌தில‌ளி‌த்தா‌ர்க‌ள். (ஸ‌ஹ‌ீ‌‌ஹ‌் மு‌ஸ்‌லி‌ம்)

காயல்பட்டினம் மகளிர் கல்லூரியில் உமறுப்புலவர் முத்தமிழ் மன்றக் கூட்டம்

காயல்பட்டினம் வாவு வஜிஹா மகளிர் கல்லூரியில் உமறுப்புலவர் முத்தமிழ் மன்றக் கூட்டம் நடைபெற்றது.

மாணவர் மன்ற துணைச் செயலர் கணிதவியல் முதலாமாண்டு மாணவி ஹலிமா பீவி மன்ற அறிக்கையை வாசித்தார்.

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி தமிழ்த் துறைப் பேராசிரியர் பெ.சுயம்பு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார்.

தமிழ்த் துறைத் தலைவர் இரா.அருணா ஜோதி வரவேற்றார். விரிவுரையாளர் சு.ஏஞ்சலா லதா நன்றி கூறினார்.

சிலம்பப் போட்டியில் நெல்லையைச் சேர்ந்தோர் சிறப்பிடம்

பாளை.யில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் திருநெல்வேலியைச் சேர்ந்தோர் அதிக வெற்றி பெற்றனர்.

பாளை. அண்ணா விளையாட்டு அரங்கில் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இப் போட்டி 13-ம் தேதி தொடங்கியது.

200 ஆண்களும், 80 பெண்களும் கலந்துகொண்ட இப் போட்டி செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. வென்றோர் விவரம்:

ஆண்கள் பிரிவு (40 கிலோ):

1. விக்கிரமசிங்கபுரம் எஸ். செய்யது ரியாஸ்கான், 2. மேலப்பாளையம் ஏ. ஷேக், 3. அப்புவிளை வி. சுரேஷ்.

பெண்கள் பிரிவு:

1. திருநெல்வேலி நகரம் எஸ். சுந்தரி, 2. சி. ராஜசங்கரி, 3. சங்கர்நகர் என். மகாலட்சுமி.

ஆண்கள் பிரிவு (50 கிலோ):

1. கரையிருப்பு ஆதிமூலப்பெருமாள், 2. திருநெல்வேலி நகரம் எஸ். தாஸ், 3. பாவூர்சத்திரம் எம். லட்சுமணன்.

பெண்கள் பிரிவு:

1. அழகனேரி எஸ். ராமலட்சுமி, 2. மேலபாலாமடை சி. சலீமா, 3. ராஜவல்லிபுரம் எம். சித்ரா.

ஆண்கள் பிரிவு (55 கிலோ):

1. பாவூர்சத்திரம் சுடலை, 2. கடையம் என். யோகராஜ், 3. ஜெ. திலகர்.

பெண்கள் பிரிவு:

1. சிதம்பரம்நகர் ஏ. லூசியா, 2. ராஜவல்லிபுரம் ஜெ. அலிஸி, 3. சங்கர்நகர் என். சூடாமணி.

பரிசளிப்பு விழா: வென்றோருக்குப் பரிசளிப்பு விழா கொக்கிரகுளம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

ஆட்சியர் மு. ஜெயராமன் தலைமை வகித்து, வென்றோருக்குப் பரிசுகளை வழங்கினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் ரமண சரஸ்வதி முன்னிலை வகித்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் க. சேவியர் ஜோதிசற்குணம், மாவட்ட சிலம்பக் கழகத் தலைவர் ஏ. சுந்தர், செயலர் எம். முகம்மது முஸ்தா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

சுந்தரனார் பல்கலை. தேர்வுகள் நவ. 4-ல் தொடக்கம்

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பருவத் தேர்வுகள் நவம்பர் 4 ஆம் தேதி தொடங்குகின்றன.

இது குறித்து பல்கலைக்கழக தேர்வாணையர் முனைவர் கே.எஸ்.பி. துரைராஜ் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் பல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்லூரிகளில் இளைநிலை பட்டக் கல்வி பயிலும் மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் நவம்பர் 4 ஆம் தேதி தொடங்கும். முதுநிலை பட்ட வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் நவம்பர் 11 ஆம் தேதி தொடங்கும்.

தனித்தேர்வர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அதற்கான தேர்வுக்கட்டணத்துடன் இம் மாதம் 21 ஆம் தேதிக்கு முன்பாக பல்கலைக்கழகத்தில் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும் என்றார் தேர்வாணையர்.

ஸ்ரீவைகுண்டத்தில் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா

ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது

ஸ்ரீவைகுண்டம் நகர திமுக சார்பில் அண்ணா நூற்றாண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 18 வார்டுகளிலும் திமுக கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன.

"முஸ்லிம்களிடம் அமெரிக்கா நல்ல அணுகுமுறையை கடைப்பிடிக்கிறது'

முஸ்லிம்களிடம் நல்ல அணுகுமுறையையே அமெரிக்கா கடைப்பிடிக்கிறது என தில்லியில் உள்ள அமெரிக்க மையத்தின் கலாசார பிரிவு அலுவலர் நிக் நம்பா தெரிவித்தார்.

பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் அமெரிக்கத் தூதரகம், அக் கல்லூரி நிர்வாம் இணைந்து இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை செவ்வாய்க்கிழமை நடத்தின.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நிக் நம்பா மேலும் பேசியதாவது:

இந்தியாவில் தில்லி, கோல்கத்தா, மும்பை, சென்னை போன்ற பெரிய நகரங்களில் இந் நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என, இங்கு நடத்துகிறோம்.

ஒரு ஹோட்டல் ஊழியரிடம் பேசும்போது, அமெரிக்காவை விரும்புவதாகவும், அந் நாட்டு அரசை விரும்பவில்லை என்றும் கூறினார்.

ஆனால் அமெரிக்க அரசு முஸ்லிம்களிடம் நல்ல அணுகுமுறையைத்தான் கடைப்பிடிக்கிறது என்றார் நிக்நம்பா.

நிகழ்ச்சியில் அமெரிக்காவின் "காமன் காஸ்' தொண்டு நிறுவனத்தின் பிரசார பிரிவு இயக்குநர் லாரன் கொலட்டாவும் பேசினார்.

நிகழ்ச்சிக்கு கல்லூரித் தாளாளர் த.இ.செ. பத்ஹூர் ரப்பானி தலைமை வகித்தார்.

கல்லூரித் தலைவர் பி.எஸ்.ஏ. பல்லாக் லெப்பை, சாரதா கல்லூரித் தாளாளர் சுவாமி சங்கரானந்தா, அருள்தந்தை ஜமீல்ஸ் ஜேம்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் முஸ்லிம் அனாதை நிலையச் செயலர் நைனாமுகமது, எஸ். அப்துல்ரகுமான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

செவ்வாய், 15 செப்டம்பர், 2009

ஒரு படுக்கையறை ஃப்ளாட் ஹாங்காங்கில் 3.16 மில்லியன் டாலருக்கு விற்பனை


ஹாங்காங்கில் ஒற்றைப் படுக்கையறை கொண்ட ஃப்ளாட் 3.16 மில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.15.16 கோடி) விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஹாங்காங்கின் ஸிம்-ஷா ஸுய் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 64 மாடிக் குடியிருப்புக் கட்டிடத்தில் அமைந்துள்ள 54வது மாடியில் உள்ள ஒற்றைப் படுக்கையறை கொண்ட ஃப்ளாட், அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளதால் நிலம், வீடு விற்பனையில் ஏற்பட்ட மந்தநிலை மாறிவிட்டதாக கருதப்படுகிறது.

மொத்தம் 75.8 சதுர மீட்டர் பரப்பளவுள்ள இந்த ஃப்ளாட்டில் 54.8 சதுர மீட்டர் மட்டுமே குடியிருப்புக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக சௌத் சைனா மார்னிங் போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அடுக்குமாடிக் குடியிருப்பு அமைந்துள்ள பகுதி பரபரப்பானது என்பதாலும், அந்த ஃப்ளாட்டில் இருந்து பார்த்தால் விக்டோரியா துறைமுகம் அழகாக தெரியும் என்பதாலும், ஒரு சதுர மீட்டருக்கு 42 ஆயிரம் டாலர் விலை நிர்ணயம் செய்து அந்த ஃப்ளாட்டை ஹாங்காங் தொழிலதிபர் வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SBI ஏடிஎம்கள் சேட்டிலைட் மூலம் ஒருங்கிணைப்பு!


பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) தானியங்கி பணப்பட்டு வாடா மையங்கள் (ஏடிஎம்) அனைத்தும் செயற்கைக்கோள் மூலம் ஒருங்கிணைக்கப்படுகிறது.

இதற்கான பொறுப்பு ஹியூஸ் நிறுவனத்திடம் விடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம்கள் உள்ள அனைத்து மையங்களிலும் 2,880 வி-சாட் இணைப்புகள் ஏற்படுத்தப்படும். இதன் மூலம் வங்கிகள் அல்லாத பிற இடங்களில் உள்ள ஏடிஎம்களை ஒருங்கிணைக்க முடியும்.

இந்தப் பணிக்கான ஒப்பந்த மதிப்பு ரூ. 22.5 கோடியாகும். ஏடிஎம்களை ஒருங்கிணைப்பது, செயற்கைக்கோள் தொடர்பை நிர்வகிப்பது ஆகியன இதில் அடங்கும்.

வங்கியின் மத்திய தகவல் தொகுப்புடன் இந்த வி-சாட் தொடர்பு இணைக்கப்பட்டிருக்கும். இந்த தகவல் தொகுப்பு மையம் சுனாமி, பெரும்மழை போன்ற பேரழிவு இடர்பாடுகளின்போதும்கூட பாதிப்புக்குள்ளாகாது என்பது குறிப்பிடத்தக்கது.

தீபாவளிக்கு 500 சிறப்பு விரைவு பேரு‌ந்துகள்: நாளை முன்பதிவு துவக்கம்

தீபாவளிப் பண்டிகைக்காக சென்னையில் இருந்து 500 சிறப்பு பேரு‌ந்துகளை இயக்க, அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது.

சென்னையில் இருந்து மட்டும் தினமும் 900 விரைவு பேரு‌ந்துகள் பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படுகின்றன. இதுதவிர தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு இதர போக்குவரத்துக் கழகங்களிடம் இருந்து சுமார் 300 "அல்ட்ரா டீலக்ஸ்' பேரு‌ந்துகளை பெற்று இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் கோயம்பேடு, தியாகராயநகர், தாம்பரம், பிராட்வே பேரு‌ந்து நிலையம் ஆகிய இடங்களில் விரைவு பேரு‌ந்துகளுக்கு முன்பதிவு செய்யலாம்.

இதற்கான தொலைபே‌சி எண்- 24794709, 24794705.

இதே போல தமிழகத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் உள்ள 33 மையங்களிலும் முன்பதிவு செய்யலாம். 43 அங்கீகரிக்கப்பட்ட முகவர்களிடம் முன்பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் "108 ஆம்புலன்ஸ் சேவை' தொடக்கம்


தூத்துக்குடி மாவட்டத்தில், "இ.எம்.ஆர்.ஐ. 108' இலவச ஆம்புலன்ஸ் சேவையை மாவட்ட ஆட்சியர் கோ. பிரகாஷ் திங்கள்கிழமை தொடக்கிவைத்தார்.

தமிழக அரசு மற்றும் தனியார் கூட்டு முயற்சியாக கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ல் இந்த ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. முதலில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 20 ஆம்புலன்ஸ் வாகனங்களுடன் இந்த சேவை தொடங்கப்பட்டது. பின்னர் 23 மாவட்டங்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது 228 இலவச ஆம்புலன்ஸ் வாகனங்களுடன் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், 2-ம் கட்டமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை திங்கள்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. இதற்காக 5 ஆம்புலன்ஸ் வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகிறது.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் ஆம்புலன்ஸ் வாகனங்களை ஆட்சியர் கோ. பிரகாஷ் கொடியசைத்துத் தொடக்கிவைத்தார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அக்டோபர் 15-ம் தேதிக்குள் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என இ.எம்.ஆர்.ஐ. நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

இந்த இலவச ஆம்புலன்ஸ் சேவைக்காக சென்னையில் 108 தொலைபேசி எண் கொண்ட அவசர உதவி சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதிலும் இருந்து வரும் அழைப்புகளை இந்த மையம் ஏற்றுக் கொண்டு, அந்த பகுதிக்கு அருகில் உள்ள ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் அனுப்பும்.

ஒவ்வொரு நாளும் சுமார் 700 அழைப்புகள் இந்த சேவை மையத்திற்கு வருகின்றன. இந்த மையத்தை தொடர்புகொண்டால் நகரமாக இருப்பின் 15 நிமிடத்திலும், கிராமமாக இருப்பின் 20 நிமிடத்திலும் தேவையான உதவி சென்றடையும்.

கர்ப்பிணிகளை பாதுகாப்பாக அழைத்துச் செல்வது உள்ளிட்ட அனைத்து அதிநவீன வசதிகளும் ஆம்புலன்ஸில் உள்ளன.

நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் வேலுச்சாமி, துணை இயக்குநர் உமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

புகைப்பட உதவி : தூத்துக்குடி வெப்சைட்

நெல்லை பூம்புகாரில் "கொலு பொம்மை' கண்காட்சி தொடக்கம்


திருநெல்வேலி பூம்புகார் விற்பனை நிலையத்தில் திங்கள்கிழமை தொடங்கிய கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனையை மாவட்ட செய்தி- மக்கள் தொடர்பு அலுவலர் உல. ரவீந்திரன் திறந்து வைத்தார்.

இந்த கண்காட்சியில் பல்வேறு வகையான கொலு பொம்மைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றின் விலை ரூ. 10 முதல் ரூ. 25,000 வரை உள்ளன.

இந்த கண்காட்சி இம் மாதம் 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தினமும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இந்த கண்காட்சி நடைபெறும்.

இந்த கண்காட்சியில் கொலு பொம்மைகளை வாங்குவோருக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். இந்த கண்காட்சி மூலம் ரூ. 2.5 லட்சத்திற்கு கொலு பொம்மைகளை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், பூம்புகார் விற்பனை நிலைய மேலாளர் எஸ். அன்னலட்சுமி கலந்து கொண்டார்.

சுவனப் பயணத்துக்காய் கட்டுச்சாதம் தயார்செய்வோம்!




நன்றி: தபால்பெட்டி

திங்கள், 14 செப்டம்பர், 2009

சிறந்த பேச்சாளராக விருப்பமா?

மறைந்த இதயேந்திரன் இதயம் நின்று போனது: உறுப்புதான பெருமைக்கு சொந்தக்காரர்


சென்னை: உடல் உறுப்புக்கள் தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட காரணமாக விளங்கிய இதயேந்திரனின் இதயம் பொருத்தப்பட்ட சிறுமி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு நேற்று இரவு சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தாள். திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த டாக்டர் தம்பதி அசோகன், புஷ்பாஞ்சலி. இவர்களது மூத்த மகன் இதயேந்திரன் (17). மாணவன் 11 ம் வகுப்பு படித்து வந்தான். தனது நண்பனை பார்க்க மோட்டார் சைக்கிளில் பார்க்க சென்ற போது ( கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23ம் தேதி ) நடந்த ஒரு விபத்தில்,சிக்கினான். செங்கல்பட்டில் சேர்க்கப்பட்டு பின்னர் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பபட்டான். இதயேந்திரனுக்கு மூளை செயல் இழந்து விட்டதை டாக்டர்கள் உறுதி செய்தனர்.

தானம் செய்ய முடிவு: இதனை அறிந்த டாக்டர் தம்பதியினர் மகனின் இதயம் , கண்கள் , சிறுநீரகம், நுரையீரல் , கல்லீரல் போன்ற உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர். பெங்களூரைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகள் அபிராமி (9) சென்னை ஜெ.ஜெ., நகரில் உள்ள செரியன் மருத்துவமனையில் இதய நோயால் சிகிச்சை பெற்று வந்தார்,. இவருக்கு இதயம் தேவை என விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. இதனை அறிந்த இதயேந்திரன் பெற்றோர்கள் சிறுமி அபிராமிக்கு வழங்க முடிவு செய்தனர். இதன்படி 20 நிமிடத்தில் சிறுமி அபிராமிக்கு பொருத்தப்பட்டது.

முதல்வர் கருணாநிதி பாராட்டு : இந்த உறுப்புதான சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பாகவும் , பெருமையாகவும் பேசப்பட்டது. மேலும் இது தொடர்பான விஷயத்தில் பெரும் பரந்த மனப்பான்மையுடன் நடந்து கொண்ட இதயேந்திரன் பெற்றோர்களுக்கு முதல்வர் கருணாநிதி பாராட்டினார். மேலும் தாயாரின் செயலை பாராட்டி அவருக்கு கல்பனா சாவ்லா விருதும் வழங்கப்பட்டது.

மூச்சுத் திணறலால், அபிராமி அவதி : இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு பின் அபிராமி, நல்ல உடல் ஆரோக்கியத்துடன் காணப்பட்டாள். அறுவை சிகிச்சை நடந்து ஓராண்டு நிறைவு பெற உள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் மூச்சுத் திணறலால், அபிராமி கடும் அவதிப்பட்டு வந்தாள். இதையடுத்து, அறுவை சிகிச்சை செய்யப்பட்ட செரியன் மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாள். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு 8 மணிக்கு பரிதாபமாக இறந்தாள்.

எங்கள் மகள் இனி உங்கள் மகள் : இத்தனை பெருமைக்கு சொந்தக்காரரான இதயேந்திரன் இதயம் நேற்று இரவு நின்று போனது. எங்கள் மகள் இனி உங்கள் மகள் என இதயத்தை தானமாக பெற்றபோது அபிராமி தாயார், இதயேந்திரன் பெற்றோரிடம் கூறியிருந்தார். ஆனால் இப்போது இரண்டு குடும்பத்தினருக்கும் சொந்தமான ஒரு உயிர் பிரிந்து விட்டது. இதயேந்திரன் குடும்பத்தினர் பெற்ற சந்தோசம் விரைவிலேயே முடிந்து விட்டது, என்றாலும் அவரது புகழ் என்றும் பேசப்படும்

செய்தி : தினமலர்

LinkWithin

Blog Widget by LinkWithin